Showing posts with label தேர்தல் களம். Show all posts
Showing posts with label தேர்தல் களம். Show all posts

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்! #மாற்றத்துக்கானதருணம்இது

கடந்த எழுபது ஆண்டுகளில் ஆளும் கட்சிகளாக இருந்த காங்கிரசோ, ஒமர் அப்துல்லா (NC) மெஹபூபா முப்தி (PDP) கட்சிகளோ நடத்தத் துணியாத உள்ளாட்சித் தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்து, முடிவுகளும் வெளியாகி விட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமை இப்படித் தானென்று இதுவரை சொல்லப்பட்டு வந்த பொய்களை இந்தத் தேர்தல் முடிவுகள் நொறுக்கித்தள்ளி விட்டன என்று சொன்னால் மிகையல்ல. 


மெஹபூபா முக்தியுடன் பிஜேபி கூட்டணி வைத்திருந்த போது, ஹிந்துக்கள் அதிகமாக இ.ருந்த ஜம்மு பகுதியில் பிஜேபி மெஜாரிட்டியாகவும், இஸ்லாமியர்கள் அதிகம் இருந்த காஷ்மீர் பகுதியில் மெஹபூபாவின் PDP கட்சி அதிக இடங்களில் வென்ற மாதிரித்தான் இப்போது உள்ளாட்சித் தேர்தல்களிலும் நடந்திருக்கிறது என்று மேலோட்டமாகச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை மேலே 14 நிமிட வீடியோவில் பார்க்கலாம். 

இது இன்று காலை 9.30 மணி நிலவரமாக ANI செய்தி நிறுவனம் ட்வீட்டரில் வெளியிட்ட செய்தி. 

பிஜேபி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. குப்கார் கூட்டணி என்றழைக்கப்படும் ஒமர் அப்துல்லா (NC)  தலைமையிலான கூட்டணியில் தேசிய மாநாடும், மெஹபூபாவின் PDP கட்சியும் பிரதானமானவை. வேறு சில உள்ளூர் உதிரிகளும் அடக்கம். மேலே ANI செய்திப் படி ஒமர் அப்துல்லா கட்சி காஷ்மீரில் கொஞ்சம் மரியாதையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.மெஹபூபாவின் PDP அடுத்த தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி! சுயேட்சைகளாகக் களமிறங்கியிருக்கும் தனிநபர்கள் வெற்றிபெற்ற இடங்களில் பாதிகூட ஜெயிக்க முடியாத மெஹபூபா முப்தி, இன்னமும் வாய்கிழியத் தம்பட்டம் அடித்துக் கொள்வதை நிறுத்திக்கொள்ளவில்லை என்பது காஷ்மீர் அரசியலின் வினோதம்! பெரும் சோகம்!

Todays DDC results have made it clear that people of J&K voted en masse for thus rejecting the unconstitutional decision to abrogate Article 370. They have overwhelmingly supported which stands for restoration of J&Ks special status.

இது இன்று கடைசியாகக் கிடைத்த நிலவரம் 


278/280 available now for DDC elections J&K - PAGD at 110 (JKNC+PDP+PC+CPIM+JKPM) BJP - 75. Congress - 26. 50 independents, and 12 seats for the JKAP Counting for Drugmulla, Kupwara and Hajin-A, Bandipora remains on hold. !

2:49 PM · Dec 23, 2020Twitter Web App        

இதற்கும், மேலே மெஹபூபா பீற்றிக் கொண்டதற்கும் பொருத்தம் இருக்கிறதா? நீங்களே சொல்லுங்களேன்!

“Independent candidates have polled more votes than the Congress and the PDP. The same Mehbooba Mufti who’d refused to unfurl the Tricolour has got a befitting reply today,”  இப்படி பிஜேபியின் அனுராக் தாக்குர் கேட்டிருப்பதில், ஜம்மு காஷ்மீரில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது மிகத்தெளிவாகவே புலப்படுகிறது

#மாற்றத்துக்கானதருணம்இது      

#தேர்தல்களம் காங்கிரசைத் தொடரும் தோல்விகள்! ராமச்சந்திர குகா குமுறுகிறார்!

ஏன் தான் தேர்தல்கள் அடுத்தடுத்து வருகின்றனவோ? தேர்தல், ரிசல்ட் என்ற வார்த்தைகளே சோனியா காங்கிரசைக் குலைநடுங்க வைக்கிற மாதிரி ஆயினவோ? ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெறும் 2 கவுன்சிலர்களை மட்டுமே பெற முடிந்த காங்கிரஸ், தான் ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் உள்ளாட்சித் தேர்தல்களில் பிஜேபியிடம் தோல்வியை சோனியாவின் பிறந்தநாள் பரிசாக அளித்திருக்கிறது.

