வாழ்க நீ எம்மான்! காந்தி! மதுரைக் கூத்து! நூறுநாள் சாதனை!

இன்று மகாத்மா காந்தியின் 73வது நினைவுதினம். தியாகிகள் தினமாகவும் கொண்டாடப் படுவதில், தியாகிகளையும், காந்தியையும் எப்போதாவது அவசியப்படுகிற போது மட்டும் நினைவுபடுத்திக் கொள்கிற தேசிய வியாதி எப்போதிலிருந்து இங்கே ஆரம்பித்தது?

    அமேசான் தளத்தில் ரூ.49/- விலையில் 

என்னையே எடுத்துக் கொண்டால், மாணவனாக இருந்த நாட்களில் புத்தகங்கள் வழியாக காந்தி எனக்கு அறிமுகமானவராக, நெருக்கமாக இருந்தார். அப்புறம் மார்க்சீயப் பிடிமானம் ஏற்பட்ட நாட்களில், ஏளனத்துக்கு உரிய நபராக இருந்தார். அப்புறம், எப்படி ஜனங்களை வசீகரிக்கிற, கட்டுப்படுத்த முடிந்த ஒரு தலைவராக இருந்தார் என்பதை யோசித்துப் பார்க்கவும், அபிமானம் கொள்ளவும் புத்தகங்களே எனக்குப் பேருதவியாக இருந்தன. எழுத்தாளர் கல்கி மாதிரி எனக்கு மாந்தருக்குள் ஒரு தெய்வமாக காந்தி தரிசனம் தரவில்லையென்றாலும், எத்தனை குறைபாடுகளுடன் இருந்தாலென்ன, என்னுடைய சொந்தப் பாட்டன் மாதிரியானதொரு நெருக்கம் வந்ததில், இன்றைக்கு வாசிப்பதற்காக ஒரு பத்து புத்தகங்களை கிண்டில் தரவிறக்கமாகச் செய்து கொண்டு வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். ( 2 in 1 ஆக வாசிப்புக்கு வாசிப்பும் ஆயிற்று; லேப்டாப்பில் கிண்டில் வாசிப்புக்குத் தயார் செய்து கொண்டது போலவும் ஆயிற்று!) 

எழுத்தாளர் மாலன் நாராயணன் முகநூலில் தன்னுடைய கருத்தாக இப்படிச்சொன்னது கூடப் பலபேருக்கு பிடிக்கவில்லையாம்! ஒரு சாம்பிளுக்கு

மாலன் நாராயணன் இதெல்லாம் வேற லெவல் ...ம்பல் சார்🚶🚶🚶


   
        
        
கோட்ஸே காந்தியைச் சுட்டது கூட மூன்று முறைதான்! ஆனால் காந்தியைப் புரிந்துகொள்ளாதவர்கள் அவரை தினம் தினம் கொன்றுகொண்டே இருக்கிறார்கள் என்பதை ஏனோ மறந்துவிடுகிறோம். அப்புறமென்ன, காந்தியை தூக்கிப்பிடிப்பது? எதற்கு ஜனவரி 30 இல் மட்டும் நினைவுநாள் கொண்டாடுவது? காந்தி பெயரை ஒட்டுவாலாக வைத்திருக்கும் ராகுல் காண்டி கூட காந்தி 150 நிகழ்ச்சியை சாக்குவைத்துத் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது அந்நிய மண்ணில்தான்!

  
ஜனவரி 30 என்றால் மதுரைக்கு வேறு விதமான சுரம்! சோதனை! பிறந்தநாள் அதுவுமாக இதற்குமேல் பேச வேண்டாமே! வீடியோ 6 நிமிடம்.


ஆளே இல்லாத தியேட்டர்களில் சமீபத்தில் ஒரு தமிழ்ப் படம் 100நாள் ஓடி சாதனை செய்தது மாதிரி இல்லாமல், ஆரம்பித்த நாளிலிருந்து 100 நாட்களைத் தாண்டியும் விறுவிறுப்போ பரபரப்போ குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிற ஒரு விஷயம் #மூலப்பத்திரம்எங்கே மதன் ரவிச்சந்திரன் இந்த ஹாட் டாபிக்கை ஒரு 56 நிமிட விவாதமாக  நடத்திக் காண்பித்துவிட்டார்! கொஞ்சம் பார்க்கலாமே!

மீண்டும் சந்திப்போம்.  

          

2 comments:

  1. மாலன் சொல்லியிருப்பது நிஜம்தான். ஆனால் இங்கே யாருக்குப் பிடிக்கும்?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      மாலன் சொன்னது எந்த அளவுக்குச் சரி?
      பொதுவாக சில கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் கேள்வி கேட்கப்படுவதை அனேகமாக யாரும் இங்கே விரும்புவதில்லை! அது காந்தியோ ஈவெராவோ, இன்றைய நாட்களுக்குப் பொருந்துகிறவர்களா இல்லையா என்று யோசித்துப்பார்க்கக் கூட அஞ்சுகிற சமுதாயம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!