Showing posts with label ராமசந்திர குகா. Show all posts
Showing posts with label ராமசந்திர குகா. Show all posts

பிப்ரவரி 14! #வரலாறு கசக்கத்தான் செய்யும்! ஆனால், யாருக்கு?

பிப்ரவரி 14! இந்தநாளை மறக்க முடியாததாக ஆக்கிய நிகழ்வுகளில் முதலாவது 1998 இல் கோவையில் தொடர் குண்டு வெடிப்புக்கள்! குண்டுவைத்தது யாரென்று எல்லோருக்குமே தெரியும்! குண்டுவைத்த இஸ்லாமிய தீவீரவாதிகளை திமுக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்த வரலாற்றையும் மறந்துவிட முடியுமா? இரண்டாவது, சென்ற ஆண்டு இதேநாளில்  காஷ்மீர் புல்வாமா பகுதியில் 78 பஸ்களில் பயணித்துக் கொண்டிருந்த CRPF வீரர்களில் 40 பேர் ஒரு தற்கொலைத் தாக்குதலில் பலியான சோகம்! இரண்டு சம்பவங்களுமே தீவீரவாதச் செயல்களில் நிகழ்ந்தவை தான்! இப்படி பலியானவர்கள் சிவிலியன்களானாலும் CRPF வீரர்களானாலும் நம்முடைய நினைவிலும் பிரார்த்தனைகளிலும் என்றும் இருக்கவேண்டியவர்கள்! முதலில் அவர்களுக்கு அஞ்சலி செய்வோம்! 

வீடியோ 27 நிமிடம் 

இங்கே பலருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று நடந்தவைகளைக் குறிப்பிட்டுச் சொன்னாலும், நேரு புராணத்தில் நிறைய சொல்லவிடுபட்டவை உண்டே என்று ஆதாரத்துடன் சொன்னாலும், கசப்பாகத்தான் இருக்கிறது என்பதற்காக #வரலாறு என்பதே பலமுகங்கள், பார்வைகள் கொண்டது தான்! அப்படிப் பார்வையை நிராகரித்துவிட முடியுமா? 

Apathy never forced Kashmiri Pandits to pick up gun to kill perpetrators of Jihad. But apathy forced a Kashmiri Muslim to become a suicide bomber and kill 40 Indian CRPF Jawans in Pulwama. This is crazy logic and disturbingly wrong reportage. Don't make a hero out of a terrorist.
Quote Tweet
Hindustan Times
@htTweets
·
#PulwamaAttack | Apathy forced him to opt for violence, says Pulwama bomber’s family (@shammybaweja reports) hindustantimes.com/india-news/apa #PulwamaTerrorAttack
9
155
420421

அதற்காக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மாதிரியோ, திமுக, காங்கிரஸ் மாதிரியோ பயங்கரவாதத்துக்கு சப்பைக்கட்டு கட்ட வேண்டாமில்லையா? இப்போது அதுதான் முக்கியமான பிரச்சினை. ஜனங்களுடைய ஞாபக மறதி, ஈசியாகக்கடந்து போய்விடுவது போன்ற பலவீனங்கள் மீது அரசியல்வதிகளுக்கு அபார நம்பிக்கை தானே இந்தமாதிரிக் கோளாறுகளுக்கு எல்லாம் அஸ்திவாரமாக இருக்கிறது!?     

ராமசந்திர குகா மாதிரி தான் எழுதுவது மட்டும்தான் சரித்திரம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டதை முந்தைய பதிவில் கோடி காட்டியிருந்தேன், நினைவிருக்கிறதா?  சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒருவிவாதமாக இதைப்  பார்க்கிறேன், பரிந்துரை செய்கிறேன். மகாத்மாகாந்தியோ, நேருவோ அல்லது வேறு எவரோ, குறைநிறைகள் உள்ள சாதாரண மனிதர்கள்தான்! விமரிசனங்களுக்கும், வேறொரு கோணத்திலிருந்து பார்க்கப்படுவதற்கும் விதிவிலக்கானவர்கள் அல்ல. இந்த அடிப்படை  விஷயத்தைப் புரிந்து கொண்டால், கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் தகர்ந்து போவதில் அதிர்ச்சியோ ஆச்சரியமோ படத்தேவையே இருக்காது.  