Sonia Gandhi not to celebrate her birthday in view of farmers’ protests, Covid-19. The Congress leader, who will turn 74 on December 9, is currently in Goa after doctors advised her to shift out of Delhi in view of heavy pollution and poor air quality that had aggravated her chest infection.The Congress leader, who will turn 74 on December 9, is currently in Goa after doctors advised her to shift out of Delhi in view of heavy pollution and poor air quality that had aggravated her chest infection என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ். அம்மணி பிறந்தநாளைக் கொண்டாடாமல் போனதற்கு அவருடைய உடல்நலக்குறைவு மட்டுமே காரணம்! போன வருடம் கூடத்தான் கொண்டாடவில்லை! அதற்கு  என்ன காரணம் சொன்னார்களாம்?   


சரித்திரத்தின் சாட்சி என அழைக்கப்படும் ராமச்சந்திர குஹா, தன்னுடைய ஒருகண் பார்வையிலிருந்து மட்டுமே சரித்திரம் பேசுகிறவர் என்பது நண்பர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். ராம் குஹா நேருவின் அதிதீவிர அபிமானி, இந்தியா ஒரு நாடானதே நேருவினால்தான் என்று வாசகர்களை நம்பவைக்க அரும்பாடுபடுகிறவர். நேருவுக்கு  பாரம்பரியம் என்று ஒன்று இருந்ததாகவும் அதை இப்படித் தொடர் தோல்விகளால் கெடுக்கிறார்களே என்கிற கோபத்தால் மட்டுமே சோனியா & கோவைப் போய்த் தொலையுங்கள் என்று 2014க்குப் பிறகு தொடர்ந்து எழுதி வருபவர்.

A recent headline in the Hindustan Times summed up all that is wrong with the Congress Party today, and why under its present leadership, the party cannot present an effective or credible alternative to the Bharatiya Janata Party. The headline read: "Sonia Gandhi not to celebrate her birthday in view of farmers's protests, Covid-19". The vanity and self-regard in this public pronouncement was staggering, if entirely characteristic. Do the Gandhis think they are akin to royalty, so that the cancellation of one of their birthday parties becomes a mark of identification with their suffering subjects? 

Why The Gandhis Must Go Now - by Rama chandra Guha     Updated December 09, 2020 12:02 pm IST மேலே இன்றைக்கு NDTV :தளத்தில் ராமச்சந்திர குஹா அழாத குறையாகக் குமுறி எழுதியிருக்கும் Opinion கட்டுரையின்  துவக்க வரிகள். Whether or not Sonia Gandhi celebrates her birthday this year (or any other) will not affect the nation's future. The sacrifice she should make is to retreat from politics, and take her children with her. Their departure will increase our chances of rescuing what. remains of the Republic from the ravages of Hindutva authoritarianism.என்று  முடித்திருப்பதில் நேரு பாரம்பரியம், பரம்பரை மீதான அபிமானம் அக்கறை வெளிப்படுவதை விட நரேந்திர மோடியைத் தேர்தல்களில் தோற்கடிக்க முடியவில்லையே என்கிற இயலாமையே அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது. லிங்கில் முழுப்புலம்பலையும் படித்துப்பாருங்கள்   

Patriots And Partisans என்கிற புத்தகத்தில் ராமச்சந்திர குஹா,  ‘இந்திரா காந்தி மட்டும் அறுபதுகளில் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று கற்பனை பண்ணி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் சுவாரசியம்!

காங்கிரசின் கதை என்பது ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத பலகால கட்டங்களைக் கொண்டது. அல்லது காங்கிரஸ் என்ற பெயரில் வெவ்வேறுநபர்களின் ஆளுமையின் கீழ் இருந்த வெவ்வேறு குழப்பங்களைக்  குறிப்பிடுகிற ஒரு பெயர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!

இப்படிக் கொள்கைகள் எல்லாம் காங்கிரசுக்கு இருந்ததா? இருக்கிறதா? என்பதில் ஆரம்பிக்கிற  குழப்பம், என்றைக்கும் தீருவதாயில்லை! 1885 இல் மாட்சிமைதாங்கிய ராணியின் சர்க்கார் அனுமதியோடு ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசா இன்றைக்கு இருப்பது? ஸ்ரீ அரவிந்தர், திலகர், கோகலே காலத்தைய காங்கிரசா இன்றைக்கிருப்பது? 1920 க்குப் பிறகு,மகாத்மா காந்தி வந்தபிறகு 1942 இல் வெள்ளையனே வெளியேறு என்று இயக்கம் நடத்திய காங்கிரசா இன்றைக்கு இருப்பது?

