Showing posts with label இதுதாண்டா காங்கிரஸ். Show all posts
Showing posts with label இதுதாண்டா காங்கிரஸ். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் என்றாலே பொய்தானா?

இந்திய ஜனநாயகம் என்னமோ ஒரு அரசியல் சாசனம் வகுத்துத் தந்திருக்கிற, எதுவானாலும் விவாதித்து முடிவு செய்கிற ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம் என்று தவறான கற்பிதத்தில் இருக்கிறீர்களா என்ன? ஆனால் சோனியாவின் வாரிசுகள் ராகுல் காண்டியும் சரி, ப்ரியங்கா வாத்ராவும் சரி, அடுக்கடுக்காகப் பொய்களை அள்ளிவீசுவதுதான் சரியான நடைமுறை என்று நினைத்துக்கொண்டு அரசியல் செய்கிற மாதிரி இருக்கிறது! நடப்பவைகளைக் கவனிக்கிறீர்களா?


உபி போலீஸ் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். கழுத்தைப்பிடித்துத் தள்ளினார்கள் என்று என்று பப்பி ப்ரியங்கா ஒரு புளுகை அவிழ்த்து விட்டதை காங்கிரஸ்காரர்கள் ஒருசிலரே நம்பினார்கள் என்றால் என்ன சொல்ல? பப்பிக்கமைந்த Gaப்பு ராபர்ட் வாத்ரா உடனே பப்பியின் வீரத்தைப் புகழ்ந்து ட்வீட் செய்ய, இப்படி  நடந்த கேணத்தனமான காங்கிரஸ் காமெடியைப் பார்ப்பதற்கு முன்னாலேயே பிரகாஷ் ஜவடேகர் இந்தியாவின் மிகப்பெரிய பொய்யர் பட்டத்தை ராகுல் காண்டிக்கு கொடுத்து விட்.டார். ஆனால் காங்கிரசுக்குள் யார் அதிகமாகப் பொய் சொல்வது, யார் இங்கே கழகங்கள் பாணியில் எழவு வீடு தேடிப்போய் அரசியல் செய்வது என்பதில் பப்பு ராகுலுக்கும் பப்பி ப்ரியங்காவுக்கும் அறிவிக்கப்படாத போட்டி ஒன்று நடந்து கொண்டிருப்பதை, மேலே 7 நிமிட வீடியோவில் சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்!        

  
இது நேற்றுமுன்தினம் காங்கிரசின் 135 வது அனிவெர்சரி கூட்டத்தில் பிரியங்காவை நோக்கிப் பாய்ந்து வருகிறார் ஒருவர். தடுக்க முயலும் பாதுகாப்பு அதிகாரிகளைத் தடுத்துவிட்டு, ப்ரியங்கா அந்தநபருடன் போட்டோவுக்குப் போஸ் கொடுக்கிறார் என்பது முதல்முறையல்ல, பலமுறை அரங்கேற்றப் படும் நிகழ்ச்சிதான். ராகுல் காண்டிக்கு போட்டியாக தானும் இருப்பதை ப்ரியங்கா அவ்வப்போது இந்த மாதிரி ஸ்டண்ட் அடித்துக் காட்டுவதுதான்! சோனியா காண்டி மகனுக்கு மட்டுமே ஆதரவு கொடுக்கிற மாதிரித் தான் தற்போதைய நிலவரம். 


சோனியா வாரிசுகள், முலாயம்சிங் வாரிசு அகிலேஷ், கன்ஷிராம் வாரிசு மாயாவதி, பிஹாரில் லொள்ளு பிரசாத் யாதவ் வாரிசு இவர்களெல்லாம் என்ன மாதிரி அரசியல் செய்கிறார்கள்? சேகர் குப்தா இந்த 22 நிமிட வீடியோவில் கொஞ்சம் சுவாரசியமாக அலசுகிறார். எவரும் ஒரு அர்த்தமுள்ள அரசியலைக் களத்தில் நின்று செய்யவில்லையே என்பது அவருடைய அங்கலாய்ப்பு.


பொய்முகம் காட்டுகிறவர்களுக்குக் களத்தில் இறங்கி அரசியல் செய்யத்தெரியவில்லை என்பது ஆகப்பெரிய பரிதாபம்! தங்களைத்தவிர ஆளப்பிறந்தவர்கள் இங்கே எவருமில்லை என்கிற மிதப்பில் மட்டுமே திரிகிற கூட்டம் காங்கிரஸ் மட்டுமே அல்ல, அதே மாதிரியான மிதப்பு  தான் மாநில அளவில் மட்டுமே துள்ள முடிகிற மாநிலக்கட்சிகளுக்கும் இருக்கிறது.

    
FirstPost தளத்துக்காக மஞ்சுள் வரைந்த இந்த கார்டூன் கள யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருப்பதாக எனக்குப் படுகிறது.

