ஒருவழியாக தமிழக பிஜேபிக்குள் இருந்த முரண் பாடுகள் வெளியே வெடித்ததில் பாரிவேந்தர் நடத்தும் பல்கலைக்கழகத்தில் டய மண்டுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குவதாக இருந்த நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப் பட்டிருக்கிறது. தமிழக பாஜக நிர்வாகிகளில் எவருக்கும் இல்லாத சொரணை, கீழ்மட்டத் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பாக வெளிப்பட்டதில் ராஜ் நாத்சிங் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். ஆக தனக்கான தேசிய அங்கீகாரத்துக்காக காய்களை நகர்த்திவந்த வைரமுத்து மூக்குடைபட்டு நின்றதுதான் மிச்சம்.
#MeToo விவகாரத்தில் வைரமுத்து மீது பாலியல்சீண்டல் புகாரை வெளிப்படையாகச் சொன்ன பாடகி சின்மயி ட்வீட்டரில், தன்னுடைய எதிர்ப்பை மறுபடி ஆரம்பித்து விட்டார் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. வைரமுத்து தனக்கிருந்த செல்வாக்கை வைத்து தன் மீது எழுப்பப்பட்ட புகாரை ஒன்றுமில்லாமல் செய்து விட்ட கோபம் இப்படி வெளிப்படுவது இயல்புதான். வீடியோ 59 நிமிடம். மதன் ரவிச்சந்திரன் கலக்குகிறார்.
வேறொருவர் கையால் டாக்டர் பட்டம் பெறுவதில் டய மண்டுவுக்கு விருப்பமில்லை என்பதாக ஒரு செய்தி இருக்கிறது. கிஷோர் கே சுவாமி ஒரு ட்வீட்டர் செய்தியில் கேட்ட மாதிரி இந்தச் செய்தியை வைத்து எந்தவொரு சேனலும் விவாதம், நிகழ்ச்சியை நடத்த முன்வரவில்லை இப்படி ஒரு தலைகுனிவு டயமண்டுக்கு ஏற்பட்டது என்ற செய்தியைக் கண்டு கொள்ளவில்லை.
பிபின் ராவத் சொன்னதில் எந்தத்தவறுமே இல்லை. ராணுவத்தளபதியாக கருத்துச் சொல்லக்கூடாதா? இந்த மாதிரியான விவாதமே மிக மிக அனாவசியம். விஷமத்தனமான உள்நோக்கம் கொண்ட விவாதம் 50 நிமிடம். புதிய தறுதலைகளாக இத்தகைய ஊடகங்கள் சேனல்களில் உருவாகிவருகிற நபர்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருக்கவேண்டியது அவசியம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!