வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! செய்திகளில் இன்று!

நம்மைச் சுற்றிவரும் செய்திகளில் முக்கியமான சில செய்திகளை முதலில்  பார்த்துவிடலாம்! ஏனெனில் இவை நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மையும் பாதிக்கக் கூடியவைகளாக இருக்கின்றன.  உலகமயமாக்கல் என்பது ஜனநாயகத்தின் உச்சம் என்று சொல்லப்பட்ட காலம் மலையேறி விட்டது. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் டொனால்ட் ட்ரம்ப் America First என்று முழங்குவதும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறத் தவிப்பதும், இந்தியாவில் நரேந்திரமோடி முன்வைக்கும் தேசியவாதம் பெரும் ஆதரவைப் பெறுவதும் தற்செயலானதோ ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவையோ அல்ல. 


brexit  வெளியேறுவதில் உடன்பாடு ஏற்பட்டு விட்டதாம்!
போரிஸ் ஜான்சன் நடராளுமன்றத்தின் ஒப்புதலைப் 
பெற்றாக வேண்டும்! வட அயர்லாந்து இதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. வீடியோ 11 நிமி.  

உலகமயமாக்கலை முன்னெடுத்த அமெரிக்கா சூடுபட்ட பூனையாக, உலகம் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும், எங்களைப் பார்த்துக் கொண்டாலே போதும் என்று வேகமாக ஒதுங்குவதில் இருந்தே உலகமயமாக்கல் என்கிற கோட்பாடு செத்து விட்டது என்பதைப்புரிந்துகொள்ள முடியும். இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கே  நேர்மாறாக, உலகமயமாக்கலில் முழுப்பயனையும் அனுபவித்தது சீனா என்பதில், எப்படி சீனர்கள் அதை  ஒருவழிப் பாதையாக்கி, தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள் என்பதையும் பார்த்தாலொழிய, புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். அமெரிக்கா சீனாவுக்கிடையே ஆன வர்த்தகப் போரும் கூட, பிரச்சினையை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். டொனால்ட் ட்ரம்ப், நரேந்திர மோடி, ஷி ஜின்பிங் இப்படித் தனிமனிதர்கள் அல்ல, ஒருநாட்டின் ஒட்டு மொத்தமான உணர்வே  எந்தத் திசையில் தேசத்தை இழுத்துச் செல்கிறது  என்பதற்கான தெளிவான அடையாளமாகவும்  இருக்கிறது. ஆனால்  மன்மோகன் சிங்,  ரகுராம் ராஜன் மாதிரியான  தோசானாமிக்ஸ் மேதாவிகள் வேறுவிதமாகத் தான் சொல்வார்கள். ஒரு 61 நிமிட வீடியோ இங்கே.   


வீடியோ 20நிமி .
The United States and Turkey have agreed to a ceasefire in northeastern Syria, a week after President Donald Trump withdrew US troops from the Kurdish-held area and effectively cleared the way for a Turkish military operation against the KurdsBut the terms of the ceasefire, which Vice President Mike Pence announced Thursday after meeting with Turkish President Recep Tayyip Erdoğan in Ankara, are still unclear, as is how it will actually be implemented.
Turkey isn’t even calling it a ceasefire — it’s calling it a win. துருக்கி ஐந்து நாட்களுக்கு சிரியா மீதான தாக்குதலை நிறுத்திவைக்கச் சம்மதித்திருக்கிறது, இது மேலோட்டமாகச் சொல்லப்படுகிற செய்தி என்றாலும், எந்த அளவுக்கு உண்மை?    
This is a great day for civilization. I am proud of the United States for sticking by me in following a necessary, but somewhat unconventional, path. People have been trying to make this “Deal” for many years. Millions of lives will be saved. Congratulations to ALL!
11:43 PM · Oct 17, 2019    

டொனால்ட் ட்ரம்ப் வேறு எப்படிச் சொல்வாராம்?

ஆனால் பிபிசி தமிழ் செய்தி வேறுவிதமாக டிரம்பின் அரசியலுக்கு சிரியா முடிவுரை எழுதுமா?  என்று கேள்வியை எழுப்புகிறது. 

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!