இந்தப்பதிவில் பேசப்பட்ட விஷயங்கள், பகிரப்பட்ட வீடியோக்கள், கார்டூன்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சொல்ல வந்த விஷயம், குழப்பமில்லாமல் சொல்லப்பட்டதா? பதிவை எழுதியவருடன் கருத்து  உடன் படமுடிகிறதா? முடியவில்லையா?

கொஞ்சம் சொல்லுங்களேன்! காத்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.         
      

முதலாளி ராஜினாமா! காங்கிரஸ்காரன் என்ன செய்ய முடியும்?

எவ்வளவு சூடுபட்டாலும் திருந்தாத ஜந்துக்களால் நிரப்பப் பட்டது காங்கிரஸ் என்பதை அவர்கள் எத்தனைதரம் தான் நிரூபித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? காங்கிரசை ஒதுக்கித் தூர எறிய இன்னும் எத்தனை காலம் தான் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

   
இங்கே இந்த நிகழ்ச்சியில் காங்கிரசின் கோபண்ணா கட்சியில் வாங்குகிற காசுக்குத் தகுந்த மாதிரிக் கூவுகிறார். பானு கோம்ஸ் எழுப்பிய இந்தக் கேள்விக்காவது நேரடியான பதில் இருந்ததா என்பதைக் கொஞ்சம் பாருங்கள்.  வெறும் 24 நிமிடம்தான்! இந்த விவாதத்தைக் கூட, ராகுல் காண்டி ராஜினாமா நாடகத்தை தமிழக ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன என்று ஒரு சாம்பிளாக மட்டுமே இங்கே தருகிறேன். தந்திடிவியின் பார்வை என்ன?  49 நிமிடம்தான்! காங்கிரசை ஒரு கட்சியாக ஒருங்கிணைக்கிற சக்தியாக (unifying force) இந்திரா வாரிசுகளே இருக்கிறார்கள் என்று ரவீந்திரன் துரைசாமி  ஆரம்பிப்பதெல்லாம்  சரிதான்! இன்னும் சிலமாதங்களில்  ராகுல் காண்டி திரும்பவும் வருவார் என்று சொல்வதும் கூட அதான் எல்லோருக்கும் தெரியுமே என்கிற ரீதியிலானதுதான்! நான்குபக்கங்களில் உணர்ச்சிப் பிழம்பாக ராகுல் காண்டி எழுதிய வசனம்  என்னுடலில் உயிருள்ள ஒவ்வொரு அணுவும் இந்தியா குறித்த பிஜேபியின் கருத்தை எதிர்க்கிறது யார் கண்ணிலும் படவில்லையா அல்லது பொருட்படுத்தவேண்டிய அளவுக்குப் பெரியவிஷயம் இல்லையா என்பது எந்தக்காங்கிரஸ்காரனுக்கும் தெரியாது! ஊடக விவாதங்களில் பங்கேற்கிறவர்களுக்கும் தெரியாது!  


திமுகவில் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு அறிவிக்கப்பட்டிருப்பது மட்டும்தான் இங்கே முக்கிய செய்தி. அதுவுமில்லையானால் பிக் பாஸ் வீட்டில் மகளைக் கடத்தி வந்த புகாரில்  வனிதா கைது செய்யப்பட்டாரா? சமரசம் ஏற்பட்டுவிட்டதா என்கிற அதிமுக்கியமான அலசல் இருக்கவே இருக்கிறது. 


ராஜினாமா நாடகம் எப்படிவேண்டுமானாலும் போகட்டும்! சோனியா உடல்நிலை பரிசோதனை செய்துகொள்வதற்காக மகனுடன் அமெரிக்கா புறப்பாடு! மகள் ஏற்கெனெவே வெளி நாட்டில் தான் இருப்பதாக இந்த செய்தி சொல்கிறது, காரிய கமிட்டி கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதை ரிமோட் கன்ட்ரோலிலேயே செய்யமுடியும் என்கிறபோது, முதலாளிகள் எங்கே இருந்தால்தான் என்ன?   


மக்களவையில் இந்தியாவில் பாசிசத்தின் 7 ஆரம்ப அறிகுறிகள் என்று தன்னுடைய முதல்பேச்சை ஆரம்பித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, அந்தப் பேச்சு, டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு செய்திக்கட்டுரையில்  இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற நக்கல்கள் கேலி அதிகமானதற்குப் பொங்குகிறார். இத்தனை ஆவேசப்பட இதில் எதுவுமே இல்லை என்றாலும், பொங்கவில்லை என்றால் எப்படி மம்தா பானெர்ஜி பாணியில் அரசியல் செய்ய முடியும்? அங்கே மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜி cut money  (அன்பளிப்பு, மொய், லஞ்சம்) வாங்கியதை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னதே பெரிய  பிரச்சினையாகிக் கொண்டிருப்பதில் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதில் தன்னுடைய கட்சி எம்பிக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டா இருக்க முடியும்?


