குடியுரிமைச் சட்டத்திருத்தம், NRC, NPR இந்த மூன்று விஷயங்களையும் போட்டுக் குழப்பி எதிர்க்கட்சிகள் ஒரு கலகத்தீயை மூட்டியிருக்கிறார்கள். குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக எந்த அளவு வன்முறை, விஷமப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதற்கு திருமாவளவன் உணர்ச்சி கொப்பளிக்கப் பேசும் இந்த 23 நிமிட வீடியோவே நல்ல உதாரணம்.
ஆனாலும் கூட அவரை அறியாமலேயே ஒரு உண்மையை சொல்வதைக் கவனிக்க முடிகிறதா? குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை விளக்கி அமித் ஷா பேசும்போது எந்தக்காரணத்தை முன்னிட்டும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாகக் குடியேறிய முஸ்லிம்களுக்கு குடியுரிமை தர முடியாது என்று வன்மத்தோடு சொன்னாராம்! அதனால் என்ன? இங்கே வாழும் முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிற மாதிரி இருக்கிறது திருமா பேச்சு. அடுத்ததாக சொல்கிற இன்னொரு புரட்டு அரசியல் சாசனத்தின் முகவுரையில் சொல்லப்பட்ட செகுலர் என்ற வார்த்தையை உயிரற்றதாகச் செய்ய முயற்சி என்பது. அரசியல் சாசனத்தின் Preamble இல் 1976 இல் எமெர்ஜென்சி தருணத்தில் இந்திரா காண்டி செய்த 42வது திருத்த இடைச் செருகலில் தான் Secular, Socialist, Integrity என்ற மூன்று வார்த்தைகள் உள்ளே புகுந்தன. இந்தத் திருத்தத்தை மினி கான்ஸ்டிடியூஷன் என்று கிண்டலாக அழைக்கப்பட்டது என்பதை அந்த நாட்களில் நேரடியாகப் பார்த்தவன் நான். The words 'Socialist and Secular' were inserted by the 42nd amendment in 1976. The same amendment contributed to the changes of the words unity of the nation into unity and integrity of the nation. The significance of the preamble of the Indian Constitution lies in the 'We the People'. இது சுருக்கம். அடுத்து வந்த ஜனதாக்கட்சி கொண்டுவந்த 43 வது திருத்தம், 42வது திருத்தத்தை ரத்து செய்து முகவுரையை எமெர்ஜென்சிக்கு முன்னாலிருந்த பழைய நிலைக்கே திருப்பியது.அதன்படி பார்த்தால் இடைச்செருகல் எதுவுமில்லாத ஒரிஜினல் நிலை. ஆனால் குறிப்பிட்டு அந்த வார்த்தைகளை நீக்குகிறோம் என்று தனியாகச் சொல்லவில்லை.
பிஜேபியின் கூட்டாளிகளும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் அவரவர் அரசியல் ஆதாயத்துக்காக எப்படிப் பிரிந்து நிற்கிறார்கள் என்பதை சேகர் குப்தா இந்த 20 நிமிட வீடியோவில் கொஞ்சம் சொல்வதைக் கேளுங்கள். பிஜேபிக்கு எப்படியாவது அணைபோட்டு விடவேண்டுமென்கிற தவிப்பு, இப்போது அங்கங்கே கலவரங்களாகப் பற்றிக் கொண்டு எரிகிறது.
பிரச்சினையை பிஜேபி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. வாருங்கள்! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சோனியா, மற்றும் வாரிசை நீதிமன்றப்படிகளில் ஏறவைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். ஜாமீன் கிடைத்ததே சுப்ரமணியன் சுவாமியைத் தோற்கடித்த மாதிரித்தான் என்று காங்கிரஸ் தரப்பு அற்ப சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருப்பதை விட ராஜ்தீப் சர்தேசாய் குதிப்பது அதிகமாக இருக்கிற நிகழ்நேரக் காமெடியை அனுபவிக்கலாம்.
மீண்டும் சந்திப்போம்.
திருமாவுக்கு காஷ்மீரம் மீதும் பர்மிய-முஸ்லீம்கள் மீதும் இருக்கும் பாசம் இந்திய-இந்துக்கள், கிருத்துவர்கள் மீது ஏன் இல்லை? தமிழ்நாட்டு மக்கள் இப்போது தான் உணர ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ReplyDeleteதமிழக மக்களுக்குத் திருமாவைப் புரிய ஆரம்பித்துவிட்டதா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. சிறுபான்மைக் காவலர் வேஷத்தை காங்கிரசும் தமிழகததில் திமுகவும் ஏகபோகமாக போட்டு வந்ததில் இப்போது திருமாவும் ஒரு போட்டியாகப் பங்கு போட வந்திருக்கிறார். இவர்களுடைய ஈழத்தமிழர் ஆதரவு இசுலாமியர் ஆதரவு எல்லாம் ஆதாயத்துக்காகத் தானேயன்றி அந்தமக்களுடைய நல்லதுக்காக இல்லை
Delete