திரும்பத் திரும்ப சுற்றி வருவது ஒரே விஷயம் தான்!

பிஜேபிக்கு எதிரான போராட்டக்களமாக குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. ஒரு ஜனநாயகப்பூர்வமான உரையாடலை நாடாளு மன்றத்திலோ வெளியிலோ நடத்தத் திராணியில்லாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இந்த விஷயம் நல்லவாய்ப்பாகக் கிடைத்துவிட்டது என்பதற்கு மேல் உப்புப்பெறாத விஷயம் இது.


கமல் காசர் திமுகவோடு கைகோர்த்திருப்பது தான் இந்த 45 நிமிட விவாதத்தின் பேசுபொருள். ஏதோ ஒன்றை புதிதாக மிக்ஸ் செய்கிற பாவனையில் தான்   சேனல்கள் தங்களுடைய அஜெண்டா, பிழைப்பை ஓட்டியாகவேண்டியிருக்கிறது. எனக்கு கமல் காசர் மாதிரி திடீர் சுயம்புகள் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லையென்றாலும் இந்த விவாதத்தைக் கவனித்ததற்கு முக்கியமான காரணம் நெறியாளர் தம்பி தமிழரசன் பங்கேற்பாளர்களிடம் கேள்வியைக் கேட்டுவிட்டு இடையே குறுக்கிடாமல் பதிலைப் பெற்ற விதம் ஒன்று! இசுடாலினுடைய போதாத காலம், கமல் காசரை எல்லாம் வலியப்போய்க் கூப்பிட்டு கைகோர்க்க வேண்டியிருக்கிறதே என்பது மற்றொன்று. இந்த மாதிரி ஏதோ ஒரு சாக்கில் ஒருவருக்கு ஒருவர் முதுகு சொறிந்துகொள்கிற தந்திரம் எல்லாம் அரதப்பழசு! வேண்டுமானால் united front tactics, George Dimitrov என்று தேடிப்பாருங்கள். கற்றுக் கொடுத்த கம்யூனிஸ்டுகள் என்ன நிலையில் இன்றைக்கு இருக்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! 

        
   
குடியுரிமை பற்றி காங்கிரசின் நிலைபாடு நேற்றைய நாட்களில் என்னவாக இருந்தது, இன்றைக்கு எதற்காக எதிர்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விசேஷமான அரசியல் ஞானம் எல்லாம் வேண்டியதே இல்லை. இந்த 10 நிமிட வீடியோவைப் பார்த்தாலே போதும். சிறுமதி படைத்தவர்களுக்கு கலகம் செய்வதற்கு ஏதோ காரணம் கிடைத்தால் போதாதா?


வரலாற்றுப் புத்தகங்கள் எழுதிக் கிடைக்காத புகழ் வெளிச்சம் ராமச்சந்திர குகாவுக்கு நேற்று 144 தடையை மீறிப் பரப்புரை செய்ய முயன்றதில் கிடைத்திருப்பது ஒரு வினோதம் என்றால் இந்த மேதாவிக்கு எங்கேயும் எதிலும் நரேந்திரமோடியும் அமித் ஷாவும் தோன்றிப் பயமுறுத்திக் கொண்டிருப்பது போலப் பீலா விட்டுக் கொண்டிருப்பது இன்னொரு வினோதம்! உசுப்பிவிடுவது ராஜ்தீப் சர்தேசாய் என்பதில் வினோதம் எதுவுமில்லை. கொல்கொத்தா டெலிகிராப் பத்திரிகையில் எழுதிக் கிழிப்பதற்கு குகாவுக்கு ஒரு விஷயம் கிடைத்து விட்டது.

   
இசுடாலின் ஒரு போராட்டத்தை சும்மாவா அறிவிப்பு செய்திருக்கிறார்? மாரிதாஸ் கொஞ்சம் விவரங்கள் சொல்கிறார். வீடியோ 18 நிமிடம்.

மீண்டும் சந்திப்போம்.      
     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!