நேரு காலத்தில் இருந்த காங்கிரசா இது? கட்சியை உடைத்து இண்டிகேட் ஆக்கிய இந்திரா காலத்து காங்கிரசா இன்றைக்கிருப்பது?

இன்றைக்கிருக்கிற காங்கிரசின் சரித்திரம் சீதாராம் கேசரியை ஓரம் கட்டிவிட்டு, அன்டோனியோ மைனோ என்கிற சோனியா கட்சித்தலைவர் ஆனதிலிருந்து தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டீர்களானால், மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்வது எளிது!  ஏன் இவர்களை நிராகரிக்க வேண்டும் என்பதையும் சேர்த்துத்தான்!  

காங்கிரசின் கதையைச் சொல்லி எழுதியவை இங்கே பலமுறை பலவிதமாகச் சொல்லப்பட்டதுதான்! எதுவும் புதிதல்ல    

மீ.ண்டும் சந்திப்போம். 

கொஞ்சம் செய்தி! கொஞ்சம் அரசியல்! மாறும் தேர்தல்களம்!

ரஜனிகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பிக்க ஜனவரியில் நாள் குறித்து விட்டதாக நேற்றைக்கு அறிவித்ததில் தமிழக ஊடகங்கள் கலவரம் அடைந்திருக்கிற அளவுக்கு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகள் எதுவும் கிளம்பக் காணோம்! 


ரஜனிகாந்த் இந்த 12 நிமிட வீடியோவில் என்னதான் சொன்னார் என்பதை விட இந்தப் பேட்டியைக் கவரேஜ் செய்ய வந்திருந்த ஊடகக்காரர்கள் எத்தனை கலவரம் அடைந்திருந்தார்கள் என்பதை பின்னால் கேட்கும் கூச்சல் குழப்பங்கள் காட்டியது மிக சுவாரசியமாக இருந்தது என்பது என்னுடைய கருத்து. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்பதெல்லாம் சுத்தமான ரஜனிகாந்த் அபத்தம்!


பன்னீர்செல்வத்துக்கு இது வேண்டாத வேலை! இதனால் எப்படி கார்த்தி சிதம்பரம் தப்புத் தப்பாக அரசியல் கணிப்பு செய்கிறார் பாருங்கள்! 

இது எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தின் மகன் கீச்சியது. அறிவுக்கொழுந்துகளுடைய கீச்சுக்கெல்லாம் எதிர் வினை அவசியமில்லை என்பதால் விட்டுவிடலாம். ஆனால் இன்னொரு எல்லாம்தெரிந்த ஏகாம்பரம் சுமந்த் சி ராமன் எதிர்க்கீச்சு போடாமல் இருப்பாரா?

 


  

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜனிகாந்த் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்திருப்பவர். அதிகமாக முட்டுக் கொடுப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை! ஆனால் எப்போதுமே வாக்களிக்க வராத 30% to  40%  வாக்காளர்களை வாக்களிக்க வைத்தால் ஒழிய, ரஜனி ஒரு அரசியல் மாற்றத்துக்கான சக்தியாக  உருவாக வாய்ப்பே இல்லை என்பது என்னுடைய கருத்து.

#மாற்றுஅரசியல் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து இந்தப் பக்கங்களில் தேடினால் புரிந்து கொள்ளவும் யோசிக்க உதவியாகவும் பல பதிவுகள் கிடைக்கும். மாற்று அரசியலை முன்னெடுக்க ரஜனியால் ஒருபோதும் முடியாது.     

ரஜனி கட்சியின் மேஸ்திரியாக (சூபர்வைசர்)  நியமனம் செய்யப் பட்டிருக்கும் தமிழருவி மணியனுக்கு என்ன மனத்தாங்கலோ தெரியவில்லை! முதல்வர் வேட்பாளராக  மாட்டேன் என்பதில் ரஜனி உறுதியாக இருக்கிறார். ஆனால் மக்கள் அவர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று நினைக்கிறார்கள் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் ரஜனியிடமிருந்து  என்னைப்பிரிக்க சதி நடக்கிறது என்றும் சொல்லியிருப்பது உச்சபட்ச தமாஷ்!  காந்திய மக்கள் இயக்கம் நடத்தியவர் அல்லவா!   



ஹைதராபாத் பெருநகரக் குழுமத்துக்கான தேர்தலை தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி முன்கூட்டியே நடத்தியிருப்பதில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டே இருப்பதில் முழுமையான முடிவுகள் வெளியாகவில்லை. இரவு ஏழுமணிக்கு மேலும் ஆகலாம் என்று சொன்னதால், அதை முதலில் அடுத்த வீடு பகுதிக்காக எழுதலாம் என்று நிநினைத்திருந்தபடி முடியவில்லை. மேலே படத்தில் காணும் எண்ணிக்கை மாறலாம் என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.


