நம்மூர்த் தொலைக்காட்சி விவாதங்களை, அவை எவ்வளவு அபத்தமானவை என்று தெரிந்திருந்தாலுமே கூட, நான் முழுமையாகத் தவிர்த்துவிடுவதில்லை. காரணம், ஏதோ ஒரு இடத்திலாவது கவனிக்கப்பட வேண்டிய செய்தி இருக்கலாம் என்கிற நம்பிக்கை, அனுபவம் ஒரு காரணம்! சொல்லப்பட்ட விஷயங்களை விட சொல்ல விடுபட்டவை என்ன, ஏன் என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க உதவலாம் என்பது இன்னொரு வலுவான காரணம்!
இது நேற்று முன்தினம் புதியதலைமுறையில் ஒளிபரப்பான நேர்படப்பேசு நிகழ்ச்சி. (வீடியோ 61நிமிடம்) நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்த சமயத்தில் பாதியில் இருந்து தான் பார்க்க முடிந்தது. நேற்றைக்கு தாவன்னா பாண்டியன் பேசியதைக் கூட மறக்காமல் குறிப்பிட்டுவிட்டு, இதை மட்டும் விட்டு விட மனதில்லை என்றல்ல. சமீபத்தில் தமிழக சேனல் விவாதங்களில் உருப்படியான விவாதமாக இது இருந்தது என்பதாலேயே இங்கே நண்பர்களுடைய கவனத்துக்கு இதைக் கொண்டு வர விரும்புகிறேன். நாகஜோதி என்று ஒருத்தர் மட்டும் தொடர்ந்து சீனாவும் பாகிஸ்தானும் நமது எதிரி நாடுகள்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நேரமிருந்தால் கவனித்துக் கேளுங்கள்!
ஒரு 7 நிமிட வீடியோ! பாகிஸ்தானின் தந்தையாக அறியப் படும் முகமது அலி ஜின்னாவின் பூர்வோத்தரங்களை ஆராய்ந்தால், இப்படி அதிர்ச்சியாகத்தான் இருக்கும்! கொஞ்சம் பாருங்கள்! இதேபோல டூப்ளிகேட் காண்டிகளுடைய கதையையும் பொதுவெளியில் எப்போது ஆராய்ந்து, அவர்களிடமிருந்து ஒரிஜினல் காந்தி பெயரைக் காப்பாற்றுவீர்கள்?
காவேரி நியூஸ் சேனலில் மதன் ரவிச்சந்திரன் இடத்தில் இப்போது ஆசிரியராக, செய்திகள் விவாதங்களை நடத்திக் கொண்டிருப்பவர் கார்த்திக் மாயக்குமார்! திராவிடங்களுடன் Controversy எதுவுமில்லாமல் நிகழ்ச்சி நடத்திக் கொண்டு வருகிறார். என்னிடமிருக்கிற Tata Sky காவேரி நியூஸ் என்றொரு சேனல் இருப்பதாகவே காட்டுவதில்லை. பார்ப்பது யூட்யூபில் மட்டும்தான் என்பதால், என்னுடைய கவனத்துக்கு அவ்வப்போது வரும் போகும்! இங்கே நமக்கு அடுத்த வீடான ஆந்திர அரசியல் நிலவரங்கள் குறித்துக் கொஞ்சம் பேசுகிறார். வீடியோ 27 நிமிடம்
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!