நாளை 5ஆம் தேதி மத்திய அரசின்  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட  இருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்று பொருளாதாரம் புரிந்து, புரியும்படி சொல்கிறார் சோம வள்ளியப்பன். 10 நிமிடம் தான். பார்க்க வேண்டிய வீடியோவாகப் பரிந்துரைக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
            

நரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்!

Amethi Election Results 2019 Live Updates: Smriti Irani Leads Over Rahul Gandhi by 19000 Votes at 4:24 PM என்கிறது CNN News 18 அனேகமாக நேரு பரம்பரையின் மப்பைக் குறைக்கிற தேர்தலாக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் இருக்கலாம். இருக்கவேண்டுமென்பதே என்னுடைய பிரார்த்தனை.  


வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டுகிற முன்னோட்டமாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமையவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்று எழுதும் போதே என் அபிமான கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா இப்படிக் கலகக் குரல் எழுப்புகிறார்.

Looks like five more years of Achche Din for cartoonists! 😁  
அடுத்த 2 மணிநேரத்தில் இவர் இப்படியும் படம் வரைந்தார். 


PGurus தளத்தில் அக்ஷய் சந்தர் எதிர்க்கட்சிகளுடைய EVM பூச்சாண்டியை நக்கலாக இப்படி வரைந்திருந்தார். அருமை!


சதீஷ் ஆசார்யா போன்ற கார்டூனிஸ்டுகளுக்கு சண்டியர்த் தனம் செய்கிற காங்கிரஸ், மம்தா, இடதுசாரிகள் பற்றி ஒரு கவலையும் இல்லை. நினைப்பெல்லாம் நரேந்திர மோடியின்  56 இன்ச் மார்பு மீதுமட்டும் தான் என்றால் என்ன சொல்வது? என்ன செய்வதாம்?


முகநூலில் பிஜேபியின் K T ராகவன் EVM என்றால் என்ன என்பதாக ஒரு கார்டூனைப் பகிர்ந்திருந்தார். வரைந்தவர் பெயர் சரியாகப் புலப்படவில்லை. மோர்காரியாவா...?? 
  

  • a SOLID SLAP on my face ..as More ABUSE..TROLL..and HUMILIATION come my way..I WILL STAND MY GROUND ..My RESOLVE to FIGHT for SECULAR INDIA will continue..A TOUGH JOURNEY AHEAD HAS JUST BEGUN ..THANK YOU EVERYONE WHO WERE WITH ME IN THIS JOURNEY. .... JAI HIND
    1:24 PM · May 23, 2019 · Twitter for iPhone  

    நடிகர் பிரகாஷ் ராஜுக்கு  செம அடிவிழுந்தது என்ற சொரணையாவது இருக்கிறதென்பது புரிகிறது. ஆனால் மய்யம் கமல் காசருக்கு அதெல்லாம் இருக்குமா என்பது ஒரு 9ரூபாய் நோட்டு மாதிரியான கேள்வி. 

    சுமந்த் சி ராமன் பொதிகையில் Sports Quiz நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இருந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்! அரசியல் விமரிசகர் ஆனது கூடத் தவறில்லை! வட இந்திய அரசியலைக் கரைத்துக் குடித்த பண்டிதர்போல உபி, மே.வங்க வாக்காளர் மனநிலையை கணிக்கமுயன்று கோமாளிப்பட்டம் வாங்கிக் கொண்டிருக்க வேண்டாம்!

    பிம்பிலிக்கு பியாப்பி....!!!   

    இந்த மேதாவி பேசிய காணொளி ஒன்றைப் பதிவில் போட்டு விட்டு எங்கள் ஸ்ரீராம் வந்து சுமந்த் ரொம்ப நீ .......ளமாகப் பேசுகிறார் என்று கமெண்டியிருந்தார்! இங்கே இயக்குனர் ராம் கோபால் வர்மா தெலுகு தேசக் கட்சிக்கு முடிவுரையே எழுதிவிட்டார். சந்திரபாபு நாயுடு ஊரறிந்த பிசாசு என்பதனாலேயே ஜெகன் மோகன் ரெட்டி தேவதையாகி விட மாட்டார்! மேலதிக விவரங்களுக்கு யாத்ரா திரைப்பட விமரிசனம் பார்க்கவும்.    


  • Name: TDP Born : 29th March 1982 Died : 23rd May 2019 Causes of death : Lies , Back Stabbings , Corruption , Incompetence , Y S Jagan and Nara Lokesh
    11:10 AM · May 23, 2019 · Twitter for iPhone   


    நடப்புச் செய்திகள் என்னவென்று ஒரு ரவுண்ட் வந்தாயிற்று.
    மீண்டும் சந்திப்போம்.