குஷ்புவை ஒரு சீரியசான அரசியல்வாதியாக நான் எப்போதும் நினைத்ததில்லை. அதேநேரம் அவர் ஒரு sharp wit என்பதில் சந்தேகமிருந்ததுமில்லை! அவரிடம் வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட நபரை வலைப்பதிவுகளில் நண்பர்கள் சந்தித்திருக்கலாம்! நினைவிருக்கிறதா? 

மீண்டும் சந்திப்போம். 

#தனிக்கச்சேரி பீஹார் தேர்தல் களம் தரும் படிப்பினைகள்

சுவாசிக்கப்போறேங்க தளத்தில் பீஹார் தேர்தல் முடிவுகளைப் பற்றி நேற்று கொஞ்சம் எழுதியிருந்தேன். ஒரிஜினலாக இந்தப் பக்கங்களில் தேர்தல் முடிவுகள்  முழுமையாக வெளிவந்தபிறகு #தனிக்கச்சேரி வைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்லியிருதேன்.சில சுவாரசியமான விஷயங்கள், தேர்தல் களம் தரும் நல்ல படிப்பினைகளாகவும் இருப்பதை பேசாமல் இருந்தால் எப்படி? ஒரு தேர்தல் தமாஷாக, சிவசேனா, பீஹார் சட்ட சபைத்தேர்தலில் 21 இடங்களில் போட்டியிட்டு அத்தனை இடங்களிலும் தோற்றது. NOTAவிற்கு கிடைத்த வாக்குகளை விட மிகக் குறைவான வாக்குகளையே பெற முடிந்த சிவசேனா அடித்துக் கொள்ளும் ஜம்பம்/தம்பட்டம் என்னவென்று தெரிந்தால் வாய்விட்டுச் சிரிப்பீர்கள்! 

If Nitish becomes Bihar CM, credit goes to Shiv Sena: Saamana சிவசேனாவின் அதிகாரபூர்வமான பத்திரிகை சாம்னா பீற்றிக்கொள்வது இது! 


 

The Print தளத்தில் சேகர் குப்தா இந்த 25 நிமிட வீடியோவில் ஒரு ஆறு முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுகிறார் நண்பர்களை இந்த வீடியோவை முழுமையாகப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன். சேகர் குப்தா பட்டியலிடும் அந்த ஆறு படி
ப்பினைகள் என்னென்னவென்று சுருக்கமாகப் பார்த்துவிடலாமா? 

1. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் களத்தில் இன்றும் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார்.ஜனங்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் இருக்கிறார்.

2. நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட நிறைய விஷயங்களில் நரேந்திர மோடி மீதான ஜனங்களின் நம்பிக்கை கொஞ்சமும் குறையவே இல்லை. காங்கிரஸ் கட்சி 
தொடர்ந்து நரேந்திர மோடி அரசு மீது அள்ளிவிடும் குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்வாரில்லை என்பது காங்கிரஸ் கட்சி பிரமுகர்களைத்தவிர மற்ற எல்லோருக்குமே புரிந்திருக்கிறது.

3. காங்கிரஸ் கட்சி தன்னால்  நஜீரணிக்க முடியாத அளவுக்கு கூட்டணிக்கட்சிகளிடம் சீட்டுகளைக் கேட்டுப் பெற்றாலும், அவைகளில் கால்வாசி இடங்களில் கூட ஜெயிக்க முடியாத அளவுக்கு பலவீனப்பட்டுப்போய்க் கிடக்கிறது.ராகுல் காண்டி முகத்துக்காகவோ அவர் இன்னாருடைய பேரன் என்பதற்காகவோ ஜனங்கள் வாக்களிக்கத் தயாராக இல்லை.ராகுல் காண்டியை ஒரு சீரியசான அரசியல்வாதியாக எவருமே பார்ப்பதற்குத் தயாராக இல்லை.

