ராஜா காது கழுதைக் காதுதான்! சந்தேகமிருக்கிறதா என்ன?

சமீபத்தில் நெல்லை கண்ணன் என்கிற காங்கிரஸ் உளறுவாயன் நரேந்திர மோடியின் திருமண வாழ்க்கை குறித்தும், கூட்டத்தைச் சிரிக்கவைக்கிறேன் பேர்வழி என்று தமிழக முதல்வர், துணைமுதல்வர், அமித்ஷா என்று பலரையும் சகட்டுமேனிக்கு கீழ்த்தரமாகப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டதும். நெல்லை கண்ணன் பேசியது சரிதான் என்ற ரீதியில் இன்னும் இங்கே விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதையும் பார்த்துச் சலித்திருப்பீர்கள்! ஒரு மாறுதலுக்காக, நடிகை பாயல் ரோஹட்கி! என்ன பேசி விட்டார் என்று கைது,  9நாட்கள் சிறை அப்புறம் ஜாமீன் என்று?

      வீடியோ 13 நிமிடம் 

நேரு மற்றும் வாரிசுகளுடைய கதை பொதுவெளியில் இன்றைக்கும் சந்திசிரித்துக் கொண்டிருப்பதுதான்! பொதுவெளியில் எல்லோரும் தெரிந்துகொள்கிற மாதிரி இருக்கிற தகவல்களைச் சொன்னதனாலேயே நேரு மற்றும் வாரிசுகளைப்பற்றி அவதூறாகப் பேசி விட்டார் என்று முடிவு செய்துவிடுவதா? காங்கிரஸ் காரனைப் பொறுத்தவரை இந்திரா காந்தி என்று இருப்பதில் ஒரிஜினல் காந்திக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று உண்மையைச் சொன்னால் மிகவும் அசௌகரியமாக இருக்கிறது. கருத்து சுதந்திரமாவது மண்ணாவது!

Arrest

Rohatgi claimed that Jawaharlal Nehru, first prime minister of India, was not legitimate child of Motilal Nehru but born out of an illicit relationship of Kamala Nehru with another man in Facebook video in October 2019.[8] She also alleged that Motilal Nehru had five wives.[55] Youth Congress leader lodged police complaint against her for insulting the Nehru family.[56][57][58][59] Later, she offered public apology to Priyanka Gandhi and Sonia Gandhi.[60] On 15 December, she was detained by Bundi Police in Ahmedabad due to her remarks on Nehru-Gandhi family.[61] She was later arrested. On 16 December 2019 Court sent her in Judicial custody for 9 days till 24 December 2019.[62]  என்று அம்மணியைப் பிரபலமாக்கிய அல்லது ராஜாகாது கழுதைக்காது என்பதை பல்லக்கு தூக்குகிறவர்களே  ஒப்புக்கொண்ட விதத்தை விக்கிபீடியா பக்கம் சொல்கிறது. அதென்ன ராஜாகாது கழுதைக்காது என்று அப்பாவியாகக் கேட்பவர்களுக்காக ஒரு பழைய தமிழ்ப்படக் காமெடி இங்கே வீடியோவாக!   விக்கி சொல்வதெல்லாம் உண்மை என்று நான் சர்டிபிகேட் கொடுக்கவில்லை, ஆனாலும் ஒரு குறைந்தபட்ச, ஆரம்பநிலைத் தகவல்களைத் தருகிற இடமாக விக்கிபீடியா இருக்கிறது என்பதை மறுக்க முடியாது! இந்த விஷயத்தோடு முந்தைய பதிவில் நம்மூர் அரசியல் பெரும் புள்ளிகளுடைய கதையை biopic ஆக எடுத்தால் என்ன ஆகும் என்ற கேள்வியையும் சேர்த்துப் பாருங்கள்! 


Queen வெப் சீரிசில் நடித்த அனுபவம் பற்றி ரம்யா கிருஷ்ணன் இந்த 11 நிமிட வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார். கதையமைப்பும் இயக்குனரும் தான் சொதப்பினார்களே தவிர ரம்யா கிருஷ்ணன் மாதிரி கலைஞர்கள் அல்ல. உண்மையான ஜெ. மிக மர்மமான பெண்மணியாகவே இந்த சீரீஸ் கொடுமைக்குப் பிறகும் இருக்கிறார்! அவ்வளவுதான்!


