மண்டேன்னா ஒண்ணு! சோனியா காங்கிரஸ்! ஓசி விளம்பரம்! திராவிட பாசக!

கடந்த வாரம் ஜிதின் ப்ரஸாதா என்கிற ஒற்றை ஆளுமை காங்கிரசில் இருந்து வெளியேறி பிஜேபியில் சேர்ந்த  ஒரு விஷயத்தை வைத்து சிலநாட்களாக NDTV தளத்தில் வீர் சங்வி, ராமச்சந்திர குஹா, சல்மான் குர்ஷித் என வரிசை கட்டிவந்து கருத்துச் சொல்லிக்கொண்டிருப்பது கொஞ்சம் சுவாரசியமான அக்கப்போராகத்தான் இருக்கிறது. வீர் சங்வி சோனியா காங்கிரசின் இன்றைய நிலைமைக்குக் காரணமாக சில விஷயங்களைச் சொல்கிறார். சரித்திர எழுத்தாளர் ராமசந்திர குஹா, வழக்கம்போல செயலிழந்த வாரிசுகளே தலைமையில் நீடிப்பதுதான் காரணம் என்று அடுக்குகிறார். வக்கீலாகவும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் ராகுல் காண்டிக்கு வக்காலத்து வாங்கி ராமசந்திர குஹா சொன்னதைக் கண்டிக்கிறார்.ஆம் ஆத்மி கட்சியில் இருந்த ஜர்னலிஸ்ட் அசுதோஷ் குப்தா  ஜ்யோதிராதித்ய சிந்தியா மாதிரியே ஜிதின் பிரசாதாவும் வெளியேறியது  நல்லதுக்குத்தான் என்று ஆரம்பிக்கிறார். நான்கு விதமான கருத்துக்கும்  சுட்டி அந்தந்தப்பெயர்களிலேயே இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் படித்து, இன்னும் அதிகமாகக் குழம்பலாம்! 


சதீஷ் ஆசார்யா மோடி வெறுப்பில் பைத்தியம் முற்றுவதற்கு முன்னால் வரைந்த கார்ட்டூன் இது. விஷயம் இன்னதுதான் என்பதை நச்சென்று சொல்லி விடுகிறதே!


சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரை இனிமேல்  டாஸ்மாக் வளர்த்த மதுரை என்றாகிவிடுமோ? முழுச் செய்தியையும் வாசிக்கஇந்த கார்டூனுக்குத் தனியாக விளக்கவுரை எழுதத் தேவையே இல்லை. ஆனால் இன்று காலைநடந்த கைது விவகாரத்தில் தமிழக சேனல்கள் கொடுத்திருக்கும் கவரேஜ் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பைத் தாண்டி இருக்கும் என ஒரு தோராயமான மதிப்பீடு சொல்கிறது.

#அய்யோகொல்றாங்களே விளம்பரத்துக்குப் பின் இந்த நபருக்கு இந்த அளவு விளம்பரம் கொடுத்திருப்பதில் அரசு சாதித்தது என்ன? இந்த வேடிக்கையையும் பார்த்து விடுங்கள்! 
   


திராவிட பாசக என்று இங்கே தமிழக பிஜேபி நக்கல் செய்யப்படுவது எவ்வளவு சரியானது? எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்ப்பா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க: வடிவேலு காமெடி மாதிரியே இங்கே கட்சியை நடத்துகிறார்கள் என்ற ஆத்திரத்தில் பல பிஜேபி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் குமுறுவதைப் பார்த்திருக்கிறேன்.


பிஜேபியின் கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு 128 நாட்கள் சிறையிலிருந்து, சமீபத்தில்தான்  வந்திருக்கிறார். வீடியோ நேர்காணல் 42 நிமிடம். பொறுமையாகப் பார்க்க வேண்டிய ஒன்று.

மீண்டும் சந்திப்போம்.   

சண்டேன்னா மூணு! சோனியா காங். அரசியல்! வைகோ! சந்தேக சாம்பிராணி!

சமூக ஊடகங்களில் ட்வீட்டர் ஸ்பேஸ் மற்றும் கிளப் ஹவுஸ்  எனப் புதுப்புது விஷயங்கள் புழக்கத்தில் வந்து இருப்பதை முகநூலில் நண்பர் ராம்ஜி யாஹூ வழியாக ஒரு சோறு பதம் பார்த்திருக்கக் கூடும். இந்த கிளப் ஹவுஸ் அரட்டை ஒன்றில் பாடகி சின்மயியிடம் ஒரண்டை இழுத்த மருத்துவர் மன்னாப்பு கேட்டு ட்வீட்டரில் மன்றாடிய கதை கூட நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  ஆனால் clubhouse அரட்டைகளில் வேறு அபத்தங்கள், விபரீதங்கள் இருப்பதை சோனியா காங்கிரசின் டிக்கி சிங் என்கிற திக்விஜய் சிங் நிரூபித்திருக்கிறார். ராகுல் காண்டிக்கு அரசியல் சொல்லிக்கொடுத்தவர் இவர் என்பதை இந்தத் தருணத்தில் நினைவில் கொள்வது நல்லது 


ஜிதின் பிரஸாதா பிஜேபியில் சேர்ந்ததும் காங்கிரஸையும் திக்குவாய் சிங்கையும் ஓவர் டைம் போட்டு செருப்பால் அடிப்பதுபோல் ட்வீட் போட்டிருக்கிறார். திக்குவாய் சிங் எப்பவுமே பாகிஸ்தானுக்கு ஆதரவா மட்டுமே பேசுவாரு. கொஞ்சம் விட்டா ஏன் பாகிஸ்தானை உடைத்தார் என்று இந்திரா காந்தியையே திட்டினாலும் திட்டுவார்னு எழுதி இருக்கிறார். அவர் எழுதாமல் சொல்ல வந்தது... இந்திரா காந்தியைப் பற்றி.. அப்படி பேசச் சொல்லி சோனியா காந்தி தூண்டிவிட்டு ரசித்தாலும் ரசிப்பார் என்பது. 
 
மோதிஜி ஒண்ணும் சும்மா சொல்லவில்லை.. “காங்கிரஸ் முக்த் பாரத்” வேணும்னு. அப்ப மட்டும்தான் பாரதம் உருப்படும்..! என்று டிக்கி சிங்கின் clubhouse உளறலை குறித்து முகநூலில் எழுதியிருக்கிறார் திருமதி பிரேமா. இதோ ஜிதின் பிரசாதாவின் ட்வீட். 


தேசத்தை விட, மோடியை எதிர்ப்பதற்காக எவருடன் வேண்டுமானாலும் கூட்டு என்பதாக சோனியா காங். கிகளின் லட்சணம் கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆர்டிகிள் 370 காலாவதியாகி, அங்கே அதை மறந்து ஜனங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புகிற  தருணத்தில் குழியில் புதைத்ததை மறுபடி தோண்டி எடுப்பானேன்? ஒப்பாரி வைப்பது ஏன்? தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஆர்டிகிள் 370 ஐத் திரும்பக் கொண்டுவருவோம் என்பதெல்லாம் என்னமாதிரியான அரசியல்? 


     
வைகோ என்கிற மானஸ்தனை .........! இதற்காகவே கண்கலங்கும் வைகோவின் பழைய படம் ஒன்றை பார்சேல் செய்து பிரகாஷ் ராமசுவாமிக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்!


மப்பில் விஜயகாந்துடன் மல்லுக்கட்டி அதிலிருந்து தப்பிக்க திமுகவுக்குத் தேர்தல் பிரசாரம் செய்யப்போய் தன்னுடைய மார்க்கெட்டையே பறிகொடுத்த நடிகர் வடிவேலுவின் திரைக்காவியங்களில் ஒன்று இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. 


வடிவேலுவே மறந்தாலும் நம்மூர் அரசியல் அவரை விடுவதாயில்லை என்பதற்கு சாணக்யா தளத்தில் இன்று வெளியாகி இருக்கும் ஒரு மீம். சந்தேகசாம்பிராணி யார் என்பதாவது புரிகிறதா? அது வடிவேலுவோ சாணக்யா தளமோ இல்லை, நாம்தான்! புரிந்துகொள்கிறோமா என்ன? !!

அரசியலோடு கொஞ்சம் புத்தக அறிமுகம் ஒன்றையும் பார்த்து விடலாமா?
 