தீவீர இஸ்லாமியர்கள் கையைத்தான் வெட்டினார்கள்!ஆனால்  சர்ச் இன்னும் அதிகமாகக் காயப் படுத்தியது என்கிறார் இந்த கிறித்தவ பேராசிரியர்! இப்படி நடந்ததை நடக்கவே இல்லை என்று அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டு சொன்னால் சரியாகப் போய்விடுமா?  

வரலாறு சொல்வதென்ன என்பதை முழுமையாகத்  திரும்பவும் பார்த்தால் நிறையக் கசப்பான சங்கதிகளையும் எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கும்! அதற்காக வரலாறே புனைவுகளால் ஆனது தானே என்று விட்டேற்றியாக இருந்துவிட முடியுமா?  

செகுலரிஸம் என்று கோளாறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதால் தீவீரவாதச் செயல்கள் குறைந்து விட்டதா? மென்மையான ஹிந்துத்வா,  தீவிரமான ஹிந்துத்வா என்று பேசுவதால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடுமா? 

இதெல்லாம் வெள்ளிக்கிழமைக் கேள்விகளாக! மீண்டும் சந்திப்போம்.

கொஞ்சம் கொறிக்க #அரசியல் #புத்தகம் #கார்டூன்கள்

திருப்பூர் ஜோதி ஜி இன்று  தன்னுடைய  பதிவில் சில அரசியல் #அட்டகத்தி களுக்கு, குறிப்பாக நடிகர் விஜய்க்கு ஒன்றில்லை, சும்மா  எட்டு யோசனைகளைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? 1. நெஞ்சுக்கு நீதி மொத்தப் பாகமும் வாங்கி படிக்க வேண்டும். படித்தவுடன் அப்பாவுக்கு அரசியல் குறித்து விஜய் புரிய வைக்க முயல வேண்டும். வாய்விட்டுச் சிரிக்க வைத்த பதிவு!


ஆம் ஆத்மி கட்சிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் இருக்கிறார்! எங்களுக்கு அப்படி யார் இருக்கிறார்கள் என்று தேம்புகிறார் காங்கிரசின் P C சாக்கோ! இப்படியும் ஒரு ஞானோதயமா?

    
நாராயணி பாசு! தன்னுடைய கொள்ளுத்தாத்தா V P மேனனுடைய சரிதையைப் புத்தகமாக எழுதி, அதை நேற்றைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் வெளியிட்டுப் பேசியதில் ட்வீட்டரில் வரலாறு என்றால் தான் எழுதுவது மட்டும்தான் என்று சாதிக்கும் ராமசந்திர குகா முதல், திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் முதலானவர்கள் அக்கப்போர் இன்றைக்கு ட்ரெண்டிங் அரசியல் செய்தி. 



On a sunny spring day in 1914, a young Malayali walked into the Government of India’s summer offices in Gorton Castle (in the then Simla). Nobody knew who Vappala Pangunni Menon was then. He was all of 19-years-old, and he came with nothing but a letter recommending him for a typist’s job in the home department. Over the course of the next four decades, VP — as he would come to be known — would be at the frontline of India’s progress towards Independence. He was the principal typist of the Montagu-Chelmsford Report. In 1924, he would join the Reforms Office, a branch of the government of India, which would shepherd India along the path to self-governance. He would remain with the Reforms Office until 1947. Today, VP Menon is remembered for being Sardar Vallabhbahi Patel’s right-hand man, for assisting in the integration of the princely states into the Indian Union. But, between 1914-1951, VP’s contributions to modern India were both immense and immensely understated.  

In 1951, following the death of the Sardar, Vappala Pangunni Menon slipped into political and professional obscurity, where he remained until the end of his days in 1966. Today, it is only right that we rectify this. தன்னுடைய கொள்ளுத்தாத்தாவின் பங்களிப்பை மறந்துபோன தேசத்துக்கு, நினைவூட்டும் விதத்தில் எழுதப்பட்ட புத்தகம் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸில் நாராயணி பாசு எழுதியதில்  இருந்து தெரிகிறது.  அப்படியானால் சர்ச்சை எப்படி ஆரம்பித்ததாம்?


