Showing posts with label மோடி மீது வெறுப்பு. Show all posts
Showing posts with label மோடி மீது வெறுப்பு. Show all posts

ட்ராக்டர் பேரணி என்ன நினைப்பில் என்ன சாதித்தது?

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்று மகாகவி பாரதி சொன்னது வெறும் வார்த்தைகளல்ல. இந்த மண்ணில் பிறந்த, இந்த மண்ணை நேசிக்கிற ஒவ்வொருவர் உயிரிலும் உணர்விலும் கலந்திருக்கிற அனுபவ சத்தியம். 


விவசாயிகள் போராட்டம் என இரண்டுமாதங்களாக நடந்து கொண்டிருந்த கூத்து, குடியரசு தினத்தன்று டில்லியில் ட்ராக்டர் பேரணி நடத்தியே தீருவோமென முனைந்து வன்முறை, அராஜகம், குழப்பத்தில் முடிந்ததில், சிங்கு எல்லைப் பகுதியில் இருக்கும் போராளிகளை இடத்தைக் காலிசெய்யுமாறு உள்ளூர் கிராம பஞ்சாயத்தார்கள் கெடுவிதித்திருப்பதாகத் தற்போது செய்திகள் சொல்கின்றன.


டெல்லி டிராக்டர் ராலி வன்முறையில்..ஒருவர் டிராக்டர்-ஐ வேகமாக ஓட்டி சென்று தடுப்பின் மீது மோதி வித்தை காட்ட முயன்றதில்...கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிகழ்வை அப்படியே தலைகீழாக மாற்றி...
விவசாயியை டெல்லி போலீஸ் நெற்றிப் பொட்டில் சுட்டதில் உயிரிழந்தார் என்று மாற்றி கூறியதுமில்லாமல்....விவசாயின் இத் தியாகம் வீணாகாமல் பார்த்துக் கொள்வோம் என்று பிற விவசாயிகள் கூறியதாக வேறு தூண்டிவிட்டு ட்விட்டரில் பதிவிட்டார் ..இந்தியா டுடே -ன் ராஜ்தீப் சர்தேசாய்.
அதோடு நிற்காமல்...இந்தியா டுடே தொலைக்காட்சியிலும்....இதே பொய் செய்தியை கூறினார்.
இதற்கு முன்னர்...ஜனாதிபதி திறந்துவைத்த நேதாஜி யின் புகைப்படம் குறித்த பொய் செய்தியை பரப்பிய கோஷ்டியிலும் வழக்கம் போல சர் தேசாயும் உண்டு.
இதனையடுத்து ... மக்கள் வெகுண்டெழுந்து சுட்டிக்காட்டிய பின்.. ஒரு மாதம் சம்பளம் கிடையாது & இரண்டு வாரங்களுக்கு தொலைக்காட்சியில் செய்திகளை வாசிக்கவும், விவாதிக்கவும் தடை விதித்தது இந்தியா டுடே நிர்வாகம். [ இதனால் இந்தியா டுடே நிர்வாகம் நியாயமானது என்று எண்ணினால் அதை போன்ற அபத்தம் வேறில்லை ! இது...மக்களின் கோபம் காரணமாகவும், தொலைக்காட்சியை இழுத்து மூடிவிடக்கூடாது என்கிற நடவடிக்கை அச்சத்தினாலும் எடுக்கிற மேம்போக்கான நடவடிக்கை மட்டுமே. மற்றபடி...சர்தேசாய் கோஷ்டிகளுக்கு பொய்யும் புதிதில்லை. அவர்களை பணியிலமர்த்தி சோறு போடும் மீடியா நிறுவனங்களுக்கும் பொய் பரப்புதல் புதிதில்லை!
இப்போது...ராஜ் தீப் சர்தேசாய் ...இந்தியா டுடே -ல் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

அனைத்துமே...மக்களின் கோபத்தினை தவிர்க்க ... அரங்கேற்றப்படுகிற நாடகம் !

