பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா? இப்படி கேள்வி எழுப்பிய திராவிடர்கழகத்தின் சேலம் வழக்கறிஞர் அருள்மொழியின் தந்தை கைது செய்யப்பட்டார் என்பதை இப்போது சொன்னால் அதுதானையா செகுலரிஸம் என்று ஈஸியாகக் கடந்துபோய்விடுகிற ஒரு வினோதமான சமூகம் நம்முடையது! துக்ளக் 50வது ஆண்டுவிழாவில் ரஜனிகாந்த் பேசியது என்னவோ 12 அல்லது 13 நிமிடம்தான்! என்ன context இல் பேசினார் என்பதை மறந்து மனம்போன போக்கில் இங்கே சில சேனல் விவாதங்களிலும், அச்சு ஊடகங்களிலும் திரித்துப் பேசினார்கள்! ஆனால் அதை திராவிட jingoism என்று இனம் கண்டுகொள்ள முடியாதபடி வெறும் பரப்புரைகளிலேயே வளர்ந்த திராவிடப் பம்மாத்து தான் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?
தந்தி டிவியின் ஆயுத நிகழ்ச்சிக்கு ரஜனியின் நிறம் காட்டுகிறதா பெரியார் பேச்சு என்று தலைப்பிட்டு அந்தப் பேச்சுக்கு சாயம் பூசமுற்படுவது போல இருந்தாலும், ஹரிஹரன் நிகழ்ச்சியை நடத்தியவிதம் தந்திடிவியின் பச்சோந்தித்தனத்தை, இப்போதிருக்கும் திமுக சார்புநிலை இனிவரும் நாட்களில் மாறினாலும் மாறலாம் என்பதைக் காட்டுவதாக இருந்தது என்றே எனக்குப் படுகிறது. வீடியோ 44 நிமிடம் முதலில் பேசிய துக்ளக் ரமேஷ், ரஜனி துக்ளக் ஆண்டுவிழாவில் என்ன context இல் பேசினார் என்பதைச் சொல்கிறார். சேலம் பேரணியைக் குறிப்பிட்டதில் என்ன நடந்தது என்று தான் சொன்னாரே தவிர ஈவெரா பெயரைக் குறிப்பிடவே இல்லை, ரஜனி தன்னுடைய கட்சியை ஆரம்பித்து அதனுடைய கோட்பாடு என்ன என்று சொன்ன பிறகே அது என்ன சாயம் என்று பார்க்க வேண்டும் என்று மேற்கொண்டு விவாதிக்க விஷயமே இல்லை என்றாக்கி விட்டார். க்ளைமேக்சுக்குப் பிறகு நீட்டிக்கப் படுகிற விஷயத்தை anti climax என்று மட்டும் தான் சொல்ல முடியும். ஆனால் விவாதத்தில் பங்கு கொண்டவர்கள் அத்தனைபேரையும் தனியாகச் சமாளிக்க முடியாமல் திக சார்பில் பேசவந்த ஓவியா திணறியதை ஹரிஹரன் குறுக்குச்சால் ஓட்டிக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? தந்திடிவி ஆதித்தன்கள் நடுநிலை வகிக்க முடிவு செய்துவிட்டார்கள் என்றா? மதில்மேல் பூனை என்றா? ஆனால் நேற்றைய சேனல் விவாதக் கூச்சல்களில் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருந்தது இது தான் என்று தோன்றுகிறது.
நியூஸ் 7 சேனலில் ஈவெராவைத் தொட்டுப் போரைத் தொடங்குகிறாரா ரஜனி என்று தலைப்பு மட்டும் பிரமாதமாக! ஆனால் 62 நிமிட விவாதத்தின் சாரம் மானாவாரியாக சேற்றை வாரிவீசுவது என்றே இருந்ததால் அதிகப் பொறுமை இருப்பவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியதாக! வரவர சேனல் விவாதங்களைப் பார்க்கவும் கூட எதையும் தாங்கும் இதயம் வேண்டி இருக்கிறதே! இதயத்தை இரவல் கொடுத்தவரும் வாங்கியவரும் போய்ச் சேர்ந்து விட்டார்கள் என்கிற நிலையில் அவர்கள் ஆரம்பித்துவைத்த தெருக்கூத்தின் தாக்கம் இன்றைக்கு அவர்கள் வழி வந்தவர்களைப் பதம் பார்க்கக் கிளம்பியிருக்கிறதோ? News 18 தமிழ் சேனலின் குணசேகரன் எப்படித் துடித்திருப்பார், தவித்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பதே சுகமாக இருக்கிறது! லிங்க் வேண்டுமா? பின்னூட்டத்தில் கேளுங்கள் தருகிறேன்!😎😎😎
இப்போதும் கூட ரஜனியை ஒரு மாற்றத்துக்கான தொடக்கம் என்றோ நம்பிக்கை நட்சத்திரம் என்றோ என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் செலெக்டிவாக இந்துமதத்தை இழிவுபடுத்துவதை ஒரு தொழிலாகவே வைத்திருக்கும் உதிரிகள், திக, விசிக, மார்க்சிஸ்டுகள் இப்படிப் பலவிதமான கும்பல்களைக் கதற விட்டிருக்கிறார் ரஜனி என்பதில் சந்தேகமே இல்லை!