4. RJD கட்சியின் கூட்டாளிகளாக இந்தத்தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரிகள் சுமார் 16 இடங்களில் ஜெயித்திருப்பது இந்தத்தேர்தலில் இன்னொரு அதிசயம்! 70 இடங்களில் போட்டியிட்டு சென்ற  2015 தேர்தலில் 27 இடங்களில் ஜெயித்த காங்கிரஸ் இப்போது அதே 70 தொகுதிகளில் போட்டி 51 தொகுதிகளில் மண்ணைக் கவ்வியது என்பதோடு  சென்ற தேர்தலில் வெறும் 3 இடங்கள் மட்டுமே ஜெயித்த இடதுசாரிகள் இந்த முறை 16 இடங்களைப்பிடித்திருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸ் எப்படி மரணப்படுக்கையில் கிடக்கிறது என்பதை எளிதில் விளங்கி கொள்ள முடியும்.அதேநேரம்  இடதுகளின் இந்த வெற்றி வேறொரு விஷயத்தையும் கோடிட்டுக் காட்டுவதையும்பார்த் தாக  வேண்டும். பொதுவாகவே கம்யூனிஸ்டுகள் ஜனநாயக நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் நம்புவதெல்லாம் வேறுவிதமான விபரீதம்.

5. தேஜஸ்வி யாதவ்! RJD கட்சியின் லல்லு பிரசாத் யாதவின் மகன். தந்தையின் கறைபடிந்த அரசியல் பின்னணியிலிருந்து விலகி, கொஞ்சம் வித்தியாசமான அரசியல் செயல்பாடுகளுடன் களத்தில் இறங்கி இருக்கிறார். பீஹார் அரசியலிலும் தேசிய அரசியலிலும் நட்சத்திரமாக வளரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

6.ஹிந்தி பெல்ட்டில் கடைசியாக மிச்சமிருந்த பீஹாரிலும் பிஜேபி வலுவாகக் காலூன்றி இருப்பது இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சம்.தேர்தல்களம் தந்திருக்கும் படிப்பினையும் கூட. கூட்டணிபலம் எதுவும் தேவைப்படாத அளவுக்கு பிஜேபி வளர்ந்திருப்பதை பீஹார் தேர்தல் களம் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறது. நிதீஷ்குமார் பற்றித் தனியாகச் சொல்ல எதுவுமே இல்லை.

அவ்வளவுதானா?  இன்னொரு முக்கியமான படிப்பினையும் கூட இந்தத் தேர்தல்களத்தில் வெளிப்பட்டு இருக்கிறது. சிறுபான்மை மக்களுடைய காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டு, அவர்களுடைய வாக்குகளை அறுவடை செய்துவந்த செகுலர் கட்சிகளுக்கும் முகத்தில் அறைகிற மாதிரி அசாதுதீன் ஒவைசியின் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

What the Owaisi phenomenon tells us about the Indian Muslim mind & future of ‘secular’ parties என்ற தலைப்பில் ஒரு 24  நிமிட வீடியோவில்  சேகர் குப்தா சொல்வதில் வேறுபல சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன. நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கொஞ்சம் பார்க்கலாமே! 

ஒவைசி கட்சியின் வெற்றி நிறையப்பேரை கலங்க வைத்திருக்கிறது. உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியாமல் குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்த கதையில் வருவதுபோல தப்பும் தவறுமாக பதற ஆரம்பித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு NDTV தளத்தில் முகுல் கேசவன் எழுதியிருக்கிற  இந்தக் கட்டுரை.Bihar Result Throws Up A New Fact - How To Ally With Owaisi   

மீண்டும் சந்திப்போம்.    

மண்டேன்னா ஒண்ணு! #தேர்தல்அரசியல் ஓ அமெரிக்கா! ஓ இந்தியா!

ஒருவழியாக அமெரிக்க அதிபர் தேர்தலில் அழுகாச்சிகள் ஓய்ந்து,ஜோ பைடன் (ஜனநாயகக் கட்சி) தன்னுடைய ,  தேர்தல் வெற்றியை அறிவித்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் சீனா, ரஷ்யா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து ஜோ பைடனுக்கு சம்பிரதாயமான வாழ்த்துக்கள் எதுவும் சொல்லப் படவில்லை என்று அண்மைச் செய்திகள் சொல்கின்றன. 2016 இலும் சரி இப்போது 2020 இலும் சரி, ஒரு நல்ல வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாமல் குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் மிக மோசமான வேட்பளர்களையே நிறுத்தியதில், இந்தத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்  தன்னைவிட மிக மோசமான வேட்பாளரான ஜோ பைடனிடம் தோல்வியடைந்திருக்கிறார்  என்றே எனக்குப் படுகிறது. 


