மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அஞ்சறைப்பெட்டி #5

ஜூன் 3! இன்று என்ன விசேஷம்? சர்வதேச விஞ்ஞான பூர்வமான ஊழல் தினம் என்கிறார்கள் பல நண்பர்கள். அப்படி உண்மையை உடைத்துச் சொன்னால்  உபிகளுக்கு கோபம் வருமா வராதா? 


கருணாநிதியின் பிறந்த தினத்தை, சர்வதேச ஊழல் தினம் என நையாண்டி செய்வதை கண்டு, தி.மு.க,காரர்களைவிட ஈவெராவாதிகளே அதிகம் கொந்தளிக்கிறார்கள். அந்த கொந்தளிப்பு, அறிவு நாணயமற்ற கொந்தளிப்பு. காரணம் - ஊழல்வாதிகள் என தி.மு.க,வினரை முதல் முதலில் பிரகடனப்படுத்தியது ஈவெராமசாமி தான். ஈவெராமசாமி கூறுவதை கேளுங்கள். "மதராஸ் கார்ப்பரேஷன் ஊழலாக உள்ளது என்று அதிருப்தி அடைந்து இந்தக் 'கண்ணீர்த்துளி' [திமுக] களுக்கு ஒட்டுப் போட்டீர்களே, பலன் என்ன? 'சாணியிலே கால் வைத்து விட்டோமே என்று அஞ்சி எட்டிக் குதிக்கப் போய் மலத்தில் அல்லவா கால் வைத்து விட்டீர்கள்" தி.மு.க, வினரை மலத்தோடு ஒப்பிடுகிறார் ஈவெராமசாமி. நாம் அவ்வளவு கேவலமாக விமர்சிக்கவில்லையே - திமுகவினரை. தி.மு.க, ஈவெராமசாமி எதிரியாக இருந்தபோது 'மலம் என்று கூறியதால், அதை பெரிது படுத்த வேண்டியதில்லை என ஈவெராவாதிகள் கூறலாம்.
அதே ஈவெராமசாமி, தி.மு.க,வினரின் கூட்டாளியான பிறகு தி.மு.க, ஊழலை பற்றி பேசுகையில் இப்படி கூறுகிறார், "இந்த மந்திரி லஞ்சம் வாங்கினான்; அந்த மந்திரி குடித்தான்; அவன் பொம்பளையோடு போனான் என்பதெல்லாம் சாதாரணமானது. ஜனநாயகத்தில் இதுவரை இலஞ்சம் வாங்காமல் இருந்தவன் எவன்? இது ஜனநாயகத்தில் சாதாரணமாக நடக்கக் கூடியதேயாகும். இதை ஒரு பெரிய குற்றமாகவோ, குறையாகவோ கருத வேண்டிய அவசியமில்லை. " ஈவெராமசாமியின் பகுத்தறிவில் தான் எவ்வளவு முன்னேற்றம்? மலத்தை சந்தனம் என்கிறார். ஈவெராமசாமி வாயாலேயே தி.மு.க,காரர்கள் ஊழல் பேர்வழிகள் என ஒப்பு கொள்ளப்பட்ட பிறகு, நாம் தி.மு.க,காரர்களை ஊழல் பேர்வழிகள் என சொல்வதற்கா ஈவெராவாதிகள் கொந்தளிக்க வேண்டும்?

அதெப்படி சர்வதேச அளவில் ஊழல் அங்கீகாரம் என்று கேட்பவர்களுக்காக! 1923 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்த அரசியல்வாதிகள் பட்டியலில் திமுகவின் ஆ.ராசாவுக்கு, இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது. 

லிபியாவின் மும்மர் கடா ஃ பியைக் கூடப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! இந்தியர்களை அவ்வளவாகக் கண்டு கொள்ளாத அமெரிக்க டைம் பத்திரிக்கை கூட பட்டியலில் சேர்த்துக் கொள்கிற அளவுக்கு ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் முன்னாள் திமுக அமைச்சர் செய்த ஊழல்கள், அதிகார துஷ்ப்ரயோகம் எப்படியெல்லாம் கொடிகட்டிப் பறந்திருக்கிறது! 



கருணாநிதியையும் கட்சியையும் சர்வ தேச அளவுக்கு உயர்த்திப் பிடித்தது ஆ!ராசா தான் என்றாலும் எல்லாப் புகழும் தலைவருக்கே என்று விட்டுக் கொடுத்துவிட்டார் என்பது தனிக் கதை!  


முந்தைய காலங்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சீரியஸாக எடுத்துக் கொள்வாரில்லை. காலம் , மனிதரை இன்றைக்கு சேனல்கள் தேடிப்போய் பேட்டி எடுக்க வைத்து இருப்பதை என்னவென்று சொல்வீர்கள்? சரிந்து விழும் பார்வையாளர்கள் எண்ணிக்கையைத் தூக்கி நிறுத்த  தந்தி டிவி படாத பாடு பட்டுக்கொண்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. 