நான் இப்போது மறுவாசிப்புக்காக எடுத்துக்கொண்டு இருக்கிற புத்தகம் லியோன் ஊரிஸ் என்ற எழுத்தாளர் 1958 இல் எழுதிய நாவல் Exodus இஸ்ரேல் என்றொரு நாடு 1948 இல் பிறந்த கதையைச் சொல்வது. முன்பே படித்ததுதான்! இப்போது மறுவாசிப்பாக.  


எண்ணூற்றுச்சொச்சம் பக்கங்கள். ஒரே மூச்சில் படிக்க முயன்று நிறையத்தடவை தோற்கடித்த புத்தகமும் கூட.
இஸ்ரேல் என்றாலே இன்றைக்கும் ஒரு புரியாத புதிராக, விளங்கிக்கொள்ள முடியாத அதிசயமாகத்தான் பார்க்க முடிகிறது. மோகன் குருசாமி இந்தப்புத்தகத்தைப் பற்றி 2017 இல் எழுதிய எதிர்மறையான விமரிசனம் இங்கே.  

மீண்டும் சந்திப்போம்.    

இட்லி வடை பொங்கல்! #83 கொம்பேறித்தாவும் குரங்கிடம் இருந்து பிறந்ததா அரசியல்?

இரண்டு மூன்று நாட்களாகவே செய்திகளில் பரபரப்பாக அடிபட்டுக்கொண்டிருந்த இரண்டு கட்சித்தாவல்கள் ஒருவழியாக நடந்தே விட்டன என்பதில் எந்தவிதமான அதிர்வலைகளையும் அரசியல்களத்தில் காண முடியவில்லை. முகுல் ராய் 2017 இல் திரிணாமுல் காங்கிரசிலிருந்து பிஜேபிக்குத் தாவியவர், மறுபடியும் மம்தா பானெர்ஜியிடமே சேர்ந்து விட்டார். சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப்பிறகு மம்தாவின் வெறியாட்டம், பிஜேபிக்காரர்களுக்கு ரேஷன் இல்லை என ஆரம்பித்து  மேற்குவங்கத்தில் மம்தாவை எதிர்ப்பவர்களுக்கு உயிர் வாழ உரிமையே இல்லை என்ற அளவுக்கு விபரீதமாகிக் கொண்டிருப்பதில் முகுல் ராய் துணிந்து நின்றிருந்தால் மட்டுமே ஆச்சரியம்!


மஞ்சுள் வரைந்திருக்கிற இந்தக்கார்டூன்  நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் கட்சிதாவியவர்கள் மிகவும் பிரயாசைப்பட்டுத்தான் தாவினமாதிரி சித்தரிப்பு சரி தானா என்ற வலுவான சந்தேகம் எனக்கிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் சோனியா காங்கிரசிலிருந்து ஜிதின் ப்ரஸாதா வெளியேறி பிஜேபியில் ஐக்கியமாகி இருக்கிறார். கட்சிக்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் என்று சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 பேர்களில் இவரும் ஒருவர் என்பது கொஞ்சம் சுவாரசியமான தகவல். கார்டூனிஸ்ட் சுரேந்திரா ஹிந்து நாளிதழுக்காக வரைந்த இந்த கார்டூன் இன்னும் பொருத்தமாக.


சோனியா பின் நிற்கிற கூட்டம் அப்படியே கரைந்து நரேந்திர மோடி அமித் ஷா பின்னால் அணிசேர்வதாகக் காட்டியிருப்பது கள யதார்த்தம். நரேந்திர மோடியின் இமேஜ் உயர உயர இதர கட்சிகளிலிருந்து பிஜேபிக்கு மாறியவர்கள் ஏராளம், பிஜேபி தலைமையும் அதை ஊக்குவித்தது என்பதையும் மறுக்க முடியாது. இப்போது திரிணாமுலுக்கு முகுல் ராய் திரும்ப வந்ததனால் மம்தா பானெர்ஜி  சாந்த சொரூபியாகிவிடப்போகிறாரா? எல்லோருக்கும் பொதுவான முதல்வராக இருந்துவிடத் தான் போகிறாரா? மோடிக்கு எதிராகத் தம்பட்டம் அடிக்க சிலநாள் இந்தச் செய்தி பயன்படுத்தப்படும் என்பதைத்தாண்டி வேறென்ன?


கம்யூனிஸ்ட் கட்சிகள் இங்கே எந்த அளவுக்குச் சீரழிந்து கிடக்கின்றன என்பதற்கு இந்தத்திருமண அழைப்பிதழே போதுமான சாட்சி. ஒருகாலத்தில் தங்களுடைய இலக்கு என்ன, இலக்கை அடைவதற்கான செயல்திட்டம் என்ன என்பதை தெளிவாக வரையறை செய்து வைத்திருந்த அரசியல் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை மட்டுமே சொல்வது உண்டு. இலக்கையும் செயல்திட்டத்தையும் முதலில் தொலைத்தது CPI வலது கம்யூனிஸ்ட் கட்சி. சோஷலிசத்துக்கும் மம்தா பானெர்ஜிக்கும் முடிச்சுப் போடுகிற வித்தை தெரிந்தவர்கள் அவர்கள் மட்டுமே. 


தலித் உரிமைக்கான இயக்கமாகச் சொல்லிக்கொள்ளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முழுநேரத் தொழிலாக எதை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்? எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்! இந்த மாதிரி உருட்டல் மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டைகளை அடிக்கடி நடத்தி ஜனங்களுக்கு நினைவு படுத்துகிறார்களாம்!  


எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊரடங்கு நேரத்தில் மதுக் கடைகள் எதற்கு? ஆளும் கட்சியாக வந்தால் டாஸ்மாக் கடைகள் திறப்பு என்பது #DravidianStock திராவிட அவலம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் Dr P கிருஷ்ணசாமி இன்றைக்கு இது விஷயமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


டாஸ்மாக் கடைகளை மூடிட, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறுவது ஏன்?

குடி குடிப்போரை மட்டுமல்ல, குடிப்போரின் வீட்டையும், நாட்டையும் கெடுக்க வல்லது. குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தால் பாதிக்கப்படுவது ஒன்று; உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என்பது மற்றொன்று. பெருந்தொற்று காலகட்டங்களில் குடிப்பழக்கம் அறவே நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் மது பல வழிகளிலும் கரோனாவை அதிகரிக்கக்கூடியது. மதுக்கடைகளில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதால் மதுபிரியர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக நோய் தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
மது ஒவ்வொருவர் உடலிலும் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை வெகுவாக குறைப்பதால் கரோனா போன்ற பெரும் தொற்றுகள் குடிப்பழக்கத்திற்கு ஆளானோரிடம் எளிதாக தொற்றிக் கொள்வது மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பரவுகிறது. மேலும் ஆரம்பக்கட்ட கரோனா அறிகுறிகளைக் குடிப்பழக்கம் மறைத்து விடுகிறது. இதனால் மது பழக்கத்திற்கு ஆளானோர் சிகிச்சை அளித்தாலும் பலன் அளிக்காத நிலையிலேயே மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டு, பெரும்பாலானோர் உயிரிழப்புகளுக்கு ஆளாகின்றனர். டாஸ்மாக் கடைகள் மூலமாக கரோனா தொற்று வேகமாகப் பரவியுள்ளது என்பது கடந்த கால அனுபவங்களாகும்.
கடந்த ஒரு மாத காலமாக டாஸ்மாக் கடைகள் முற்றாக மூடப்பட்டிருந்த நிலையில் கரோனாவின் தாக்கம் ஓரளவிற்குக் குறைந்து வருகிறது. ஆனால் மரணங்களின் எண்ணிக்கை இன்னும் குறையாமல் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நேற்று (11.06.2021) தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் கிராமப்புற மற்றும் தேநீர் கடைகளையும்; தொழில், வணிக நிறுவனங்களையும் கூட திறக்க அனுமதி இல்லாத நிலையில் டாஸ்மாக் கடைகளை மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதித்திருப்பது எவ்விதத்தில் நியாயம்.?
தேர்தலுக்கு முன் திமுகவால் கொடுக்கப்பட்ட மிக முக்கிய வாக்குறுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க மாட்டோம் என்பது ஒன்று. அது மட்டுமின்றி கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின் போது மது கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உட்பட திமுகவினர் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கொடுத்த வாக்குறுதியையும், இப்போது ஆட்சிக்கு வந்ததையும் மறந்துவிட்டு தாராளமாகக் குடிக்க ஏதுவாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது தமிழக மக்களுக்குத் தெரிந்தே தீங்கு செய்வது ஆகாதா?
ஏற்கனவே வருமானம் இல்லாததால், வாங்கிய சிறு சிறு கடன்களைக் கூட கட்ட முடியாமல், கந்துவட்டி கும்பல்களிடம் சிக்கி பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன. வரும் 14 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதிலும், மறுநாளான 15 ஆம் தேதி முதல் இரண்டாவது தவணையாக ரூ 2,000 கொடுப்பதிலும் உள்ள மர்மம் என்ன? தொடர்பு என்ன? கடந்த ஒரு மாதமாகத்தான் அடி தடி சண்டை சச்சரவுகள் இல்லாமல் பெண்கள் வீடுகளில் நிம்மதியாக இருக்கிறார்கள்; காவல்துறையும் நிம்மதியாக இருக்கிறது. தாய்மார்களின் நிம்மதியைக் காட்டிலும், கிராம மற்றும் நகர்புற தெருக்களில் நிலவும் அமைதியைக் காட்டிலும், மதுக்கடைகளால் வரும் லாபம் மட்டும் தான் முக்கியமா? தினமும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் கழக கண்மணிகளின் சாராய ஆலைகளின் லாபம் தான் உங்களுக்கு முக்கியமா?
தடுப்பூசிகள் தான் கரோனாவை தடுக்கும் மாமருந்து என்ற அடிப்படையில் தமிழகத்தில் தடுப்பூசிக்கு எதிரான தயக்கம் மெல்ல மெல்ல நீங்கி, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கும், போட்டபின்னும் குடிக்க கூடாது என்ற மருத்துவரின் ஆலோசனைகளைக் குடிப்பழக்கத்துக்கு ஆளானோரிடம் எப்படி அமலாக்குவீர்கள்? எனவே, மதுக்கடைகளைத் திறப்பதில் பல்வேறு விதமான உடல், பொருளாதார ரீதியான பாதிப்புகள் மற்றும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காரணிகள் இருப்பதால் டாஸ்மாக் கடைகளை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
மக்களின் உடல்நிலை, பொருளாதார நிலை, கரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் பற்றி கவலை கொள்ளாமல், திமுக கழக கண்மணிகளின் சாராய ஆலைகளின் பெரும் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் செயலை கண்டித்தும், அனைத்து டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட கோரியும் தமிழகமெங்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடத்தப்படும், தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர். புதிய தமிழகம் கட்சி.12.06.2021 

