வெற்றித்திருநாள் வாழ்த்துக்கள்! நாடெங்கும் நலமே விளைக!

நண்பர்கள் அனைவருக்கும் விஜயதசமியான இன்று என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு இந்திய விமானப்படை தனது 87வது உதய தினத்தைக் கொண்டாடி வருகிறது. புறப்பகையிலிருந்து நம்மைக் களத்தில் காத்துநிற்கும் நமது வீரர்களுக்கு இந்த விஜயதசமி   நாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்!


இது இன்று காலை 10 மணி முதல் 11 மணிவரை நடந்த நிகழ்வின் சுருக்கமான காணொளி.  முழு நிகழ்ச்சியும் இங்கே இரண்டரை மணிநேரக் காணொளியாக! 


வருகிற வெள்ளிக்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  இங்கு ஏனிதைச் சொல்கிறேன் என்பதை இந்தப்பதிவை வாசித்திருந்தால் எளிதாகக் கண்டுபிடித்திருக்க முடியும்! பழைய சீனா பட்டுப் பாதை என்று இதரநாடுகளுடன் கடல்வழி வாணிகம் மட்டுமே செய்து வந்ததுபோய், இப்போது ஒரே பெல்ட் ஒரே ரோடு என்று புதிய கடல்பாதையை வணிகத்துக்காகவும் தான், ஆனால் அதன் கடலாதிக்கத்துக்காகவும் உருவாக்கி வருவதைக் குறித்து கூகிள்+ இல் கொஞ்சம் குறிப்புக்களோடு பகிர்ந்து வந்ததும் வெளியுறவு விவகாரங்களைப் பற்றியும் எழுதி வந்ததையும் கூகிள்+ ஒருதலைப்பட்சமாகக் கலைத்து விட்டது. அதனால் தான் மறந்துபோய் விட்டிருந்த பதிவுகளை மறுபடி தொடர ஆரம்பித்தேன். இந்த ஆண்டு ஜனவரியில் அக்கம் பக்கம்! என்ன சேதி!  என்றொரு தளத்தைத் தொடங்கியதில் வெளியுறவுக் கொள்கை, ராஜீய உறவுகளும் சிக்கல்களும் என்று எழுத ஆரம்பித்தது இந்த அக்டோபரில் வேகம் எடுக்க  ஆரம்பம்!  திரும்பத்திரும்ப உள்ளூர் அக்கப்போர்களையே வாசித்துக் கொண்டிருப்பதை விட  ஒரு மாறுதலுக்காக இந்தப்பக்கங்களையும் உங்களுடைய லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாமே!  

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை மிகவும் விசேஷம். ஆனால் அதிலும் அரசியலைக் கலந்து, செகுலர் பூஜையாம்!  எல்லா மத வழிபாடுகளையும்  துர்கா பூஜையோடு கலந்துகட்டி அசிங்கம் செய்திருக்கிறார்கள். இஸ்லாமிய தொழுகைக்கு அழைக்கும் பாங்கும் அதில் ஒன்று  Organisers of a ‘secular’ Durga Puja in Kolkata have landed in a controversy after a video of them allegedly playing Azaan (Muslim call for prayers) in a Pandal sparked outrage on social media. A local lawyer has approached the city police seeking action against the organisers என்கிறது News 18 செய்தி   அவியங்களுக்கு நாங்க என்ன கொறைஞ்சா போயிட்டோம் என்று மருதைக்கார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரரு என்ன பண்ணியிருக்கிறார் என்று இங்கே க்ளிக் பண்ணிப்பாத்துக்கலாம் 

அப்புறம் இதெல்லாம் வழக்கமானதுதானே! கீழே வீடியோவுல சொன்னேன்!  


 மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!