மோடி அரசு அமைந்த பின் ....கடந்த சில வருடங்களாக ...இந்தியாவில் எதிர் கட்சிகளின் கூட்டணி ...மோடி அரசின் ஒவ்வொரு நகர்வையும் எதிர்த்து ஒவ்வொரு பெயரில் போராட்டம் என்று முன்னெடுக்கிறார்கள்.
இவற்றில் ....அந்நிய சக்திகள், பிரிவினை சக்திகளின் கோஷங்கள் கேட்கின்றன. பதாகைகள் தென்படுகின்றன. வன்முறைகள் நடக்கின்றன. காவல்துறையினர் தாக்கப்படுகிறார்கள். பெரும் குழப்பங்களும், பாதுகாப்பின்மையும் உருவாக்கப்படுகிறது.
தாங்கள் ஆதரிக்கும்/ முன்னெடுக்கும் போராட்டங்களில் ... ஒரே மாதிரியான தொடர் நிகழ்வுகள் இத்தனை நடந்தும்...நாட்டை பிளவு படுத்தும் பிரிவினைவாத சக்திகள் குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன ? என்கிற கேள்விக்கு பதிலும் இல்லை. மறுப்பும் இல்லை. பொறுப்பும் இல்லை.
நேற்றைய டிராக்டர் ஊர்வலத்தில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்து .... போராட்டத்திற்கு ஆதரவளித்த எதிர் அரசியல் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாதது போல நழுவுகின்றன. இத்தனை நாள் நடந்த இக் குறிப்பிட்ட போராட்டத்தின் களத்திலேயே கூட ...காலிஸ்தான் பிரிவினைவாத பதாகைகள் தென்படுகின்றன.. அந்நிய சக்திகளின் குரல்கள் கேட்கின்றன என்று தொடர்ந்து எச்சரிக்கை குரல்களும், கவலை குரல்களும் கேட்ட போதெல்லாம்...அவற்றை முற்றிலுமாக மறுதலித்து...விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக....எதிர் கட்சிகளின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் பதிலளித்தது இத் தருணத்தில் கவனிக்க தக்கது.
அரசியலில் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம்...
எதிர்கட்சிகளின் கூட்டணி கட்சிகளில் ஒன்றில் கூட ...
வலிமையான தலைமை இல்லை. போராட்டங்களை முன்னெடுக்கும்போதும்,ஆதரவளிக்கும்போதும், அவற்றை வழிநடத்தும் அளவிற்கு பொறுப்பேற்கும் வலிமையான தலைமைகள் இல்லை.
மக்கள் ஆதரவு பெற்ற mass leader வகை தலைமை இல்லை.
மிக முக்கியமானதாக ....சொந்த நாட்டினை எந்த வகையிலும் அந்நிய சக்திகளுக்கு காவு கொடுத்துவிடாமல் 'எதிர் அரசியல்' செய்யத்தெரிந்த சாமர்த்தியமான அரசியல் தலைமை என்று ஒரு தலைமை கூட இல்லை !
ஒரு ஜனநாயக நாட்டில்... குறிப்பாக எதிர் நிலை அரசியல் தளத்தில்... அதாவது, எதிர்க்கட்சிகளில்... வலிமையற்ற தலைமைகள் , உள்கட்சி அதிகார போட்டிகள், மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைமை கூட இக் கட்சிகளில் இல்லாமல் இருப்பது, குடும்ப அரசியல் and ஊழல் போன்ற ஆகப்பெரும் பலவீனங்கள் ... போன்ற அம்சங்கள் அனைத்தும்.....உலகளாவிய வலைப்பின்னலுடன் இயங்கும் அந்நிய சக்திகளுக்கு பெரும் வரப்பிரசாதம் ! எளிதில் ஊடுருவுவதற்கும் ,ஆக்கிரமிப்பதற்கும், தங்கள் கட்டுப்பாட்டில், தாங்கள் விரும்பியபடி உட்புகுந்து இந்திய அரசியலை ஆட்டுவிப்பதற்கும் மிக மிக எளிது.பங இந்த நிலையைத் தான் ...டிராக்டர் ஊர்வல வன்முறைகள்...மீண்டுமொருமுறை வெளிச்சமிடுகிறது. 

இப்படி இரண்டே பகிர்வுகளில் பானு கோம்ஸ் சொல்லியிருப்பதுடன் உடன்படுவதைத் தவிர வேறு சாய்ஸ் இருக்கிறதா?  

கொஞ்சம் சொல்லுங்களேன்! மீண்டும் சந்திப்போம்.  