ஓமந்தூரார் மருத்துவமனையை இடம் மாற்றுவதற்கு தன்னுடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு பகிர்வை முகநூலில் எழுதியிருக்கிறார். இங்கே

மீண்டும் சந்திப்போம்.

நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?

இன்றைய News 18 தளத்தில் அகிலேஷ் மிஷ்ரா எழுதி வெளியாகியிருக்கிற OPINION | How PM Modi Defied Petty Oppn Politics to Turn Around India's Vaccine Policy என்கிற கருத்துரை பிரதமர் நரேந்திர மோடி எப்படி சில்லறை புத்தியுடன் அரசியல் செய்து வரும் எதிர்க் கட்சிகளையும் மீறி இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக் கொள்கையில் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவந்து இருக்கிறார் என்பதை மிகத்தெளிவான சான்றுகளுடன் விவரித்திருக்கிறார். நீலநிறத்தில் தெரியும் சுட்டியில் முழுக்கட்டுரையையும் முடிந்தால் படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன். 

 

விவஸ்தைகெட்ட நம்மூர் பானாசீனா அவசரக் குடுக்கை போல எந்த மாநிலம் அப்படிக்கேட்டது என்று ட்வீட் செய்து வாங்கிக்கட்டிக்கொண்ட பிறகு I stand corrected என்று மழுப்பலாகத் தப்பித்துக் கொண்டிருக்கிறார்.


Mamata Banerjee, twice elected (at that point of time) Chief Minister of West Bengal writes a letter to you on February 24, 2021, where among other things she says, “Government of West Bengal has decided to procure adequate number of vaccines for the members of public at large. We would request you to kindly take up the matter with appropriate authority so that State Government is able to purchase the vaccines.” Mamata Banerjee was so convinced of the righteousness of her stand that she reminds you of her request not once but several times. For example, on April 18, 2021, she again writes, “You may recall that I had written to you on February 24, 2021 to allow the state to purchase vaccination doses directly with state funds and launch a massive free vaccination campaign in the state covering the entire population.”

Meanwhile, the much-loved Delhi’s Chief Minister among the Khan Market gang, Arvind Kejriwal, addresses the press on March 18, 2021, and among other fantastical claims, says that “I want to appeal to the central government to decentralize the system, have less control over it, and allow the state governments to administer the vaccine on a war-footing”.

Not to be left behind, Rahul Gandhi, former President of Indian National Congress, and the son of the current president of the party and thus, by design, the most important leader of the party, writes a letter to you on April 8, 2021. In this letter, among other things, Rahul Gandhi says “our states have been bypassed right from vaccine procurement to registration.” He then goes on to demand from you that “give state governments a greater say in vaccine procurement and distribution.” இப்படியாக மம்தா பானெர்ஜி, அரவிந்த் கேசரிவாலு, ராகுல் காண்டி இவர்களைத் தொடர்ந்து வேறு சில மாநில முதல்வர்களும் பேசியதை  நேற்றைய தினம் பிரதமர் அறிவிப்புக்குப் பிறகு, பிளேட்டை அப்படியே மாற்றிப்போட ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் சொன்னதைக் கேட்க பிரதமருக்கு நான்குமாதங்கள் ஆகியிருக்கிறது என்கிறார் மம்தா. 

தாங்கள் ஒன்றுக்குமே ஆகாதவர்கள் என்று  உணர்ந்து கொண்ட மாநில முதல்வர்கள் என்ன செய்தார்களாம்? கருணாநிதி பாணியில் பிரதமருக்குக் கடிதம் எழுதித் தங்களுடைய ஏலாமையை வெளிப்படுத்தினார்கள் என்று தேதியாரியாகப் பட்டியலிடுகிறார் அகிலேஷ் மிஷ்ரா Overall, by the end of May, chief ministers of Punjab (May 15), Kerala (May 24), Sikkim (May 30), Mizoram (May 31), Meghalaya (May 31), Andhra Pradesh (June 1), Arunachal Pradesh (June 1), Odisha (June 2), Tripura (June 2) and Maharashtra (June 2) specifically wrote to the Prime Minister requesting centralised procurement of vaccines. அவர்கள் ஒரு பேரழிவுக்காலத்தில் பொறுப்பில்லாமல் அரசியல் செய்த மாதிரியே பிரதமரும் செய்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் ஒரு பொறுப்பான பிரதமராக நரேந்திர மோடி உயர்ந்து நின்றார். கொரோனா தடுப்பூசிக்காக  மாநிலங்கள் ஒரு பைசா கூடச் செலவு செய்ய வேண்டாம், மத்திய அரசே 75% தடுப்பூசிச் செலவை ஏற்றுக்கொள்ளும். மீதம் 25%  தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவ மனைகளே வாங்கி அடக்கவிலைக்கு மேல் சர்வீஸ் சார்ஜாக அதிகபட்சம் ரூ.150/ இற்கு மிகாமல் பயனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர்.  

இதன் பின்னணியில் என்னென்ன இருக்கிறது என்பதையும் சேர்த்துப்பார்த்துவிடலாமா?

பஞ்சாப் காங்கிரஸ் அரசுசெய்தது போல மத்திய அரசு இலவசமாகக் கொடுத்த தடுப்பூசிகளைத் தனியாருக்கு லாபம் வைத்து விற்கமுடியாது. ஆனாலும் இங்கே  கரைவேட்டிகள் நடத்தும் அதிநவீன மருத்துவ மனைகள்  ஆதாயம் பார்ப்பது மட்டுப்படுமா? கள்ளச்சந்தை, திமுகவே டோக்கன் கொடுப்பது நிற்குமா என்ற கேள்விகளுக்குத் தெளிவான விடைகள் தெரியவில்லை.  

Pfizer உள்ளிட்ட அமெரிக்க மருந்துக்கம்பெனிகள் இங்கே உடனடியாக நுழைந்து கொள்ளை லாபம் பார்ப்பதும் கூட மறைமுகமாகத் தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.
 
