சண்டேன்னா மூணு! பலமுகங்கள் காட்டும் #அரசியல்

சமீபகாலமாக இங்கே தமிழில் திரைப்படங்களும் வெளிப்படையான அரசியல் பேச ஆரம்பித்திருப்பதே ஒருவகையான நுண்ணரசியல் தான்! இங்கே டிவி சேனல்கள் அதையும் ஒரு மாதிரி விவாதப்பொருளாக ஆக்குவதுமே கூட சேனலின் உள்ளரசியல்! தந்தி டிவி இதைக்கூட கொண்டையை மறைக்கத்தெரியாத வடிவேலு காமெடி மாதிரி, ஒரு விவாதத்தை இயக்குனர் G மோகனுடன் நடத்தி காமெடிப்பீசாகி இருக்கிறது.


இதை சேனல் அரசியல் என்றும் வைத்துக்கொள்ளலாம்! ஆனால் இயக்குனர் G மோகன் மிகுந்த நிதானத்தோடு பக்குவம் பொறுமையோடு பதில் சொல்கிறார். படத்!தை பார்க்காமலேயே எதிர்ப்பு வழக்கு என்று போவது நம்மூர் பகுத்தமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்பதை என்னவிதமான அரசியல் என்று வகைப்படுத்துவீர்கள்றிவுவாதிகளுக்குப் புதிதா என்ன? ஆனால் இயக்குனர் படத்தைப்பாருங்கள், அதன் பிறகு கருத்தைச் சொல்லுங்கள் என்று கொஞ்சமும் பொறுமையிழக்கா? ஆனால் இதுமாதிரி நிதானமான அணுகுமுறை கொண்ட அரசியல் வளர வேண்டும் என்பதை நான்மட்டுமல்ல நீங்களுமே கூட விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். வீடியோ 30 நிமிடம்.


டய மண்டு இப்போது பானாசீனாவுடன் ஒட்டிக் கொண்டு இருப்பது என்ன வகையான அரசியல் என்பதை முடிவுசெய்வதை உங்களிடமே விட்டு விடுகிறேன். கவிஞர் பாட்டெழுத முடியாமல் மேடை வெளிச்சம் கிடைக்காமல், ஞானபீட விருதுக்கு அடிபோட்டு அது நிறைவேறாதது, சமீபத்தில் SRM பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர்பட்டம் மத்திய அமைச்சர் கையால் வாங்கவிருந்ததும் கூட கைநழுவிப் போனது என்று வரிசையாகச் சிறுமைப்பட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் பானாசீனா துவங்கி இருக்கிற எழுத்து என்ற அமைப்பில், நூல்களை வெளியிட்டுப்   பேசும்போது இப்படிப் பொருமித் தீர்த்திருக்கிறார்! 

சிதம்பரத்துக்கு கோபம் வந்தால் ...வந்தால் ..வந்தால் என்று பலமுறை டய மண்டு பேச்சில் பூச்சாண்டி காட்டுகிறார்! பானாசீனாவுக்கு கோபம் வந்தால் என்னவாகி இருக்குமாம்?  உங்களுக்குத் தெரியுமா?

பானாசீனாக்களை விடுங்கள்! மனிதகுல வரலாற்றை மிக விரிவாக எழுதிய அறிஞர் Will Durant இந்தியாவைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? 

படம் முகநூலில் பெங்களூரு ஜடாயு பகிர்வில் இருந்து சுட்டது.


1962 இந்திய சீனப்போரின் அவலங்களுக்கு யார் காரணம் என்ற பழைய கதையை சேகர் குப்தா இப்போது காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் எழுதி இருக்கிற A Chequered Brilliance -முன்னாள் மத்திய அமைச்சர் வி கே கிருஷ்ண மேனன் தலையிலேயே முழுப்பழியையும் சுமத்தும்- புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறார் என்பதில் எங்கேயோ மணி அடிக்கிற. மாதிரித் தெரிகிறதா? கொஞ்சம் புத்தகத்தைப் பற்றி விவரங்களைதேடிப்பிடித்து விட்டு விரிவாக எழுதுகிறேன். நேரு மேனன் இருவருமே கற்பனாவாதிகள் நெருங்கிய கூட்டாளிகள், போரின் முடிவுக்குப்பிறகு பதவிவிலகும்படி கிருஷ்ணமேனன் கட்டாயப்படுத்தப்பட்டார் அன்றைய நாட்களிலேயே Scapegoat பலியாடாக மேனன் ஆக்கப்பட்டார் என்பது பொதுவெளியில் உள்ள தகவல்தான்! புதிதல்ல! ஜெய்ராம் ரமேஷ் இறந்துபோன நிறைய ராணுவத் தளபதிகள் மீதும் கிருஷ்ண மேனன் மீதும் நிறைய cospiracy தியரிகளைப் பின்னி எழுதியிருக்கிறார் என்பது சேகர் குப்தா விவரிப்பதைக் கேட்கும்போதே உறைக்கிறது.
மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!