நியூஸ் 7 சேனலில் கடந்த 18 ஆம் தேதி ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கரூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரதமரை இழிவாகப் பேசியதற்கு அவருக்குப் புரிகிற நாகரிகமான வார்த்தையிலேயே பிஜேபியின் சார்பில் பேசிவந்த கரு.நாகராஜன் திருப்பிக் கொடுத்தது நான்கு நாட்களாகப் பற்றிக்கொண்டு எரிகிறது. காங்கிரசுக்கு வால் அறுந்தது போதாதென்று, கூட்டணியில் இருக்கிற அத்தனை கட்சிகளும் வாலை அறுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் கோபண்ணா ஒரு அறிக்கை விட்டிருப்பது ஜோதிமணியையும் மிஞ்சுகிற செம காமெடி! காங்கிரஸ்காரர்கள் என்றாலே கிறுக்கு மாய்க்கான்கள் தான் என்பது D K பரூவா காலத்திலிருந்தே தொடரும் விஷயம்தான்!
ஒருவிதத்தில் ஜோதிமணி பாவம் தான்! ஆனால் அவரை விட நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த கரூர் தொகுதி மக்கள் மிகவும் பாவம் என்று எவருமே சொல்ல மாட்டேன் என்கிறார்களே! இந்திய அரசியலைக் காங்கிரஸ் எந்த அளவுக்குக் கெடுத்துச் சீரழித்திருக்கிறது என்பதற்கு காங்கிரசுக்கு கிடைத்த புது ரத்தம் ஜோதிமணியே ஒரு நல்ல உதாரணம்.
இன்றைக்கு ராஜீவ் காண்டி நினைவு தினமாமே! கருணாநிதி , கொஞ்சம் பொறாமையோடு ஆனால் சரியாகத்தான் அந்த நாட்களிலேயே சொல்லி இருக்கிறார் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது!
கிழக்கு வெளியீடுகள் எதையும் வாங்குவதில்லைஎன்று முன் ஒருகாலத்தில் உறுதியாக இருந்ததுண்டு. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு போல அபத்தமான புத்தகம் படித்த பிறகு அந்த எண்ணம் மேலும் உறுதியானது. ஆனால் என் மகனுக்கு அப்படி சங்கல்பமெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு இருபது புத்தகங்களுக்கும் மேல் கிழக்கு வெளியீடுகளாக வாங்கிப் படித்துவிட்டு இங்கே தள்ளிவிட்டிருக்கிறான். அதில் வினய் சீதாபதி எழுதியதன் தமிழ்வடிவமும் ஒன்று. நீண்ட நாட்களுக்கு முன் திருப்பூர் ஜோதிஜி இந்தப்புத்தகம் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வரவே நேற்று முன்தினம் வாசிக்க எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த நாளைய அரசியல் நிகழ்வுகளை நினைவு படுத்திக் கொண்டு வாசிப்பு தொடருகிறது.
என்னமோ ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தை வாசிக்க எடுத்துக் கொண்டதாகப் பீலா விட்டிருந்தது என்ன ஆயிற்று? வெறும் 80 பக்கங்களிலேயே மூடி வைத்தாயிற்று! எங்கள் தொகுதி எம்பி வடித்த காவியங்கள் காவல்கோட்டமும் வேள்பாரியும் எதிரே ஷெல்பில் இருந்தாலும் எடுத்துப்படிக்க இன்னமும் மூடு வரவில்லை!
இந்திய அரசியல், அதிலும் தமிழக அரசியல் வெறும் அக்கப்போர்களால் ஆனது என்பதை அனுபவ சத்தியமாகப் பார்த்து வந்திருக்கிறோம்! நாளுக்குநாள் அதிகரித்துவருகிறதே தவிர குறைகிற வழியாய்க் காணோம்! இதில் எந்த அக்கப்போருக்கு முன்னுரிமை கொடுத்து எழுதுவது என்கிற அக்கப்போர் வேறு! முதலில் ரஜினிகாந்துக்கு பொழிப்புரை தேவைப் படுகிற அக்கப்போரைப் பார்த்துவிடலாமா?
