தமிழக அரசியல் களம் :: கூட்டணிகள் கலைகின்றனவா?

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வைத்து விதவிதமான வியாக்கியானங்கள், மாறிமாறி   சொல்லப்பட்டு வருவதில் தமிழக அரசியல் களத்தில் என்னென்ன மாற்றங்கள் நடந்து கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?


பாமக தயவு இல்லையென்றால் அதிமுக ஆட்சி நீடித்திருக்கவே முடியாது என்ற அறிவிப்புடன் பாமக, அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கான முன்னறிவிப்பை செய்துவிட்டது. திமுக கூட்டணியில் விசிக நீடிக்குமா என்பதை இன்னமும் வெளிப்படையாக திருமாவளவன் அறிவிக்கவில்லை என்றாலும் தனி ஆவர்த்தனமாக அரசியல் செய்து வருவதை வைத்து என்ன சொல்வீர்களாம்?

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிலைமையை தெளிவாக்கி விட்ட படியால்..
இனி தான் ...ரஜினி மீதான எதிர்க்கட்சியின் விமர்சனங்கள் அதிகம் கேட்கத் துவங்கும்.
ரஜினியின் உளறுவாய் உறவினர்களை தேடிப் பிடித்து பேட்டி எடுத்து...அவர்களின் உளறல்களை எல்லாம் ரஜினி மீது ஏற்றி ..அவரை எதிரியாக சித்தரிக்கும் முயற்சிகள் நடக்கும்.
ரஜினி ஏன் கருத்து சொல்லவில்லை? என்று.. சொல்லாத கருத்துக்கு எதிராக.. பெரும் கூச்சலுடன்.. வழக்கமான விவாதங்கள் நடைபெறும்.
ரஜினிக்கு.. கேரள அரசை கொண்டு ஏதாவது விருது கொடுத்து..இடதுகள் ..தங்களுடைய வழக்கமான பாணியில்.. பினரயி மூலமாக நெருங்க முயற்சிக்க கூடும் . [இது நடந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.]
சுவாரசியங்கள் /வேடிக்கைகள் காத்திருக்கின்றன.  
இந்தப்பகிர்வுக்கு சில சுவாரசியமான பின்னூட்டங்கள்.

தமிழகத்தில்...மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் என ...தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு...
தாமரை..ஆங்காங்கே ... மலர்ந்தே விட்டது. !
பிற தமிழக கட்சிகளிடம் நாம் காணும் வழக்கமான பரபர அரசியல் முன்னெடுப்பு நடவடிக்கைகள், மக்களை மனதளவில் ஈர்க்கும்/ நெருங்கும் தெளிவான அறிக்கைகள், தலைமை, ஊடக பலம், மக்கள் விரும்பும் ஆளுமை நிறைந்த தலைவர்கள் & பேச்சாளர்கள்....இவை அனைத்தும் இல்லாமலேயே...தாமரை மலர்கிறது எனில் ...
மேற்கூறியவையும் இருந்துவிட்டால்.. வலுவான இடத்தை பெற்றுவிடும் என்பதே களம் உணர்த்தும் செய்தி. 
இதற்கு முந்தைய காலங்களிலும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் தாமரை தனித்தே நின்று , மலர்ந்திருக்கிறது. கன்னியாகுமரி, மதுரை,கோவைப்  பகுதிகளில் தாமரைக்கு ஆதரவாளர்கள் அதிகம்.
இந்து தமிழ்திசை ராஜாக்கமங்கலத்தில் நாம்தமிழர் கட்சி வார்டு அளவில் ஜெயித்திருப்பதைத் தனிச் செய்தியாகப் போடுவார்கள்.  ஆனால் கன்யாகுமரி மாவட்டத்தில் பிஜேபி பரவலாக ஜெயித்திருப்பதைச் சொல்ல மாட்டார்கள்.

   
ஒரு வேடிக்கையான நேர்பட பேசு விவாதம்! தலைப்பு மட்டும் தான் தாறுமாறு! வீடியோ 49 நிமிடம்.


தமிழக அரசியலில் ஹீரோ என்று எவருமே இப்போது இல்லை! கோமாளிகளும், ஜீரோக்களும் தான் வில்லன் மேக்கப்பில் உலாத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஸ்டேட்மெண்ட்டுடன்   உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளைப் பொருத்திப்பாருங்கள்! தமிழக அரசியல் களம் என்னென்ன மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது என்பதைக் கொஞ்சம் புரிந்து கொள்ள முடியலாம்! Enjoy the comedy!

மீண்டும் சந்திப்போம்.        

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!