ஒரு புதன்கிழமை! அரசியல் களம் இன்று!

தேர்தல்கள் முடிந்து அரசுகள் அமைவதில் பிரமாதமான சுவாரசியம் என்ன இருக்கப்போகிறது? ஒரு தேவையில்லாத இழுபறி நிலைமையை நீட்டித்துக் கொண்டே போனால் தாங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளலாம் என்று சிவசேனாவுக்கு யார் அரசியல் சொல்லிக் கொடுக்கிறார்களோ தெரியாது! வெட்டி வீராப்புடன் தேர்தல் முடிவுகளை வைத்து தங்களுக்கு சாதகமான முறையில் பிளாக்மெயில் செய்துகொண்டிருப்பதாக மட்டும் தான் தெரிகிறது. 


ஆனால் ஆதித்ய தாக்கரே தான் முதலமைச்சராக வரவேண்டும் என்கிற  உத்தவ் தாக்கரேவின் பிடிவாதத்துக்காக எதிர்க் கட்சி வரிசையில் உட்கார சிவசேனா MLA க்களில் சரிபாதிப்பேருக்கு விருப்பமில்லை என்பதால் சிவசேனா உடைந்து 24 + MLAக்கள் பிஜேபிக்குத் தாவுகிற சாத்தியம் இருக்கிறது என்பதை காங்கிரஸ் ஆதரவு ஊடகமான The Print தளமே ஒரு செய்தியில் சொல்கிறது. ஆனால் சரத் பவார் கட்சி ஆசாமி ஒருத்தர் மட்டும்  சிவசேனாவை பிஜேபியின் தலைக்கு மேல் தொங்குகிற கத்தியாக படம் வரைந்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.  
एक म्हण आहे, डोक्यावर टांगती... My Artwork #ElectionResults2019 #MaharashtraAssemblyElections #MaharashtraElections2019 #MaharashtraAssemblyPolls
11:31 AM · Oct 29, 2019

சிவசேனாவின் சின்னம் வில் அம்பு! செய்கிற அரசியல் வெட்டி வம்பு! இவர்களை  ஒரு nuisance case என்பதற்கு மேல் கத்தி கித்தி என்றெல்லாம் ஓவர் எஸ்டிமேட் செய்யக் கூடாது என்பதை பிஜேபி அழுத்தமாகக் காட்ட வேண்டிய தருணம் இது.  என்ன செய்யப்போகிறார்கள்? இன்றைக்கு பிஜேபி MLAக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித்தலைவராக தேவேந்திர ஃபட்னவிஸ் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது என்பதோடு     TOI தற்போதையாக செய்தியாக தேவேந்திர ஃபட்னவிஸ் வருகிற வியாழன் அல்லது  வெள்ளிக்கிழமை அன்று  முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொள்வார்  என்றும்  சொல்கிறது. அதன்படி பார்த்தால் சிவசேனா தன்னுடைய வெட்டி உதார்களை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, வழிக்குவந்து விடும் என்றல்லவா அர்த்தம் ஆகிறது? ஆனாலும் காங்கிரசின் பிரித்விராஜ் சவுஹானுக்கு இன்னமும் நப்பாசை இருக்கிறதாம்! 


ISIS தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் படைகளால் வேட்டையாடப்பட்டதைக் குறித்துக் கொஞ்சம் விளக்கமான 10 நிமிடக் காணொளி. நம்பர் 1 தீர்த்துக் கட்டப்பட்டமாதிரியே இஸ்லாமிய காலிபேட்டின் நம்பர் 2, (அல்லது நம்பர் 2க்களில் ஒருவர்)  அபு ஹசன் அல் முஹாஜிர் என்பவரும்   கொல்லப்பட்டதாகத் தகவல்கள் சொல்கின்றன. வெட்ட வெட்டக் களைகள் வளர்வது போல பயங்கரவாதிகளும் ஒருமுறை அல்லது இருமுறை களையெடுக்கப்படுவதால் மட்டும் ஓய்ந்து விடுவதில்லை, இன்னொரு பெயரில் மீண்டும் வருவார்கள் என்பது அனுபவ பாடம். ஒரு பின் லேடன், ஒரு அல் பக்தாதி என்பதோடு முடிந்துவிடுவதில்லை!


யார் இந்த அல் பக்தாதி? அதென்ன IS, ISIS, ISIL என்று பல பெயர்களில்? இஸ்லாமிய காலிஃபேட் என்பதென்ன? இந்த 27 நிமிட வீடியோவில் சுருக்கமாக விளக்குகிறார் M D   நளபட்! இவர் யாரென்று தெரிந்து கொள்ள விருப்பமா?      

மீண்டும் சந்திப்போம். 
      
   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!