ரஜனிகாந்த் கேட்டுக்கு வெளியே வந்து சுமார் 3 நிமிடம் பேசியதற்கு ரங்கராஜ் பாண்டே சுமார் 30 நிமிட பொழிப்புரை கொடுத்ததை சுபவீ செட்டியார் இது பார்ப்பனீயச் சதி என்று புறந்தள்ளிவிட்டு தமிழருவி மணியன் வந்து பொழிப்புரை தந்திருக்கலாம் என்று சொல்லியிருந்தார். பாண்டே பார்ப்பனர்தான், ஆனால் பாப்பாத்தியைக் கட்டிக் கொண்டதாலேயே ரஜனியும் பாப்பான்தான் என்றாக்கின அவசரம் அவஸ்தை சுபவீ செட்டியாருக்கு நிறையவே இருந்தது. ஆனாலும் அவர் வேண்டுகோளை தமிழருவி மணியன் நிறைவேற்றி விட்டார் என்பதில் சுபவீ செட்டியார் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்! நேற்றைக்கு இந்த 58 நிமிட பொழிப்புரை நேரலையில் ஒளிபரப்பானபோது ஆடியோ சுத்தமாக இல்லை. இப்போது ஆடியோ சரியாக இருக்கிற வீடியோவை வலையேற்றி இருப்பது இங்கேயும். கூடவே ஒரு கருத்துக்கணிப்பு முடிவையும் வெளியிட்டிருக்கிறார்கள். சரியான குசும்பு!
ரஜனிகாந்த் கேட்டுக்கு வெளியே வந்து சொன்னதில் ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் என்றார். மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜனி ஒன்றரை மணிநேரம் பேசியதில் என்ன நடந்தது என்று ரங்கராஜ் பாண்டே சொன்னதைத்தான், இங்கே தமிழருவி மணியனும் ஒருமணிநேரமாக நீட்டி முழக்கிச் சொல்கிறார். சுபவீ செட்டியார் இதற்கு எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பவன் நான் ஒருவன்தான் இருப்பேன் போல!
அபிஷேக் மனு சிங்வி மாதிரி காசுக்கார வக்கீல் வக்காலத்து வாங்கிப்பேசும்போது, இந்த கொடுக்கல் வாங்கலில் என்ன தவறு இருக்கமுடியும் என்றுதான் தோன்றும்! ஆனால் நடந்தது வக்கீல் வக்காலத்து வாங்குகிற மாதிரித்தானா?
முதலில் M F ஹுசைன் வரைந்து கொடுத்த ராஜீவ் காண்டியின் படம் பிரியங்காவுடையது தானா? அல்லது காங்கிரஸ் கட்சியின் சொத்தா? அப்புறம் அதன் விலை சந்தைமதிப்பில் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று யார் மதிப்பீடு செய்தார்களாம்? அதற்கப்புறம் ராணா கபூர் என்ன காரணத்துக்காக அவ்வளவு விலை கொடுத்து அந்தப்படத்தை வாங்கினாராம்?
#பணவாசனை அடிக்கிற இடங்களில் எல்லாம் நம்மூர் பானாசீனா இருப்பார், அப்படியே காங்கிரஸ் கட்சியும் இருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம். ஆக யெஸ் பேங்க் விவகாரத்தில் இன்னும் பூதங்கள் வெளியே வந்து கொண்டே இருக்கும் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.
சேகர் குப்தா இந்த 26 நிமிட வீடியோவில் யெஸ் பேங்க் விவகாரத்தைக் கொஞ்சம் பாலிஷ் போட்டுச் சொல்வது என்ன? காங்கிரஸ் சார்புள்ள ஊடகக்காரர்தான்! மாற்றுக் கருத்து என்ன, எப்படி நகாசு செய்து செய்தியைச் சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யெஸ் பேங்க் விவகாரம் இன்னும் சிலகாலத்துக்குப் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாகத்தான் இருக்கும். ஒரு முன்னாள் வங்கியாளனாக, என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள எனக்கு மட்டும் விருப்பமிருக்காதா என்ன!!
