கனடா அரசியலில் லிபரல் என்று சொல்வதைவிட கபட நாடக வேடதாரி என்றே சொல்வது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் போல! நடந்து முடிந்த தேர்தலில் தனக்குத் தெரிந்த மொத்த வித்தையையும் ட்ரூடோ களத்தில் இறக்கிவிட்டார் என செய்திகள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை.
ட்ரூடோ மறுபடியும் ஜெயித்திருக்கிறார். சென்றமுறை போல அல்லாமல், நாடாளுமன்றத்தில் ஒரு மைனாரிடி அரசை அமைக்கிற அளவுக்கு மட்டும்! 2015 இல் 184 இடங்களுடன் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆட்சி அமைத்தது போல இன்று நிலைமை இல்லை. ட்ரூடோமேனியா முடிவுக்கு வந்து விட்டது என்று சொல்வது ஏனாம்? In the dying days of the election, Trudeau was running ads saying that the Conservatives wanted to make the election about him. No, Trudeau wanted to make the election about him.The entire government, the entire Liberal Party has become all about Justin Trudeau. It’s not a political party anymore, it’s a movement as Trudeau calls it or a cult as his detractors call it. Most Canadians it seems, don’t want to join a cult. என்று ஆரம்பித்து A Trudeau win means a divided Canada என்று இன்னும் விரிவாக ஆராய்கிறார்கள்.
மஹாராஷ்டிரா ஹரியானா இருமாநிலத்தேர்தல்களிலும் வாக்குப்பிந்தைய பலவிதமான கருத்துக் கணிப்புக்கள் வந்திருந்தாலும் சொல்வதென்னவோ ஒரே விஷயம்தான்! இரு மாநிலங்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது என்பதுதான் சாரம்! இங்கே சாம்பிளுக்காக ஒரு 2 நிமிட வீடியோ.
ஆனால் இந்த ஒன் இந்தியா தமிழுக்கு எங்கிருந்துதான் இதுமாதிரி அலாதியான செய்திகள் காப்பியடிப்பதற்குக் கிடைக்குமோ!?
நடக்குமா என்பது நிச்சயமாகத் தெரியாது! ஆனால் நடந்தால் மிகவும் நன்றாக இருக்குமே என்று உடனடியாக நினைக்க வைத்த செய்தி!
செய்த பாவங்கள் தீருமோடா சிவகுருநாதா!
பானாசீனாவுக்கு INX மீடியா கேசில் உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியிருக்கிறது. ஆனால் அது அமலாக்கத்துறை கஸ்டடியில் இருப்பதற்குத் தடையாக இல்லை என்ற நிலையில் பயனற்றதாகவும் ஆகிப்போனதுதான் மிச்சம்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!