Showing posts with label பட்ஜெட். Show all posts
Showing posts with label பட்ஜெட். Show all posts

முதலாளி ராஜினாமா! காங்கிரஸ்காரன் என்ன செய்ய முடியும்?

எவ்வளவு சூடுபட்டாலும் திருந்தாத ஜந்துக்களால் நிரப்பப் பட்டது காங்கிரஸ் என்பதை அவர்கள் எத்தனைதரம் தான் நிரூபித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? காங்கிரசை ஒதுக்கித் தூர எறிய இன்னும் எத்தனை காலம் தான் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

   
இங்கே இந்த நிகழ்ச்சியில் காங்கிரசின் கோபண்ணா கட்சியில் வாங்குகிற காசுக்குத் தகுந்த மாதிரிக் கூவுகிறார். பானு கோம்ஸ் எழுப்பிய இந்தக் கேள்விக்காவது நேரடியான பதில் இருந்ததா என்பதைக் கொஞ்சம் பாருங்கள்.  வெறும் 24 நிமிடம்தான்! இந்த விவாதத்தைக் கூட, ராகுல் காண்டி ராஜினாமா நாடகத்தை தமிழக ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன என்று ஒரு சாம்பிளாக மட்டுமே இங்கே தருகிறேன். தந்திடிவியின் பார்வை என்ன?  49 நிமிடம்தான்! காங்கிரசை ஒரு கட்சியாக ஒருங்கிணைக்கிற சக்தியாக (unifying force) இந்திரா வாரிசுகளே இருக்கிறார்கள் என்று ரவீந்திரன் துரைசாமி  ஆரம்பிப்பதெல்லாம்  சரிதான்! இன்னும் சிலமாதங்களில்  ராகுல் காண்டி திரும்பவும் வருவார் என்று சொல்வதும் கூட அதான் எல்லோருக்கும் தெரியுமே என்கிற ரீதியிலானதுதான்! நான்குபக்கங்களில் உணர்ச்சிப் பிழம்பாக ராகுல் காண்டி எழுதிய வசனம்  என்னுடலில் உயிருள்ள ஒவ்வொரு அணுவும் இந்தியா குறித்த பிஜேபியின் கருத்தை எதிர்க்கிறது யார் கண்ணிலும் படவில்லையா அல்லது பொருட்படுத்தவேண்டிய அளவுக்குப் பெரியவிஷயம் இல்லையா என்பது எந்தக்காங்கிரஸ்காரனுக்கும் தெரியாது! ஊடக விவாதங்களில் பங்கேற்கிறவர்களுக்கும் தெரியாது!  


திமுகவில் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு அறிவிக்கப்பட்டிருப்பது மட்டும்தான் இங்கே முக்கிய செய்தி. அதுவுமில்லையானால் பிக் பாஸ் வீட்டில் மகளைக் கடத்தி வந்த புகாரில்  வனிதா கைது செய்யப்பட்டாரா? சமரசம் ஏற்பட்டுவிட்டதா என்கிற அதிமுக்கியமான அலசல் இருக்கவே இருக்கிறது. 


ராஜினாமா நாடகம் எப்படிவேண்டுமானாலும் போகட்டும்! சோனியா உடல்நிலை பரிசோதனை செய்துகொள்வதற்காக மகனுடன் அமெரிக்கா புறப்பாடு! மகள் ஏற்கெனெவே வெளி நாட்டில் தான் இருப்பதாக இந்த செய்தி சொல்கிறது, காரிய கமிட்டி கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதை ரிமோட் கன்ட்ரோலிலேயே செய்யமுடியும் என்கிறபோது, முதலாளிகள் எங்கே இருந்தால்தான் என்ன?   


மக்களவையில் இந்தியாவில் பாசிசத்தின் 7 ஆரம்ப அறிகுறிகள் என்று தன்னுடைய முதல்பேச்சை ஆரம்பித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, அந்தப் பேச்சு, டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு செய்திக்கட்டுரையில்  இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற நக்கல்கள் கேலி அதிகமானதற்குப் பொங்குகிறார். இத்தனை ஆவேசப்பட இதில் எதுவுமே இல்லை என்றாலும், பொங்கவில்லை என்றால் எப்படி மம்தா பானெர்ஜி பாணியில் அரசியல் செய்ய முடியும்? அங்கே மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜி cut money  (அன்பளிப்பு, மொய், லஞ்சம்) வாங்கியதை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னதே பெரிய  பிரச்சினையாகிக் கொண்டிருப்பதில் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதில் தன்னுடைய கட்சி எம்பிக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டா இருக்க முடியும்?