அதென்னவோ இந்திராவின் வாரிசுகளுக்கு எவர் புத்தகம் எழுதினாலும் செந்தட்டி தடவின மாதிரி அப்படி ஒரு அலர்ஜி வந்துவிடுவதை இந்தப் பக்கங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். முதல் முறையாக அப்படி உதறல் ராமசந்திர குகாவுக்கும் வந்திருக்கிறது!


உதறல் ராமசந்திர குகாவுக்கு மட்டும்தான் வருமா? கழகத் தலீவருக்கு வராதா? வேறுவிதமாக என்று துக்ளக் அட்டைப்பட நையாண்டி சொல்கிறது. ஹனுமான் சாலிசா சொல்ல அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உத்தி வகுத்த பிரசாந்த் கிஷோர் எங்கே இசுடாலினை முத்தைத் தருபத்தி என்ற வயலூர் திருப்புகழைப் பாடச் சொல்லி விடுவாரோ என்ற உதறல் எனக்கும் தான்!

மீண்டும் சந்திப்போம்.      
   

ராகுல் காண்டி! ராமசந்திர குகா! சேகர் குப்தா!

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாய் இல்லை! அதுபோல ஒருநாள் எழுதாமல்தான் இருந்துபாரேன் என்று இருக்க நினைத்தவனை இந்த வீடியோவும் ராமச்சந்திர குகாவும் பதிவெழுத வைத்தாயிற்று.


ட்யூப்லைட் ராகுல் காண்டிக்கு மக்களவையில் பேசத் துணிவில்லை! வெளியே நிருபர்களிடம் சவடாலாகப் பேசமட்டும் தெரிகிறதா? எத்தனைநாட்களுக்கு இந்த ஒன்றுக்கும் உதவாத வாரிசை காங்கிரஸ் தூக்கிச் சுமக்கப்போகிறது என்பது காங்கிரஸ்காரன் தலைவிதி! ஆனால் இந்த தேசமும் சேர்ந்து சுமக்க வேண்டும் என்பது ஜனங்களுடைய தலையெழுத்தா என்ன? ராஜதீப் சர்தேசாய் அப்படித்தான் நினைக்கிற மாதிரித் தெரிகிறது! நேற்று பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பேசும்போது நேரு பெயரை 23 தரம் குறிப்பிட்டுப் பேசிவிட்டாராம்! அதைக்கூட அவருக்காக ராமசந்திர குகா தான் எண்ணிச் சொல்ல வேண்டி இருக்கிறது!  

    
ராமச்சந்திர குகா நேருவின் பரமபக்தர்! மோடி எதிர்ப்பு மிகுந்தவர் என்பதெல்லாம் தெரிந்த செய்தி. சரித்திரம் எழுதுகிறவர் என்பதில் இருக்கும் ஆகப்பெரிய கோளாறே பழைய விஷயங்களிலேயே தேங்கி நின்று விடுகிறார் என்பதுதான்! கடந்தகால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வெளியே வந்துவிட வேண்டும்! கடந்தகாலத்திலேயே சிறைப்பட்டுவிடக் கூடாது என்பதே தெரியாதவரிடம், என்னபெரிதாகத் தெரிந்து கொண்டுவிட முடியும்? நேரு பெரியவர் மிகப்பெரியவர் மிகமிகப்பெரியவர் என்றே சொல்லத் தெரிந்தவருக்கு மோடி எதற்காக நேரு எந்தக்காலத்திலோ பேசியதை, மேற்கோள் காட்டவேண்டும்? அதுவும் காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்துப் பேசவேண்டும் என்பது புரியவில்லையாமா?

