நண்பர் திருப்பூர் ஜோதிஜி நேற்று எழுதிய ஒரு பதிவு இளையராஜாவைப் பற்றித்தான் என்றாலும், பின்னூட்ட விவாதத்தில் எப்படியோ திமுக தலீவர் கருணாநிதியும் வந்து புகுந்து கொண்டார். உங்களுக்குக் கலைஞர் என்ற பெயரைக் கேட்கும் போது கோபம் கொப்பளிக்கும். எனக்கு அவர் செய்த நல்லதும் என் நினைவுக்கு வந்து போகும் என்கிறார் ஜோதிஜி!
இப்படி ஒரு படத்தோடு ஒரு செய்தித் தலைப்பையும் சேர்த்துப் பார்த்தால் சிரிப்பு வருமா? கோபம் வருமா? நீங்களே சொல்லுங்களேன்!
ஜோதிஜி!
முதலில் கருணாநிதி பெயரைச் சொன்னால் கோபம் கொப்பளிக்கும் என்பதெல்லாம் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பழைய கதை. இப்போதெல்லாம் அந்தப் பெயரைக் கேட்டால் சிரிப்புத்தான் வரும் என்பதற்கு அவருடைய வாரிசுகளின் தற்போதைய அரசியல் மட்டும்தான் காரணம்.
மதன் எப்போது ஸ்டாலினை பேட்டி காண்பார்? என்று.... ஒட்டுமொத்த தமிழகமே ஆவலோடு எதிர்பாத்து காத்திருப்பதாக ஏராளமானவர்கள் கூறுவதை கேட்க முடிகிறது.
காவல்துறையில் எந்த வழக்கும் என் மீது கிடையாது. வேறு வழி இல்லாமல் privatecase அது இது என்று போய் படம் காட்டுகிறார்கள் திமுக ஆதரவு வட்டத்தினர். அத்தோடு என் Youtube Channel முடக்கவும் , என் நலம் விரும்பிகள் நடத்தும் Writer Maridhas என்ற FaceBook பக்கம் மற்ற pageகளை முடக்கவும் தீவிரமாக அலைகிறார்கள். இதற்காக திமுக தலைமை தனி ஒரு குழுவை அமைத்து முழு வீச்சில் என்னை, என் குழுவை முடக்க வேலையைச் செய்கிறது.
அந்த விதம் வழங்கப்பட்ட private case சம்மனுக்கு நீதிமன்றம் சென்று வந்தேன். அங்கே என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
நான் பின் வாங்கிவிடுவேன் என்று திமுக திக நினைத்தால் அதை விட முட்டாள் தனம் எதும் இல்லை. நேற்றே என் அடுத்த வீடியோ ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுவிட்டது.
மாரிதாஸ் மேலே குறிப்பிடும் இந்த 24 நிமிட வீடியோவில் சில அடிப்படையான கேள்விகளை திமுகவுக்கு எழுப்புகிறார்.
ஆக வாரிசுகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பது நான் மட்டுமே அல்ல! அதிலும் தமிழக அரசியலில் இசுடாலினையும் அகில இந்திய அளவில் ராகுல் காண்டியையும் நான் மிகவுமே ரசித்துச் சிரிக்கிறேன் என்பது இந்தப்பக்கங்களுக்கு வருகிற எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்! புதிதல்ல!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வன்னியர் பெல்ட்டில் ஜெகத்ரட்சகன் வீர வன்னியர் பேரவை என்ற தன்னுடைய பழைய அமைப்பைத் தூசுதட்டி எடுத்து திமுக ஆதரவு போஸ்டர் அடித்தது, திமுக இத்தனைநாட்களாக மறந்து போயிருந்த அதன் வன்னிய முகமான ஏ கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவதாக திமுக சொன்னது எல்லாம் சேர்ந்து நீயா நானா என்று இசுடாலினுக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் இடையிலான போராக மாறி விட்டதைக் குறித்த ஒரு விவாத வீடியோ 54 நிமிடம் யூட்யூப் தளத்தில் இதற்கு 239 கமெண்ட்டுகள் பெரும்பாலானவை ஆபாசமான வசவுகள்தான் என்பதில் தமிழக சேனல்களோடு தமிழேண்டா கும்பலும் சேர்ந்து காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்!
மீண்டும் சந்திப்போம்.
மருத்துவர் ராமதாஸ் அறிவாலயம் பற்றிச் சொன்ன குற்றச்சாட்டு பற்றிதான் மாரிதாஸ் பேசுகிறார் என்று நினைத்துப் பார்த்தேன். பழைய கதையைப் பேசுகிறார்.
ReplyDeleteபழசானாலும், நில அபகரிப்பு செய்வது திமுகவினரின் அடிப்படைத்தொழில் என்பதை யாராவது நினைவு படுத்தத்தானே வேண்டியிருக்கிறது ஸ்ரீராம்!
Deleteஒரு தலைவன் என்பவன் தீர்க்கதரிசனத்துடன், தான் நம்பும் கொள்கையை உயிர் மூச்சாக கருதி, மக்களின் நல்வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து வாழக்கூடியவராக வாழும் போது என்னவெல்லாம் செய்ய முடியும்? செய்ய வாய்ப்புள்ளது என்பதற்கு கலைஞர் முதல் முறையாக பதவி ஏற்ற பின்பு 1976 வரைக்கும் அவர் செய்த காரியங்கள் ஒவ்வொன்றும் இன்று வரையிலும் தமிழகத்தை நல்ல பாதைக்கு கொண்டு வந்தது. குறிப்பாக மத்திய அரசாங்கம் அந்த காலத்தில் புறக்கணித்தாலும், உதவி செய்யாமல் உபத்திரமே செய்தாலும், மிரட்டினாலும் நான் இப்படி செய்தே தீருவேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாது பல நல்ல காரியங்களை செய்து காண்பித்தவர் கலைஞர். தமிழகம் எங்கும் அரிசி நேரிடையாக கொள்முதல் நிலையங்கள் அமைத்ததும், விவசாயிகளிடம் நேரிடையாக அரசாங்கமே வாங்கிய பின்பு தான் இங்கு பசி என்ற வார்த்தையே மாறிப் போனது. சமூக நீதி என்பது அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் அதன் பிறகே எட்டிப் பார்த்தது. இதை நான் எப்போதும் நினைத்துப் பார்ப்பதுண்டு.
ReplyDeleteஜோதிஜி!
Deleteநீங்கள் சொன்ன விஷயத்தில் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் செயல்வாடுகளை அறிவீர்களா? ஊழல் செய்வதற்காகவே 1974 இல் துவங்கப்பட்ட இந்த மாதிரித் தேவையே இல்லாத எத்தனை ஆணிகளைக் கருணாநிதி உருவாக்கினார் என்பதை மறந்துவிடுகிறீர்கள்.