தந்தி டிவி சலீம்! அப்பச்சியிடம் பேட்டி எடுக்கிறார்!

ப. சிதம்பரத்துக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் தந்தி டிவிக்கு வந்திருக்கிறது என்பதை எப்படிப் பார்ப்பது? தன்னுடைய முட்டுகொடுக்கிற வேலையில்   தந்திடிவி சலீம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்? பானாசீனா நோகாமல் நெளியாமல் வெற்றிலைசுருளை மெல்வதுபோல வாசாலகமாகப் பேசக் கூடியவர் என்பது தெரிந்துமே கூட சரியான ஹோம் ஒர்க் செய்யாமல் சலீம் பேட்டி காண்கிறார்.


வீடியோ 40 நிமிடம்.  செட்டியாரிடம் நோண்டி நோண்டிக்  கேள்வி கேட்கக்கூடாது என்று சலீமுக்கு நெருக்கடி வந்திருக்கலாம். பூப்பூவென்று அப்பச்சி ஊதித்தள்ளி விட்டு பேட்டியை முடித்து விடுகிறார்.

சலீமைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.        

10 comments:

  1. காசுக்கு பேட்டி; கடமைக்கு பேட்டி!

    ReplyDelete
    Replies
    1. காசுக்குப் பேட்டி வரை சரி, ஸ்ரீராம்! அதென்ன கடமைக்குப் பேட்டி?

      Delete
    2. பேட்டி எடுப்பவர் அலுவலகத் தலைமைக்கு கட்டுப்பட்டு, தன் கருத்துகளை ஒதுக்கி, கடமையைச் செய்வது!

      Delete
    3. அதற்கு வேறென்னமோ மெட்றாஸ் தமிழில் சொல்வார்களே ஸ்ரீராம்!

      Delete
  2. Sir, I dont remember much ... but if i am right he was the Finance minister and also internal affairs ... but now he talks about prison reforms ... was he not aware of those things he listed and can not be corrected... he talks about exercise and complains that there is no park in chennai .... what he did for that .... i could not go beyond few minutes ... as you said this is namesake interview...

    ReplyDelete
    Replies
    1. இதுதான் சிதம்பர மாயை. அவர்கள் ஆளும்போது இதெல்லாம் தேவைகளாய் இருப்பதில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமரும்போது மட்டும் ஜெயில் சீர்திருத்தங்கள் என்று ஆரம்பிப்பார். பேட்டியை கவனித்தால் கேள்விக்கும் பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா?

      Delete
    2. Sir,
      Sorry to reply in english.. is it possible to have some widget to transliterate what we type in english to tamil .. i have seen this in giri's blog http://www.giriblog.com/

      i am seeing these type of videos only in your blog thanks for the effort .. this interview looks some PRO campaign ... he should have been interviewed by Cauvery news Madan.. but that is why that boy was thrown out of that channel it seems... i remember hearing somwhere ... that a guy on behalf of people climbs tree to fetch honey will lick the back hand ... but it is the duty of people to ensure that he doesnt like the front palm .. PC as he is called was once pride of tamil people... we used to be very happy to see him in DD news and tease the hindi news readers who will pronounce his name has cheethaaambaaraaam... with all his intellect and power vested to him by the god he could have done wonders to the people ... should have taken inspiration from kamraj or at least from MGR ...

      Delete
    3. தமிழில் உள்ளீடு செய்ய நிறைய வசதிகள் கிடைக்கின்றன. நான் பயன்படுத்துவது google indic tamil

      பானாசீனாக்களுக்கு காசு செலவழிக்காமலேயே யாரை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது நன்றாகவே தெரியும்.

      மதன் ரவிச்சந்திரனை திராவிட ஊடகங்கள் கொடுத்த அழுத்தத்தில் காவேரி நியூசிலிருந்தும் விரட்டிவிட்டார்கள். இப்போது அவர் Win News சேனலில் அமர்க்களமாக நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்

      Delete
  3. Strange. He was No.2 cabinet minister, next to Prime Minister, for 10 long years. Still he says that "reforms are to be done in Jail administrations". All looks superficial

    ReplyDelete
    Replies
    1. சிதம்பரத்துக்கு இருக்கும் மேட்டிமைத்தனம் தான் அவருக்கே குழிபறித்துக் கீழே தள்ளிக் கொண்டிருக்கிறது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!