ஒரு புதன்கிழமை! வெட்டி அலப்பறைகள்! அரசியல்!

37 எம்பிக்கள் ஜெயித்து என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்ததற்கு நேற்றைக்கு நாடாளு மன்றத்தில் தமிழ் வாழ்க பெரியார் வா..... அம்பேத்கர் வா...என்று முழக்கமிட்டு வெட்டி அலப்பறைகள் மட்டுமே செய்யத் தெரிந்தவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். கோஷம் போட்டவுடன் அப்படியே நகர்ந்தவர்களைத் திரும்ப அழைத்து. நாடாளுமன்ற ரிஜிஸ்தரில் கையெழுத்து வாங்க வேண்டிவந்த கூத்தும் நடந்தது.   


வெட்டி அலப்பறைகள் செய்தவர்களிடம் ஒரே ஒரு  கேள்வியை மட்டும் கேட்டுப்பாருங்களேன்! அவர்களில் எத்தனைபேர் தமிழில் கையெழுத்துப் போடுகிறார்களாம்? ல ள ழகரங்களைச் சரியாக உச்சரிக்கத்தெரிந்தவர்கள் எத்தனை பேர்? 

T.r. Radhakrishnan
இதுவே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பப்பு தலைமையில் அரசு அமைந்திருந்தால் (நல்ல வேளை, அந்த துன்பியல் நிகழ்வு நடக்கலை) டீம்கா உறுப்பினர்கள் தமில் வால்க என சொல்லி தங்கள் பதவிகளை ஏற்றிருப்பார்களா ?
நாம் தமிழர் கட்சி கேள்வி !!
சரியான கேள்வியாகதான் தோன்றுகிறது..
ஏனெனில், அழகிரி மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தமிழில் பதில் அளிக்க (அவருக்கும் ஆங்கிலம், இந்தி வராது) அப்போதைய காங்கிரஸ் சபாநாயகர் மீரா குமார் அனுமதி அளிக்கவில்லை...
வழக்கம்போல டீம்கா நவ த்வாரத்தையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருந்தது..
ஆனால், சென்ற ஆட்சியில் அதிமுக உறுப்பினர் ஒருவர் தமிழில் கேட்ட கேள்விக்கு தமிழில் பதில் அளிக்க அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உடனடியாக அனுமதி அளித்தார்..
ஊப்பீஸ், ரொம்ப ஆடாதீங்க !! 

பெரியார் வாழ்க என்று சொல்லும் போது ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிவிட்டார்கள் வட நாட்டு பிஜேபி MPகள். ஆரம்பித்துவிட்டார்கள் நமது செய்தியாளர்கள்.
ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை தமிழர்களுக்கு எதிரானதாகத் திரிக்கும் வேலையை அழகாகச் செய்கிறது சில ஓநாய்கள் கூடாரமான திமுக பத்திரிக்கைகள்.
உண்மையில் நேற்று நடந்த MPகள் பதவி ஏற்பு முழுவதும் பெரும்பாலான நேரங்களில் ஜெய் ஸ்ரீராம் என்றா கோசம் எழுப்பப்பட்டது. அது ஒரு வாழ்த்தாக மட்டுமே எடுத்துக்கொள்வர். பலரையும் நீங்கள் நன்கு கவனித்தால் தங்கள் கார் ஓட்டும் போது கூட ஜெய் ஸ்ரீராம் என்று சொல்பவர்களும் உண்டு , ஜெய் காளி என்று சொல்லிவிட்டு வண்டியை ஓட்டுபவர்களும் உண்டு. அனைத்துமே இந்த நாட்டில் இருக்கும் ஒரு வெகு சாதாரண நம்பிக்கை. இது தென்னிந்திய மக்களிடமும் உண்டு பலரும் முருகா , ஐயப்பா , ராமா , சிவசிவ என்று சொல்வது உண்டு.
இதை ஒரு மிக சாதாரண நடவடிக்கையாகக் கருதாமல் இதை அப்பட்டமாகத் தமிழர்களுக்கு எதிரானதாகக் கச்சிதமாகத் திரிக்கும் வேலையை இங்கே இருக்கும் திமுக அடிமை ஊடகங்களும் மதம் மாற்றும் இயக்கங்களின் அடிமைகளின் கூடாரங்களும் சேர்ந்து திரிக்க பார்க்கிறார்கள். இது அப்பட்டமான உளவியல் தாக்கல்.
ஒன்றும் மட்டும் உறுதியாகக் கூறமுடியும்
இந்து மதம் சார்ந்த அனைத்து குட்டி குட்டி அழகான நம்பிக்கைகள் கூட கேலியாக்கும் நோக்கம் இங்கே வேகமாக வளர்க்கபடுகிறது.
இங்கே காவி நிறம் கேலியாக்க முற்படுவது , தியானம் செய்தால் , இமய மலை சென்றால் அதைக் கேலி செய்வது என்று ஒரு கூட்டம் இந்த நாட்டின் மிகச் சாதாரண நம்பிக்கையில் வாழும் ஒரு ஆன்மீக நோக்கத்தை அனைத்தையும் கிண்டல் செய்வதற்கு முயல்கிறார்கள்.
"எவன் ஒருவன் தமிழன் இந்து இல்லை என்று சொல்லிவிட்டு - தமிழன் கிறிஸ்தவன் இல்லை முஸ்லிம் இல்லை என்று சொல்ல மறுக்கிறனோ அவன் தான் இங்கே மிகப் பெரிய அயோக்கியன். அவன் பெரும்பாலும் குறிப்பிட்ட மத பின்னணியில் இருப்பான் இல்லை திமுக திக போன்ற கட்சிகள் பின்னணியில் இயங்குவான்".
இந்த நாட்டில் தோன்றி ஆன்மீக நம்பிக்கைகள் அழிக்கும் எவரையும் அழித்தொழிக்க தயக்கம் காட்ட கூடாது என்பது என் வேண்டுகோள். இதை கேலி செய்யவும் கிண்டல் செய்யவும் எந்த தகுதியும் காசாவிலும் , ஜெருசலமிலும் தோன்றிய ஆன்மீக நம்பிக்கைகளுக்கு இல்லை. எனவே அனைவரும் சொல்லுவோம்
ஜெய் ஸ்ரீராம்.... ஜெய் காளி....
-மாரிதாஸ் 