வெட்டி அக்கப்போர்களால் ஆனது அரசியல், சினிமா. இலக்கியம் என்பதை நம்மூரில் தொடர்ந்து நிரூபித்து வருகிற காமெடியை ஜனங்களாகிய நாம் ரொம்பவும் ரசிக்கப் பழகி விட்டோமா? அல்லது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறமாதிரி அமைதியாக இருந்தே, ஆட விட்டுவிட்டோமா? இப்படி இங்கே நான் என்னதான் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் பதில் வராது என்பது கூடத் தெரிந்ததுதான்!
இந்த வீடியோவை இப்போது பார்க்கும்போது யூட்யூப் தளத்தில் இதுவரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 42ஆயிரத்தை தாண்டி விட்டது என்பதில் அக்கப்போர்கள் தமிழர்களுடைய வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறதா இல்லையா? இத்தனைக்கும் தவாஉ கட்சியோ வேல்முருகனோ தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பிரபலம் அல்ல! வீடியோ 28 நிமிடம்
Behindwoods ஆவுடையப்பன்! அனல் பறக்கும் விவாதம் நடத்தக் கூடியவர் என்பதை இந்த வீடியோவுக்கு அவர்கள் கொடுத்திருக்கிற தலைப்பிலிருந்துதான் நான் தெரிந்து கொண்டேன்! திரௌபதி திரைப்படம் குறித்து அதன் இயக்குனர் மோகன் Gயுடன் இந்த விவாதத்தில் என்ன சொல்ல வருகிறார்? யாருடைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் நிறையப்பேரை இந்தப்படம் கலவரப்படுத்தியிருக்கிறது என்பது இதே ஆவுடையப்பன் இதே தளத்தில் இன்னுமொரு விவாதத்தை செங்கொடி, கோபி இவர்களுடன் நடத்தியிருப்பதில் இருந்து தெளிவாகிறது. ஒருபக்கச் சார்பாகவே பேசுவது இங்கே ஊடகங்களின் பொதுவான இயல்பாகவே ஆகிவிட்டது என்பதால் பா, ரஞ்சித்தின் அத்துமீறல்களை சகித்துக் கொள்கிறவர்கள், திரௌபதி படத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதில் ஆச்சரியமில்லைதான்! அப்படி ஒரு படம் பிடிக்கவில்லை என்றால், அதை சட்டைசெய்யாமல் போய்விடுகிற ஆப்ஷன் ஜனங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்! திரௌபதி படத்துக்கு The News Minute தளத்தில் எடுக்கப்பட்டிருக்கவே கூடாத படம் என்று தலைப்பிட்டு ஒரு விமரிசனம் வந்திருந்தது. ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
#அக்கப்போர் #சினிமா என்று பார்த்துவிட்டு #அரசியல் பக்கம் பார்க்க வேண்டாமா? புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்த 45 நிமிட வீடியோ விவாதத்தில் CAA எதிர்ப்பு அரசியலைக் குறித்து மிகத் தெளிவாக, தன்னுடைய கருத்துக்களை சொல்கிறார். News 7 சேனல் மிக நேர்மையாக ஒரு விவாதத்தை குறுக்கீடுகள், கோணல் கேள்விகள் இல்லாமல் நடத்தும் என்று நினைப்பதே தவறுதான்! விஜயனுடைய குறுக்கீடுகளையும் மீறி டாக்டர் கிருஷ்ணசாமி எப்படித் தன்னுடைய கருத்துக்களை முன்வைக்க முடிந்தது என்பது ஆச்சரியம்!
இத்தனையும் பார்த்துவிட்டு, இலக்கியத்தில் என்ன அக்கப்போர், அதைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என்று யாரும் கேட்கமாட்டீர்கள் என்று நம்புவதால் அதை சாய்ஸில் விட்டாயிற்று. கட்டாயம் அதுவும் வேண்டும் என்று யாருக்காவது ஆசை இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்! link, reference எல்லாம் தருகிறேன்!
சும்மா சேனல்களையே குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி? எது பொருளோ அதைப் பேசமறந்து வெறும் அக்கப்போர்களிலேயே தேங்கிநின்றுவிடுகிற ஜனங்களும் குற்றவாளிகள் இல்லையா? அதைப்பற்றி பேசியதாகவோ, குறை சொன்னதாகவோ எங்கேயும் தெரியவில்லையே என்றார் ஒரு நண்பர். சரியான கேள்விதானே என்கிறீர்களா?
