Showing posts with label வெட்டி அலப்பறை. Show all posts
Showing posts with label வெட்டி அலப்பறை. Show all posts

நீட் தேர்வு ரத்து என்கிற அரசியல்! உயர் நீதிமன்றம் வைத்த கொட்டு!

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதில் நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனவும் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல .நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது என்றும் மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையைப் புறந்தள்ளும் வகையில், தமிழக அரசு குழு அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர் என்பது இன்றைய செய்தி. விடியல் அரசுக்கு நீதிமன்றம் வைத்திருக்கிற முதல் குட்டும் கூட.  

 

சென்னை உயர்நீதமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், ‘ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்ட போதும் ஓய்வு  பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் எதன் அடிப்படையில் இந்த குழுவை ஏற்றார் என கேள்வி எழுப்பினார். 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக ஏ.கே.ராஜன் தலைமையிரான குழு கூறுகிறது. ஒரே கணிணியில் இருந்தும் 1000-த்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்ப முடியும் எனவும் உதயநிதி ஸ்டாலின் மனு கொடுப்பதை போல் படம் எடுத்து அதை செய்தியாக வெளியிடுகிறார்கள். உண்மையில் இது தி.மு.க குழுவா? அல்லது நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், ‘தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துவிட்டோம் என்பதற்காக நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் நீட் தேர்வை ஏற்கும் நிலையில் தமிழகம் மட்டும் ரத்து செய்திட முடியாது என குறிபிட்ட கரு.நாகராஜன் இனியும் ஏழை மாணவர்வளின் மருத்துவக் கனவில் விளையாடக் கூடாது எனவும் நீட் தேர்வுக்கு பிறகு 405 ஏழை மாணவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நீட் தேர்வில் சமூக நீதி காக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அமைச்சர் மாசு இதற்கு  பதிலளித்து  பேசிய வீடியோ  17 நிமிடம் 


இந்தமாதிரி கமிஷன்கள் நியமிக்கப்படுவது ஏன், எதற்கு என்பதெல்லாம் அரசியல் LKG க்களுக்குமே தெரிந்த விஷயம். நண்பர் ஜெயகுமார் ஸ்ரீனிவாசன் கமிஷனின் அடிமடியிலேயே கைவைக்கச் சொல்வது முழுதாக ஏற்றுக் கொள்கிற மாதிரி இருக்கிறது. 


நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மீண்டும் சந்திப்போம். 

ஒரு புதன்கிழமை! வெட்டி அலப்பறைகள்! அரசியல்!

37 எம்பிக்கள் ஜெயித்து என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்ததற்கு நேற்றைக்கு நாடாளு மன்றத்தில் தமிழ் வாழ்க பெரியார் வா..... அம்பேத்கர் வா...என்று முழக்கமிட்டு வெட்டி அலப்பறைகள் மட்டுமே செய்யத் தெரிந்தவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். கோஷம் போட்டவுடன் அப்படியே நகர்ந்தவர்களைத் திரும்ப அழைத்து. நாடாளுமன்ற ரிஜிஸ்தரில் கையெழுத்து வாங்க வேண்டிவந்த கூத்தும் நடந்தது.   


வெட்டி அலப்பறைகள் செய்தவர்களிடம் ஒரே ஒரு  கேள்வியை மட்டும் கேட்டுப்பாருங்களேன்! அவர்களில் எத்தனைபேர் தமிழில் கையெழுத்துப் போடுகிறார்களாம்? ல ள ழகரங்களைச் சரியாக உச்சரிக்கத்தெரிந்தவர்கள் எத்தனை பேர்? 

T.r. Radhakrishnan
இதுவே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பப்பு தலைமையில் அரசு அமைந்திருந்தால் (நல்ல வேளை, அந்த துன்பியல் நிகழ்வு நடக்கலை) டீம்கா உறுப்பினர்கள் தமில் வால்க என சொல்லி தங்கள் பதவிகளை ஏற்றிருப்பார்களா ?
நாம் தமிழர் கட்சி கேள்வி !!
சரியான கேள்வியாகதான் தோன்றுகிறது..
ஏனெனில், அழகிரி மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தமிழில் பதில் அளிக்க (அவருக்கும் ஆங்கிலம், இந்தி வராது) அப்போதைய காங்கிரஸ் சபாநாயகர் மீரா குமார் அனுமதி அளிக்கவில்லை...
வழக்கம்போல டீம்கா நவ த்வாரத்தையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருந்தது..
ஆனால், சென்ற ஆட்சியில் அதிமுக உறுப்பினர் ஒருவர் தமிழில் கேட்ட கேள்விக்கு தமிழில் பதில் அளிக்க அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உடனடியாக அனுமதி அளித்தார்..
ஊப்பீஸ், ரொம்ப ஆடாதீங்க !! 