மொக்கையாக எடுப்பாராம்! ஆனால் rubbish ஆ குறை சொல்லாதீங்க என்றும் கௌதம் மேனன் சொல்வாராம்! முன்னோட்டம் சேர்த்து 19 நிமிடம். இரண்டாவது, மூன்றாவது சீசன்களும் இருக்கிறதாம்! இப்போதே பயமாக இருக்கிறதே! சொன்னால் உனக்கு வெப் சீரீஸ் பற்றி ஒண்ணுமே தெரியாதென்று கௌதம் மேனன் சண்டைக்கு வந்துவிடுவாரே! 

வெப் சீரீசை வைத்து  இங்கே சொல்வதும் கூட நிஜத்துக்கும் கிரியேட் செய்யப்பட்ட பிம்பத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்காது! வெறும் கற்பிதங்கள் உண்மையாக இருக்காது என்பதை நேரு, வாரிசுகள் விஷயத்திலும்  ராஜா காது கழுதைக்காது தான் என்பதை மறுபடியும் வலியுறுத்திச் சொல்வதற்காக மட்டுமே!

மீண்டும் சந்திப்போம்.              

தொடர்புடைய பதிவு

ராஜா காது கழுதைக்காது தான்! அதுக்கென்னவாம் இப்போ?

           

4 comments:

  1. நெல்லை கண்ணன் நல்லவர். இவரை விட மிக மோசமாகப் பேசியவர்களெல்லாம் கெத்தாக வெளியில் இருக்கும்போது, அவருடைய அனுபவம், மரியாதைக்கு உரிய இடம் கொடுத்து எச்சரித்துவிட்டிருக்கலாம். ஏமாந்தவர்கள் மீது அதிகாரம் பாய்வதும், வலியோரிடம் பணிந்து போவதும் வருத்தத்துக்கு உரியது.

    ReplyDelete
    Replies
    1. காளிதாசனுடைய கவிதைவரிகளில் எப்போதும் பார்க்கிற அரசன், சூரியன், நெருப்புதானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியுமா என்று .எப்போதோ படித்ததுண்டு.

      இந்தப்பதிவின் மையக்கருவே நேரு அல்லது கருணாநிதி, மற்றும் வாரிசுகளாக இருந்தால் அவர்களுக்கொரு நியாயம், நெல்லை கண்ணன் பாயல் ரோஹட்கி இவர்களுக்கென்று ஒரு நியாயம் இருக்கிற விசித்திரம் தான்! அதற்காக மானாவாரியாக நெல்லைகண்ணனுக்கோ பாயல் ரோஹட்கிக்கோ நல்லவர்கள் சர்டிபிகேட்டை கொடுத்துவிட முடியுமா சொல்லுங்கள்!

      Delete
  2. #நெல்லைகண்ணன் நல்ல பேச்சாளர்தான் ஆனால் இப்ப பேசத் தெரியாமல் ஜோலிய முடிச்சிருக்க வேண்டாமா என்று பேசி இப்போது கைதாகி இருக்கிறார்... இப்படி பேசுவதற்கு பதிலாக அப்போலோவில் கொண்டு போய் சேர்த்து இருக்க வேண்டாமா என்று புத்திசாலியாக பேசி இருக்கலாமே இரண்டு ஒரே அர்த்தத்தைதான் தருகிறது ஹும் என்னத்த சொல்ல யானைக்கும் அடி சருக்கும் என்று முன்னோர்கள் தெரியாமலா சொல்லி சென்றார்கள்
    அதுமட்டுமல்ல
    நெல்லைகண்ணன் நன்றாக பேசினாலும் மோடியை மற்றும் மற்ற தலைவர்களை அவன் இவன் என்று பேசுவது தவறு மற்றவர்களை விட வயது இவருக்கு அதிகம் இருந்தாலும் பதவிக்கு மாரியாதை கொடுத்து பேசுவதுதான் சரி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ம.த.!

      ஒருவர் நெல்லைக்காரராகவும் இன்னொருவர் மதுரைக்காரராகவும் இருந்து பின்னூட்டமிடுவதிலேயே இருவேறான கருத்துக்கள்!

      நெல்லைக்கண்ணன் இலக்கியப்பேச்சாளராக இருந்தவர்தானே? யாகாவாராயினும் நாகாக்க என்ற குறளை ஏன் மறந்தாராம்? மறந்ததால், காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று சிறையை விட மிக மோசமான அவமானத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார். காசுக்காகப்பேசுவது எப்போதும் விபரீதத்தைத் தான் கொண்டுவரும்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!