டிரம்புக்கு எதிரான அமெரிக்க ஊடகங்களுடைய வன்மம் கலந்த தொடர் தம்பட்டம் புதிதல்லதான்! அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகளும், சீனா, ரஷ்யா முதலான டொனால்ட் ட்ரம்ப் தோற்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் என்பதும் கூட ஊரறிந்த ரகசியம் தான்! ஜோ பைடனுடைய வெற்றியைக் கொண்டாடிய ஒரே வெளிநாடு பாகிஸ்தான் தான்! டொனால்ட்  ட்ரம்ப் தோற்றிருக்கிறார் ஆனாலும் அவருடைய தாக்கம் அமெரிக்காவை இருகூறாகப் பிரித்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால் தேர்தல் முறையிலான ஜனநாயக நாடுகளில் இதுமாதிரி நடப்பது ஒன்றும் புதிதல்ல கடந்த சிலநாட்களாகவே ஜனநாயகத்துக்கு ஆதரவாகப் பொங்கிக் கொண்டிருந்த அயல்நாட்டு ஊடகங்களைக் கவனித்துக் கொண்டிருந்ததில் சிரிப்பு மட்டுமே வந்தது. போதாக குறைக்கு உள்ளூர் ஊடகமான News 18, ராகுல் காண்டி ஜோ பைடன், தேஜஸ்வி யாதவ் இருவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் ஒரு அபத்தமான செய்தியைப் போட்டு தமாஷ் செய்து இருக்கிறது! 

பப்பு காண்டி கற்றுக் கொள்கிற ஆசாமி மாதிரித் தெரிகிறதா என்ன? அடக் கொடுமையே! 

நாளை பீஹார் தேர்தல் முடிவுகள் வரட்டும்! இந்தச் செய்திக்காகவே ஒரு தனிக்கச்சேரி வைத்துக் கொள்ளலாம்!  

மீண்டும் சந்திப்போம்    

பிரசாந்த் கிஷோருடைய உத்தி டில்லி தேர்தலில் எடுபடவில்லையா?

நீங்கள் இந்தப்பதிவை வாசிக்கிற நேரம், அநேகமாக டில்லி சட்டசபைத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி இருக்கும். மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்பார் என்பது ஏற்கெனெவே கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்ததுதான்! ஆனால் இன்னமும் பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்ளாத விஷயம், காங்கிரசின் ஷீலா தீட்சித், 1998 இல் இருந்து 2013 வரை  தொடர்ந்து மூன்று முறை 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த இடத்தில், இப்போது காங்கிரசின் நிலைமை என்ன? காங்கிரஸ் கட்சி இப்போதைய தேர்தல்களில் போட்டியிட்டாலும் அது மும்முனைப்போட்டியாகத்தான் இருந்ததா?

பிற்பகல் 12.32 மணி நிலவரம் 

2013 சட்டசபைத்தேர்தலில் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்த அரவிந்த் கேஜ்ரிவாலின் AAP வெறும் 28 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. 31 இடங்களில் ஜெயித்த பிஜேபியை வரவிடக்கூடாது என்று 11 இடங்களில் மட்டுமே ஜெயித்த காங்கிரஸ் நினைத்தது. காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியை அமைத்த அரவிந்த் கேஜ்ரிவால் 49 நாட்களிலேயே ராஜினாமா செய்ய நேரிட்டது பழைய கதை. அதற்குப் பின்னால் 2015 இல் நடந்த சட்டசபைத்தேர்தலில் 9.7 % வாக்குகளை மட்டுமே பெறமுடிந்த காங்கிரசுக்கு சட்ட சபையில், ஒரு சீட் கூட இல்லை!  அடிவாங்கிக் கொண்டாவது எப்போதும் ஊடகவெளிச்சத்திலேயே இருக்கத்தவித்த அரவிந்த் கேஜ்ரிவாலும் அவரது டிராமா பார்ட்டியும், காங்கிரஸ் வாக்குவங்கியை முற்றிலுமாகத் தங்கள் வசம் ஈர்த்துக் கொண்டுவிட்டார்கள். இப்போதைய நிலவரப்படி காங்கிரசின் வாக்கு சதவீதம் வெறும் 4% தான். ஆனால் பிஜேபியின் வாக்குசதவீதம் 9% வரை அதிகரித்திருக்கிறது. ஜாமியா மில்லியா, ஷாஹீன் பாக் இருக்கிற ஓக்லா தொகுதியில் பிஜேபி வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை  முன்னிலை வகிக்கிறது என்ற தகவல்களை கொஞ்சம் பொறுமையாக ஆராய வேண்டும். ரிசல்ட்டுகள், புள்ளிவிவரங்கள்  முழுமையாக வரட்டும்! அதற்குமுன்னால் இரண்டு கேள்விகள்! 

பிரசாந்த் கிஷோர் தேர்தல் உத்திகள் ஆம் ஆத்மி கட்சிக்கு கைகொடுத்ததா இல்லையா?

