சண்டேன்னா மூணு! #அரசியல் ராகுல் காண்டி! டாக்டர் சுவாமி! உ.நிதி!

ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பிரசாரங்களிலும் சரி, அகில இந்திய அரசியலிலும் சரி, மறுபடி ராகுல் காண்டியை  முன்னிறுத்துகிற விதமாக சோனியா முனைந்திருப்பது, தெரிகிறதா? ஆயிரம் தான் பிரியங்காவும் ஊட்டுக்கார் வாத்ராவும் காங்கிரசைக் கைப்பற்ற விரும்பினாலும், சோனியாவின் சாய்ஸ் பப்புதான் என்பது பல சந்தர்ப்பங்களிலும் நிரூபிக்கப் பட்டிருப்பது போலவே இப்போதும் கூட நடந்து வருவதை டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைத் தவிர வேறு யார் இத்தனை தெளிவாகச் சொல்லி விட முடியும்? சொல்லுங்கள் பார்க்கலாம்!


கடந்த சிலநாட்களாகவே ராகுல் காண்டியின் உளறல் அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. ராகுல் காண்டி பேசுவதற்கெல்லாம் என்ன மரியாதை கிடைக்கும்?  இந்த 9 நிமிட வீடியோவில் டாக்டர் சுவாமி நறுக்குத் தெறித்தாற்போல பதில் சொல்கிறார். மணிக் கணக்கில் காங்கிரஸ்காரர்கள் பேசுவதற்கெல்லாம் விடை இங்கேயே கிடைத்துவிடுகிறதோ? பாருங்களேன்!


காங்கிரஸ்காரர்களுடைய யோக்கியதை என்ன? திரும்பிப் பார்ப்பதற்கு உதவியாக சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் துக்ளக் ஆண்டுவிழாவில் ஆசிரியர் சோ பேசியது கிடைக்கிறதே! வீடியோ 48 நிமிடம் முதல் பத்து நிமிடங்களிலேயே சோ உங்களுக்குச் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுகிறாரே! இது என்ன அதிசயம்!


டாக்டர் ஜாகிர்  ஹுசைன் என்று ஒரு ஜனாதிபதி இருந்தாரே, நினைவிருக்கிறதா? காங்கிரஸ் கட்சியில் இருந்த கல்வியாளர். பீகார் கவர்னர்   துணை ஜனாதிபதி அப்புறம் ஜனாதிபதி என்றானாலும் அமைதியாக, இஸ்லாமிய மக்களுடைய கல்வியில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வந்தவர். தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று 1920 இல் உத்தரப் பிரதேசத்தில் ஆரம்பித்து 1925 வாக்கிலேயே டில்லிக்கு இடம் பெயர்ந்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா என்ற பெயருடன் வளர்ந்த பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில் டாக்டர் ஜாகிர்  ஹுசைன் பங்கு மகத்தானது. ஆனால் அங்கேயும் அரசியல் புகுந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஆட்டுவிக்கிறது. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் ஆரம்பித்த போராட்டத்தில் வன்முறையும் இருந்தது போலவே போலீஸ் தடியடிப் பிரயோகமும் நடந்தது. 


பல்கலைக்கழக நிர்வாகம் வெகு அசாதாரணமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. சென்ற   வெள்ளிக் கிழமை நடந்த வன்முறைக்கும்                JMIயில் பயிலும்  மாணவர்களுக்கும் சம்பந்தமில்லை. சுற்று வட்டாரத்தில் இருந்து வந்த அந்நியர்கள்தான் வன்முறை  நடத்தியது என்கிறார்கள்! மத்திய அரசின் நிதியுதவியோடு நடக்கிற JMI, JNU மாதிரியான பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அரசியலுக்கு இழுத்து கலவரங்கள்உ , போராட்டங்கள் நடத்தி வருவதன் பின்னணியில் யார்யார் இருக்கிறார்கள் என்பதை இந்தப்பக்கங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். 

குறுகிய ஆதாயங்களுக்காக இங்கே அரசியல்வாதிகள் என்னென்ன செப்படி வித்தைகள் காட்டுவார்கள், கலகத்தைத் தூண்டுவார்கள் என்பது தெரிந்த விஷயம் தான்! பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடுகிற வேலையை மம்தா பானெர்ஜி,ராகுல் காண்டி முதற்கொண்டு இன்றைக்கு அரசியலுக்கு வந்திருக்கிற உ''னாநிதி வரை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள், நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கத்தான் வேண்டுமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.            

2 comments:

 1. இத்தலம் நிகழ்வுகளால் மனம் மிகவும் சோர்வடைகின்றது....

  எதாவது சொல்ல வேண்டும்.. ஆனால்
  சொல்வதற்கில்லை..

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு இருள்சூழ்ந்த தருணத்துக்குப்பின்னாலும் பெருவெளிச்சம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன் சோர்வு கொள்ளாமல் இருக்கவேண்டிய நேரம் இது துரை செல்வராஜூ சார்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!