ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களோடு சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு தமிழக அரசு சென்னை விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுத்திருக்கிறது. இங்கே சீன அதிபரின் விஜயத்துக்கு இத்தனை ஆரவாரங்களோடு நேரலையில் ஒளிபரப்பு சுடச்சுட செய்திகள் என ஊடகங்களும் சேனல்களும் முக்கியத்துவம் கொடுத்த அளவில் ஒரு சிறு பகுதியாவது சீன ஊடகங்களோ அல்லது வேறு சர்வதேச ஊடகங்களோ கொடுத்திருக்கின்றனவா என்று நானும் தேடித்தேடிப் பார்த்ததில், என்ன ரிசல்ட் வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
எந்த நேரத்தில் எதைப்பேசவேண்டும் என்கிற விவஸ்தையே இல்லாத உளறுவாயர்களின் கட்சி சோனியாG காங்கிரஸ் தான் என்பதை மனிஷ் திவாரி நேற்றைக்கு மிகவும் தெளிவாக நிரூபித்திருக்கிறார். ராஜீய உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துகிற விதத்தில் அவருடைய பேச்சும் ட்வீட்டர் சீண்டல்களும் இருந்தன.
அக்சாய் சின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான், ஜின்ஜியாங் மாநிலத்தில் உய்கர் முஸ்லிம்கள் சீன அரசின் அடக்குமுறைக்கு ஆளானது எல்லாமே காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் தொடங்கியதுதான்! ஹாங்காங் விவகாரம் 2014இல் ஆரம்பித்தது என்பதால் அதைக்கூட விட்டுவிடலாம். காங்கிரஸ் ஆட்சி செய்தபோது என்ன செய்தார்களாம்? கேள்விகள் இன்னும் நிறையக் கேட்கலாம்தான்! ஆனால் அவர்களுடைய அரசியல் இந்த அளவுக்கு கீழே இறங்கி விட்ட பிறகு ஒழிந்துபோ காங்கிரசே! என்று இவர்களை மீண்டும் தலையெடுக்க விடாதபடி செய்வது ஒன்றுதான் சரியான அரசியல் செயல்பாடாக இருக்கும் என்பதற்குமேல் என்ன சொல்ல முடியும்?
சீனாவுடன் கைகுலுக்குவது அல்லது முண்டாதட்டி சவால் விடுவது இதைச் செய்வதானாலும், முதலில் சீனா இன்றைக்கு ஆசியாவின் வஸ்தாதாக வளர்ந்த கதையைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?
டேனி ரோட்ரிக் எழுதிய இந்த செய்தி அலசலில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இழுபறி பற்றியது தான்! ஆனாலும் பலவிஷயங்கள் இந்திய சீன உறவுகளுக்கும் பொருந்தி வருவதாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்க்க விரும்புகிறவர்களுக்காக. அமெரிக்காவுடன் ஒப்பீட்டளவில் சீனா எப்படி இன்று இருக்கிறதோ அதே மாதிரி சீனாவுடன் ஒப்பீட்டளவில் இந்தியா இன்று இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு வாசிக்க வேண்டியிருக்கும். வீண்வேலை! அதெல்லாம் நமக்கெதுக்கு என்றிருக்க நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கின்றன தொல்லைக்காட்சி சீரியல்கள்!
என்ன சொல்கிறீர்கள்?
வெள்ளிக்கிழமைக் கேள்விகளாக இன்றைய தலைப்புச் செய்திகளில் இருந்து. மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!