இது நேற்றைய நேர்பட பேசு நிகழ்ச்சியின் சுருக்கமான வெர்ஷன்.17 நிமிடம் இதன் முழு வெர்ஷனும் இங்கே 109 நிமிடம். சுருங்கச்சொன்னாலும் அல்லது முழுதாய்ப் பார்த்தாலும், வெறும் அக்கப்போர்களிலேயே தமிழக அரசியல் போய்க் கொண்டிருப்பதையும் ஒருவாறு புரிந்து கொள்ள முடியும். அக்கப்போர்களையே விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிற சேனல்களை மட்டுமல்ல அவற்றின் பின்னணி அரசியல் என்ன என்பதையும் கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டவே இங்கே சேனல்களை பற்றி பேசுகிறேன். சேனல்களின் தேர்வு கூட அதிகப்பார்வையாளர்களை இவைகளால் ஈர்க்கலாம் என்கிற வணிக உத்திதானே தவிர, பயனுள்ள விஷயங்களைப் பேசினாலும் பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்ற நிலை இருக்குமானால் அவர்கள் ஏன் வெறும் அக்கப்போர்களையே தேடிப்போகப் போகிறார்கள்? இப்படி கேள்விக்கு எதிர்க்கேள்வி என்றே போய்க் கொண்டே இருந்தால் எது முதலில்? கோழியிலிருந்து முட்டையா? அல்லது முட்டையிலிருந்து கோழியா? ரேஞ்சு பட்டிமன்றமாகி விடும்.
BREAKING NEWS:
The 2019 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel has been awarded to Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer “for their experimental approach to alleviating global poverty.”
#NobelPrize
3:18 PM · Oct 14, 2019
அமெரிக்க இந்தியர் அபிஜித் பானெர்ஜிக்கும் அவரது பிரெஞ்சு மனைவிக்கும் இன்னொருவருக்குமாக என்று பொருளாதாரத்துக்கான 2019 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்கிறது. நோபல் பரிசுகள் வழங்கப்படுவதன் பின்னணியில் இருக்கும் அரசியலை ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருப்பதால், மிகப்பெரிய அபிப்பிராயம் சந்தோஷம் என்று எதுவுமே இல்லை. நோபல் பரிசுக் காமெடி பற்றிக் கொஞ்சம் ஏற்கெனெவே எழுதியாகிவிட்டது.
Congratulations to #AbhijitBanerjee on winning the Nobel Prize in Economics.
Abhijit helped conceptualise NYAY that had the power to destroy poverty and boost the Indian economy.
Instead we now have Modinomics, that’s destroying the economy and boosting poverty.
Quote Tweet
The Hindu
@the_hindu
·
#AbhijitBanerjee, recipient of #NobelPrize2019 for Economics, founded the Abdul Latif Jameel Poverty Action Lab (J-PAL), which has carried out 568 field experiments, or Randomised Control Trials (RCTs), in 10 years in several countries, including India.
http://bit.ly/2McduYM
5:43 PM · Oct 14, 2019
ராகுல் காண்டியும் சோனியாவும் மாறிமாறிப் பாராட்டியதால் மட்டுமே அல்ல. மனிதருக்கும் Ford Foundation க்கும் உள்ள தொடர்பு இன்னபிற விஷயங்கள் நிறையவே உறுத்தலாக இருக்கிறது.
இன்றைக்கு காலையில் பார்த்த முதல் காமெடிச் செய்தி, நாளை திமுக நடத்துவதாக இருந்த மொழிப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக! வேடிக்கைதான்! அதென்ன தற்காலிகமாக ஜகா வாங்குவது என்று திமுகவின் இசுடாலினிடம் யாரும் கேட்காமலேயே அவரே விளக்கமும் சொன்னார் என்கிறது செய்தி!