Modi seized on the word “minorities” in the 1950 pact between Nehru and his then Pakistan counterpart Liaquat Ali Khan to defend the exclusion of Muslims from the CAA. “Such a big secular person like Nehru, such a great thinker, such a big visionary; and everything to you, why did he not use then all citizens instead of minorities there? There must have been some reason,” he said, looking towards the Congress benches. என்று டெலிக்ராப் நாளிதழில் எழுதிய கட்டுரையில் ராமசந்திர குகா கறைப்பட்டுக் கொள்வதில், மோடி என்ன தவறு செய்துவிட்டாராம்? நேருவின் அந்தக் கடிதத்தில் முதல் வரியில் “irrespective of religion” என்று சொல்லியிருந்ததாகவும் அதை மோடி செலெக்டிவாக சொல்லாமல் விட்டுவிட்டார் என்று பொங்கியிருக்கிறார்! ஏன் பொங்கிப் பொருமுகிறார் என்பதற்கு மேலே சிவப்பில் காட்டியிருக்கிற கிண்டலான தொனிதான் காரணம்! He then tossed questions at the Opposition. “Was Pandit Nehru communal, I want to know? Did he discriminate between Hindus and Muslims? Did he want a Hindu Rashtra?” Modi asked. மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் எழுப்பிய கேள்விக்கு, அங்கே இருந்த காங்கிரஸ் எம்பி ஒருத்தருக்கும் பதில் தெரியவில்லையாமா? ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை, நேரு , இந்திரா எல்லாம் கடந்தகாலம்! இன்னும் கொஞ்ச காலத்தில் சோனியாவும்! ராகுல் காண்டிக்கு சலாம் வைப்பதா, பப்பி வாத்ராவுக்கு சலாம் வைப்பதா என்றே தெரியாமல் இருக்கிறவர்களுக்கு, ராமசந்திர குகா, நேரு பெரியவர் மிகப்பெரியவர் மிகமிகப் பெரியவர் என்று புலம்புவது கேட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான்!

      
ராமசந்திர குகாவுக்கு விசிறிவிட இப்படி ஒன்றிரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது இன்னும் சோகம்😩😟😟  


சேகர் குப்தா, இந்த 18 நிமிட வீடியோவில், ராமசந்திர குகா மாதிரி சிறுபிள்ளைத்தனமாக எழுதிப் புலம்பவில்லை என்பது முதல் ஆறுதல்! ஆனால் நேருவை மேற்கோள் காட்டியது உட்பட காங்கிரசுக்கும் நாட்டுமக்களுக்கும் நரேந்திரமோடி தனது 100 நிமிட நன்றியுரையில் பேசியதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? சேகர் குப்தா அவருடைய பணியில் விளக்குகிறார். ராமசந்திர குகா தனது மண்டையில் திணித்து வைத்திருக்கிற பழைய குப்பைகளை வெளியே எறியாமல், நடப்பு நிலவரங்களை விமரிசனம் செய்வது சரியாக இறுக்காது. சேகர் குப்தா பேசியதில் தெளிவான விஷயம் இதுவும் தான்!

மீண்டும் சந்திப்போம்.             

ராமசந்திர குகா தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

நேற்றைய இட்லி வடை பொங்கல்! #58 பதிவில் கேரள இலக்கியத் திருவிழா 2020 நிகழ்வில் ராமசந்திர குகா ராகுல் காண்டி மாதிரி ஒரு ஐந்தாம் தலைமுறை வாரிசு இந்தியாவுக்குத் தேவையில்லை, கேரளா அவரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் ஒரு விபரீதத்துக்கு வித்திட்ட தவறைச் செய்துவிட்டது என்று உடைத்துப்பேசியதை, இதற்கு முன்னாலும் ராமசந்திர குகா இதே கருத்தைச் சொல்லியிருப்பதை இந்தப்பக்கங்களிலேயே சொல்லி இருந்ததற்குச் சுட்டி கொடுத்துச் சுருக்கமாக முடித்து இருந்தேன் இல்லையா!