ராமசந்திர குகா தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

நேற்றைய இட்லி வடை பொங்கல்! #58 பதிவில் கேரள இலக்கியத் திருவிழா 2020 நிகழ்வில் ராமசந்திர குகா ராகுல் காண்டி மாதிரி ஒரு ஐந்தாம் தலைமுறை வாரிசு இந்தியாவுக்குத் தேவையில்லை, கேரளா அவரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் ஒரு விபரீதத்துக்கு வித்திட்ட தவறைச் செய்துவிட்டது என்று உடைத்துப்பேசியதை, இதற்கு முன்னாலும் ராமசந்திர குகா இதே கருத்தைச் சொல்லியிருப்பதை இந்தப்பக்கங்களிலேயே சொல்லி இருந்ததற்குச் சுட்டி கொடுத்துச் சுருக்கமாக முடித்து இருந்தேன் இல்லையா!

   
ராமசந்திர குகா பேசியதன் முழுக் காணொளியும் மேலே 61 நிமிடம் இதில் அவர் தேசபக்தியும் மூர்க்கத் தனமான தேசியவாதமும் Patriotism vs Jingoism  என்ற தலைப்பில் பேசியது ஒரு 48 நிமிடம் கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் என்று இருந்த வீடியோவை சற்று முன்தான் பார்த்து முடித்தேன். யூட்யூப் தளத்தில் வெறும் 74 கமென்ட்டுகள்தான்! மல்லுதேசம் எப்படி ரியாக்ட் செய்தது என்பதைத் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை! காங்கிரஸ்காரன் மனம்போனபடி செகுலரிசத்துக்கு வியாக்கியானம் சொல்கிற மாதிரியே ஒரே பல்லவியைத்திரும்பத் திரும்பச் சொல்கிறமாதிரியே இருப்பது அவர் குற்றமா என் குற்றமா என்று மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது! போகட்டும்!  நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர் எழுப்பிய கேள்விக்கு பிஜேபி முன்பு மாதிரி பார்ப்பான் பனியா கட்சியாக இன்று இல்லை! ஹிந்துத்வா வெர்சஸ் மற்றவர்கள் என்ற கட்சியாக ஆகிவிட்டது என்கிறார்.    

சசிதரூர் ஒரு காங்கிரஸ்காரராக தன்னுடைய விசனத்தை என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? ராகுல் காண்டி ஒருவர்தான் தான் பிஜேபிக்கு எதிரான லட்சக்கணக்கானவர்களின் மாற்று அரசியல் பிம்பம் என்று ட்வீட்டரில் சொல்லி ராஜவிசுவாசத்தைப் பதிவுசெய்து முடித்து விட்டார். யூட்யூபில் ஒரு கமென்ட் மைக்ரோபோனில் பேசும்போது இப்படித்தொண்டை வரளும் படி பேசுவானேன் என்று ஆச்சரியப்பட்டுக் கேட்கிறது.

"In view of the kerfuffle (to use a Tharoorian term) caused by the slanted and selective PTI report on my #KLF speech, a thread stating/restating my views on Rahul, Modi, Hindutva and India," என்று இதற்கே ராமசந்திர குகா ட்வீட்டரில் இன்னமும் நான் ஹிந்துத்வா மோடி எதிர்ப்பாளன் தானென்று தொடர்ந்து தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பது செம காமெடி!  

எது எப்படியோ, இங்கே இசுடாலின் முதற்கொண்டு ராமசந்திர குகா உள்ளிட்ட  ஏகப்பட்ட புள்ளிகள் நானும் நரேந்திர மோடி எதிர்ப்பாளன்தான் என்று சொல்லிச் சொல்லித்தான் நாட்களையும் பிழைப்பையும் ஓட்ட வேண்டியிருக்கிறது என்பது இன்றைய அரசியல்கள நிலவரம் போல!  

அரசியலையே பேசிக்கொண்டிருப்பது சுத்த போர் என்று யார் சொன்னது? !!  மீண்டும் சந்திப்போம்.          .

வரவிருக்கும் தேர்தல்! மாற்றத்தை நோக்கியா?

