சண்டேன்னா மூணு! #பாமகஅரசியல் #ராகுல்அரசியல் #திமுகஅரசியல்

தமிழக அரசியலில் உதிரிக்கட்சியாக மட்டுமே இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வேறென்ன சாமர்த்தியங்கள் இருக்கிறதோ தெரியாது! கூட்டணி பேரம் பேசுவதில் மிக சாமர்த்தியசாலிகள்! தேர்தலில் வெற்றிபெற்று ஆதாயம் பெறுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்! கூட்டணி பேரம் ஒன்றிலேயே அதிக ஆதாயம் பார்க்கிற சாமர்த்தியம் உள்ள கட்சி இங்கே பாமக மட்டும் தான்! எல்லாப்புகழும் ஆதாயமும் மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே என்றால் நம்புவீர்களா?


நாளை முக்கியமான முடிவெடுக்கப்போவதாக அவசர நிர்வாகக்குழு கூடுவதாக அறிவித்திருந்ததை ஒரு வாரம் தள்ளிப் போட்டிருக்கிறார்களாம்! பேரம் படிந்து விட்டதா என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! அதிமுகவுடன் பேரம் பேசிக்கொண்டே, திமுகவுடனும் பேசுகிறார்கள்! 2016 இல் இப்படித்தான் தேதிமுகவின் பிரேமலதாவை இரண்டுபக்கமும் ஊசலாடவிட்டு,  திமுகவின் ஆஸ்தான காமெடியன் துரைமுருகன் நன்றாக வைத்துச் செய்தது போல, இப்போது பாமகவுக்கும் நடந்தால் மிக நன்றாகத்  தான் இருக்கும்! நடந்தேற வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோமே!


தேமுதிக இந்தமுறை முந்திக்கொள்ளப் பார்க்கிறது என்பதில் சென்ற முறை பாமக முந்திக்கொண்டு தேவையானதை வாங்கிக் கொண்டது, தேமுதிக பின்தங்கி கொடுத்ததை வாங்கிக் கொண்டு அதிமுக கூட்டணியில் ஒட்டிக் கொண்டது மாதிரி ஆகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை தெரிகிறது. ஆனால் தேவையே இல்லாமல் சசிகலாவைப் பற்றி ஏன் பேசினார்?    


ராகுல் காண்டி தமிழ்நாட்டுக்கு மூன்று நாள் விஜயமாக வந்திருக்கிறார். தமிழகத்துக்குப் புதிய ரட்சகனாகத் தன்னை அறிவித்துக்கொண்டு தேர்தல் பரப்புரை செய்ய ஆரம்பித்திருப்பதில் மறந்துபோய்க்கூட இசுடாலின் பெயரையோ திமுக கூட்டணியைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை. என்ன சோகமோ என்ன உள்குத்தோ? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? கேவி தங்கபாலு மொழிபெயர்க்க வராதது பெருங்குறை! 


திமுகவின் நிரந்தரக் காமெடியன் துரை முருகன் என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்காமல் பதிவை முடித்து விடமுடியுமா? கையில் ஊசி, வேல் என்று எதுவும் இல்லாமலேயே குத்துகிற கலை தெரிந்தவர். இசுடாலின் கையில் வேலைக் கொடுத்துவிட்டால் மட்டும் ......? என்!று கேட்கிற மாதிரியே இல்லை! *இப்போதாவது, தனித்துப் பிரசாரம் செய்வதாக முடிவெடுத்ததற்கு காங்கிரசுக்கு பாராட்டு-என்றும் சேர்த்தே சொல்லியிருப்பது துரை முருகனுடைய பிரத்தியேகமான லந்து!

மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!