சோனியா G காங்கிரஸ் எந்த அளவுக்குப் பரிதாபமான சரிவுக்குப் போய்விட்டது என்பதை இன்றைக்கு ஹிந்து நாளிதழில் சுரேந்திரா வரைந்திருக்கிற கார்டூன் அப்பட்டமாகக் காட்டுகிறது. சோனியாவைக் கூட தலைவராக ஏற்றுக் கொண்டு பல்லக்குத் தூக்கியவர்களை இன்றைக்கு ராகுல் காண்டி கட்டிச்சுமக்க வேண்டிய நிலைமை. பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லையென்றால், காங்கிரஸ்காரன் எவருமே கழுத்தில் கட்டிய பாறாங்கல் தான் என்பதை ராகுல் காண்டியுமே புரிந்துகொள்ள வேண்டிய நேரமும் வந்திருக்கிறது.  


ஆனால் கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா காங்கிரஸ் கட்சியில் நடக்கும் ரிலே ரேசைப் பற்றி வேறுவிதமாக நினைக்கிறார் போல இருக்கிறது. 20 வருடங்களாகக் கட்சித் தலைமையை தங்களிடமே வைத்திருக்கிற ஒரு குடும்பம் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்து விடமாட்டார்கள் என்பது பலவகையிலும்  சரிதான்! 


ராஜினாமா நாடகத்தை முடித்துவிட்டு ராகுல் காண்டி மீண்டும் தலைவர் பொறுப்பைச் சந்திக்க வந்துவிட்டாராம்!

இன்றைய காமெடி கழகம் பகிர்வாக 


   
    மீண்டும் சந்திப்போம்          
    

10 comments:

  1. முத்தான முத்தல்லவோ? எத்தனை செய்திகள்?.. அந்த ரிலே ரேஸ் முத்து டாப் ரகம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜீவி சார்! தொகுத்துத் தருகிற செய்திகள் எல்லாமே முத்து முத்தாக இருக்கவேண்டுமென்பதுதான் என் ஆசை, முயற்சி. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றிரண்டில் தான் ஈர்ப்பிருக்கிறது.

      Delete
  2. கருணாநிதி பிறந்த தினம் சர்வதேச ஊழல் தினம் - மிகச்சரியாகத்தான் சொல்லியிருக்காங்க. யாரேனும் இப்படி அனொன்ஸ் செய்ய வைக்கக்கூடாதா?

    ராகுல் சோனியா ரிலே ரேஸ் - அருமை... தன் கழுத்துக்கு கத்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக சோனியா காந்தி தள்ளாத வயதிலும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார். ராகுல் மட்டும் அதிகாரத்தை விட்டுவிடுவாரா?

    ReplyDelete
    Replies
    1. முகநூலில் பலரும் இதை சர்வதேச ஊழல்தினமாக கலாய்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். முற்பகலில் ட்வீட்டரிலும்! இப்போது பின்தங்கி விட்டது. காங்கிரஸ் அதிகாரபூர்வமான வலைத்தளத்தில் சோனியாவுக்கு முன் காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரி பெயரையே காணோம் என்பதிலேயே நிறைய செய்திகள் இருக்கிறதே நெல்லை சார்!

      Delete
  3. பாலிமர் செய்திகள் நன்றாக இருக்கிறது. தந்தி டிவி தன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. பாலிமர் என்றில்லை நான் ndtv உட்பட எல்லா சேனல்களையும் யூட்யூபில் தான் பார்க்கிறேன். அவைகளிலிருந்து பதிவுக்காக லிங்க் எடுத்துப்போட்டு என்னுடைய கருத்தையும் அதன்மீது எழுதுகிறேன். எந்த ஒரு ஊடகத்தையும் crosscheck செய்யாமல் முழுமையாக நம்புவதில்லை.

      Delete
  4. 2ஜி ஊழல் - ஆ.ராசாவா இல்லை ஆ.ராசா+கனிமொழியா?

    ReplyDelete
    Replies
    1. ராசாத்தீயாக எரிந்த பேராசையை ஆ!ராசா பயன்படுத்திக் கொண்டார்! காசு கொட்டுகிறது என்றதும் கலீஞரும் ஆ!ராசா வலையில் விழுந்தார் என்று சொல்கிறார்கள்

      Delete
  5. என்னமோ போங்கள்...
    மாக்கள் இன்னும் புன்னகைப் பூக்களாகவே இருக்கின்றன!...

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜூ சார்! இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவன் சொன்னதே தெரியாமல் நம்மூர் ஜனங்கள் புன்னகைப்பூக்களாக ஆகிவிட்டார்களோ? :-)))

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!