இட்லி வடை பொங்கல்! #47 இந்தியா சீனா பாகிஸ்தான்

மாமல்லபுரத்தில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்றும் இன்றும் informal ஆக சந்தித்துப் பேசுவதைக் குறித்து இந்திய ஊடகங்கள் அவரவர் வசதிக்கேற்ற கலர்க்கண்ணாடி வழியாக, வெவ்வேறு விதங்களில் பரபரப்புச் செய்தியாக்கிக் கொண்டு வருவதைப் பார்த்தபோது நாலைந்து குருடர்கள் யானை ஒன்றை வெவ்வேறு பகுதிகளைத்த்தடவிப் பார்த்து இதுதான் யானை என்று வர்ணித்த கதை தான் நினைவுக்கு வந்தது.



உதாரணமாக,  மோடி அரசில் தாங்கள் முன்பு அனுபவித்த ஏகபோகமான சலுகைகளை இழந்து மோடி நின்றால் குற்றம் நடந்தால் குற்றம் என்று மோடி மீதான வெறுப்பை உமிழ்வதே தொழிலாக வைத்திருக்கும் NDTV இந்த நிகழ்வைப் பற்றி இந்த 46 நிமிட விவாதத்தில் என்ன கருத்தை உருவாக்க முயல்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு, முடிந்தால் உங்கள் கருத்தென்ன என்பதையும் சொல்லலாம். புதிய தலைமுறை சேனலில் மாசேதுங் பக்தர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன்,  மோடி வெறுப்பைக் கூட மறந்துவிட்டு மெய்மறந்து இந்த சந்திப்பைப் பாராட்டியதும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் நேரெதிராக, இது ஒன்றும் புதிதல்ல 1956 இலேயே சீனப்பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வந்ததையும் சாதாரண மக்களிடம் கூடக் கை குலுக்கி மகிழ்ந்ததையும்  ஒப்பிட்டு, ஏதோ போனால் போகிறது, சந்திப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்று பேசியதையும் இன்று காலை பார்த்தேன். தேசியவாதியாக கறைபடாத கரத்துடன் இருந்தவராக நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்த, இன்றைக்கு ஈழத்தமிழர் ஆதரவு வியாபாரத்தில் முழுக்க நனைந்து தமிழ்த்தேசியம் பேசுகிறவராகிப் போன பழ.நெடுமாறன் பேசிய வீடியோ ஒன்றையும் கூடப் பார்த்தேன். அதுமட்டும் தானா? 
                                                           
 
சூ என் லாய் 1956 இல் மட்டுமல்ல, 1960 இலும் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். எல்லைப்பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அவர் சொன்ன சில யோசனைகளை நேரு காது கொடுத்துக் கேட்காததன் விளைவை  1962 இல் அனுபவிக்க வேண்டி வந்தது  India missed an opportunity to resolve the issues with China in 1960 as the country "did not understand the power game", the former minister (K Natwar Singh)  said, without elaborating on his observation. முழுவிவரமும் இங்கே  தாவன்னா பாண்டியன்கள் பேசுகிற காலம் மாறிப் போய்விட்டது என்பதில் என்னென்ன மாறிவிட்டன என்பதைப் புரிந்து கொண்டு பேசியதாகக் கொஞ்சம் கூட இல்லை. 

பாவம் இம்ரான் கான்! ஹாங்காங் போராட்டங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட ஊடகங்கள் காஷ்மீர் விவகாரத்துக்குக் கொடுக்கவில்லையே என்று நேற்றைக்குப் புலம்பியிருக்கிறார். சீனாவின் ஆதரவு என்பது முழுக்க முழுக்க சீனாவின் நலன் சார்ந்ததாக மட்டுமே இருக்கும் என்கிற நிதரிசனம் அவருக்குப் புரியாதது போலவே இங்கே காங்கிரசின் உளறுவாயர் கபில் சிபலுக்கும் புரியவில்லையாம்! அக்ஸாய் சின் விஷயத்தில் தனது 56 இன்ச் மார்பை ஜி ஜின்பிங்குக்குக் காட்டட்டுமே என்று சொல்லி இருக்கிறார்.      


இப்போது இந்தியா சீனா இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் உறுத்தலாக இருப்பது எல்லைப்பிரச்சினை மட்டுமே அல்ல, சீனாவுக்கு, ஒருதலைப்பட்சமான, சாதகமாக இருக்கும் வர்த்தக உபரி இடைவெளி, இவைகளோடு பெரும் உறுத்தலாக பாகிஸ்தான் இருக்கிறது. தவிர லடாக்கில் இந்திய ராணுவம் நடத்தும் ஹிம் விஜய் என்ற மலைப்பிரதேசப் போர் ஒத்திகை வேறு கொஞ்சம் சிவப்புக்கொடியாக உறுத்தல்.  CPECக்கு மாற்றாக இந்தியா உத்தேசிக்கும் வங்காளதேசம் சீனா  இந்தியா மியான்மர் இடையிலான BCIM economic corridor உருவாகுமேயானால், இந்தியா அதில் முதலீடு செய்வதற்கும் பரஸ்பர வர்த்தக உறவுகளை மேம்படுத்திக்கொள்ள உதவியாக இ ருக்கும்.

இத்தனை உறுத்தல்களையும் தாண்டி இந்தியாவும் சீனாவும் தங்களுடைய உறவுகளை தொடர்ந்து சீரமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன என்பதுதான் கள யதார்த்தம். நல்லதே நடக்கட்டும் என்று பிரார்த்திப்போம்.

மீண்டும் சந்திப்போம்.  


  


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!