பெரியார் வாழ்க என்று சொல்லும் போது ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிவிட்டார்கள் வட நாட்டு பிஜேபி MPகள். ஆரம்பித்துவிட்டார்கள் நமது செய்தியாளர்கள்.
ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை தமிழர்களுக்கு எதிரானதாகத் திரிக்கும் வேலையை அழகாகச் செய்கிறது சில ஓநாய்கள் கூடாரமான திமுக பத்திரிக்கைகள்.
உண்மையில் நேற்று நடந்த MPகள் பதவி ஏற்பு முழுவதும் பெரும்பாலான நேரங்களில் ஜெய் ஸ்ரீராம் என்றா கோசம் எழுப்பப்பட்டது. அது ஒரு வாழ்த்தாக மட்டுமே எடுத்துக்கொள்வர். பலரையும் நீங்கள் நன்கு கவனித்தால் தங்கள் கார் ஓட்டும் போது கூட ஜெய் ஸ்ரீராம் என்று சொல்பவர்களும் உண்டு , ஜெய் காளி என்று சொல்லிவிட்டு வண்டியை ஓட்டுபவர்களும் உண்டு. அனைத்துமே இந்த நாட்டில் இருக்கும் ஒரு வெகு சாதாரண நம்பிக்கை. இது தென்னிந்திய மக்களிடமும் உண்டு பலரும் முருகா , ஐயப்பா , ராமா , சிவசிவ என்று சொல்வது உண்டு.
இதை ஒரு மிக சாதாரண நடவடிக்கையாகக் கருதாமல் இதை அப்பட்டமாகத் தமிழர்களுக்கு எதிரானதாகக் கச்சிதமாகத் திரிக்கும் வேலையை இங்கே இருக்கும் திமுக அடிமை ஊடகங்களும் மதம் மாற்றும் இயக்கங்களின் அடிமைகளின் கூடாரங்களும் சேர்ந்து திரிக்க பார்க்கிறார்கள். இது அப்பட்டமான உளவியல் தாக்கல்.
ஒன்றும் மட்டும் உறுதியாகக் கூறமுடியும்
இந்து மதம் சார்ந்த அனைத்து குட்டி குட்டி அழகான நம்பிக்கைகள் கூட கேலியாக்கும் நோக்கம் இங்கே வேகமாக வளர்க்கபடுகிறது.
இங்கே காவி நிறம் கேலியாக்க முற்படுவது , தியானம் செய்தால் , இமய மலை சென்றால் அதைக் கேலி செய்வது என்று ஒரு கூட்டம் இந்த நாட்டின் மிகச் சாதாரண நம்பிக்கையில் வாழும் ஒரு ஆன்மீக நோக்கத்தை அனைத்தையும் கிண்டல் செய்வதற்கு முயல்கிறார்கள்.
"எவன் ஒருவன் தமிழன் இந்து இல்லை என்று சொல்லிவிட்டு - தமிழன் கிறிஸ்தவன் இல்லை முஸ்லிம் இல்லை என்று சொல்ல மறுக்கிறனோ அவன் தான் இங்கே மிகப் பெரிய அயோக்கியன். அவன் பெரும்பாலும் குறிப்பிட்ட மத பின்னணியில் இருப்பான் இல்லை திமுக திக போன்ற கட்சிகள் பின்னணியில் இயங்குவான்".
இந்த நாட்டில் தோன்றி ஆன்மீக நம்பிக்கைகள் அழிக்கும் எவரையும் அழித்தொழிக்க தயக்கம் காட்ட கூடாது என்பது என் வேண்டுகோள். இதை கேலி செய்யவும் கிண்டல் செய்யவும் எந்த தகுதியும் காசாவிலும் , ஜெருசலமிலும் தோன்றிய ஆன்மீக நம்பிக்கைகளுக்கு இல்லை. எனவே அனைவரும் சொல்லுவோம்
ஜெய் ஸ்ரீராம்.... ஜெய் காளி....
-மாரிதாஸ் 


சின்ன விஷயம்தான்! வரலாறு எப்படி திராவிடம், தமிழ் என்ற போர்வையில், யாரால் திரிக்கப்படுகிறது  என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு தகவலே போதும்! என்ன  செய்யப் போகிறோம்?  இதுதான் முக்கியமான கேள்வி.


ராஜஸ்தான் மாநிலம் கோடா தொகுதியில் இருந்து இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. ஓம் பிர்லா நாடாளுமன்றத்தின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். முதன்முறை எம்பியான  ரவீந்திரநாத் ப்ரொபோஸ் செய்வதையும், திமுக எம்பி TR பாலு தடுமாறுவதையும் வீடியோவில் பாருங்கள்!   

சபாநாயகர் தேர்விலும் கூட  பிஜேபி அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டிருப்பதை பார்க்க முடியும். 57 வயதாகும் ஓம் பிர்லா நான்கு  முறை ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் இப்போது இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சபாநாயகராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்  


பிரதமர் நரேந்திரமோடி புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசுகிற  காணொளியொடு பதிவை நிறைவு செய்யலாம்.

மீண்டும் சந்திப்போம்.