இட்லி வடை பொங்கல்! #49 அரசியல்! செய்திகள்! எதிர்பாராதது!

இந்திய அரசியல்களத்தின் ஒரு விசேஷமான பொது அம்சமே அவ்வப்போது நிறைய எதிர்பாராத திருப்பங்கள், அதோடு நிறையவே  முரண்பாடுகளுடனான கூட்டணிகள் தான்!  நேற்றைய செய்திகளில் ஆரம்பத்தில்  ஹரியானாவில் சுயேட்சைகள் அத்தனைபேரும் பிஜேபிக்கு ஆதரவாக இருப்பதான தோற்றம் இருந்தது. ஆனால் சில்லறைக் கொள்முதல் எதற்கு, மொத்தமாகவே 10 MLA க்களை வைத்துக் கொண்டிருக்கிற JJP கட்சியுடன் கூட்டணி வைத்தால் போதுமே என்று பிஜேபி முடிவு செய்திருப்பதாக ஒரு திருப்பம்!


ஆனால் இப்படி ஒரு திருப்பம் நடந்து கொண்டிருப்பதே தெரியாமல் சோனியா வாரிசிடமிருந்து இப்படி ஒரு ட்வீட்!


காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்   கோபால் கண்டா அமைச்சராகவே இருந்தார் என்பது கூடத்தெரியாமல் உளறினால் பதிலடி கொடுக்காமல் விட்டு விடுவார்களா? இந்த கூட்டணி விவகாரத்தில் ஜாட் மக்களுடைய ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பிஜேபி  காம்ப்ரமைஸ் செய்து கொண்டு விட்டதோ என்கிற சந்தேகம் எனக்கிருக்கிறது. எதில், ஏன் என்பதைக் கொஞ்சம் புரிந்துகொள்ள     

Haryana election result is a good reminder that under a slowing economy, parties with formidable state leaders can challenge Modi-Amit Shah's ambition. என்று தலைப்பிட்டு ராகுல் வர்மா மற்றும் பிரணவ் குப்தா  The Print தளத்தில் சொல்வதில்  அரசியல் கட்சி எதுவும் உயிர்த்தெழவில்லை, ஜாதி அரசியல் தான் முன்னுக்கு வந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. தலைப்பென்னவோ கொஞ்சம் misleading  என்பதை கட்டுரையை முழுக்க வாசித்துப் பார்த்தால் தான் புரியும்! இதை நண்பர் நெல்லைத் தமிழனுக்காகக் குறிப்பிட்டே சொல்கிறேன்!


நண்பர் ஜோதிஜி சரத் பவாரைப் பற்றிக் கொஞ்சம் எழுதும் படி  ஒரு பின்னூட்டத்தில் கேட்டிருப்பது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயித்தவரை விட tough fight கொடுத்தமாதிரித் தெரிகிற யாரோ ஒருவர் இங்கே  ஹீரோ லெவலுக்குக் கொண்டாடப்படுவதுமே இந்திய அரசியல் களத்தில் வாடிக்கையானதுதான்! இங்கே கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா கூட என்னவோ எதிர்க்கட்சிகள் இருப்பை சரத் பவார் ஒண்டியாகக் காப்பாற்றி விட்ட மாதிரி இந்தப் படத்தில் ஒரு பில்டப் கொடுத்திருக்கிறார். ஆனால் இவரைக் கொண்டாட என்ன இருக்கிறது?

व्यंग चित्रकाराची कमाल! बुरा न मानो दिवाली है..
Translated from Hindi by
Satire painting amazing! Don't mind it's Diwali ..
11:12 AM · Oct 25, 2019

In a message that subtly portrays how Shiv Sena is working towards projecting itself as a key player in Maharashtra, party leader Sanjay Raut has made a cryptic post showing the Shiv Sena 'tiger' smelling a 'BJP' lotus with an 'NCP' watch in its neck. The post, a cartoon is accompanied by a comment - 'Bura na maano, Diwali hain'. என்று இந்த ட்வீட்டர் செய்தியைப் பற்றிச் சொல்கிறது டைம்ஸ் நவ். உடனே தேவேந்திர ஃபட்னவிசுக்காகப் பரிதாபப்பட்டு உச்சுக் கொட்ட வேண்டாம்! இந்திய அரசியல் களமும் தேர்தல் முடிவுகளும் மிக மிகக் காமெடியானது. அரசியலில் இது மாதிரிப் பன்ச் வசனம் பேசியவர்கள் தாக்குப் பிடித்த மாதிரி இதுவரையில் எவரையாவது பார்த்திருக்கிறீர்களா?
        
   
பெரியண்ணேன்னு சொல்லணுமா(ம்)!! 

 
விடுமுறை தின வீடியோப் பகிர்வாக இந்த 1 மணிநேர விவாதம்! தமிழக ஊடகங்கள்: பிரச்சினைகளும் அக்கறையும்! அரவிந்தன் நீலகண்டன் நெறியாளராக, ஹரன் பிரசன்னா, SG சூர்யா, எழுத்தாளர் மா.வெங்கடேசன் மூவரும் விவாதத்தில் பங்கேற்பாளர்களாக! பார்த்துவிட்டு மனதில் என்ன படுகிறது என்று சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம். 
        

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!