ஒவ்வொரு தேர்தலுமே ஒருவகையில் முக்கியமானது தான்! என்றாலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே எத்தனை கூக்குரல்கள்? இல்லாத பூச்சாண்டி காட்டி மாநிலக் கட்சிகள் ஜனங்களிடம் சொல்லும் தொடர்ச்சியான பொய்கள் தான் எத்தனை?

மோடி மீதான பயமே மோடி எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்றாகிக் கொண்டிருப்பதை முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்து வந்திருக்கிறோம். இந்தத்தேர்தல் எந்தவகையில் வித்தியாசமானது? அல்லது இல்லை?

இங்கே  நான்குபேர் விவாதம் செய்கிற விதம்,  என்ன சொல்ல வருகிறார்கள்? சுப வீ செய்தி சொல்கிறேன் என்று வீண் புரளி மட்டுமே கிளப்புவது புரிகிறதா?
மார்க்சிஸ்டுகளுக்கு திடீரென்று காந்தி மீது காதல், அகிம்சை மீது அபிமானம் வந்திருப்பதைக் கவனிக்க முடிகிறதா? அந்த திடீர்க் கரிசனம், மோடி மீது வெறுப்பை உமிழ்வதற்காக மட்டுமே என்பதை என்ன என்று சொல்வீர்கள்?  
இங்கே CPI கட்சியின் ஆர் நல்லகண்ணுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள், நல்லகண்ணு என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்! ஒரே ஒரு நல்லகண்ணு மட்டும் நல்ல கண்ணுவாக     இருந்தால் போதுமா? போதுமானதாக இருந்திருக்குமேயானால் வலது கம்யூனிஸ்டுகள் எங்கோ போயிருக்க மாட்டார்களா? ஏன் ஆகவில்லை என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இடதுசாரிகளுடைய போதாமை, இங்கே திராவிடக் கூத்தாடிகளுடைய ஆதிக்கத்துக்கு வித்திட்டு, இன்று திராவிடங்களுடன் மாறிமாறி ஒன்றிரண்டு சீட்டுக்காக ஒட்டிக் கொண்டு அலைகிற அளவிற்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது.  

ஆக, மாற்றம் வந்துவிடுமா என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாற்றம் என்பது ஜனங்கள் அதற்குத் தயாராவதில் மட்டுமே சாத்தியமாகக் கூடியது! ஒரு நல்ல தலைவன் மாற்றத்துக்கான உந்துசக்தியாக இருக்கிறான் என்பது புரிந்தால் இங்கே நல்ல தலைமைக்கான வெற்றிடம் முழுமையாக நிரப்பப்படாமல் இருப்பதையும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்! 

இப்போதுள்ள தேர்தல் முறைகளில் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்க முடியாதுதான்! மாற்றம் என்பது ஜனங்களாகிய நம்மிடமிருந்து தொடங்குகிற விஷயம்!    
இங்கே ஒவ்வொரு ஈயமும் பித்தளையும் ஒன்றை ஒன்று பழிசொல்லிக் கொண்டிருப்பதில் ஒவ்வொருவர் சாயமும் வெளுத்துப்போன பிறகும்கூட ......

இவர்களைக் கட்டிக்கொண்டு இன்னும் எத்தனை நாளைக்கு  அழப்போகிறோம்? சொல்லுங்களேன்!

                

மீண்டும் மீண்டும் கலகக் குரல்கள்! அரசியல் களம் இன்று!

மம்தா பானெர்ஜி தான் ஒரு குழாயடிச் சண்டைக்காரி (street fighter என்பதைத் தமிழில் வேறெப்படிச் சொல்வது?) என்பதை மீண்டும் நேற்று கொல்கத்தா வீதிகளில் நிரூபித்திருக்கிறார். மாநில ஆட்சியைக் கலைத்துப் பார்க்கட்டுமே! முடிந்தால்! என்ற வாய்ச் சவடால் வேறு!


2019 நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் மம்தா பானெர்ஜியின் இந்த ஸ்டண்ட் இப்போது எதற்காக? எதிர்க் கட்சிகள் எல்லாம் இதில் ஒன்றுகூடிக் கும்மி அடிப்பதற்கு என்ன காரணம், நியாயம் இருக்கிறது?