இரண்டுமாதங்களாகத் தூண்டிவிடப்பட்ட கலவரங்கள் போராட்டங்கள் உக்கிரமான பிஜேபி எதிர்ப்பு பிரசாரம் டில்லியில் முறியடிக்கப் பட்டு விட்டதா?

மீண்டும் சந்திப்போம்          

ராகுல் காண்டி! ராமசந்திர குகா! சேகர் குப்தா!

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாய் இல்லை! அதுபோல ஒருநாள் எழுதாமல்தான் இருந்துபாரேன் என்று இருக்க நினைத்தவனை இந்த வீடியோவும் ராமச்சந்திர குகாவும் பதிவெழுத வைத்தாயிற்று.


ட்யூப்லைட் ராகுல் காண்டிக்கு மக்களவையில் பேசத் துணிவில்லை! வெளியே நிருபர்களிடம் சவடாலாகப் பேசமட்டும் தெரிகிறதா? எத்தனைநாட்களுக்கு இந்த ஒன்றுக்கும் உதவாத வாரிசை காங்கிரஸ் தூக்கிச் சுமக்கப்போகிறது என்பது காங்கிரஸ்காரன் தலைவிதி! ஆனால் இந்த தேசமும் சேர்ந்து சுமக்க வேண்டும் என்பது ஜனங்களுடைய தலையெழுத்தா என்ன? ராஜதீப் சர்தேசாய் அப்படித்தான் நினைக்கிற மாதிரித் தெரிகிறது! நேற்று பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பேசும்போது நேரு பெயரை 23 தரம் குறிப்பிட்டுப் பேசிவிட்டாராம்! அதைக்கூட அவருக்காக ராமசந்திர குகா தான் எண்ணிச் சொல்ல வேண்டி இருக்கிறது!  

    
ராமச்சந்திர குகா நேருவின் பரமபக்தர்! மோடி எதிர்ப்பு மிகுந்தவர் என்பதெல்லாம் தெரிந்த செய்தி. சரித்திரம் எழுதுகிறவர் என்பதில் இருக்கும் ஆகப்பெரிய கோளாறே பழைய விஷயங்களிலேயே தேங்கி நின்று விடுகிறார் என்பதுதான்! கடந்தகால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வெளியே வந்துவிட வேண்டும்! கடந்தகாலத்திலேயே சிறைப்பட்டுவிடக் கூடாது என்பதே தெரியாதவரிடம், என்னபெரிதாகத் தெரிந்து கொண்டுவிட முடியும்? நேரு பெரியவர் மிகப்பெரியவர் மிகமிகப்பெரியவர் என்றே சொல்லத் தெரிந்தவருக்கு மோடி எதற்காக நேரு எந்தக்காலத்திலோ பேசியதை, மேற்கோள் காட்டவேண்டும்? அதுவும் காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்துப் பேசவேண்டும் என்பது புரியவில்லையாமா?

Modi seized on the word “minorities” in the 1950 pact between Nehru and his then Pakistan counterpart Liaquat Ali Khan to defend the exclusion of Muslims from the CAA. “Such a big secular person like Nehru, such a great thinker, such a big visionary; and everything to you, why did he not use then all citizens instead of minorities there? There must have been some reason,” he said, looking towards the Congress benches. என்று டெலிக்ராப் நாளிதழில் எழுதிய கட்டுரையில் ராமசந்திர குகா கறைப்பட்டுக் கொள்வதில், மோடி என்ன தவறு செய்துவிட்டாராம்? நேருவின் அந்தக் கடிதத்தில் முதல் வரியில் “irrespective of religion” என்று சொல்லியிருந்ததாகவும் அதை மோடி செலெக்டிவாக சொல்லாமல் விட்டுவிட்டார் என்று பொங்கியிருக்கிறார்! ஏன் பொங்கிப் பொருமுகிறார் என்பதற்கு மேலே சிவப்பில் காட்டியிருக்கிற கிண்டலான தொனிதான் காரணம்! He then tossed questions at the Opposition. “Was Pandit Nehru communal, I want to know? Did he discriminate between Hindus and Muslims? Did he want a Hindu Rashtra?” Modi asked. மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் எழுப்பிய கேள்விக்கு, அங்கே இருந்த காங்கிரஸ் எம்பி ஒருத்தருக்கும் பதில் தெரியவில்லையாமா? ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை, நேரு , இந்திரா எல்லாம் கடந்தகாலம்! இன்னும் கொஞ்ச காலத்தில் சோனியாவும்! ராகுல் காண்டிக்கு சலாம் வைப்பதா, பப்பி வாத்ராவுக்கு சலாம் வைப்பதா என்றே தெரியாமல் இருக்கிறவர்களுக்கு, ராமசந்திர குகா, நேரு பெரியவர் மிகப்பெரியவர் மிகமிகப் பெரியவர் என்று புலம்புவது கேட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான்!

