இட்லி வடை பொங்கல்! #46 நம்மைச் சுற்றி! செய்திகள்! அரசியல்!

சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா! என்றொரு பழைய சினிமாப்பாட்டு ஒன்றுண்டு! அதுமாதிரித் தான் காங்கிரசுடைய இன்றைய பரிதாபமான நிலையும்! அந்த மாதிரி ஒரு  கையறு நிலைக்குப் பின்னால் சோனியாவுக்கும் ராகுல் காண்டிக்கும் இடையில் ஒரு பனிப்போர் அல்லது நீயா நானா இழுபறி, அவரவர் ஆதரவாளர்களுக்கு மத்தியில் நடந்து வருவதைப் பற்றிய பேச்சு, புகைச்சலாக மாறிக் கொண்டிருப்பதை அறிவீர்களா?


காங்கிரசின் ஒற்றுமை வேஷமெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற வரைதான் என்பது இந்திரா நாட்களிலிருந்தே உள்ள விஷயம்தான்! இப்போது அம்மா மகன் என்று இருகோஷ்டிகளாக  ஆதரவாளர்கள் தனித்தனியாகப் பிரிந்து அடித்துக் கொள்ள ஆரம்பித்திருப்பது, இன்னும் பதினாறே நாட்களில் மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் சூழ்நிலையில், விரிசல்கள் அதிகமாகிக் கொண்டே போகிற விதத்தை என்னவென்று சொல்வீர்களாம்? வீடியோ 31 நிமிடம்.


நம்மூர் காங்கிரசின் நிலைமை மிகவும் பரிதாபம் என்றால் பாகிஸ்தான் நிலைமை பரிதாபத்திலும் பரிதாபம்!  காஷ்மீர் விவகாரம் முதற்கொண்டு ஜிஹாதி அரசியல்வரை, சர்வதேச அரங்கில் விஷத்தைப் பரப்ப பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தாலும், இந்திய வெளியுறவுத் துறையின் செயல்பாடுகளில் பாகிஸ்தான் மூக்குடைபட்டு நிற்பதும் வாடிக்கையாகிவருகிறது. அதைக்குறித்த ஒரு விவாதம் 19 நிமிடம்  


பிரான்சுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரின் ஜனாதிபதி மசூத்கான்    என்கிற டம்மிப்பீஸை அனுப்பி வைத்து, பிரான்சின் தேசிய அசெம்பிளியில் காஷ்மீர் விவகாரத்தைப் பேச முயன்றதை இந்தியா தடுத்து நிறுத்திய விவகாரம் 2 நாட்களுக்கு முந்தைய செய்திதான்! ஆனால் இங்கே எத்தனைபேர் அதன் முக்கியத்தை, சர்வதேச அரங்கில் நம்முடைய வெளியுறவுத்துறை விழிப்புடன் கையாண்டு வருகிற விதத்தைத் தெரிந்து வைத்திருக்கிறோம்? 
India successfully blocked Pakistan-occupied Kashmir (PoK) President Masood Khan's event in Lower House of the French Parliament on Wednesday. According to an ANI update, following a demarche issued to French Foreign Ministry by the Indian mission in Paris, the PoK President was barred from attending the event.Reportedly, after the incident, the programme was not allowed to air and Khan was replaced by Pakistan diplomat Moin-ul-Haq. The programme was a complete flop show as the event was attended by mostly their own embassy staff with no significant turnout of French lawmakers. இது அந்தச் செய்தியின் சுருக்கம். 

ஹாங்காங்!  ஒரேதேசம் இருவேறு அரசியல் அமைப்பு என்ற வாக்குறுதியுடன் 155 ஆண்டுகால பிரிட்டிஷ் காலனியாக இருந்த தனித்தீவு சீனாவின் கைகளுக்கு மாறியது,  அதன் தனித்தன்மையை பாதுகாத்துக் கொள்ள 2014  இல் குடைப் போராட்டம் என்று ஆரம்பித்து  இன்றைக்கு சீனாவின் பொறுமையை மிகவும் சோதிக்கிற அளவுக்கு, கடந்த  மூன்று மாதங்களுக்கும்  மேலாக ஜனநாயகத்துக்காக, ஹாங்காங் இளைஞர்கள் மேலே  பார்க்கிற மாதிரி முகத்தை மறைத்துக் கொண்டு போராடி வருகிறார்கள். 500 மெகா பிக்சல் காமெராக்களைக் கொண்டு அவர்களைத் தனித்தனியாக  அடையாளம் கண்டுபிடிக்க  வசதியாக மாஸ்க் அணியக்கூடாதென்ற சட்டத்தைக் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதை எதிர்த்தும் போராட்டம் நடந்ததில் கொஞ்சம் வன்முறையும்.

உள்நாட்டில் கம்யூனிஸ்ட்கட்சிக் கெடுபிடிகளை உய்கர் முஸ்லிம் மக்கள் மீது அதிகரித்துக் கொண்டே போகிற   சீன அரசு ஹாங்காங்கில் மட்டும் இன்னும் பொறுமையாக இருப்பது ஏன்,எப்படி என்று ஆச்சரியப்படுகிறீர்களா? 
மீண்டும் சந்திப்போம். 
          

2 comments:

  1. பிரியங்கா காந்தி நேரடியாக தலைமைப் பொறுப்புக்கு வர முயலாததற்கு காரணம், அப்புறம் மூன்று பவர் செண்டர் உருவாகிடும் என்றுதான். இப்போ சோனியாவுக்கு, யார் யார் ராகுல் ஆள், யார் யார் அவருக்கு எதிர்ப்பு என்று சரியாகத் தெரிந்துவிடும். இது ராகுலுக்கு உபயோகமாக இருக்கும்.

    இப்போ ப.சி போன்றவர்கள் கட்சியை விட்டுப் போனால், காங்கிரஸ் பாதிக்கப்படாது, கார்த்தி சிதம்பரம் அதிகபட்சம் 5 வாக்குகள் வாங்கக்கூடியவர் என்று யார் காங்கிரஸ் தலைமைக்கு எடுத்துச் சொல்வது?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெ. த், சார்!

      இப்போது மட்டும் காங்கிரசில் மூன்று அல்லது அதற்குமேலும் பவர் சென்டர்கள் இல்லையென்று யார் சொன்னது? ராபர்ட் வாத்ரா ஏற்கெனவே தன்னுடைய ஆசையைச் சொல்லிவிட்டார் .பிரியங்கா போட்டு வைத்திருப்பது தற்காலிகமான தடைதான். தான் பவர் சென்டர்ஆகமுடிகிறதோ இல்லையோ, தன்னுடைய மகன் ரேஹானைத் தயார் செய்துவிடுவார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.அதுவரையில் காங்கிரஸ் கூடாரம் ஒட்டுமொத்தமாகக் காலி ஆகாமல் இருந்தால்? என்றொரு Rider குறுக்கே நிற்கிறது.

      பானாசீனா விஷயம் வேறுரகம். தெரியாமலா பணம் பத்தும் செய்யும் என்று சொன்னார்கள்? :-)))

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!