மம்தா பானெர்ஜி, 35 வருட இடதுசாரிகள் ஆட்சியைக் காலி செய்துவிட்டு, கடந்த எட்டு வருடங்களாக மேற்கு வங்கத்தில் தனிக்காட்டு தர்பார் நடத்தி வருகிறார் என்பதற்கு மேல், அங்கு அவரோ, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் ஆசாமிகளோ செய்து வரும் அடாவடிகள், ஊழல்கள் என்னவென்றாவது நமக்குத் தெரியுமா?

10:36 AM - 3 Feb 2019  
மம்தா வீதியில் நடத்திய தர்ணாவில் இடதுபுறம் உள்ள இந்த 53 வயது ஐபிஎஸ் அதிகாரி, ராஜீவ்குமார் தான் மம்தா நேற்று நடத்திய வீதிதர்பாரின் கதாநாயகன்! 2013 இல் சாரதா சிட் ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட SIT சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர். திரிணமுல் ஆதரவாளர் சுதிப்தா சென் நடத்தி வந்த சாரதா குழுமம் Ponzi scheme நடத்தி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மோசடி செய்ததை விசாரிக்க அமைக்கப் பட்ட SIT அது. இடதுசாரிகள் ஆண்டபோது இதே ராஜீவ் குமாரை, தன் மீது வேவுபார்த்ததாகக் குற்றம் சாட்டியவர் தான் மம்தா! இப்போது அவருக்கே அணுக்கமான நபராக ஆனதும்கூட  ஒன்றும் விசித்திரமில்லை! இங்கே கழகங்கள் அரசியலில் அம்மா போலீஸ் அய்யா போலீஸ் என்றானதைப் பார்த்ததில்லையா என்ன?     

“We returned money to those [who lost it during the] chit fund scam. After five years, now the CBI is acting right before the polls. BJP is torturing Bengal. They are forcibly trying to destroy Bengal just because I did the Brigade rally" என்று மம்தா சொன்னதாக The Wire தளம் சொல்வது மம்தாவின் ஒப்புதல் வாக்குமூலமாகவே இருக்கிறது என்பதற்கு மேல், எதிர்க்கட்சிகள் கூக்குரல் எழுப்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

According to the CBI, the evidence collected by the Special Investigation Team (SIT) that was formed by the state in April 2013 to probe the Saradha chit fund scam, and headed by Kumar, includes a laptop, five cellphones and documents, including a diary purportedly of Saradha Group promoter Sudipta Sen.

The case was taken up by the CBI in 2014 on the Supreme Court’s orders. “During the interrogation of those arrested in the Saradha scam and other chit fund scams, we found that crucial evidence seized by the SIT was not handed over to us. This included a diary, pen drives and documents that were seized from Sen’s offices. We learnt that they had the names of influential people and records of payment,” claimed a CBI officer linked to the probe. என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

இப்படி 2014இலேயே உச்சநீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட ஒரு ஊழல்வழக்கு, அதை விசாரித்த SIT தலைவர் சிபிஐயிடம் கைப்பற்றப் பட்டஆவணங்கள் சாட்சியங்களை ஒப்படைக்கவில்லை. குற்றவாளிகளைத் தப்புவிக்கிற விதத்தில் அவை அழிக்கப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில், அந்த  அதிகாரியை விசாரிப்பதில் மம்தா பானெர்ஜிக்கோ, ஆதரவுக் குரல் எழுப்புகிற உதிரிக் கட்சிகளுக்கோ என்ன நியாயமான காரணம் இருக்கிறது?

உச்சநீதிமன்றம் இன்று அவசர வழக்காக இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்ள மறுத்து நாளைவிசாரிக்கவிருப்பதாக செய்திகள் சொல்கின்றன!

மக்களவையில் இந்த விவகாரம், அவையை இரண்டுமுறை ஒத்திவைக்கிற மாதிரி அமளிதுமளியாகியிருக்கிறது. மாநிலங்களவையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம் !
  
மோடி வெறுப்பு என்கிற ஒற்றைப்புள்ளியில் மட்டுமே ஒன்றுகூடும் மாநிலக்கட்சிகள் தங்கள் ஊழலை மறைத்துக் கொள்ளச் செய்யும் முயற்சி என்பதற்குமேல், இந்தக்கலகக் குரல்களில்  வேறென்ன காரணம் இருக்கிறதென்று நீங்களே சொல்லுங்கள்!  

