வெறும் அக்கப்போர்களால் மட்டுமே ஆனதா தமிழக அரசியல்?

சும்மா சேனல்களையே குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி? எது பொருளோ அதைப் பேசமறந்து வெறும் அக்கப்போர்களிலேயே தேங்கிநின்றுவிடுகிற ஜனங்களும் குற்றவாளிகள் இல்லையா? அதைப்பற்றி பேசியதாகவோ, குறை சொன்னதாகவோ எங்கேயும் தெரியவில்லையே என்றார் ஒரு நண்பர். சரியான கேள்விதானே என்கிறீர்களா? 


  
இது நேற்றைய நேர்பட பேசு நிகழ்ச்சியின் சுருக்கமான வெர்ஷன்.17 நிமிடம் இதன் முழு வெர்ஷனும் இங்கே 109 நிமிடம். சுருங்கச்சொன்னாலும் அல்லது  முழுதாய்ப் பார்த்தாலும், வெறும் அக்கப்போர்களிலேயே தமிழக அரசியல் போய்க் கொண்டிருப்பதையும் ஒருவாறு   புரிந்து கொள்ள முடியும். அக்கப்போர்களையே விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிற சேனல்களை மட்டுமல்ல அவற்றின் பின்னணி அரசியல் என்ன என்பதையும் கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டவே இங்கே சேனல்களை பற்றி பேசுகிறேன். சேனல்களின் தேர்வு கூட அதிகப்பார்வையாளர்களை இவைகளால் ஈர்க்கலாம் என்கிற வணிக உத்திதானே தவிர, பயனுள்ள விஷயங்களைப் பேசினாலும் பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்ற நிலை இருக்குமானால் அவர்கள் ஏன் வெறும்  அக்கப்போர்களையே  தேடிப்போகப் போகிறார்கள்? இப்படி கேள்விக்கு எதிர்க்கேள்வி என்றே போய்க் கொண்டே இருந்தால்  எது முதலில்? கோழியிலிருந்து முட்டையா? அல்லது முட்டையிலிருந்து கோழியா? ரேஞ்சு பட்டிமன்றமாகி விடும். 



BREAKING NEWS: The 2019 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel has been awarded to Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer “for their experimental approach to alleviating global poverty.” #NobelPrize
3:18 PM · Oct 14, 2019
  
அமெரிக்க இந்தியர் அபிஜித் பானெர்ஜிக்கும் அவரது பிரெஞ்சு மனைவிக்கும் இன்னொருவருக்குமாக என்று   பொருளாதாரத்துக்கான 2019 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்கிறது. நோபல் பரிசுகள் வழங்கப்படுவதன் பின்னணியில் இருக்கும் அரசியலை ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருப்பதால், மிகப்பெரிய அபிப்பிராயம் சந்தோஷம் என்று எதுவுமே இல்லை. நோபல் பரிசுக் காமெடி பற்றிக் கொஞ்சம் ஏற்கெனெவே எழுதியாகிவிட்டது.  
Congratulations to #AbhijitBanerjee on winning the Nobel Prize in Economics. Abhijit helped conceptualise NYAY that had the power to destroy poverty and boost the Indian economy. Instead we now have Modinomics, that’s destroying the economy and boosting poverty.
Quote Tweet
The Hindu
@the_hindu
·
#AbhijitBanerjee, recipient of #NobelPrize2019 for Economics, founded the Abdul Latif Jameel Poverty Action Lab (J-PAL), which has carried out 568 field experiments, or Randomised Control Trials (RCTs), in 10 years in several countries, including India. bit.ly/2McduYM
5:43 PM · Oct 14, 2019
ராகுல் காண்டியும் சோனியாவும் மாறிமாறிப் பாராட்டியதால் மட்டுமே அல்ல.  மனிதருக்கும் Ford Foundation க்கும் உள்ள தொடர்பு இன்னபிற விஷயங்கள் நிறையவே உறுத்தலாக இருக்கிறது.  



மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!