ஜனவரி 1 பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்தாசிரமத்தின் தரிசன நாள்!

நம்மூரில் ஜனவரி முதல்நாளை ஆங்கிலப்புத்தாண்டாகக் கொண்டாடுவது ஒரு சாங்கியம், fashion, கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்துகொள்கிற மந்தைத்தனம் இப்படி என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்! என்னைப் பொறுத்தவரை இந்தநாள் ஸ்ரீஅரவிந்தாசிரமத்தின் தரிசன நாளாகவும், ஸ்ரீ அரவிந்த அன்னையின் தரிசனநாள் செய்தியைப் பெறுகிற ஒரு திருநாளாகவும் தான் இருக்கிறது அன்னையின் ஆசி, செய்தி இவைதான் தரிசன நாளின் சிறப்பாக இருப்பது அடியவர்களுடடைய அனுபவம்!


         

ஆன்மீக உணர்வின் அடிப்படைக் காரணமாக இருப்பது உள்ளே இருக்கும் இறைவனைக் கண்டு கொள்வதற்கே!

நேற்றும் இன்றும் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இருக்கும் ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி கட்டடத்தில், ஸ்ரீஅரவிந்தரின் சாவித்ரி மஹாகாவியத்தை அகண்ட பாராயணமாக, ஸ்ரீஅரவிந்தயக்ஞமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்துபோன வருடம்  உலகத்துக்கே பெரும் சோதனையாக, கொரோனா தாக்கம், பொருளாதார முடக்கம், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இன்னமும் அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பது என்றிருந்தாலும் எல்லா சோதனைகளைத் தாண்டி மனித இனம் மீண்டு வரவேண்டுமென்றால், தெய்வத்தின் துணையைத் தேடுவதைத்தவிர, வேறு வழியேது?

ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீஅரவிந்த அன்னை இருவரது திருவடிகளையும் சிந்தையில் வைத்துச் சரண் அடைகிறேன்/ அடைகிறோம்!  

மா மிரா சரணம் மம  ஸ்ரீஅரவிந்த சரணம் மம 

நண்பர்களுக்கு இனிய ஆங்கிலப்புத்தாண்டு தின வாழ்த்துகள்!                   

4 comments:

 1. With Mother's grace let this year be a delightful year! Mother bless! Mother guide! Mother save! Mother protect! Happy new year!

  ReplyDelete
  Replies
  1. அவளே எல்லாம் என்றிருப்போர்க்கு அவளருளே துணை நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை அம்மா! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

   Delete
 2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!