முந்தைய பதிவின் தொடர்ச்சியாகவே இந்தப்பதிவும் வருகிறது. நீளம் கருதியும் நண்பர்கள் கொஞ்சம் யோசிக்க இடைவெளி கொடுக்கவும் இரண்டு பதிவுகளாக வெளியிட்டால் என்ன என்ற யோசனை! மஹாராஷ்டிரா, ஹரியானா இருமாநில சட்டமன்றத் தேர்தல்கள் திங்கட் கிழமை நடக்கவிருப்பதில், பிரசாரம் நாளைதான் முடிகிறது என்றாலும் தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே பார்க்க முடியவில்லை என்பதால் இந்தக் கருத்துக் கணிப்பும் எனக்கு அவ்வளவாக சுவாரசியப்படவில்லை.
வீடியோ 49 நிமி. ஒரு பதினைந்து நிமிடம் பார்த்தாலுமே கூடப் போதுமானது. எதிர்க்கட்சிகளே இல்லாமல் ஒரு பத்தாண்டு என்று அர்னாப் கோஸ்வாமி ஆரம்பிக்கிற விதம் மிக அபத்தமாக இருந்தாலும் நடப்பு நிலவரங்கள் என்னவோ அதுமாதிரியான சித்திரத்தைத் தான் தருகின்றன என்பதற்கு பிஜேபியை அல்லது அர்னாப் கோஸ்வாமியை நொந்து கொள்வதில் பயன் எதுவுமில்லை. ஆனால் மஹாராஷ்டிராவில் சிவசேனா தயவு இல்லாமலேயே பிஜேபி ஆட்சியமைக்க முடியும் என்பதான நிலை, கணிப்பு மிக சுவாரசியமாகத்தான் இருக்கிறது. இரு மாநிலத் தேர்தல்களிலும் மாநில அளவிலான பல உதிரிக் கட்சிகளுடைய கொட்டம் அனேகமாக அடக்கப்பட்டுவிடும் என்பதான சித்திரம் கிடைப்பதும் ஒரு நல்ல அறிகுறி. அப்படி என்றால் பிஜேபிக்கு மாற்றாக தேசிய அளவில் ஏதோ ஒரு கட்சியோ, கூட்டணியோ உருவாகவேண்டுமே! கிடைத்த நல்ல வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளத் தவறியது யாருடைய குற்றம்?
வீடியோ 17 நிமி. பார்க்காவிட்டாலும் மோசமில்லை! The Financial Action Task Force (FATF) பயங்கரவாதத்துக்குப் பணம் வரும் விதம் , மணிலாண்டரிங் இவைகளைக் கண் காணிக்கிற 39 உறுப்புநாடுகளைக் கொண்ட சர்வதேச அமைப்பு பாரிசை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்திய வெளியுறவுத்துறை சர்வதேச அரங்கிலும், இந்த அமைப்பிலும் எல்லைதாண்டிய பயங்கர வாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானைத் தனிமைப் படுத்த கடும் முயற்சிகள் செய்துவந்தாலும், இன்று நடந்த பிளீனரி கூட்டத்திலும் கூட சீனா, மலேசியா,துருக்கி இந்த மூன்று நாடுகளின் துணையோடு கறுப்புப்பட்டியலுக்குப் போகாமல் தப்பித்து விட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி வரை, இப்போது இருக்கிற மாதிரியே grey list இல் இருக்குமாம்! எதிர்பார்த்ததுதான்!
பிரம்ம செலானி சென்ற வாரமே ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதி இருந்ததுதான்! மாமல்லபுரத்தில் சீன அதிபரும் நமது பிரதமரும் சந்தித்துப் பேசியது, பாகிஸ்தானுடைய அடாவடிக்கு பின்புலமாக சீனா இருப்பதை எந்தவகையிலும் மாற்றிவிடாது என்று ஆரம்பித்து Prime Minister Narendra Modi has said “the time has come to fight a decisive battle against terrorism and against all those who promote terrorism”. However, there appears little prospect of such a concerted and decisive international fight. States bankrolling or rearing terrorists continue to go scot-free.
Nothing illustrates this reality better than Pakistan, which has systematically weaponised terrorism without incurring tangible international costs. The Financial Action Task Force (FATF) is unlikely to move Pakistan from its “grey” to “black” list, even though Islamabad has failed to meet most parameters against terrorist financing. என்று சொல்லியிருப்பதில் அன்றே சொன்னார் மகான் ப்ரம்ம செலானி என்றோ, சந்திப்பு தோல்வி என்றோ நம்மூர் ஊடகங்கள் மாதிரி எந்தவொரு முன்முடிவுக்கும் போய்விட வேண்டாம்!
Action is unlikely for several reasons. A Chinese national is the FATF president. Decisions are based on consensus. Pakistan’s principal patron, China, will seek — along with Turkey, Malaysia and Saudi Arabia — to block any move to blacklist Pakistan. At the United Nations General Assembly (UNGA), China, Malaysia, Pakistan and Turkey emerged as an anti-India quad என்கிற பிரம்ம செலானி, இந்த நாடுகளோடு அமெரிக்காவும் அதன் சொந்தக்காரணங்களுக்காக கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தானை வைப்பதற்குத் தடையாக இருப்பதையும் சொல்கிறார். எதிரிகள் எதிரிடையாகத்தான் இருப்பார்கள், நண்பர்கள் எவருமே உதவிக்கு வரமாட்டார்கள் என்கிற சூழலில் பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை இந்தியா தனியாகத்தான் நின்று எதிர்கொள்ள வேண்டும் என்று முத்தாய்ப்பாகச் சொல்வதை மேலே சுட்டியில் முழுதாய்ப் படித்துப் பாருங்கள்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!