2021 தேர்தல் களம் :::தேர்தல் வந்தால் அரசியல்புலிகள் புல்லையும் தின்பார்கள்! புண்ணாக்கையும் கூட!

வாக்குச்சீட்டு அரசியலின் மிகக்கேவலமான விஷயம் வாக்குத் தவறும் அரசியல்வியாதிகள் மட்டுமே அல்ல!, பணத்துக்காக, இலவசங்களுக்காக, வாக்குரிமையை விற்கிற ஒருபகுதி ஜனங்களுமேதான்! இந்தக் குறையை எப்படிக் களைவது என்ற மலைப்புடன்,  சங்கராந்தி / பொங்கல் வாழ்த்துக்களை நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.


பிரசாந்த் கிஷோரை நம்பிப்பிரயோசனமில்லை என்ற ஞானோதயம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு வந்துவிட்டது போல. இடதுமுன்னணி - காங்கிரஸ் கட்சி மே வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பின்னால் அணி திரள வேண்டும் என்று அழைத்திருக்கிறார்கள். அதாவது பிஜேபிக்கு எதிரான ஐக்கிய முன்னணியில் காங்கிரசும் இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸ் பின்னால் வந்து சேரவேண்டும் என்றழைத்திருப்பது மிகவும் கேலிக்குரிய ஒன்றாக, தேர்தலுக்கு முன்பே   தோல்வியை ஒப்புக் கொள்கிற விதமாகப் பார்க்கப்படும் என்கிற பிரக்ஞை கூட TMC ஆசாமிகளுக்கு இல்லை! மற்ற மாநிலங்களில் தீண்டத்தகாத கட்சியாகப் பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சியே இந்த அழைப்பைக் காறித்துப்பியிருக்கிறது. லட்சியக்கூட்டணி இடதுகளுடன் மட்டும் தான் என்று காங்கிரஸ் சொல்லிவிட்டது. அதற்குப்பிறகு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பில்லை என்று TMC அந்தர்பல்டி அடித்து விட்டது! இந்தக் கேலிக்கூத்தின் மீது ஒரு 34 நிமிட முழுநீள விவாதம் இங்கே

  


ஜல்லிக்கட்டுக்கு எதிராக நின்ற காங்கிரசும், திமுகவும் இப்போது தேர்தல் வருகிற நேரமாகப் பார்த்து கூட்டத்தோடு கோவிந்தா போடுவது  .......எல்லாமே #ஓட்டுக்குத்தான் என்பது புரியாதா என்ன? இந்தப்பித்தலாட்டக் கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகம் வீணாகப்  போவது மட்டுமே நிச்சயம் என்பது உங்களுக்கு தெரியாத விஷயமா?




ராகுல் காண்டி, 3ஆம் கலீஞர் உதயநிதி இருவரைப் பற்றிப் பேசுவதற்குப் புதிதாக எதுவுமே இல்லைதான்! இரண்டுமே அரைவேக்காடுகள் என்கிறபோது என்ன சொல்ல இருக்கிறது? 


துக்ளக் ரமேஷ் இந்த 24 நிமிட நேர்காணலில் பாமகவின் ராமதாசு வன்னியருக்கு 20% இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்றால் மட்டுமே கூட்டணி என்று பேசுவது வெறும் பேச்சுத்தான் என்று அடித்துச் சொல்கிறார் அப்படியானால் பாமக, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுமா? பாமக / ராமதாசு பற்றி கொஞ்சமே தெரிந்திருந்தாலும் எவரும் நம்ப மாட்டார்கள். தமிழக அரசியல் களநிலவரம் பற்றி ரமேஷ் சொல்கிற கூடுதல் விவரங்களுக்காக இந்த வீடியோவை முழுதாகப் பார்க்கலாமே

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுடன் 

மீண்டும் சந்திப்போம்       

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!