"in a healthy democratic and political environment, dissent is a necessary component." என்று சட்டப்பல்கலைக் கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகச் சொல்லியிருப்பதை, பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்கள் அரசியல் சாசனத்தின் முகவுரையைப் படிக்க ஆரம்பித்திருக்கிற செய்தியை என்னமாதிரி எடுத்துக் கொள்வது?
சதீஷ் ஆசார்யா மாதிரிக் கார்டூனிஸ்ட் கிறுக்கர்கள் பார்வையில் வன்முறையில் இறங்கினாலும் மாணவர்களைப் போற்றிப்பாடடி பொண்ணே கதை தான் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதே இல்லை. எந்த ஒரு சமூகத்திலும் உரிமைகளைப் பேசுவதற்கு முன்னால், சில கடமைகள், பொறுப்பு இவைகளைப் பூர்த்தி செய்தாக வேண்டும். பொறுப்பற்ற போராட்டங்கள், வன்முறைகள், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பதெல்லாம் என்ன மாதிரியான dissent? மாற்றுக் கருத்து, எதிர்ப்புக் குரல் இருக்க வேண்டியதுதான்! அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய லைசன்ஸ் கொடுக்கப் பட்டிருப்பதாக எடுத்துக் கொள்ள முடியுமா? ON the Rule of the Road என்ற கட்டுரையில் A G Gardiner சொல்லி இருப்பதை இந்தப்பக்கங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக்காட்டியிருக்கிறேன். In "On the Rule Of the Road" by A. G. Gardiner, says liberty is not a personal affair only, but a social contract. கட்டற்ற சுதந்திரம் என்பதே கவைக்குதவாத வெறும் பேச்சு. அதுவும் போக மாற்றுக்கருத்து, எதிர்ப்புக் குரல்கள் கண்ணியமான வழிகளில் தான் வருகிறதா? இல்லை என்றால் அந்த எதிர்ப்புக்குரல், மாற்றுக்கருத்துக்கு மரியாதை ஏது?
சேகர் குப்தா காமெடிகளைப் பார்த்து நாட்கள் ஆகி விட்டது இல்லையா? பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகளோடு கொஞ்சம் ராகுல் காண்டியை ஒப்பிட்டு, தலைவராக வெற்றியா? தோல்வியா? என்று ஆராய்ந்து பார்க்கிறார். காஷ்மீரில் ராணுவத்தின் மீது கல்லெறிந்து விட்டு ஓடிப்போகிற விடலைகள் மாதிரி ட்வீட்டரில் மட்டுமே பெரும்பாலான தருணங்களில் அரசியல் நடத்துகிற ஒரு விடலை ராகுல் காண்டி! அவ்வளவுதான்! கட்சித்தலைவர் பொறுப்பைத் தட்டிக் கழித்து ஓடிப் போனவரை சோனியா வேண்டுமானால் மீண்டும் கட்சித் தலைவராக்கிப்பார்க்க ஆசைப்படலாம். ஆனால் தேசம் இந்தக் கோமாளியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறதா என்ன!? வீடியோ 15 நிமிடம்.
ஜாவேத் அக்தர்! ஹிந்தித் திரைப்படங்களில் பாட்டு எழுதுகிறவர்! ட்வீட்டரில் சட்டம் போதிக்கிறார். சும்மா விட்டுவிடுவார்களா என்ன? ஒரு ஐபிஎஸ் அதிகாரி எதிர்க் கேள்வி ஒன்றை எழுப்புகிறார்.
இதைப் பதிவிடுகிறவரை ஜாவேத் அக்தரிடமிருந்து, ஆதரவாளர்களிடமிருந்து பதில் எதையும் காணோம்! இன்றைக்கு இதே ரீதியில் உச்சநீதிமன்றத்தில் இந்திரா ஜெயசிங் என்ற வழக்கறிஞர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் சார்பில் வாதாடிக் கொண்டு இருக்கிறார். நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இன்றைக்கு இசுடாலின் காமெடி என்னவென்பதைப் பார்க்காமல் பதிவை முடிப்பதா? Never!
மதன் ரவிச்சந்திரன் ட்வீட்டரில் லந்து அடிக்கிறார்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!