   
ராமசந்திர குகா பேசியதன் முழுக் காணொளியும் மேலே 61 நிமிடம் இதில் அவர் தேசபக்தியும் மூர்க்கத் தனமான தேசியவாதமும் Patriotism vs Jingoism  என்ற தலைப்பில் பேசியது ஒரு 48 நிமிடம் கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் என்று இருந்த வீடியோவை சற்று முன்தான் பார்த்து முடித்தேன். யூட்யூப் தளத்தில் வெறும் 74 கமென்ட்டுகள்தான்! மல்லுதேசம் எப்படி ரியாக்ட் செய்தது என்பதைத் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை! காங்கிரஸ்காரன் மனம்போனபடி செகுலரிசத்துக்கு வியாக்கியானம் சொல்கிற மாதிரியே ஒரே பல்லவியைத்திரும்பத் திரும்பச் சொல்கிறமாதிரியே இருப்பது அவர் குற்றமா என் குற்றமா என்று மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது! போகட்டும்!  நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர் எழுப்பிய கேள்விக்கு பிஜேபி முன்பு மாதிரி பார்ப்பான் பனியா கட்சியாக இன்று இல்லை! ஹிந்துத்வா வெர்சஸ் மற்றவர்கள் என்ற கட்சியாக ஆகிவிட்டது என்கிறார்.    

சசிதரூர் ஒரு காங்கிரஸ்காரராக தன்னுடைய விசனத்தை என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? ராகுல் காண்டி ஒருவர்தான் தான் பிஜேபிக்கு எதிரான லட்சக்கணக்கானவர்களின் மாற்று அரசியல் பிம்பம் என்று ட்வீட்டரில் சொல்லி ராஜவிசுவாசத்தைப் பதிவுசெய்து முடித்து விட்டார். யூட்யூபில் ஒரு கமென்ட் மைக்ரோபோனில் பேசும்போது இப்படித்தொண்டை வரளும் படி பேசுவானேன் என்று ஆச்சரியப்பட்டுக் கேட்கிறது.

"In view of the kerfuffle (to use a Tharoorian term) caused by the slanted and selective PTI report on my #KLF speech, a thread stating/restating my views on Rahul, Modi, Hindutva and India," என்று இதற்கே ராமசந்திர குகா ட்வீட்டரில் இன்னமும் நான் ஹிந்துத்வா மோடி எதிர்ப்பாளன் தானென்று தொடர்ந்து தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பது செம காமெடி!  

எது எப்படியோ, இங்கே இசுடாலின் முதற்கொண்டு ராமசந்திர குகா உள்ளிட்ட  ஏகப்பட்ட புள்ளிகள் நானும் நரேந்திர மோடி எதிர்ப்பாளன்தான் என்று சொல்லிச் சொல்லித்தான் நாட்களையும் பிழைப்பையும் ஓட்ட வேண்டியிருக்கிறது என்பது இன்றைய அரசியல்கள நிலவரம் போல!  

அரசியலையே பேசிக்கொண்டிருப்பது சுத்த போர் என்று யார் சொன்னது? !!  மீண்டும் சந்திப்போம்.          .

இட்லி வடை பொங்கல்! #58 ராமசந்திர குகா! ராகுல் காண்டி! ஒரு சுயவிளக்கம்!

கோழிக்கோட்டில் நடந்து வரும் கேரள இலக்கியத் திருவிழா 2020 இல் நேற்று ராமசந்திர குகா மறுபடியும் ஒரு கருத்தைச் சொல்லி, பரபரப்பான பேசுபொருளாக ஆகியிருக்கிறார். இலக்கியத் திருவிழாக்களில் அரசியல் என்பது ஜெய்ப்பூர் இலக்கியத்திருவிழாவில் இருந்தே பார்த்துவருவதுதான்! ஆனால் நேற்று கேரள இலக்கியத்திருவிழாவில் ராமசந்திர குகா கொளுத்திப் போட்டிருப்பது நிறையவே வித்தியாசமானது, இன்னும் பலகாலத்துக்கு பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது நேரு இந்திரா பரம்பரைக்கு வாய்த்திருக்கும் புது சோகம்! என்னவென்று ஒரு சுருக்கமான வீடியோ செய்தியாகப் பார்த்துவிடலாம்.