கோவாக்சின் தவிர இன்னும் இரு தடுப்பூசிகள் முற்றிலும் இந்தியத் தயாரிப்பாக இறுதிக்கட்டப் பரிசோதனையில் இருக்கின்றன. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

இப்போது சொல்லுங்கள்!  நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? நொள்ளை சொல்வதையே பிழைப்பாக வைத்திருக்கும் எதிர்க்கட்சிகளை என்ன செய்வீர்கள்?

மீண்டும் சந்திப்போம்.

மண்டேன்னா ஒண்ணு! சில #அரசியல்சுவாரசியங்கள்

கலகக்கார பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கல் தம்பதியினருக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை கலிஃபோர்னியாவிலுள்ள சான்டா பார்பராவில் உள்ள மருத்துவமனையில் லிலிபெட் டயானா மவுன்ட்பேட்டன் வின்ட்ஸர் என்று பெயர் இடப்பட்ட குழந்தை பிறந்ததாக ஹாரி - மேகன் அறிவித்து இருக்கிறார்கள். .


லிலிபெட் என்பது ராணி எலிசபெத் II இன் செல்லப் பெயர். எலிசபெத் என்ற பெயரை உச்சரிக்க முடியாத சிறுமியாக லிலிபெட் என்று சொன்னதையே செல்லப் பெயராக ராணியின் தந்தை வைத்ததாக அதற்கும் ஒரு கதை சொல்வார்கள். டயானா ஹாரியின் அம்மா அடுத்து வருகிற இரண்டும் கொள்ளுப்பாட்டன் கொள்ளுப் பாட்டியின் குடும்பப்பெயர். பிரிட்டிஷ் ஊடகங்களில் இப்போதே டிசைன் டிசைனாகக் கதைக்க ஆரம்பித்து விட்டார்கள்.The Queen will be 'desperately unhappy' that Harry and Meghan have used her 'very private' and 'special' nickname Lilibet to name their second child after they were so 'rude' about her and the Royal Family, a royal expert claimed today என்கிறது Daily Mail  பிரிட்டிஷ் குடிமகன்களுக்கு அரசகுடும்பத்தைப் பற்றி எரிந்த கட்சி எரியாத கட்சியாக லாவணி பாடுவதைத் தவிர வேறு வேலையே இருந்ததில்லை என்பதுதான் இதன் சுவாரசியம்!அரசியல்!


சந்தோஷமே உன்னுடைய ரகசியம் என்ன? இந்தக் கேள்விக்கு 
பதிலாக அவரவருக்குத் தோன்றுவதைச் சொல்வார்கள். ஆனால் சந்தோஷத்தைத் தருபவை என்பதே உலகளாவிய வியாபாரமாக ஆகிவிட்டது. 4.2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சந்தையாக ஆகிவிட்டது. இந்த 10 நிமிட வீடியோவைப் பாருங்கள்!சந்தோஷம் என்பதன் அளவுகோல் என்ன? உங்களுடைய கருத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்கே அரசியல் வாதிகள் நிரந்தரக் கோமாளிகளாக இருப்பதை நிறுத்திவிட்டு, பொறுப்போடு இருந்தாலே நிம்மதி, அதுவே சந்தோஷம்!எப்படி என்கிறீர்களா? 


இந்த ஒரு வீடியோவே அது நியாயமானது தான்  என்பதைச் சொல்லும். 30 நாட்களிலேயே நிறையச் சாதித்துவிட்டார்களாம்! அப்படி என்ன சாதித்து விட்டார்களாம்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
   

 இது ஒரு சோற்றுப்பதம். இதுவும் போதாதா? நீட்டை உயர்மட்டக்குழு அமைத்துக் கைகழுவியாகி விட்டது. பெரம்பலூர் அனிதா சாந்தியடைவதாக!  

ஹிந்து என் ராமுக்கு வந்த சோதனை! 100/100 மார்க் கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?


ஏதோ ஆர்வக்கோளாறில் போட்டிருக்கிறார்கள் என்பது ஒருபக்கம்! இவர்கள் மொத்தமுமே வியாதிகள்தான் என்பது இன்னொரு பக்கமாக   பயமுறுத்துகிறதே! 

விதியே! விதியே! தமிழகத்தை என்செய நினைத்தாய்? 

கொஞ்சம் கொசுறு செய்திகளில் #அரசியல்இன்று

ஊரடங்கில் சற்று தளர்வு கொடுக்கபடுமா? : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை என்ன தளர்வோ தெரியாது, ஆனால் நிலமை கட்டுக்குள் வராமல் செய்யப் படும் ஊரடங்கு தளர்வு என்பது பின்னால் வரபோகும் மிகபெரிய கொரொனா அலைக்கும் அதனையொட்டி வரும் ஊரடங்குக்கான திறவுகோல் என்பது பல நாடுகளில் உணரப் பட்ட உண்மை என்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் அலுத்துக்கொண்ட மாதிரியே தமிழக அரசு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.


மருத்துவ நிபுணர்கள் அரசியல் கட்சிகள் ஆலோசனைப் படி ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்தது. 14 வகையான மளிகைப் பொருட்களைக் குடும்ப அட்டைகள் வாயிலாகப் பொதுமக்களுக்கு அளிக்கும் முடிவுடன் ஊரடங்கை அதே கட்டுப் பாடுகளுடன் ஜூன் 7 வரை ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் என்கிறது இந்து தமிழ்திசை தந்தி செய்தியும் இந்து செய்தியும் கொஞ்சம் முரண்படுகிற மாதிரித் தெரிகிறதா? அவர்களைக் குறைசொல்லிப் பயனில்லை. அரசை நிர்வகிக்கிறவர்களே தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறுவதில் ஆலோசனை சொல்கிற அதிகாரிகளோ செய்திவெளியிடுகிற  ஊடகங்களோ கூடவே சேர்ந்து ஊசலாடாமல் இருக்க முடியுமா?   

*******

நேற்றைக்கு கோபாலபுரம் வீட்டில் மு க அழகிரி தனது தந்தை படத்துக்கு அஞ்சலி செலுத்தினார், தாயார் தயாளுவை நலம் விசாரித்தார் ஆசி பெற்றார் என்ற செய்திகள் ஒரு ஓரமாக வந்ததே தவிர அண்ணன் தம்பி இருவரும் சந்தித்துக் கொண்டதாக செய்தி எதுவும் வரவில்லை. ஆனாலும் மு க அழகிரி அசாத்தியப் பொறுமையோடு அமைதி காக்கிறார். எல்லாம் அவர் நேரம் என்பதற்குமேல் என்ன சொல்ல?

இப்படி பவனி வந்ததெல்லாம் அந்தக்காலம்! 

அழகிரி மகன் துரை தயாநிதிக்கு இரண்டாவது வரவாக மகன் பிறந்திருப்பதை ஒட்டி சென்னைக்கு வந்திருக்கும் சமயத்தில் குடும்பத்தினர் சந்தித்துக்கொள்ள இன்னமும் ஒரு வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். நம்பிக்கை தானே எல்லாம்.😌😢

எல்லாச் செய்திகளுமே கொசுறு என்றால் செய்திக்கான முக்கியத்துவமே இல்லாமல் போய்விடும் என்பதாவ் சில  பயனுள்ள தகவல்களுடன் கூடிய வீடியோ: 

சிலகாலமாகவே நான் தமிழக சேனல் விவாதங்களைப் பார்ப்பதில்லை. முன்கூட்டிய முடிவுகளுடன், ஒருபக்கச் சார்பாகவே நிகழ்ச்சிகளை cook up செய்கிறவர்களைக் கவனித்து ஒன்றுமே ஆகப்போவதில்லை. அதேநேரம் கொஞ்சம் விவஸ்தையோடு செய்திகளை அலசி அதன் மீது விமரிசனமாகச் செய்பவர்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விவாதங்கள் என்ற பெயரில் ஜனங்களை முட்டாளடிக்கிற வெட்டி அக்கப்போர்களை தவிர்ப்பது நம் மனநலத்துக்கு மிகவும் ஆரோக்கியமானது தான், இல்லையா?