நாளை 5ஆம் தேதி மத்திய அரசின்  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட  இருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்று பொருளாதாரம் புரிந்து, புரியும்படி சொல்கிறார் சோம வள்ளியப்பன். 10 நிமிடம் தான். பார்க்க வேண்டிய வீடியோவாகப் பரிந்துரைக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
            

வருடந்தோறும் அரசு செய்யும் வெட்டி வேலை! பட்ஜெட்!

முன்னாள் பொருளாதார வித்தகர்,சால்வை அழகர் பானா சீனா  முதன் முதலாக நிதியமைச்சரான போது, அறிவித்த பட்ஜெட் தேனொழுக இருந்தது! 


போதாக்குறைக்கு பக்ஜெட் உரையில் திருக்குறள் ஒன்றைச் சொல்லித் தமிழை பட்ஜெட் காகித அளவுக்கு உயர்த்திய பெருமையை நாடே அன்றைக்கு ஆவென்று வாய் பிளந்து அதிசயித்துப் பார்த்ததென்னவோ உண்மை!மிகச் சிறந்த பட்ஜெட் என்று சுற்றியிருந்த கூட்டாளிகள்  எல்லாம்  குலவை இட்டார்கள்! கொஞ்ச நாளிலேயே கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்து, உண்மையில் சரக்கு ஒன்றும் இல்லை  என்பது அம்பலமானது!

தற்சமய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை! பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்து கொண்டிருக்கும்போதே இது சும்மாக் கண்துடைப்புத்தான் என்பது வெளிப்பட ஆரம்பித்தது! பிறக்கும் போதே வெள்ளி மூக்குடன்! என்ன செய்வது? பரிகாரமாக, இவரும்  ஏதோஒரு கலரில் சால்வை போர்த்திக் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தால், சரியாகப் போயிருக்குமோ?

நடுத்தர மக்களிலேயே மேல்தட்டு நடுத்தர மக்களுக்கு, வருமான வரி விகிதங்களில் அறிவித்திருக்கிற சலுகை குறைந்த பட்சமாக இருபதாயிரமும் அதிக பட்சமாக ஐம்பதாயிரத்தை ஒட்டியும் இருக்கும் என்பது உண்மைதான்! ஆனால், அந்த அடுக்கில் எத்தனை ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இந்த வரிச் சலுகை பயனுள்ளதாக இருக்கும் என்ற உண்மையான புள்ளி விவரத்தை அரசு தரவில்லை. ஆனாலும், இந்த வருமான வரி உச்சவரம்பில் உத்தேசித்திருக்கும் மாற்றம் இடைச் செருகலாக மட்டும் இருப்பது கொஞ்சம் எல்லோருக்குமே பயன் தரக்கூடியது என்ற மாயை நன்றாகத் தூவப் பட்டிருக்கிறது!

ஆனால், எரிபொருள் விலை உயர்வு விலைவாசியை இன்னும் அதிகமாக எகிறச் செய்யும் என்பது தெரிந்துமே பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரிக்கப் பட்டிருக்கிறது. ஆம் ஆத்மி என்று மூச்சுக்கு மூச்சு முழங்குகிறார்களே, அந்த சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இன்னமும் அதிக சுமையை நிதியமைச்சர் ஏற்றி வைத்திருக்கிறார். பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. நிதி வேறெங்கோ ஒதுங்கிவிடுவதைத் தவிர, ஒதுக்கப் பட்ட நிதி குறிப்பிட்ட காரியத்திற்காகத் திறமையாகப் பயன்படுத்தப் பட்டது, இன்னின்ன வேலைகள் திட்டமிடப்பட்டு, இன்னின்ன கால வரையறைக்குள் முடிக்கப் பட்டது என்பது இந்த தேசத்தில் நடந்ததே இல்லை.

அப்புறம் எதற்காக வருடம் தவறாமல் இந்த வெட்டி வேலை ? பட்ஜெட் என்பதே பள்ளத்தை மேலும் படு பள்ளமாக ஆக்குவதற்காகத்  தானா? 



திட்டமிடுவதிலிருந்து, நிறைவேற்றி, அதைக் கண்காணித்து அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயார் செய்வதற்கு துப்பில்லாத இந்த நிதி நிலை அறிக்கை எதற்காக? யாருக்காக?