தமிழக ஆளுநர் உறுதி அளித்தாராம்! அதைக் கேட்டுக் கொண்டு திமுக தலீவர் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்தாராம் என்பது காதில் பூ சுற்றுகிற வழக்கமான திராவிடப்பம்மாத்து தான்! கீழே சுபவீ எப்படி பூ சுற்றுகிறார் என்பதை ஒரு 23 நிமிட வீடியோவாக
இது 1965 இல்லை. அந்தநாட்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை என்னமோ தாங்களேதான் உருவாக்கி, வழி நடத்தி 1967 இல் தமிழ்நாட்டில் ஆட்சியையும் பிடித்ததாக நினைத்துக் கொண்டிருந்தால், அதைவிட காமெடி வேறொன்று இருக்க முடியாது!1967 இல் நடந்தது ஒரு விபத்து மட்டும் தான்! அந்த சிறுவிபத்தைக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் காங்கிரஸ் 52 வருடங்களாக கோட்டைவிட்டுக் கொண்டிருப்பது காங்கிரசின் பலவீனமே தவிர திமுகவின் பலத்தால் அல்ல!
ஹிந்தி தேவையா? இல்லையா? இதை யார் முடிவு செய்வது? இந்த 18 நிமிட விவாதம் மூன்று மாதப் பழசுதான்! ரங்கராஜ் பாண்டேவிடம் Behindwoods கற்றுக்குட்டி கேபிரியல் தேவதாஸ் விவாதிக்கிறார் அல்லது கேள்வி கேட்கிறார், இப்படியெல்லாம் சொல்ல ஆசைதான்! வீடியோவுக்கு அவர்களாகவே தலைப்பு வைத்துக் கொண்ட மாதிரி காரசாரமான விவாதம் எங்கே என்று என்னிடம் கேட்கவேண்டாம்!😎🙏
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! ஆரம்பநாட்களில் இவர் போன்ற அதிமுக ஆசாமிகளை நான் அவ்வளவாக சட்டை செய்ததுமில்லை, பதிவுகளில் பேசுபொருளாக எடுத்துக் கொண்டு எழுதியதுமில்லை! ஆனால் எல்லோருக்கும் ஒரு காலம் வரும் இல்லையா! இது ராஜேந்திர பாலாஜியின் காலம் போல! திருச்சி வேலுசாமி போன்ற காங்கிரஸ்காரரை இங்கே நன்றாக வெளுத்து வாங்குகிறார்! கொஞ்ச காலத்துக்கு முன் திமுக பெருந்தலைகள் மாட்டிக் கொண்டார்கள்! வீடியோ 15 நிமிடம்!
Kiran ji, a few things. This press conference was dedicated to Cabinet decisions. I began by saying that I was there in my capacity as Chair of the GoM which has dealt with the matter.
E-cigarettes banned, says Finance Minister Nirmala Sitharaman - Shd this not come from Min of Health? How about banning gutka too? How about MoF announcing some fiscal measures to revive economy? https://ndtv.com/india-news/e-cigarettes-banned-says-finance-minister-nirmala-sitharaman-2103016…
9:08 AM · Sep 19, 2019
ட்வீட்டர் அக்கப்போர்களில் இது கொஞ்சம் ஆக்கபூர்வமான அக்கப்போர் என்று நான் சொன்னால் நம்புவீர்களா? Biocon நிறுவனத்தின் கிரண் மஜும்தார் ஷா எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளைத் தடை செய்வதாக சமீபத்தில் நிதியமைச்சர் நிருபர்கள் கூட்டத்தில் அறிவித்ததைக் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்! இது ஹெல்த் மினிஸ்டர் சொல்லியிருக்க வேண்டிய விஷயமில்லையோ? இது அம்மணியுடைய கேள்வி! இது அடுத்தது: குட்காவையும் தடைசெய்திருக்க வேண்டாமோ? பொருளாதாரத்தை புத்துயிரூட்ட நிதியமைச்சகம் என்ன அறிவிக்கப்போகிறது? இதுதான் மெயின் கேள்வி! அதற்கு 2 துணைக்கேள்விகள் வேறு! அதற்கு நிர்மலா சீதாராமன் மூன்று ட்வீட்டுகளில் பதில் சொன்னார்.
, the I&B Minister, when required. Health Secretary was also with me, explaining details. These are protocols, as you know, which govt press conferences follow. 2/3
As Finance Minister — you might’ve observed — I’ve been working on and regularly speaking about measures we’ve been taking on matters of the economy. 3/3