இந்த 39 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ் ABP ஆனந்த பஜார் பத்ரிகா நிறுவனம் C Voter என்கிற கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நாடெங்கும் 543 மக்களவைத் தொகுதிகளிலும் (சில  leading questions ரகத்திலானவை, ஜனங்களிடமிருந்து என்னபதில் வர  வேண்டுமென்பதற்காக கொக்கிபோட்டுக் கேட்கப்படுபவை)மக்களுடைய அபிப்பிராயத்தில் நரேந்திர மோடி என்ன இடம் வகிக்கிறார் என்பதான கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறார்கள். ABP மோடி மீது அத்தனை  நம்பிக்கை கொண்ட ஊடகமல்ல என்பதை இங்கே  குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

ABP-C Voter கருத்துக்கணிப்பில் தெரியவந்த விவரங்கள் என்னென்ன என்பதை கோலாகல ஸ்ரீநிவாஸ் எளிதாகப் புரிந்துகொள்கிற விதத்தில் விளக்குகிறார் என்பது கூடுதல் விசேஷம். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள் என்று வேண்டுகிறேன்.    

மீண்டும் சந்திப்போம்.

மாறும் அரசியல்களம்! மாற மறுக்கும் அரசியல் கட்சிகள்! நாசகார சமூக ஊடகங்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏகப்பட்ட குழப்பங்களை,  குளறுபடிகளை உருவாக்கிய BigTech நிறுவனங்கள், இங்கேயும் தங்களுடைய திருவிளையாடல்களை நடத்த ஆரம்பித்துவிட்டன என்பது கொஞ்சம் பழைய செய்தி தான்! ஆனால் இந்திய அரசு பூனைக்கு மணிகட்டுகிற வேலையை இப்போதுதான் செய்திருக்கிறது. கூகிள், முகநூல், ட்வீட்டர் முதலான சமூக ஊடகங்கள் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடந்தாகவேண்டும் என்ற  நிலையை மத்திய அரசு திட்டவட்டமான முறையில் நடைமுறைக்குக் கொண்டுவந்து விட்டது.


இந்த 19 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ், என்ன திருத்தங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன என்பதை விரிவாகச் சொல்கிறார்.இதுநாள் வரை இந்த ஊடகங்கள் தாங்கள் வெறும் intermediary மட்டும்தான் என்ற சாக்கில் தப்பித்துவந்ததை, புதிய விதிகள் மாற்றி இருப்பதில், இந்த ஊடகங்கள் தங்கள் தளத்தில் வெளியான தகவல்களுக்குப் பொறுப்பேற்றாக வேண்டும். கிரிமினல் வழக்குகளையும் எதிர் கொண்டாக வேண்டும்.Google. முகநூல் நிறு,வனங்கள் ஒப்புக் கொண்ட நிலையில் வாட்சப்  ட்வீட்டர் இரண்டு மட்டும் முரண்டு பிடித்துப் பார்த்தன. ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் மத்திய அரசு திருட்டுப்பூனைகளுக்கு மணி கட்டிவிட்டது. 


மே 2ஆம் தேதியே முடிவுகள் வெளியான 5 மாநில சட்ட சபைத்தேர்தல்களில் பாண்டிச்சேரியில் மட்டும் புதிய  அமைச்சரவை பதவியேற்பதில் இழுபறி இருந்து வந்தது. ஒருவழியாக பிஜேபிக்கு சபாநாயகர் பதவி மற்றும் இரு அமைச்சர்கள் என்று என் ஆர் காங்கிரஸ் ஒப்புக் கொண்டதை அடுத்து இழுபறி முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன 140 இல் 99 இடங்களில் ஜெயித்த கேரள இடதுசாரிகளே மந்திரி சபையை முடிவுசெய்ய மூன்றுவாரங்களுக்குமேல் எடுத்துக் கொண்ட போது, என் ஆர் காங்கிரசோடு ஏற்படுத்திக் கொண்ட புதிய கூட்டணி கொஞ்சம் கூடுதலாக அவகாசம் எடுத்துக் கொண்டதில் என்ன குறை சொல்லமுடியும்? 


பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும் என்பதெல்லாம் போயே போச்சு போல! இசுடாலினே நம்ப முடியாத அளவுக்குப் பொய்சொல்வதுதான் புதிய விடியலின் அடையாளமாகி வருகிறதே, தமிழகம் தாக்குப் பிடிக்குமா?  

நாளை ஊழலோ ஊழல் என்று வாழ்ந்து மறைந்தவர் பிறந்தநாளாம்! சமாதியில் தயிர்வடை வைத்துப் படையல் வைக்கிறார்களா? எ வ வேலு பஜனை நிகழ்ச்சி இருக்குமா? வேறென்ன எல்லாம் அரங்கேறும்?

நாளையதினத்தை நினைத்தாலே கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.  

    

#அரசியல்களம் பொறுப்பில்லாமல் உளறித்திரிவதற்கா அமைச்சர் பதவி?

இந்திய அரசியல்வாதிகளுக்கென்று தனித்தவொரு அடையாளம் உண்டு! எவ்வளவுக்கு எவ்வளவு கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாமல் உளறித்திரிகிறார்களோ அந்த அளவுக்கு அமைச்சராகவோ  மம்தா பானெர்ஜி மாதிரி மாநில முதல்வராகவோ கூட ஆகிவிடமுடியும்! சட்டசபைத் தேர்தலில் முன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்தபிறகு மம்தா பானெர்ஜிக்கு மமதை தலைக்கேறி  ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித்தீர்த்துக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி - அமித் ஷா இருவரையும் எதிர்த்து வெல்லக் கூடிய ஒரே பெண்மணி  #BengaliPrimeMinister என்று இப்போதே துதிபாட ஆரம்பித்துவிட்டதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

"மேற்கு வங்க அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்வதைப் போல, மத்திய அரசுப் பணியிலிருக்கும் மேற்கு வங்கப் பிரிவு அதிகாரிகளை, என்னாலும் மாநிலப் பணிகளுக்கு அழைத்துக் கொள்ள முடியும்"  "எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநில முதல்வர்களையும், அனைத்து அதிகாரிகளையும் நான்.ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போரை நாம் ஒன்றாக நின்று சந்திப்போம்" இதெல்லாம் மம்தா பானெர்ஜியின் வீராவேசங்கள்! தனக்கு சௌகரியப் படாத போது எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை அலட்டிக்கொள்ளாதவர் இப்போது ஒன்றிணைவோம் வா என்று அழைக்கிறார். இதேபோல கேரள முதல்வர் பினரயி விஜயனும் கூட எதிர்க்கட்சி மாநில முதல்வர்களுக்கு ஒன்று சேர அழைத்துக் கடிதம் ஈழுதியிருக்கிறார். கொரோனா தடுப்பூசி கொள்முதல் செலவு மாநில அரசின் பொறுப்பானால் நிதிச்சுமை கூடுமே என்பது அவருடைய கவலை Kerala Chief Minister Pinarayi Vijayan, on Monday May 31, wrote to his counterparts in non-BJP states and asked them to put up a ‘united effort’ to ask the Union Government to procure COVID-19 vaccines needed by the states and distribute them free of cost. The letter has been sent to the Chief Ministers of eleven states — Tamil Nadu, Telangana, Andhra Pradesh, Odisha, West Bengal, Rajasthan, Chhattisgarh, Jharkhand, Delhi, Punjab and Maharashtra என்கிறது இந்தச் செய்தி. கேரள முதல்வருக்கு மம்தா பானெர்ஜிக்கு வந்த ஒற்றுமைக்கான தேவை மாதிரி வேறு ஒன்றில் கவலை லட்சத்தீவுகள்! கேரளாவுக்கு சம்பந்தமில்லாத அந்த யூனியன் பிரதேசத்தில் கடந்த டிசம்பரில் நிர்வாகியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரஃபுல் படேலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கேரள சட்டசபையில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். 


அங்கே என்னதான் பிரச்சினையாம்?


இந்த 42 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ் மிக விரிவாகவே விளக்கியிருக்கிறார். 
நேரம் ஒதுக்கி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாக இதைப் பரிந்துரை செய்கிறேன். கேரளாவுக்காவது கடத்தல், போதை மருந்து, மலையாள முஸ்லிம்கள் என்று பலவித சம்பந்தங்கள் உண்டு. 


தமிழகத்துக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத லட்சத்தீவுகள் நிர்வாகியை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று முதல்வர் இசுடாலின் அரசு முறைக் கடிதம் எழுதுவானேன்? பதிவின் தலைப்பிலேயே பதிலும் இருக்கிறது! 