கொடுக்கிற மாதிரிக்கொடுத்து, இருப்பதையும் எடுத்துக் கொள்கிற பட்ஜெட்!    படத்துக்கு நன்றி பிசினஸ் லைன்

பட்ஜெட் குறித்த உங்களது கருத்தை இங்கே பதிவு செய்யுங்களேன்! 





 

ஆண்டுக்கு ஆண்டு, பிப்ரவரி வந்தால்....அவஸ்தையும் கூட வருமோ?

 
இப்படியெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னுரிமை கொடுத்து, திட்டமிட்டு வேலை செய்வார்கள் என்று இன்னமுமா நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்?


என்ன எழுதுகிறோம், எத்தனை பேருக்குப் பயன்படும் வகையில் எழுதுகிறோம், குறைந்தபட்சமாக, எழுதுகிற நமக்கே ஒரு தெளிவைத் தருவதாக எத்தனை பதிவுகளைச் சொல்ல முடியும் என்பதை அளவிட்டுப்  பார்த்தால், எழுதும்போது ஆரம்பிக்கிற உற்சாகம் எல்லாம் வைகையில் வெள்ளம் வந்த கதையாக உடனேயே வடிந்தும் போய்  விடும்.




"மலை மேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயும் முன்னே வந்த வெள்ளம் போனது ராஜா!"

என்று  சிறுகூடற்பட்டியில் பிறந்த எங்கள் கவிஞன் கண்ணதாசன்  அழகாகச் சொன்னாரே!
அந்த மாதிரி!

"
சேத்த பணத்தை சிக்கனமா,செலவு செய்ய பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு செல்லக்கண்ணு
அவங்க..ஆறை..நூறு..ஆக்குவாங்க ..சின்னக்கண்ணு
"

மருதகாசியின் இந்தப்பாடலை
ஒரு பதிவில் எடுத்துச் சொன்னது கூட, வால்பையன் நினைக்கிற மாதிரி இடைச்செருகல் இல்லை, பொருளாதாரத்தின் ஒரு அடிப்படை அம்சத்தைச் சொல்வதற்காகத் தான்!

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, உற்பத்தியும், சேமிப்புமே தீர்மானிப்பவைகளாக இருந்த ஆரம்பகாலப் பொருளாதாரம், எப்படிக் கடன், கடனை அடைக்க இன்னொரு  கடன், அதற்கு வட்டி கட்ட இன்னொரு கடன், இப்படியே போய்க் கடைசியில் தவணை கேட்பது, நாணயம் தவறுவது, திவாலாகி விட்டது என்பதைக் கூட ஒப்புக் கொள்ள முடியாமல், "துபாய் உலகத்தின் கடனுக்கு அரசு எந்தவிதத்திலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது, அது கடன் கொடுத்தவர்கள் பொறுப்பு!" என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற அளவுக்கு மட்டுமே துபாய் கடன் நெருக்கடி இருக்கிறது!

இதைச் சொல்லும் போதே, இதைவிட விபரீதமான பயங்கரம் அமெரிக்கப் பொருளாதாரத்தில்  இருக்கிறது, எப்படி இதில் நாமும் விரும்பியோ விரும்பாமலோ சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவுகளில் சொல்லலாம் என்று இந்த முயற்சியை ஆரம்பித்தாயிற்று! புலி வாலைப் பிடித்த நாயர் கதைதான்!

வால்பையன் என்னதான் வந்து
, பின்னூட்டங்களில் தாளித்தாலும், புலி விடாது! அல்லது நான் விடப்போவதில்லை!

சற்றேறக் குறைய நூறே ஆண்டுகள்!

இந்த நூறே ஆண்டுகளில்
, பொருளாதாரம் என்பது வெறும் கருவியாக இருந்தது, கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் பேரழிவைத்தரும் ஆயுதமாகவும் மாறிப்போனது! வரலாறு முக்கியம்! கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு வரலாறு மாதிரி, சிறந்த ஆசிரியன் எவருமில்லை! ஆனால் வரலாறு என்றாலே வால்பையன்கள் முதல் புத்தக விமரிசனம் எழுதுகிற சில வாசகர்கள் வரைக்கும் கசக்கிறது. மானுடம் வெல்லும் கதையை சிலாகித்து  எழுத ஆரம்பித்த ஒருவர்  சாண்டில்யன் கதைகளில் சரித்திரம் இல்லை என்பதைக் கண்டு பிடிக்கிற அளவுக்கு இந்தக் கசப்பு பரவியிருக்கிறது.



