மண்டேன்னா ஒண்ணு! அரசியல் அஞ்சறைப்பெட்டி #6

சர்ச்சை வரும் என்று தெரிந்தே பேசுகிற கலகக்  குரல்கள் இங்கே ஒன்றும்  புதிதல்ல. அப்படிச் செய்வதில் எளிதாக  ஜனங்களுடைய கவனத்தை அதிகமாக ஈர்க்க முடிகிறது என்பது மட்டுமே மிக முக்கியமான காரணம். திராவிடம் வளர்ந்ததும், பின்னால் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கலகக்குரல் எழுப்பி தமிழ்த்தேசியம் கொஞ்சம் தலைதூக்க ஆரம்பித்ததும் கண்முன்னே நடந்துகொண்டிருக்கிற சமகால வரலாறு தான்! ஆகிவந்த அதே உத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு இயக்குனர் பா. ரஞ்சித், வரலாற்றைத் திரித்துப் பேசுவதில் ஒரு கலகக்குரலை அம்பேத்கர் பெயரைச் சொல்லி ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
.

மாடு கடவுள் என்றால் நான் கடவுளையே சாப்பிடுகிறவன்,  ராஜராஜ சோழன் ஆட்சிக்  காலம் தான் இருண்டகாலம், மிகப்பெரிய சூழ்ச்சியில் எம் நிலம் பறிக்கப் பட்டது அவனது ஆட்சிக்காலத்தில் தான் என்றெல்லாம் முழங்கி இருக்கிறார். முகநூலில் இரண்டுநாட்களாக பலரும் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். 


ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தவனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம்! வாயில் போட்டு மெல்லலாம்!ஆனால் ரஞ்சித்  கண்முன்னால் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்திருக்கிற நிகழ்கால கல்வித்தந்தைகளைப் பற்றிப் பேசமாட்டார்! ரஞ்சித் திருக்குவளைச் சோளர்களைப் பற்றிக் கூடப் பேசமாட்டார்! ஆக, அடுத்தபடம் வெளி வருவதற்கு முன்னாலேயே ரஞ்சித் இங்கே பேசுபொருளாகி விட்டார்! ஆதரித்தோ எதிர்த்தோ, எதுவாக இருந்தால் என்ன? ஓசி விளம்பரம் நிறையக்கிடைப்பதில் கசக்கிறதா என்ன?!ராகுல் காண்டியும் அதே மாதிரித்தான்  பொய்களையும் வெறுப்பையும் விதைக்கிற மாதிரித்தான் தன்னுடைய அரசியலைத் தொடர்கிறார் என்பது ஆகப்பெரிய பரிதாபம், மரண வியாபாரி என்று சோனியாG        நரேந்திர மோடியை 2014 தேர்தல்களில் சொன்னது எடுபடவில்லை. அதேபோல 2019 தேர்தல்களில் சௌக்கிதார் சோர் ஹை என்று ராகுல் காண்டி திரும்பத்திரும்பச்சொன்னதும் எடுபடவில்லை. ஏனென்று ஆராயத் துப்பிருந்தால் தேர்தல்முடிவுகளுக்குப் பிறகும் அதே பழைய பல்லவியைக் கீறல் விழுந்த கிராமபோன் ரெகார்ட் மாதிரிப் பேசுவதிலேயே தேங்கி நின்றிருக்க மாட்டார்கள்.  


காங்கிரசுடைய பொய்கள், அவதூறுகள், கோஷங்கள் முந்தைய நாட்களிலேயே நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும், சமீபத்தில் தேர்தல் முடிவுகளிலும் தவறானதென்று தெளிவாக்கப்பட்ட பிறகும் ராகுல் காண்டி இன்னும் அதேபாணியைத்தொடர்கிறார் என்றால், காங்கிரசின்  நிலைமை மிகப்பரிதாபம் தான்! சந்தேகமே இல்லை!

 

Times Now  NewsHour  விவாதத்தில் நேற்று முன்தினம் விவாதிக்கப் பட்டது  நரேந்திரமோடி ராகுல் காண்டி இருவரும் அரசியலை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப்பற்றித் தான்! 28 நிமிடங்கள் தான், பார்க்கலாம்! 

                                                             
                                                                      
கிரிஷ் கர்னாட்      81 வயதில்  கிரேசி மோகன் 67 வயதில் இன்று இயற்கை எய்தியிருக்கிறார்கள். இரண்டு கலைஞர்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலி.
          

1 comment:

  1. இரு முனைகளைச் சார்ந்த இருவேறுபட்ட ஜாம்பவான்கள் ஒரே நாளில் மறைந்தது மிகப்பெரிய வருத்தம், இழப்பு.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!