இரண்டு கைகளிலும் வாட்சா? அதுவும் ஸ்மார்ட் போன் கையில் இருக்கும் இந்தக்காலத்திலுமா? டபுள் வாட்ச் டக்ளஸ், இருவாச்சி என்றழைக்கப்படுபவர் யாரு எனக் கேள்வி கேட்கும் அப்பாவிகளுக்காக :::

தேசிய நிதி கூட்டத்தில் (GST Council Meeting ) இது இந்திய ஒன்றியம், உங்கள் நன்கொடை எங்களுக்கு தேவை இல்லை என வீராவேசம் பேசியதை தவிர ஒன்றும் கிழிக்கவில்லை தமிழக நிதியமைச்சர். இவரின் சீற்றத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்தது என்றால் ஒன்றுமில்லை, சரி இவராவது உடனே தனி நாடு கேட்டாரா என்றால் இல்லை இந்தியாவோடும் இருக்கமாட்டோம் தனிநாடும் கேட்க மாட்டோம் என்பது என்ன வகை திராவிடமோ தெரியவில்லை

அன்னார் தமிழகத்தில் உற்பத்தி அதிகம் அதனால் எங்களுக்கு அதிக பணம் என கேட்க, உன் உற்பத்தி இந்தியாவில் எங்கள் மாநிலத்தில் விற்பனையாகின்றது, வேண்டுமானால் உன் உற்பத்தியினை உன் மாநிலத்திலே வைத்து கொள் என மற்ற மாநிலங்கள் சீற அத்தோடு ஓடிவந்துவிட்டார் அமைச்சர்

அரைகுறை அறிவோடும் அனுபவத்தோடும் மல்லுக்கு சென்றால் இப்படித்தான் ஆகும். மற்ற மாநிலங்களை விட இங்கு செலவுகள் அதிகம் திமுக தொடங்கி வைத்த அரசு சம்பளம் முதல் வெட்டி இலவசம் வரை செலவு மகா அதிகம், இதற்கெல்லாம் கூடுதல் நிதி என்பது எதிர்பார்க்க முடியா ஒன்று

இந்நிலையில் இந்தியாவில் மம்தா தவிர எல்லோரும் நெருக்கடி கொடுக்க நிதியமைச்சர் திராவிட வீரத்தில் சீறிகொண்டே இருந்தார் என்ன சீறல் என்றால் அதேதான் தனிநாடு கோரமாட்டார் இந்தியாவோடும் இணையமாட்டார், இந்த திரிசங்கு சொர்க்கத்தின் பெயர் திராவிடம். எல்லோரும் தியாகராஜரை சர்க்கஸ் கோமாளி போல் சீண்டிகொண்டிருக்க வானதியும் ஏதோ சொல்ல போய் அவரை டிவிட்டரில் பிளாக் செய்துவிட்டார் நிதியமைச்சர். இனி என்னாகும்?

தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கையின் பொழுது வானதி கடும் கேள்விகளை கேட்பார், அங்கு நிதியமைச்சரால் பிளாக் செய்யமுடியாது, ஆனால்  வெளிநடப்பு செய்ய முடியும்! முதன் முதலாக ஆளும் கட்சி அமைச்சர் எதிர்கட்சிக்கு பதில் சொல்லாமல் வெளிநடப்பு செய்ய போகும் காட்சியினை அடுத்த சட்டமன்ற கூட்டம் காணப் போகின்றது என்று நக்கலாக முகநூலில் எழுதுகிறார் ஸ்டேன்லி ராஜன்  

மீண்டும் சந்திப்போம்.  

#தமிழகஅரசியல் எங்கே போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்?

வரும் ஆனா வராது என்கிற சினிமா காமெடி மாதிரி இரு நாட்களாக இழுத்துக் கொண்டே போன ஊரடங்கு நீட்டிப்பா இல்லையா என்கிற விஷயம் இன்றைக்கு  ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஜூன் 7 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறதாம்!  


ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஏன் இவ்வளவு இழுபறி / தயக்கம் என்பது புரியவே இல்லை. அனுபவமுள்ள அதிகாரிகள் சரியான ஆலோசனை தருவதற்குத்  தயங்குகிறார்களா? அல்லது புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள் தயங்குகிறார்களா? 


கோவிட்  தடுப்பூசி போட சென்னை அரசு மருத்துவ மனைகளில் நீண்ட வரிசை. 200+ நபர்கள் வரிசையில் நிற்கிறார்கள், காலை 6 மணிக்கே வந்து வரிசையில் இடம் பிடிக்கின்றனர். இவர்கள் சாப்பிடாமலேயே ஊசி போட்டுக் கொள்கிறார்களா என்று கவலை.ஆனால்  அரசு தெருவோர ஊசி முகாம்கள் பல கடைசி நேரத்தில் கான்சல் ஆகின்றன. இங்கே ஃ பேஸ்புக்கில் ஊசி போட மக்கள் வருவதே இல்லை என்று பதிவுகள். இந்த நிலையில் இன்று சில தனியார் மருத்துவமனை விளம்பரங்கள். ரூ 1250 கட்டினால் கோவாக்சின்  ஊசி செலுத்திக் கொள்ளலாம் என்று!.அரசிடம் குறைந்த ஸ்டாக், தனியாரிடம் போதுமான ஸ்டாக் எப்படி என்ற குழப்பம் தான் மக்களிடையே சந்தேகங்களை உருவாக்குகிறது என்று மேலே பார்த்த விளம்பரத்தோடு முகநூலில் விசனப் படுகிறார் ராம்ஜி யாஹூ மகாதேவன் இந்த அழகில் செங்கல்பட்டில் உள்ள தடடுப்பூசி தயாரிப்பு மையத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் அல்லது லீசுக்காவது கொடுங்கள், நாங்களே தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தயாரித்துக் கொள்கிறோம் என்றால் எத்தால் சிரிப்பது என்ற சந்தேகமும் சேர்ந்து வருமா வராதா?  


அதிமுக என்றொரு அரசியல் கட்சிஇருக்கிறதா?  செயல் படுகிறதா?  ஐயம் தீர்த்த 38 நிமிட காணொளி. கடந்த 10 ஆண்டுகளில் அப்படிப் பொறுப்பான எதிர்க்கட்சி என இருந்ததில்லை என்கிற நிலையில்  எடப்பாடி திரு K  பழனிச்சாமி ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார் என்கிற நம்பிக்கையும் துளிர்க்கிறது. 

ன்றைக்குப் பார்த்த செய்திகளில் கொஞ்சம் நல்ல செய்தியும் செம தமாஷாகிப் போனதுமான விஷயம் வைரமுத்தானுக்கு ONV கல்சுரல் அகாடெமி வழங்க உத்தேசித்திருந்த விருதை மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவித்திருப்பதுதான்! கேரளத்தில் எழுந்த பலத்த எதிர்ப்பின் காரணமாக இப்படி ஒரு முடிவு. இந்த கல்சுரல் சொசைட்டியின் சேர்மன் அடூர் கோபால கிருஷ்ணன் முன்னதாக, விருது வழங்குவது எழுத்து வன்மைக்காகத்தானே தவிர நடத்தைக்காக அல்ல என்று முட்டுக் கொடுத்தும் கூட, அது செல்லுபடியாகவில்லை ரன்பது சுவாரசியத்தைக் கூட்டுகிற விஷயம்.


 #MeToo பிரச்சினையில், பாலியல் சீண்டல் புகாருக்கு ஆளான வைரமுத்துவின் போக்கில்  எந்தவொரு நல்ல மாற்றமும் இல்லை என்பதற்குச் சான்றாக, அவர் எழுதிய மேற்கண்ட பாடலே இருப்பதை, கட்டம்கட்டிக் காட்டப் பட்டிருக்கிற வரிகளே போதும். The Tamil poet-lyricist Vairamuthu, who has been accused of sexual harassment by many women had been chosen for the fifth ONV Literary Prize. The award, which is given to poets from Malayalam and other Indian languages by the ONV Cultural Academy here, comprises a cash prize of Rs 3,00,000 and citation. The award this time was decided by a jury consisting of poet Prabha Varma, Malayalam University Vice-Chancellor Anil Vallathol and writer Alankode Leelakrishnan. The academy is headed by filmmaker Adoor Gopalakrishnan. The patrons include Chief Minister Pinarayi Vijayan, MT Vasudevan Nair and KJ Yesudas, and many other distinguished  personalities like MA Baby, Prabha Varma, RS Babu, MK Muneer and Benoy Viswam are part of the Academy என்கிற செய்தி விருது வழங்கப்பட்டதன் பின்னணியில் ஒரு அரசியல் இருந்ததாலேயே அடூர் கோபாலகிருஷ்ணன் முட்டுக் கொடுத்ததும், மலையாளத்திரையுலகின் பெண் நட்சத்திரங்களிடமிருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பவே ஜகாவாங்க வேண்டிவந்ததும் நடந்திருக்கிறது. ஆனால் இங்கே பாடகி சின்மயி தொடர்ந்து புகார் கொடுத்தும் கூட தமிழ்த்திரையுலகம் கண்டுகொள்ளவே இல்லை. டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது முதல் மேலும் சில இழப்புக்களை பாடகி சின்மயி இன்றும் சந்தித்து வருவது தமிழ்தேசத்தின் அசமந்தத்தனம்,அவமானம் என்பதான கோபம் மல்லுதேசத்தைப் பார்க்கையில் எழுகிறதே, என்ன செய்யப்போகிறோம்?    

