உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்!
ஓசிச்சோறு வீரமணி, இடதுகள் முதலான வீணருக்கு இனிமேல் இடம் கொடுக்கமாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்டு அப்படியே ஒன்றாய் வாழ இறைவன் நமக்கு அருள்வானாக! மகர சங்கராந்தி நல்வாழ்த்து, பிரார்த்தனைகளுடன் உங்களை இந்தப்பக்கங்களுக்கு வரவேற்கிறேன்!
ஜனவரி 15 இன்று ராணுவ தினம் . முப்படைகளின் தளபதி பிபின் ராவத்துடன், ராணுவத்தளபதி, விமானப் படைத்தளபதி, கடற்படைத்தளபதி மூவரும் சேர்ந்து இன்று காலை போர் நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செய்வதை மேலே புகைப்படத்தில் பார்க்கிறீர்கள். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த நம்முடைய வீரர்களுக்கு நாமும் சேர்ந்து அஞ்சலி செய்வோம்! நம் வீரர்கள் நம்முடைய கண்கள் என்ற உணர்வோடு, பணி செய்துவரும் வீரர்களைப் போற்றுவோம்.
ராணுவ தினம் ஜனவரி 15 அன்று கொண்டாடப்படுவது ஏன் என்பதற்கும் ஒரு சுவாரசியமான பின்னணி இருக்கிறது. நாடு வெள்ளையர்களிடமிருந்து 1947 இல் விடுதலையடைந்து விட்டாலும், ராணுவத்தளபதியாக ஒரு வெள்ளையனே நீடித்தான். வெள்ளையர் வசம் இருந்த ராணுவத்தலைமை ஒரு இந்தியரிடம் வந்து சேர்ந்த நாள் ஜனவரி 15, 1949. ஜெனரல் பிரான்சிஸ் புட்சர் என்கிற ஆங்கிலேயரிடமிருந்து 49 வயதே நிரம்பிய லெப்டினென்ட் ஜெனெரல் கே எம் கரியப்பாவிடம் இந்திய ராணுவத்தலைமைப்பொறுப்பு வந்து சேர்ந்த இந்த நாளே நம் நாட்டில் ராணுவ தினமாக கொண்டாடப் படுகிறது.
நம்முடைய வீரர்கள்! நம்முடைய பெருமிதம்!
2020 ராணுவ தின அணிவகுப்பு நேரலையில் இப்போது ஒன்றரை மணிநேரமாகப் பார்த்துக் கொண்டிருந்ததில் இன்றைய காலைப்பொழுது மிக அருமையாக, பெருமிதம் பொங்குவதாக அமைந்தது என்று சொன்னால் அதில் கொஞ்சம் கூட மிகையே இல்லை. விடுமுறைதினக் கண்டாட்டமாக இங்கே தமிழில் சேனல்கள் ஒளிபரப்பும் ப(வெ)ட்டிமன்றங்கள், சினிமா எதையும் பார்ப்பதற்குப் பதிலாக எனக்கமைந்த நல்ல விஷயம் இது. மேலே வீடியோவில் கீழே வரும் சிவப்புக் கோட்டைப் பின்னுக்கிழுத்து ஆரம்பத்திலிருந்தோ, நடுவிலிருந்தோ விரும்புகிற இடத்திலிருந்து பார்த்துக் கொள்ளலாம்.
இந்தவருட அணிவகுப்பை வழிநடத்திச் செல்லும் கௌரவம் ராணுவத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த அதிகாரி கேப்டன் தானியா ஷெர்கில் என்ற இளம் பெண்ணுக்குக் கிடைத்திருக்கிறது. கேப்டன் தானியா பயிற்சி முடிந்து இருவருடங்களுக்கு முன்புதான் சிக்னல் கார்ப்சில் கமிஷன் செய்யப்பட்டிருக்கிறார் என்பதோடு செய்தி மேலும் சொல்வது இது: The military hardware being showcased at Wednesday’s parade includes infantry combat vehicle BMP-2K, K9 Vajra-T artillery guns, locally built Dhanush towed guns, T-90 main battle tanks and the short span bridging system.The parade consists of 18 different contingents and will also feature a combat display in which soldiers simulate action in enemy territory.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மீண்டுமொரு முறை சொல்லிவிட்டு.
மீண்டும் சந்திப்போம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...
ReplyDeleteஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
வாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளும் அன்பும்!