      
ராமசந்திர குகாவுக்கு விசிறிவிட இப்படி ஒன்றிரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது இன்னும் சோகம்😩😟😟  


சேகர் குப்தா, இந்த 18 நிமிட வீடியோவில், ராமசந்திர குகா மாதிரி சிறுபிள்ளைத்தனமாக எழுதிப் புலம்பவில்லை என்பது முதல் ஆறுதல்! ஆனால் நேருவை மேற்கோள் காட்டியது உட்பட காங்கிரசுக்கும் நாட்டுமக்களுக்கும் நரேந்திரமோடி தனது 100 நிமிட நன்றியுரையில் பேசியதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? சேகர் குப்தா அவருடைய பணியில் விளக்குகிறார். ராமசந்திர குகா தனது மண்டையில் திணித்து வைத்திருக்கிற பழைய குப்பைகளை வெளியே எறியாமல், நடப்பு நிலவரங்களை விமரிசனம் செய்வது சரியாக இறுக்காது. சேகர் குப்தா பேசியதில் தெளிவான விஷயம் இதுவும் தான்!

மீண்டும் சந்திப்போம்.             

#1180 ஒரு புதன்கிழமை! ரஜனிகாந்த்! உதயநிதி! பின்னே அரசியல்!

துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜனிகாந்த் ஆரம்பித்து வைத்த சர்ச்சையை அப்படியே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்னும் கொஞ்சம் பரபரப்பாக்கினார். அதை மறக்கடிக்க பிரசாந்த் கிஷோருடன் திமுக என்று பரபரப்பு ஓய்வதற்கு முன்னால், மறுபடியும் ரஜனிகாந்த் கிட்டத்தட்ட தன்னுடைய அரசியல் நிலைபாடு என்ன என்பதை வெறும் மூன்றே  நிமிடம் பேசியிருப்பது அரசியல் களத்தை இன்னும் கொஞ்சம் சூடேற்றியிருக்கிறது.

   
மூன்றுநிமிடத்துக்குள் 14 தகவல்களைச் சொல்லிவிட முடியுமா? புதியதலைமுறை count எண்ணிச் சொல்லி இருப்பது கொஞ்சம் சுவாரசியம்! கொஞ்சம் முழுதாகப் பார்க்க இன்னொரு சுட்டி. லயோலா கல்லூரி வாசலில் CAAவுக்கு எதிராகக் கையெழுத்து வாங்கும் உதயநிதி கூட உடனடியாகக் கருத்து சொல்லிவிட்டார்! அது கூட ஒரு நிமிடத்துக்குள்ளாகத் தான்!


ரஜனிகாந்த் இன்னமும் நடிகராகத்தான் இருக்கிறார். அவருக்கு அரசியல் இன்னமும் புரியவில்லை.கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரட்டும் அப்புறம் பதில் சொல்லலாம் என்று அதே கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி ஒரு இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருப்பதான பேச்சு எதற்காக?


கமல் காசர் நடத்தும் மக்கள் நீதி மய்யம் கடை இன்னும் இருக்கிறது என்பதை மறந்துவிட்டோமா? ஆமாம் ஐயா நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்கிற கவிஞர் சினேகன் பேச்சு. சும்மா 24 நிமிடம் தான்! என்ன சொல்கிறார் என்று கேட்டுத்தான் பாருங்களேன்!


அதென்னவோ கோலாகல ஸ்ரீனிவாஸ், ரவீந்திரன் துரைசாமி உட்படப் பல அரசியல் விமரிசகர்களும், ரஜனிகாந்தை எதிர்கொள்வதற்காகத்தான் திமுக தலீவர் இசுடாலின் பிரசாந்த் கிஷோருடைய IPAC நிறுவனத்தோடு கைகோர்த்திருக்கிறார் என்ற ஒரு புள்ளியில் ஒன்றுசேர்கிறார்கள். வீடியோ 32 நிமிடம்.
காங்கிரசின் கே எஸ் அழகிரியும் கார்த்தி சிதம்பரமும் வெறுத்துப்போயிருப்பது நன்றாகவே தெரிகிறது. 

  
பழ. கருப்பையா அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டு இருந்த நிலையில் கூட காங்கிரஸ், கழகங்களுடைய கொள்கை,யோக்கியதை இன்னதுதான் என்று சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே  சொல்லிவிட்டார்.

அப்புறமென்ன? 😂😂  

மீண்டும் சந்திப்போம்.