பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!

பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!  பாரதியின் கவிதை வரிகளோடு நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்! குடியரசு. ஒரு அரசியல் சாசனம் என்று வந்தபின்னால் தான் இந்தியா என்றொரு நாடே உருவான மாதிரியான கூவல்கள் அபசுரமாக அங்கங்கே ஒலிக்க ஆரம்பித்திருப்பதில், பாரத சுதந்திரம் வேண்டிநின்ற மகாகவி பாரதியின் வாக்கை மீண்டும் மீண்டும் ஒரு மந்திரம் போல, சொல்லிச் சொல்லி நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. 


பாரதம் அன்னியரிடமிருந்து விடுதலைபெற்ற 1947 - அதோடு சேர்ந்து விடுதலை பெற்ற, அதற்குப்பிறகு விடுதலை பெற்ற வேறெந்த நாடும், நம்மைப்போல இன்னும் மக்களாட்சி என்கிற குடியரசாக, கொஞ்ச காலத்துக்கு மேல் நீடிக்க முடியவில்லை என்பதைக் கொஞ்சம் கவனித்தீர்களானால், இந்தியா என்றொரு நாடே ஆங்கிலேயர்களால் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு நாடுதான் என்பது எத்தனை பொய்யான பிதற்றல் என்பதும் கூடவே நினைவுக்கு வரும்.

முதல் முறையாக இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்குப் பதிலாக, சென்ற ஆண்டு அதன் பக்கத்திலேயே அமைக்கப்பட்ட போரில் உயிர்த் தியாகம் செய்த முப்படை வீரர்களுக்கான நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். எத்தனையோ தியாகிகள், படை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து காப்பாற்றிய பாரதநாடு இது.


இந்திய முப்படைகளின் அணிவகுப்பு, நாட்டின் பாதுகாப்பில்  எப்போதும் தயார் நிலையில் இருப்பதை, மிக நன்றாகவே வெளிக்காட்டியிருக்கிறது. வெளியில் இருந்து வரும் எதிரிகளைச் சமாளிக்க நம்முடைய ராணுவம் இருக்கிறது.

ஆனால் உள்ளே இருக்கும் எதிரிகளாக, செல்லரிக்கும் கரையான்களாக இடதுகளோடு காங்கிரசின், கழகங்களின் சமீபகாலப் போக்குகள், போராட்டங்கள் இருப்பதை பொறுப்புள்ள குடிமக்களாகிய நாமல்லவா களையெடுத்து தேசம் காக்க வேண்டும்? நம்முடைய பொறுப்பை உணர்ந்து செயல்படத்  தயாராக இருக்கிறோமா?  

மீண்டும் சந்திப்போம்.   

2 comments:

  1. காலையில் பார்த்தேன். உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நேற்றைக்கு சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதியதன் தொடர்ச்சிதான் இது ஜோதிஜி! ஒட்டுண்ணி பானாசீனா குடியரசுதினச் செய்தியாக As we raise the flag today, let us also raise the level of protest.என்று சொல்லியிருந்தது இந்தப்பதிவை எழுத ஆரம்பித்தபோது கண்ணில் பட்டது.

      கோபத்தை அடக்கிக் கொண்டு அந்தச் சிறுமதியாளனை, பொருட்படுத்தாமல் குடியரசுதின நிகழ்ச்சிகளை பார்த்தேன். பார்த்துக் கொண்டே சுருக்கமாக எழுதினேன். நாடே ஒதுக்கித்தள்ள வேண்டிய ஒட்டுண்ணி பானாசீனா மட்டுமே இல்லை.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!