வைரமுத்துவைக் காலம் ஒதுக்கித்தள்ளிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் போதுமா என்கிற கேள்வியோடு...

மீண்டும் சந்திப்போம்.      

#முன்களப்பிணியாளர்கள் இஷ்டப்படி மேய்க்கப்படுகிற மந்தைகளா நாம்?

"இன்றைய தேதிக்குத் தமிழில் இருக்கிற ஒரே இலக்கிய பத்திரிகை இந்து தமிழ் திசைதான். ஒரே இலக்கிய எழுத்தாளர் சமஸ்தான்!" அது சிறுபத்திரிகை இல்லையோ? "அதான் இலக்கிய பத்திரிகைனு சொல்லிட்டனே. தனியா வேற சொல்லணுமா. ஒரே வித்தியாசம் நிக்காம தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்குங்கறதுதான்!" இப்படி எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் சொன்னது கொஞ்சம் கூடப் பிசகில்லை! இந்து நாளிதழ் வெளியிடுகிற செய்தியின் தரம், சுறுசுறுப்புக்கு உதாரணமாக இந்த ஹாட்லீக்ஸ்! செய்தியில் அப்படி ஹாட்டாக ஒன்றுமே இல்லை என்பது ஒருபக்கம்! இமேஜ் பூஸ்டர் ரகம்தானே என்று கேட்டால் இதே விஷயம் ஒன் இந்தியா தளத்தில் சிலதினங்களுக்கு முன்பே வெளியானது என்பதுதான் விஷயம் தமிழ்நாடு அரசியல் விவகாரங்களில் என்னமாதிரிப் பேசுவது, என்ன கருத்தை வலியுறுத்துவது என்பதில் ஊடகங்களே தடுமாறுகிற அளவில்தான் இங்கே அரசியல் நடக்கிறது

உப்பின் ஞானத்தைக் கூட சமந்தா வந்துதான் சொல்ல வேண்டியிருக்கிற ஒரு தேசத்தில் ஜனங்களுக்கும் ஊடகங்களுக்கும் உப்பின் உபயோகத்தைப்பற்றி யார் வகுப்பெடுப்பது?  

முகநூலில் ஸ்டேன்லி ராஜன் 

கொரோனா காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளருக்கு 10 லட்சம் கொடுக்கப் படும் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நடக்கும் கொடுமைகளில் மாபெரும் கொடுமை இதுதான், கொரொனாவினை விட கொடிய கொடுமை இது தமிழக பத்திரிகையாளர்கள் தனியார் ஊழியர்கள், ஒவ்வொரு மீடியாவும் தனியார் சொத்து , செய்தி ஊடகங்களின் முதலாளிகளின் பணியாளர்கள் அவர்கள்

அரசின் தூதர்ஷன் உள்ளிட்ட பணியாளர் செத்தால் அரசு கொடுக்கலாம், எவ்வளவும் கொடுக்கலாம் அது சரியானது. ஆனால் அரசியல் கட்சிகள் நடத்தும் மீடியாக்களின் அதாவது தனியார் ஊழியருக்கு எதற்கு அவ்வளவு நிதி என்பதுதான் தெரியவில்லை ஒவ்வொரு மீடியாவும் செல்வத்தில் கொழிக்கின்றன, பத்து லட்சம் என்பது அவர்கள் இருமணி நேரத்தில் சம்பாதிக்கும் பணம்.அதை அவர்கள் கொடுக்காமல் மக்கள் பணத்தில் ஏன் கொடுக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை.

உதாரணத்துக்கு பாருங்கள், சன்டிவியின் ஒரு நாள் வருமானம் கிட்டதட்ட 80 லட்சம் ஆனால் இனி சன்டிவி நிருபர் செத்தால் அரசு நிதிவழங்கும்.கலைஞர் டிவி ஒரே வருடத்தில் 200 கோடி சம்பாதித்த கட்சி என்பது ஸ்பெக்ட்ரம் வழக்கில் சொல்லபட்ட வாதம். இனி அந்த டிவிக்காரன் அதாவது ஸ்டாலினின் சொந்த டிவிக்காரன் செத்தால் முதல்வர் ஸ்டாலின் 10 லட்சம் வழங்குவார்.தன் கம்பெனி காசினை வணங்காமல் அரசு காசை எடுத்து தன் டிவியில் வேலை செய்தவனுக்கு வழங்குவார், எப்படிப் பட்ட அருமையான திட்டம்?

இப்படி ஒரு விசித்திரமான அரசியல் கொள்ளை, திட்டமிட்ட கபட நாடகம் பகிரங்கமாக நடத்தப் படுவதெல்லாம் தமிழகத்தில்தான் சாத்தியம்.

இது பத்திரிகையாளர்கள் மொக்கையாக பந்து வீச  செய்யபட்ட மேட்ச் பிக்ஸிங், பகிரங்கமான மேட்ச் பிக்ஸிங் அதாவது அவர் அவுட்டானாலும் சிக்ஸர் என கேமராவில் காட்ட வேண்டும் அதை மக்கள் நம்ப வேண்டும் என்ற ஏற்பாடு


பாசவலை திரைப்படத்துக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாட்டைப் பாடியிருப்பவர் சி எஸ் ஜெயராமன்.

"குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்…
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்…
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்…
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்..."

பாடலும் பாடியவரும் பழசுதான். பட்டுக்கோட்டை  கல்யாண சுந்தரத்தின் வரிகள் இன்றைக்கும் சுளீர் சுளீரென்று உறைக்கிறதே! பாடல் வரிகள் முழுதையும் இங்கே பார்க்கலாம்,  

இதேபடத்தில் இன்னொரு பாடலும் கூட ஆட்டை வைத்துத்தான் கேட்கலாம்  ஊடகங்களைத் திருத்த முடியாது தான்! ஆனால் அவர்கள் திரித்துச் சொல்கிற அத்தனையையும் நம்பிவிட நாம் ஆட்டுமந்தைகளா என்ன? அல்லது வாத்துமடையர்களா? 
  
.மீண்டும் சந்திப்போம்  

இட்லி வடை பொங்கல்! #82 சோனியா காங்கிரஸ்! தியாகராஜன் who? கார்த்தி சீனாதானா!

மாமியார் தேய்ந்து கழுதை கழுதை தேய்ந்து கட்டெறும்பு அதுவும் தேய்ந்து கரையான் என்று தேய்ந்து கொண்டே போன கட்சி சோனியா நடத்தும் காங்கிரஸ் என்பதை இந்தப் பக்கங்களில் நீண்ட நாட்களாகவே சொல்லி வருவது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்! அரசியல் செய்யத் தெரியாத ஒரு கும்பல் நாசகாரக் குழுவாக மாறுவதை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சிதைந்ததில் மகஇக மாதிரியான சில்லறைகள் உருவானவிதம் ஏற்கெனெவே இங்கே அரங்கேறியிருக்கிறது.


காங்கிரஸ் டூல்கிட் சர்ச்சை விஷயத்தில்   கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த 24 நிமிட வீடியோவில் சோனியா காங்கிரஸ் ஒரு அபாயகரமான நிலைக்குப் போய்  விட்டதை, விவரிக்கிறார். கொஞ்சம் கவனமாகப் பார்த்து, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இதில் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன? The Print தளத்தின் சேகர் குப்தா சோனியா காங்கிரசுக்கு முட்டுக்கொடுக்கிற விதமே அலாதி!  தேசிய அளவில் பிஜேபிக்கு சவாலாக சோனியா காங்கிரஸ் மட்டுமே இருக்க முடியுமாம்!  சோனியாவுக்கு இது தெரியுமா? 

