ட்ராக்டர் பேரணி என்ன நினைப்பில் என்ன சாதித்தது?

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்று மகாகவி பாரதி சொன்னது வெறும் வார்த்தைகளல்ல. இந்த மண்ணில் பிறந்த, இந்த மண்ணை நேசிக்கிற ஒவ்வொருவர் உயிரிலும் உணர்விலும் கலந்திருக்கிற அனுபவ சத்தியம். 


விவசாயிகள் போராட்டம் என இரண்டுமாதங்களாக நடந்து கொண்டிருந்த கூத்து, குடியரசு தினத்தன்று டில்லியில் ட்ராக்டர் பேரணி நடத்தியே தீருவோமென முனைந்து வன்முறை, அராஜகம், குழப்பத்தில் முடிந்ததில், சிங்கு எல்லைப் பகுதியில் இருக்கும் போராளிகளை இடத்தைக் காலிசெய்யுமாறு உள்ளூர் கிராம பஞ்சாயத்தார்கள் கெடுவிதித்திருப்பதாகத் தற்போது செய்திகள் சொல்கின்றன.


டெல்லி டிராக்டர் ராலி வன்முறையில்..ஒருவர் டிராக்டர்-ஐ வேகமாக ஓட்டி சென்று தடுப்பின் மீது மோதி வித்தை காட்ட முயன்றதில்...கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிகழ்வை அப்படியே தலைகீழாக மாற்றி...
விவசாயியை டெல்லி போலீஸ் நெற்றிப் பொட்டில் சுட்டதில் உயிரிழந்தார் என்று மாற்றி கூறியதுமில்லாமல்....விவசாயின் இத் தியாகம் வீணாகாமல் பார்த்துக் கொள்வோம் என்று பிற விவசாயிகள் கூறியதாக வேறு தூண்டிவிட்டு ட்விட்டரில் பதிவிட்டார் ..இந்தியா டுடே -ன் ராஜ்தீப் சர்தேசாய்.
அதோடு நிற்காமல்...இந்தியா டுடே தொலைக்காட்சியிலும்....இதே பொய் செய்தியை கூறினார்.
இதற்கு முன்னர்...ஜனாதிபதி திறந்துவைத்த நேதாஜி யின் புகைப்படம் குறித்த பொய் செய்தியை பரப்பிய கோஷ்டியிலும் வழக்கம் போல சர் தேசாயும் உண்டு.
இதனையடுத்து ... மக்கள் வெகுண்டெழுந்து சுட்டிக்காட்டிய பின்.. ஒரு மாதம் சம்பளம் கிடையாது & இரண்டு வாரங்களுக்கு தொலைக்காட்சியில் செய்திகளை வாசிக்கவும், விவாதிக்கவும் தடை விதித்தது இந்தியா டுடே நிர்வாகம். [ இதனால் இந்தியா டுடே நிர்வாகம் நியாயமானது என்று எண்ணினால் அதை போன்ற அபத்தம் வேறில்லை ! இது...மக்களின் கோபம் காரணமாகவும், தொலைக்காட்சியை இழுத்து மூடிவிடக்கூடாது என்கிற நடவடிக்கை அச்சத்தினாலும் எடுக்கிற மேம்போக்கான நடவடிக்கை மட்டுமே. மற்றபடி...சர்தேசாய் கோஷ்டிகளுக்கு பொய்யும் புதிதில்லை. அவர்களை பணியிலமர்த்தி சோறு போடும் மீடியா நிறுவனங்களுக்கும் பொய் பரப்புதல் புதிதில்லை!
இப்போது...ராஜ் தீப் சர்தேசாய் ...இந்தியா டுடே -ல் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

அனைத்துமே...மக்களின் கோபத்தினை தவிர்க்க ... அரங்கேற்றப்படுகிற நாடகம் !