ராமசந்திர குகா என்னவோ இப்போதுதான் ராகுல் காண்டிக்கு எதிராகப் பேசுகிறார் என்பதல்ல. முன்பே பலமுறை பேசி இருப்பது தான்! Makers of Modern India புத்தக வெளியீட்டின் போது ராகுல் காண்டிக்கு அரசியல் சரிப்பட்டு வராதென்றால் வேறு வேலையைப் பார்க்க போகட்டுமே என்று காட்டமாகச் சொன்னவர்தான்! இப்போது கேரளமக்கள் ராகுல் காண்டியைத் தேர்ந்தெடுத்ததன் விபரீதங்களை முகத்தில் அறைகிற மாதிரி சொல்லிவிட்டு  அதே தவறை 2024 தேர்தலில் செய்யக்கூடாதென்றும் சொல்லி இருப்பது கூடுதல் விசேஷம்! இபின் கால்தூன் என்கிற 14 ஆம் நூற்றாண்டு அரேபிய சிந்தனையாளர் சொன்னதை வைத்து வாரிசு அரசியல் குறித்து அவர் டெலிகிராப் நாளிதழில் எழுதிய கட்டுரையில் முன்பு சொன்னது தான்! இப்போதும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்   இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே அதைப் பார்த்திருக்கிறோம்.

A “fifth-generation dynast” Rahul Gandhi has no chance in Indian politics against a “hard-working and self-made” PM Narendra Modi, and Kerala did a disastrous thing by electing the Congress leader to Parliament, historian Ramachandra Guha said in Kozhikode on Friday. Guha said the reduction of the Congress from a “great party” during the freedom movement to a “pathetic family firm” now is one of the reasons for the ascendency of Hindutva and jingoism in India.   அதோடு நிறுத்திக்கொண்டாரா?

 “Kerala, you have done many wonderful things for India, but one of the disastrous thing you did was to elect Rahul Gandhi to the parliament.”  

“Narendra Modi’s great advantage is that he is not Rahul Gandhi. He is self-made. He has run a state for 15 years, he has an administrative experience, he is incredibly hard-working and he never takes holidays in Europe. Believe me I am saying all this in all seriousness,”  "But, even if Rahul Gandhi was “much more intelligent, more hard-working, never took a holiday in Europe, as a fifth-generation dynast he still will be at a disadvantage against a self-made person”

சோனியாவையும் விட்டு வைக்கவில்லை. மக்களுடனான தொடர்பு விட்டுப்போன முகலாயர்கள் சாம்ராஜ்யம் சுருங்கிக்கொண்டே வந்த போதும் கூடத் தங்களை பாதுஷாக்களாக நினைத்துக் கொண்டு மிதப்பில் திரிந்த பழைய டில்லி சரித்திரத்தோடு  ஒப்பிட்டு எச்சரித்திருக்கிறார். ராகுல் காண்டியே ஒழிந்துபோ என்று மட்டும்தான் சொல்லவில்லை! ராகுல் காண்டி அரசியலில் இருப்பதால் தான் எதற்கெடுத்தாலும் நேருவையே குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவருடைய பொருமல். 

இந்தப் பேச்சில் ராமசந்திர குகா, தான் ஒரு நேரு விசுவாசி, ஆதரவாளன். அதேநேரம் நேரு பரம்பரைக்கு பல்லக்குத் தூக்குகிறவனில்லை என்கிற சுயவிளக்கம் தந்திருப்பதாக மட்டுமே எனக்குத் தோன்றுகிறது. முழு உரையும் எழுத்துவடிவில் இங்கே.  

இடதுசாரிகளையும் ஒருபிடி பிடித்திருக்கிறார். 

“Hypocrisy of the Indian Left — the fact that they loved other nations more than India”, “rise of aggressive nationalism worldwide” and “the rise of Islamic fundamentalism in neighbouring countries” are some other reasons behind the evident leap of Hindutva in India in the recent times."  

இட்லி வடை பொங்கல் இந்த அளவுக்குப்போதும் இல்லையா?! எனக்கே மிளகுக்  காரம் கொஞ்சம் அதிகமாகத் தான் தெரிகிறது. 

மீண்டும் சந்திப்போம்.