இங்கே மூச்சுக்கு மூச்சு பாசிச பிஜேபி என்றே இசுடாலின் சொல்லிக் கொண்டிருக்கிறாரே, அராஜகச் செயல்களில் ஈடுபடுவது யார்? நாடாளுமன்ற நடவடிக்கைகளிலுமே கூட ஜனநாயகம் காப்போம் என்று வாய்ச்சவடால் பேசுகிற இந்த உதிரிக் கட்சிகள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பார்த்து விட்டே சொல்லுங்கள்!  

   

சண்டேன்னா மூணு! மோடி! மோடி எதிர்ப்பு! மோடி வெறுப்பு!

நேற்றைக்கு கொல்கத்தாவில் மம்தா பானெர்ஜி மோடி மீது பயம், மோடிக்கு எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்கிற புள்ளிகளில் வினோதமான சர்க்கஸ் ஒன்றைப் பேரணியாக நடத்தி முடித்திருக்கிறார். புலிக்குப் பயந்தவர்கள் எல்லோரும் என்மேல் விழுந்து படுத்துக் கொள்ளுங்கள் என்ற கதையாக மோடிக்கு பயந்தவர்கள் எல்லோரும் கூடிக்கலைந்த கூட்டம் மட்டுமே அது என்பது சிதம்பர ரகசியமாக பொதுவெளியில் வெளிப்பட்டது.


பிஜேபியின் எஸ் ஆர் சேகர், இந்தக் கூட்டத்தில் தி.மு. கழகத்தின் இசுடாலின் உளறிக் கொட்டியதை எடுத்துச் சொல்வதோடு தொடங்கும் விவாதத்தைக் கொஞ்சம் பாருங்கள்! திமுகவின் சபாபதி மோகன் மோடியைப் பொது எதிரி என்கிறார்! எப்படிப் பொது எதிரியானார் என்பதை அவரோ கூட்டாளிகளோ சொல்லவில்லை என்றாலும், மோடி மீதான பயமே, மோடி மீது வெறுப்பு, மோடிக்கு எதிர்ப்பு என்றாகியிருப்பது புலப்படுகிறது. 

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு மாநிலக்கட்சியும் தங்களுடைய இருப்பை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுகின்றன என்பது மறுபடியும் கொல்கத்தாவில் வெளிப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியுமா?  

இந்தக் கூட்டம், கூட்டாட்சிக்கான அச்சாரமா? தேய்ந்து வரும் மாநிலக்கட்சிகள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்  தவிப்பதன் வெளிப்பாடா?
மோடிக்கெதிரான கொல்கத்தா பேரணி!   ஒற்றுமை நீடிக்குமா? முரண்பாடுகள் வெடிக்குமா என்ற விவாதம் இங்கே! இன்னும் self எடுக்கவில்லை momentum reach ஆகவில்லை என்கிறார் திமுகவின் வசந்தி ஸ்டாலின்.   


இந்த விவாதத்தில் மாலன் சொல்கிற ஒரு விஷயம் மிக முக்கியமானது.தேசீயக் கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாக 1990 க்குப் பின்னால் மாறிய அரசியல் சூழ்நிலை! எத்தனைபேர் புரிந்து கொண்டு பார்த்தார்கள் என்பதைக் கணிக்க முடியவில்லை! 


கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை சலீம் நடத்தியதில் பார்வையாளர்களுக்கு அவ்வளவாக ஈர்ப்பில்லையோ? நேற்று H ராஜாவுடன் நேர்காணல் நடத்த ஹரிஹரன் மறுபடியும் வந்துவிட்டார். 10% பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு பற்றிய கேள்விகள் இங்கே கழகங்கள் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்பது தான்! என்ன பெரிய வித்தியாசமென்றால் ஹரிஹரன் சிரித்துக் கொண்டே கேள்வி கேட்கிறார்! 

ஏன்கா, நீயெல்லாம் பிரதமர் ஆக முடியுமா?

ஏன், நீ மட்டும் ஆயிடுவயா என்ன?

Photo
கொஞ்சம் யோசித்துப் பார்த்து மறுமொழி ஒன்று தாருங்களேன்!