மோடி அரசு அமைந்த பின் ....கடந்த சில வருடங்களாக ...இந்தியாவில் எதிர் கட்சிகளின் கூட்டணி ...மோடி அரசின் ஒவ்வொரு நகர்வையும் எதிர்த்து ஒவ்வொரு பெயரில் போராட்டம் என்று முன்னெடுக்கிறார்கள்.
இவற்றில் ....அந்நிய சக்திகள், பிரிவினை சக்திகளின் கோஷங்கள் கேட்கின்றன. பதாகைகள் தென்படுகின்றன. வன்முறைகள் நடக்கின்றன. காவல்துறையினர் தாக்கப்படுகிறார்கள். பெரும் குழப்பங்களும், பாதுகாப்பின்மையும் உருவாக்கப்படுகிறது.
தாங்கள் ஆதரிக்கும்/ முன்னெடுக்கும் போராட்டங்களில் ... ஒரே மாதிரியான தொடர் நிகழ்வுகள் இத்தனை நடந்தும்...நாட்டை பிளவு படுத்தும் பிரிவினைவாத சக்திகள் குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன ? என்கிற கேள்விக்கு பதிலும் இல்லை. மறுப்பும் இல்லை. பொறுப்பும் இல்லை.
நேற்றைய டிராக்டர் ஊர்வலத்தில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்து .... போராட்டத்திற்கு ஆதரவளித்த எதிர் அரசியல் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாதது போல நழுவுகின்றன. இத்தனை நாள் நடந்த இக் குறிப்பிட்ட போராட்டத்தின் களத்திலேயே கூட ...காலிஸ்தான் பிரிவினைவாத பதாகைகள் தென்படுகின்றன.. அந்நிய சக்திகளின் குரல்கள் கேட்கின்றன என்று தொடர்ந்து எச்சரிக்கை குரல்களும், கவலை குரல்களும் கேட்ட போதெல்லாம்...அவற்றை முற்றிலுமாக மறுதலித்து...விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக....எதிர் கட்சிகளின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் பதிலளித்தது இத் தருணத்தில் கவனிக்க தக்கது.
அரசியலில் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம்...
எதிர்கட்சிகளின் கூட்டணி கட்சிகளில் ஒன்றில் கூட ...
வலிமையான தலைமை இல்லை. போராட்டங்களை முன்னெடுக்கும்போதும்,ஆதரவளிக்கும்போதும், அவற்றை வழிநடத்தும் அளவிற்கு பொறுப்பேற்கும் வலிமையான தலைமைகள் இல்லை.
மக்கள் ஆதரவு பெற்ற mass leader வகை தலைமை இல்லை.
மிக முக்கியமானதாக ....சொந்த நாட்டினை எந்த வகையிலும் அந்நிய சக்திகளுக்கு காவு கொடுத்துவிடாமல் 'எதிர் அரசியல்' செய்யத்தெரிந்த சாமர்த்தியமான அரசியல் தலைமை என்று ஒரு தலைமை கூட இல்லை !
ஒரு ஜனநாயக நாட்டில்... குறிப்பாக எதிர் நிலை அரசியல் தளத்தில்... அதாவது, எதிர்க்கட்சிகளில்... வலிமையற்ற தலைமைகள் , உள்கட்சி அதிகார போட்டிகள், மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைமை கூட இக் கட்சிகளில் இல்லாமல் இருப்பது, குடும்ப அரசியல் and ஊழல் போன்ற ஆகப்பெரும் பலவீனங்கள் ... போன்ற அம்சங்கள் அனைத்தும்.....உலகளாவிய வலைப்பின்னலுடன் இயங்கும் அந்நிய சக்திகளுக்கு பெரும் வரப்பிரசாதம் ! எளிதில் ஊடுருவுவதற்கும் ,ஆக்கிரமிப்பதற்கும், தங்கள் கட்டுப்பாட்டில், தாங்கள் விரும்பியபடி உட்புகுந்து இந்திய அரசியலை ஆட்டுவிப்பதற்கும் மிக மிக எளிது.பங இந்த நிலையைத் தான் ...டிராக்டர் ஊர்வல வன்முறைகள்...மீண்டுமொருமுறை வெளிச்சமிடுகிறது. 

இப்படி இரண்டே பகிர்வுகளில் பானு கோம்ஸ் சொல்லியிருப்பதுடன் உடன்படுவதைத் தவிர வேறு சாய்ஸ் இருக்கிறதா?  

கொஞ்சம் சொல்லுங்களேன்! மீண்டும் சந்திப்போம்.  

4 comments:

  1. பானு கோம்ஸ் நன்றாகவே சொல்லியிருக்கிறார்.  

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஸ்ரீராம்! அதனால்தான் இங்கே எடுத்துப் பகிர்ந்ததே!

      Delete
  2. எதிர்கட்சிகளில் சில நேரங்களில் சரத்பவார், முன்பு பிரணாப் முகர்ஜி போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் தேச விரோதச் சிந்தனைகளை மட்டும் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் சுருட்டிய பல்லாயிரம் கோடிகள், எந்தப் பிரச்சனை என்றாலும் மத்த்தைக் காட்டித் தப்பிக்கலாம், இல்லை வெளிநாட்டில் பதுங்கிவிடலாம் என்ற காரணம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெல்லைத்தமிழன் சார்!

      சரத் பவாரோ பிரணாப் முகர்ஜியோ அப்படி தேச நலனை முன்னிருத்திப் பேசியதாக எனக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லையே! கட்சித்தலைமைக்கு முரண்படாமல் அதேநேரம் இப்போதுள்ளவர்கள் போல உளறாமல் இருந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சரத் பவார் படுவிஷம்! தாவூத் கம்பெனியோடு அவருக்கு இருந்த தொடர்புகள் ஊரறிந்தது

      தேசத்துக்கு விரோதமான சிந்தனை, செயல்களை வளர்த்தது இங்கே காங்கிரஸ் கட்சிதான்! மற்றவை எல்லாம் காங்கிரசின் மெத்தனத்தால் வளர்ந்து, பின்னாட்களில் கூட்டணி வைத்துக்கொள்கிற அளவுக்குப் போனவர்கள் என்பதை மறந்து விட முடியுமா?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!