மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் என்றாலே பொய்தானா?

இந்திய ஜனநாயகம் என்னமோ ஒரு அரசியல் சாசனம் வகுத்துத் தந்திருக்கிற, எதுவானாலும் விவாதித்து முடிவு செய்கிற ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம் என்று தவறான கற்பிதத்தில் இருக்கிறீர்களா என்ன? ஆனால் சோனியாவின் வாரிசுகள் ராகுல் காண்டியும் சரி, ப்ரியங்கா வாத்ராவும் சரி, அடுக்கடுக்காகப் பொய்களை அள்ளிவீசுவதுதான் சரியான நடைமுறை என்று நினைத்துக்கொண்டு அரசியல் செய்கிற மாதிரி இருக்கிறது! நடப்பவைகளைக் கவனிக்கிறீர்களா?


உபி போலீஸ் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். கழுத்தைப்பிடித்துத் தள்ளினார்கள் என்று என்று பப்பி ப்ரியங்கா ஒரு புளுகை அவிழ்த்து விட்டதை காங்கிரஸ்காரர்கள் ஒருசிலரே நம்பினார்கள் என்றால் என்ன சொல்ல? பப்பிக்கமைந்த Gaப்பு ராபர்ட் வாத்ரா உடனே பப்பியின் வீரத்தைப் புகழ்ந்து ட்வீட் செய்ய, இப்படி  நடந்த கேணத்தனமான காங்கிரஸ் காமெடியைப் பார்ப்பதற்கு முன்னாலேயே பிரகாஷ் ஜவடேகர் இந்தியாவின் மிகப்பெரிய பொய்யர் பட்டத்தை ராகுல் காண்டிக்கு கொடுத்து விட்.டார். ஆனால் காங்கிரசுக்குள் யார் அதிகமாகப் பொய் சொல்வது, யார் இங்கே கழகங்கள் பாணியில் எழவு வீடு தேடிப்போய் அரசியல் செய்வது என்பதில் பப்பு ராகுலுக்கும் பப்பி ப்ரியங்காவுக்கும் அறிவிக்கப்படாத போட்டி ஒன்று நடந்து கொண்டிருப்பதை, மேலே 7 நிமிட வீடியோவில் சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்!        

  
இது நேற்றுமுன்தினம் காங்கிரசின் 135 வது அனிவெர்சரி கூட்டத்தில் பிரியங்காவை நோக்கிப் பாய்ந்து வருகிறார் ஒருவர். தடுக்க முயலும் பாதுகாப்பு அதிகாரிகளைத் தடுத்துவிட்டு, ப்ரியங்கா அந்தநபருடன் போட்டோவுக்குப் போஸ் கொடுக்கிறார் என்பது முதல்முறையல்ல, பலமுறை அரங்கேற்றப் படும் நிகழ்ச்சிதான். ராகுல் காண்டிக்கு போட்டியாக தானும் இருப்பதை ப்ரியங்கா அவ்வப்போது இந்த மாதிரி ஸ்டண்ட் அடித்துக் காட்டுவதுதான்! சோனியா காண்டி மகனுக்கு மட்டுமே ஆதரவு கொடுக்கிற மாதிரித் தான் தற்போதைய நிலவரம். 


சோனியா வாரிசுகள், முலாயம்சிங் வாரிசு அகிலேஷ், கன்ஷிராம் வாரிசு மாயாவதி, பிஹாரில் லொள்ளு பிரசாத் யாதவ் வாரிசு இவர்களெல்லாம் என்ன மாதிரி அரசியல் செய்கிறார்கள்? சேகர் குப்தா இந்த 22 நிமிட வீடியோவில் கொஞ்சம் சுவாரசியமாக அலசுகிறார். எவரும் ஒரு அர்த்தமுள்ள அரசியலைக் களத்தில் நின்று செய்யவில்லையே என்பது அவருடைய அங்கலாய்ப்பு.


பொய்முகம் காட்டுகிறவர்களுக்குக் களத்தில் இறங்கி அரசியல் செய்யத்தெரியவில்லை என்பது ஆகப்பெரிய பரிதாபம்! தங்களைத்தவிர ஆளப்பிறந்தவர்கள் இங்கே எவருமில்லை என்கிற மிதப்பில் மட்டுமே திரிகிற கூட்டம் காங்கிரஸ் மட்டுமே அல்ல, அதே மாதிரியான மிதப்பு  தான் மாநில அளவில் மட்டுமே துள்ள முடிகிற மாநிலக்கட்சிகளுக்கும் இருக்கிறது.

    
FirstPost தளத்துக்காக மஞ்சுள் வரைந்த இந்த கார்டூன் கள யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருப்பதாக எனக்குப் படுகிறது.

இந்தப்பதிவில் பேசப்பட்ட விஷயங்கள், பகிரப்பட்ட வீடியோக்கள், கார்டூன்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சொல்ல வந்த விஷயம், குழப்பமில்லாமல் சொல்லப்பட்டதா? பதிவை எழுதியவருடன் கருத்து  உடன் படமுடிகிறதா? முடியவில்லையா?

கொஞ்சம் சொல்லுங்களேன்! காத்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.         
      

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!