ரஜனியை ஏற்காத டாக்டர் சுப்ரமணியன் சுவாமியே கூட இந்தவிஷயத்தில் ரஜனி உறுதியாக நின்றால் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ள உதவி செய்வேன் என்று சொல்லியிருக்கிறார்! அது மட்டுமா? சோனியா மாப்பிள்ளை ராபர்ட் வாத்ரா நில ஊழல் விவகாரங்களில் சிக்கியிருப்பதில் நேற்று ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதில் டாக்டர் சுவாமி என்ன சொல்லியிருக்கிறார் என்றும் பாருங்கள்! வீடியோ 10 நிமிடம்.
மாப்பிள்ளை செல்லம் ராபர்ட் வாத்ரா நில ஊழல்களில் மாமியார் பெயரும் சிக்கியிருப்பது இந்திரா மெச்சிய இத்தாலிய மருமகளின் விதி!
மீண்டும் சந்திப்போம்.
அன்றைக்கு விதைத்ததற்கு அறுவடை காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது...
ReplyDeleteஉண்மைதான் துரை செல்வராஜூ சார்! ஆட்டம்போட்ட அறுபத்துவருஷங்களுக்கும் சேர்த்தே மொத்த அறுவடை, ஆப்பு எல்லாம் கிடைக்கும் போல இருக்கிறது! :-)))
Deleteதேர்தல் நெருங்கும் போது ஜுரம் இன்னும் தலைக்கேறும் இந்த திராவிட கும்பலுக்கு.இன்னும் எத்தனை பேர் அமைச்சர் ஜெயகுமாரை அதிமுகவிலேயே ஆதரிக்கிரார்கள் என்று தெரியவில்லை.
ReplyDeleteதேர்தல் நெருங்கும் போது ஜுரம் இன்னும் தலைக்கேறும் இந்த திராவிட கும்பலுக்கு.இன்னும் எத்தனை பேர் அமைச்சர் ஜெயகுமாரை அதிமுகவிலேயே ஆதரிக்கிரார்கள் என்று தெரியவில்லை.
ReplyDeleteவாருங்கள் சம்பத் சார்!
Deleteஅதிமுகவுக்கு தன்னை ஒரு திராவிடக் கட்சியாக அறிவித்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அமைச்சர்களிலேயே மாஃபா பாண்டிய ராஜன், ராஜேந்திர பாலாஜி இருவரும் ரஜனிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஜெயகுமார், செங்கோட்டையனுக்கு அடுத்து ஓபிஎஸ் சபரிமலைக்கு மாலை போட்டுப்போய் வந்த கையோடு, ஈவெராவுக்கும் காவடி தூக்கியிருக்கிறார் என்பதில் அவர்களுடைய சித்தாந்தப்பிடிப்பு பல்லிளிக்கிறது. #ஜெ மாதிரித் தன்னை தைரியமாக முன்னிறுத்துகிற துணிச்சல் இன்றைக்கு ஆளும் கட்சியினரிடம் மட்டுமல்ல, இசுடாலினுக்கும் இல்லாமல் போனதே என்று விமரிசனம் செய்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
2021 சட்டசபைத்தேர்தல்கள் வருவதற்கு முன்னாடியே, இங்கே கழகங்களுக்கு உதறலும் நடுக்கமும் ஆரம்பித்துவிட்டதில் பெனாத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சரியாக சொன்னீர்கள்!( நான் உங்கள்G+ தேவநாதன்)
Deleteவாருங்கள் தேவநாதன் சார்!
Deleteகூகிள் ப்ளஸ்ஸிலிருந்து தொடர்ந்து இங்கே பதிவை வாசிக்கும் நண்பரை அடையாளம் தெரிந்து கொண்டதில் மிகவும் சந்தோஷம்! :-)))
உங்கள் இந்த பதிவுகளை அவ்வப்போது Face Book ல் அப்படியே போட்டுக்கொண்டு வருகிறேன் .தங்கள் பதிவுகளை புரிந்துக்கொள்ள தனி தகுதி வேண்டும். முக்கியமாக தொடர்ந்து சமுதாய மாற்றங்களை உண்னிப்பாக கவணித்துக்கொண்டுவந்தாலமட்டுமே இது சாத்தியமாகும். பொழுதுபோகுக்கு படிப்பவரகளால் ஏதும் உபயோகமில்ல. சமுதாய பார்வை மாறிக்கொண்டிஉக்கிறது தொடர்அரசியல் பிரச்சாரங்களால். ஆணால் எதுவும் நிரந்தரம் இல்லை.எந்த ஒரு கருத்துக்களும் உச்சத்திற்கு சென்றே மாறுதலுக்கு உட்படுகின்றன. இது போது விதி.
ReplyDeleteவாருங்கள் சார்!
Deleteவெளிப்படையாக அரசியல் கருத்துக்களை சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு, முகநூல் ஒரு மூத்திரச்சந்து.
இங்கே இருந்து அங்கே எடுத்துப்போடுவதில் எனக்குத் தடை ஏதுமில்லை என்றாலும் உங்களுக்கு அது பெரும் தொந்தரவாக மாறிவிடக் கூடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
,
என்னுடைய பதிவுகளில் புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள், எழுதுகிற முறை இப்படி எதிலாவது சிரமம் இருக்குமானால் தயங்காமல் இங்கேயே வந்து கேளுங்கள், என்னால் முடிந்த தகவல்களைத் தருகிறேன். சமூக ஊடகங்களுடைய தாக்கம், வளர்ச்சியில், திராவிடப்பொய்கள் முன்னைமாதிரி ஐம்பது வருஷங்கள் எல்லாம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்பதைக் கவனிக்கிறீர்கள் இல்லையா! .