 

அஞ்சாநெஞ்சன் அழகிரி மட்டும் பழைய கெத்தோடு இருந்திருந்தால் சில்லறை எல்லாம் சிலுப்புகிற நிலைமை வந்திருக்குமா? திரு P தியாகராஜன். மதுரை மத்திய தொகுதியின் MLA . விதி வசத்தால் இன்று தமிழக அரசின் நிதியமைச்சராகவும் ஆகி இருப்பவர். நிதியமைச்சராக வந்து என்ன செய்யப் போகிறார் என்று பார்த்தால் ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சும். இத்தனை ஆணவம் loose talk எதற்கும் உதவாது. நேற்றைக்கு இசுடாலின் மதுரை விசிட்டில் அண்ணன் மு க அழகிரியைச்  சந்திக்கப்போவதாக, கண்கள் பனித்தன இதயம் இனித்தது என்கிற கருணாநிதி வசனம் இன்னொருமுறை அரங்கேறப்போகிறது என்று ஊடகங்களை பரபரக்கவிட்டு இசுடாலின் மதுரைக்கு வந்தார் மருத்துவமனைக்குப் போனார் ஆட்சியர் அலுவலகத்தில் ராஜீவ் காண்டி படத்துக்கு மாலை போட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி வாசித்த கையோடு திருச்சிக்குப் போய்விட்டார். மு க அழகிரி இன்னமும் அமைதி காத்துவருவதில், ஆளாளுக்கு ஒரு விதமான ஊகத்தை, கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 அன்று சகோதரர்களுடைய இணைப்பு இருக்கலாம் என்று ஊதிக் கொண்டிருக்கிறார்கள். விகடன் மட்டும் கொஞ்சும் வித்தியாசமாக ஊதல்  


கொரோனா பரவலைத்தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப் பட்டிருப்பதாக, இன்றும் நாளையும் தளர்வுகள், பேருந்து இயக்கம் என்ற விதவிதமான அறிவிப்புக்களில் தமிழக அரசும் அமைச்சர்களும் குழம்பி இருப்பது தெரிகிறதோ இல்லையோ திருவாளர் பொதுஜனம் குழம்பிக் கிடப்பது மேலே உள்ளட்வீட்டர் செய்தி தெளிவாகவே சொல்கிறது. அதைவிட பெரும் அதிசயம் கார்த்தி P சிதம்பரத்துடைய ட்வீட்டர் செய்தி.


கார்த்தியோ,  பானாசீனாவோ ஒரு சரியான கருத்தை இதுநாள்வரை இவ்வளவு தெளிவாகப் பேசியதே இல்லை. நேற்றைக்குக் கூட எழுவர் விடுதலை விஷயத்தில் இசுடாலின் குரியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில் உடன்பாடு இல்லை என்று பேசிய ஒரு வீடியோவையும் பார்த்தேன்.ஒரு தெளிவான கருத்தை சொன்னதற்காக  சபாஷ் கார்த்தி!

மீண்டும் சந்திப்போம்.   

#அரசியல்இன்று இன்னும் எத்தனை காமெடிகளைப் பார்க்கப்போகிறோமோ?

சேகர் ரெட்டியும் நாற்பது திருடர்களும்! ஒரு தனிமனித அரசாங்கத்தை நடத்திய சேகர் ரெட்டி என்று சவுக்கு சங்கர் ஒரு நீளமான பதிவை அந்தநாட்களில் எழுதியது நிறையப்பேருக்கு மறந்து போயிருக்கலாம்! அந்தப் பதிவில் இருந்த முக்கியமான விஷயமே ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமே இல்லாமல் இரண்டு கழகங்களைச் சேர்ந்த புள்ளிகள் சேகர் ரெட்டியிடம் எவ்வளவு வாங்கினார்கள் என்ற பட்டியல்தான்! அதற்கு என்ன வந்தது இப்போது என்று கேட்கிறீர்களா?


அதே மணற்கொள்ளை புகழ் சேகர் ரெட்டி முதல்வர் இசுடாலினைச் சந்தித்து கொரோனா நிவாரணநிதியாக   ஒருகோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உதயநிதி இசுடாலினும் உடனிருந்தார் என்கிறது DIPR செய்திக்குறிப்பு. சேகர் ரெட்டி தொழிலதிபர் ஜெ. சேகர் என்றாகியிருப்பது வெறும் காமெடிதானா? உதயநிதி உடனிருந்தது தற்செயலானதுதானா? அல்லது இந்தச் செய்தியில் சொல்லப்படுகிற மாதிரி சைதை துரைசாமி முன்னர் சொல்லியிருந்தாற்போல உதயநிதியின் ரெட் ஜயண்ட்ஸ் நிறுவனத்துக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருந்ததன் பின்தொடர்ச்சியா? அதிமுக ஆட்சியில் கட்டு கட்டாக பணத்துடன் சிக்கிய சேகர் ரெட்டி, திமுக ஆட்சியில் ஜெ. சேகர் ஆக உருமாறினார் திமுக எப்படி சாதியை ஒழி(ளி)ச்சுடுச்சு பார்த்தீங்களா என்று கார்டூனிஸ்ட் பாலா முகநூலில் கேட்கிறார் என்பதும் ஒரு சீரியசான காமெடியே!


புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு சோனியா காங்கிரசும் மார்க்சிஸ்ட் சேக்காளிகளும் எதற்காக லபோதிபோவென்று அடித்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களாம்? சோனியா காங்கிரஸ் காரன் குதித்தால் ஐயோ காசுபார்க்கிற வாய்ப்பு போச்சே என்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்!


காங்கிரஸ் பெருச்சாளிகள் வடை போச்சே என்று பொருமுவதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒட்டுண்ணிகளாக மட்டுமே அரசியலில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிற மார்க்சிஸ்டுகள் ஏன் காங்கிரஸ் காரனுக்கு மேலேயே கூவுகிறார்கள்? விவரித்துச் சொன்னால் ஒரு முழுநீள காமெடிப்படமே எடுக்கலாம்!  

 


மேலே படத்தில் இருக்கிற பெண்மணி ஷைலஜா டீச்சர்! பினரயி விஜயனுடைய முந்தைய அமைச்சரவையில் மிக முக்கியமானவராக இருந்தவர். கேரளா மாடல் என்று மார்க்சிஸ்டுகளால் தம்பட்டமடித்துக்கொண்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னணியாக இருந்தவர், இந்தமுறை மந்திரிசபையில்  சேர்த்துக்  கொள்ளப்படவில்லையாம்! பழைய முகங்களுக்கு மறுவாய்ப்புக் கொடுப்பதில்லையன்று மாநிலக்குழு இன்று கூடி முடிவிடுத்ததில் டீச்சருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் பினரயி கூடப் பழைய முகம்தான்! The announcement has led to much anger and disappointment. Though Pinarayi Vijayan was the face of the LDF’s campaign, much of their focus was on how Kerala performed when Nipah and COVID-19 outbreaks happened. That KK Shailaja won with a landslide margin is a testament to her popularity. The party’s explanation that old faces will not be repeated has not cut much ice with many who are asking why can’t a minister be repeated if the Chief Minister remains the same. என்கிறது TNM செய்தி அதே வேளையில் புதுமுக MLA வான முகமது ரியாசுக்கு மந்திரிப் பதவி கிடைத்திருக்கிறது. அதற்கான காரணம் அவர் பினரயி விஜயனுடைய மாப்பிள்ளை என்பதாகக் கூட இருக்கலாம்! (வெளியே சொல்வார்களா என்ன!!)


Kerala going the way of the rest of the country.
Quote Tweet
Sreedhar Pillai
@sri50
·
One of the new ministers in #PinarayiVijayan’s ministry is his son-in-law #MohammedRiyas!!

2:01 PM · May 18, 2021Twitter for Android

சுமந்த் சி ராமன் பொதிகையில் Sports Quiz மட்டுமே நடத்திக் கொண்டிருந்த நாட்களில் எல்லோராலும் விரும்பப்பட்டவராக இருந்தார் என்பது பழைய கதை. அரசியல் விமரிசகராக ஜோதியில் ஐக்கியமானபின் அவரும் காமெடிப்பீசாகிப்போனார் என்பது  இன்னொரு விதமான காமெடி! மார்க்சிஸ்டுகள் மட்டும் விதிவிலக்கா என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.