வரலாறு, வரலாற்று ஆசிரியர் என்றாலேயே நிறையக் குழப்பங்கள் தான் என்பதை நேரு விசுவாசியும் வரலாற்று எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா மீண்டும் நிரூபித்து இருக்கிறார்போல! அவருடைய Makers of Modern India தான் நான் கடைசியாகப் படித்தது என்று நினைக்கிறேன்.
டெலிகிராஃப் நாளிதழில் ராமச்சந்திர குஹா ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் வாரிசு அரசியலை இந்திய மக்கள் ஏற்கிறார்களா இல்லையா என்ற கேள்வியை அலசுகிறார். ராகுல் காந்தியை ஒதுக்கிய மக்கள் எப்படி ஜெகன் மோகன் ரெட்டியை அல்லது நவீன் பட்நாயக்கை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் என்ற முரண்பாட்டை அலசும் போது இபின் கால்துன் எனும் மத்திய கால அரேபிய சிந்தனையாளரை மேற்கோள் காட்டுகிறார். அரசு வாரிசுகள் பற்றி பேசும் கால்துன், முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை வாரிசுகளுக்கு மட்டும்தான் மக்களிடையே செல்வாக்கு இருக்கிறது. மூன்றாம் தலைமுறை முதல் அந்த செல்வாக்கு குறைந்து போகிறது என்று வாதிடுகிறார். அதனை வைத்து ஜெகன் போன்றோரின் வெற்றியையும் ராகுலின் தோல்வியையும் விளக்குகிறார் என்று முகநூலில் சொல்கிறார் ஸ்ரீதர் சுப்ரமணியம்.
14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இபின் கால்தூன் சொன்னது இன்றைய வாக்குச்சீட்டு ஜனநாயகத்தில் வாரிசுகளுக்கு எப்படிப் பொருந்தும் என்றெல்லாம் ராமசந்திர குஹா ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை.
As a political dynasty went into a fourth or fifth generation, argued Ibn Khaldun, it sowed the seeds of its own fall. Subjects increasingly lost respect for glory derived at second or third hand, and came to despise the entitled naamdar. So “they transfer (political) leadership from him and his direct lineage” to some other leader or lineage, “after they have convinced themselves that the qualities of the (new leader) are satisfactory to them.”
இந்திய அரசியல் வரலாற்று அனுபவங்கள், ராமசந்திர குஹாவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்பதற்குத் தடையாக இருக்கின்றன. ஆனால் ராமசந்திர குஹா, இபின் கால்தூனைப் பயன்படுத்திக் கொண்டு அவர் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் சொன்னதைத்தான் இப்போது வேறு வார்த்தைகளில் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. Everyone in the Congress needs to read (and digest) these words of Ibn Khaldun. And perhaps Sonia Gandhi above all. As a mother, she may not share this columnist’s assessment of her son as a “well-intentioned dilettante”. But even if he is in fact more intelligent, more energetic, and more politically astute than I believe he is, the fact is that both history and sociology work against him. For, if medieval and feudal Arabia found fourth-and-fifth generation dynasts hard to accept, why would modern and democratic India be any different? என்று முடித்திருப்பதிலேயே அது வெளிப்படையாகத் தெரிகிறது.
Makers of Modern India புத்தகம் வெளிவரவிருந்த சமயத்தில் ராகுல் காண்டிக்கு அரசியல் சரிப்பட்டு வராதென்றால் வேறு வேலையைப் பார்க்க போகட்டுமே என்று காட்டமாகச் சொன்ன ராமசந்திர குஹா இப்போதும் அதையே கொஞ்சம் பூசி மெழுகிச் சொல்லியிருக்கிறார் என்பதற்குமேல் வேறென்ன இருக்கிறதாம்?
ஸ்ரீதர் சுப்ரமணியம் முகநூல் பகிர்வுக்கு வந்த கமெண்டுகளில் பெரும்பாலானவை அப்படியானால் உதயநிதிக்கு வாய்ப்பே இல்லையா என்கிற மாதிரி இருந்தன. இரண்டாம் கலீஞரே துண்டு சீட்டைப் பிடித்துத் தடுமாறிக் கொண்டிருக்கையில் மூன்றாம் கலீஞருக்கு சான்ஸ் இல்லையா என்று கேட்பதெல்லாம் நெம்ப ஓவர் இல்லையா?😆😱

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம் live ஆக இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னமும் முழுவிவரமும் வெளியாகவில்லை. ஆனால் இபின் கால்தூனின் கணக்கின் படி ஜெகன் ஆந்திர முதல்வரானார் என்றும் சொல்லிவிட முடியாது. மேல்விவரங்களுக்கு முந்தைய பதிவும் யாத்ரா திரைப்பட விமரிசனப்பதிவும் பார்க்கலாம்.
நவீன் பட்நாயக் கதையும் வேறுதான்! ஐந்தாவது முறை முதல்வராகியிருப்பது ஒரிசா மக்கள் வாரிசு அரசியலை 20 வருடங்களுக்கு மேலாகவும் ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதால் அல்ல. இங்கே கழகங்களுக்கு மாற்றாக ஒரு வலுவான தேசியக்கட்சி களத்தில் இறங்காமலிருப்பது போலத்தான்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!