இது பொருளாதாரம், வங்கித்துறை, நிதித்துறைகளில் உலகம் முழுவதும் பரவி வருகிற பொருளாதார விஷக் காய்ச்சலைப் பற்றி எழுத ஆரம்பித்த பதிவு ஒன்றின் ஒரு பகுதி, மீள்பதிவாக! 



இது பட்ஜெட் ஜுரம் வருகிற நேரம் அல்லவா? 
 
சால்வை அழகர் பானா சீனா இல்லை!பிரணாப் முகர்ஜி  கொஞ்சம் அனுபவசாலி! சொதப்புவதிலுமே கூட!
காங்கிரஸ்காரர்களால் வேறு என்ன பெரிதாக சாதித்து விட முடியும் என்று இன்னமும் நம்புகிறீர்கள்?


பட்ஜெட் அறிவிக்கிற அன்றைக்கும், அடுத்த ஒரு நாள் மட்டும் இந்தியாவின் நிதியமைச்சர் ஒரு பெட்டிக்குள் என்னத்தையோ கொண்டுவந்து, பாராளுமன்றத்தில் என்னத்தையோ சாதிக்கப் போவதாக அல்லது சோதிக்கப் போவதாகப் பேசிக் கொண்டு இருப்போம் இல்லையா? 


அதன் முன்னோட்டமாக, கொஞ்சம் ஹோம்வொர்க் செய்யவும்  வேண்டும் இல்லையா?



துபாய்! டுபாக்கூர்! பொருளாதாரம்!வட கொரியா!

உலகம் போகும் போக்கை முடிவு செய்யும் காரணங்கள்!

வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!

ஆசைக்கு அளவேதடா அறிவு கெட்ட அப்பா!

புள்ளிராசா வங்கிக்குப் புள்ளி வருமா ?ஒரு புத்தக விமரிசனம்!


இந்தப் பதிவுகளில் கொஞ்சம் அடிப்படைகள் சொல்லப் பட்டிருக்கின்றன! ஒரு எட்டு, படித்து விட்டு வந்தீர்கள் என்றால், நடுவில் வேறு பக்கம் கவனம் திரும்பிப் போனதில் இருந்து, மறுபடி கொஞ்சம் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

அப்புறம் ஒரு சிந்தனை, சின்னக் கேள்வியாக!

இது பட்ஜெட் நேரம்! தேவையே இல்லாத ஒரு சாங்கியம்! ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் தேர்தல் என்ற மாதிரி, இந்த சாங்கியத்தைக் கூட ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் என்று ஆக்கிவிட்டால், பட்ஜெட்டைக் காரணம் காட்டி விலையை ஏற்றுகிற கொடுமையில் இருந்து கொஞ்சமாவது தப்பிக்கலாமே?

பட்ஜெட்! ஆண்டுக்கொரு தரம் என்ற இந்த சாங்கியத்தால், இது வரை நாம் சாதித்தது என்ன?

கொஞ்சம் என்ன நினைக்கிறீர்கள், எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்  என்பதைப் பின்னூட்டமாக எழுதுங்களேன்!

நானும் தெரிந்துகொள்கிறேனே!



current update பிற்பகல் 12.40 நிலவரம்

வருமான வரியில் கொஞ்சம் சலுகைகளை அறிவித்து, மிக ஜனரஞ்சகமான பட்ஜெட் வேஷம் களை கட்டியிருக்கிறது. .அடுத்து வரும் தேர்தல்கள், பெருகி வரும் அதிருப்தியை இந்த மாதிரிச் சின்ன  சின்னக் காரட் கொடுத்து சமாளித்து விடலாம் என்ற போக்கு அப்படியே இருக்கிறது. அறிவிக்கப் பட்ட சலுகைகளால், இருபத்தாறாயிரம் கோடி ரூபாய்  வருவாய் குறையுமாம்!

ஊழலை ஒரு சரிபாதி குறைத்தாலே, வரி ஏய்ப்பைத் தடுத்தாலேயே  எந்தவிதமான புதிய வரிவிதிப்புக்குமே அவசியம் இருக்காதே!

வழக்கம் போல, பங்குவர்த்தகச் சந்தைச் சூதாட்டத்தில், நிதியமைச்சரின் தாராளமான பட்ஜெட்டுக்கு ஆதரவாக 350 புள்ளிகள் உயர்ந்து பெரிய  O போடப்பட்டிருக்கிறது.

பூஜ்யத்திற்குத் தான் எத்தனை மரியாதை!