சின்ன விஷயம்தான்! வரலாறு எப்படி திராவிடம், தமிழ் என்ற போர்வையில், யாரால் திரிக்கப்படுகிறது  என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு தகவலே போதும்! என்ன  செய்யப் போகிறோம்?  இதுதான் முக்கியமான கேள்வி.


ராஜஸ்தான் மாநிலம் கோடா தொகுதியில் இருந்து இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. ஓம் பிர்லா நாடாளுமன்றத்தின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். முதன்முறை எம்பியான  ரவீந்திரநாத் ப்ரொபோஸ் செய்வதையும், திமுக எம்பி TR பாலு தடுமாறுவதையும் வீடியோவில் பாருங்கள்!   

சபாநாயகர் தேர்விலும் கூட  பிஜேபி அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டிருப்பதை பார்க்க முடியும். 57 வயதாகும் ஓம் பிர்லா நான்கு  முறை ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் இப்போது இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சபாநாயகராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்  


பிரதமர் நரேந்திரமோடி புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசுகிற  காணொளியொடு பதிவை நிறைவு செய்யலாம்.

மீண்டும் சந்திப்போம்.
    
   

6 comments:

 1. குற்றாலச் செய்தி : இது போன்ற வேலைகள் மிகவும் திட்டமிட்டு நிதானமாக செய்யப்படுகின்றன என்று தெரிகிறது. மற்றவர்கள் ஏதாவது சொல்லும் முன் அவர்கள் அந்த மற்றவர்களை ஏதாவது சொல்லி விடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஜோஷுவா ப்ராஜக்ட் என்று இணையத்திலேயே கிறித்தவத்தை ஏமாந்த ஜனங்கள் தலையில் கட்டும் வேலையைப் பற்றி நிறையத்தகவல்கள் இருக்கின்றன! இயேசு பகவத் கீதா என்று தலையில் மாவரைக்கிற வேலை வளர்ந்து கொண்டிருக்கிறது.

   Delete
 2. நீங்கள் சொன்ன மாதிரி காங்கிரெஸ் ஜெயித்திருந்தால் நாட்டை நாசமாக்கியிருப்பார்கள். நல்ல வேலை தப்பித்தோம். இப்பொழுது வெட்டிக்கூச்சல் மட்டும் தான் போடமுடியும். வேறு எதுவும் செய்யமுடியாது, செய்யத் தெரியாது. தெரிந்தாலும் செய்ய மாட்டார்கள். ஒரே ஒரு உறுப்பினராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் பல நல்ல காரியங்கள் மக்கள் நன்மைக்காக செய்ய முடியும் ஆனால் இவர்களுக்கு அதெல்லாம் தோன்றாது கொள்ளைக்காரர்கள். கொள்ளையடிப்பதர்க்காகவே அரசியலில் இருப்பவர்கள் இவர்கள் வேறு எதுவும் செய்ய மாட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஜெயச்சந்திரன்! வலைப்பதிவுகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டு விட்டீர்களா என்ன?

   நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ தங்கள் குரல் உரத்துக் கேட்கவேண்டும் என்பதற்காகவா இப்போது தேர்ந்தெடுக்கப்படுகிற பிரதிநிதிகள் போகிறார்கள்?

   Delete
 3. தமிழ் பற்றைச் சோதிக்க மெய்யெழுதுக்களை வரிசை தப்பாமல் சொல்கிறாரா என்று பார்த்தால் போதுமானது. எத்தனை பேர் தேறுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?..

  ReplyDelete
  Replies
  1. ழ ள ல ற ர ன ண ந வராமல் தூய தமிழில் பேச்சுக் கட்டுரை எழுதித் தர வேலைக்கு ஆள் தேவை. தகுதிக்கு மீறிய சம்பளம் தரப்படும். என்றொரு நக்கலான பகிர்வை ஹரன் பிரசன்னா முகநூலில் எழுதியிருப்பது நிஜமாகவே ஆகிவிடும் ஜீவி சார்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!