Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

The R Document புதினமும்! பா.ரஞ்சித்! தொடரும் விவாதங்களும்

இன்று இந்த வீடியோ விவாதத்தைப் பார்த்தபோது இந்திய அரசியலைப் பார்த்து அமெரிக்கர்களும் கெட்டுப் போனார்களோ என்றொரு சந்தேகம் வருகிறது! 


இங்கே ஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம் பொறுப்பு இல்லாத நிர்வாக இயந்திரம் என்று பிரச்சினைகளை இன்னமும் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டுச் சொல்கிற விதமாகப் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள்!

இந்திரா காந்தி மதம்பிடித்த யானைமாதிரி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அந்த நாட்களில் ஜிங்குச்சா போட்டுக் கொண்டிருந்தது வலதுகம்யூனிஸ்ட் என்று அடையாள படுத்தப்படுகிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) இந்திராவை எதிர்த்தவர்கள் மீது கொஞ்சம் கூட அடிப்படையில்லாத, CIA கைக்கூலி என்று முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள்  
  
இந்தியாவில் இந்திரா கொண்டுவந்த எமெர்ஜென்சி களேபரங்களைப் பார்த்து   The R Document  என்று இர்விங் வாலஸ் எழுதியபுதினம் மாதிரி, இங்கே CIA கைக்கூலி என்று கூவினதுபோல அங்கேயும்!  அமெரிக்காவில் அமெரிக்க அதிபருக்கே ரஷ்யாவின்வேலையாள் என்று விசாரணை நடத்தப் பட்டதாக செய்திகளை பார்க்கும்போது ஆரம்பரிகளில் சொல்லியிருந்தது சரிதானே?!

*******
ஞாயிறு பகிர்வில் இந்தச் செய்தி டிஸ்கியாக சேர்க்கப் பட்டது ஆனால் நேற்றைக்கு துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் இல.கணேசன்சொன்னது போல #பப்பு இமேஜ் ராவுல் பாபா மீது அழுந்தப் படிந்திருப்பதை மாற்றுவதாக இல்லையே என்ன செய்ய?    
+Md. Sultan Ad. Gulam தினகரனில் வெளிவந்த மறுப்புச் செய்தியை அனுப்பியிருக்கிறார்! நன்றி! இதில் சொல்லப் பட்டிருக்கிறபடி செய்தி பொய்யானதாக இருந்தால் இங்கேயும் என் வலைப் பதிவிலும் எழுதியது தவறாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் தான் என்று ஒப்புக்கொள்வது தான் நியாயமானதாக இருக்கும். அதன்படியே இந்தப்பகிர்வு.

ஆனால் சில கேள்விகளும் கூடவே எழுகின்றன. சன் குடும்பத்தின் தினகரன் முதலில் வெளியிட்டிருந்த செய்தியின் கடைசி வரியில் யாரோ ஒரு பிஜேபி ஆதரவாளர் சொல்லிக் கொடுத்து பேசியதாக எழுதியிருந்தது ஏன்?

காங்கிரசோடு தான் கூட்டணி என்று திமுக தலைமை உறுதியாக அறிவித்தபிறகும் தினகரனில் முதலில் வெளிவந்த செய்தி எதற்காக வெளியிடப்பட்டது? தனி ஆவர்த்தனமா? தங்கள் படத்தை விமரிசனம் செய்த ஒரு யூட்யூப் பதிவை காப்பிரைட் பிரச்சினை கிளப்பி முடக்கியவர்கள், , இந்தச் செய்தியில் கேள்வி கேட்டது பொய் செய்தி என்கிறார்களே தவிர தாங்கள் முன்னர் வெளியிட்டது தவறானது என்று வருத்தம் தெரிவிக்கவில்லையே!
ஏன்?
Photo
BLUE SATTAI MARAN-க்கு ஆப்பு வைத்த SUN PICTURES ? Petta கணாமல் போன அதிரச்சி !

இப்படி எழுதியபிறகு இன்னொரு செய்தியும் வருகிறது. Office of Congress overseas secretary Aarathi Krishnan confirmed to MyNation that the two questions were indeed asked. Krishnan confirmed on phone that she was present at Gandhi’s Dubai events. Her secretary then confirmed that Rahul's answer to the first question was that he treats all religions equally. "And he handled the girl’s second query with a counter question by asking her what would she do if she were the Prime Minister," he said, responding from Krishnan’s phone. இப்படி 
Vasudevan Tirumurti's profile photo
செய்தியை முதலில் போட்டது மைநேஷன்டாட் காம்.
இன்றைக்கு அப்டேட் செய்து இருக்கிறார்கள். we stand by our news னு டிவிட்டரில் ...
Office of Congress overseas secretary Aarathi Krishnan confirmed to MyNation that the two questions were indeed asked. Krishnan confirmed on phone that she was present at Gandhi’s Dubai events. Her secretary then confirmed that Rahul's answer to the first question was that he treats all religions equally. "And he handled the girl’s second query with a counter question by asking her what would she do if she were the Prime Minister," he said, responding from Krishnan’s phone.
சுட்டி: https://www.mynation.com/news/rahul-gandhi-dumbfounded-dubai-little-girl-questions-pl8fjb

பிபிசிக்குத் தகவல் சொன்ன பிலால் அலியார் அசப்பில் பதிவர் சென்ஷி சாயலில்! ஆனால் முகநூல் பகிர்வுகளில் முகஜாடை வேறுபடுகிறது. இந்தச் செய்தியை மறுக்கவேண்டும் என்று ஒரு கூட்டமாகவே வேலை செய்திருப்பதையும் பின்னூட்டங்கள், அடுத்தடுத்த பகிர்வுகளிலும் பார்க்க முடிகிறது.

இங்கே இயக்குனர் பா.ரஞ்சித் அவர் விரும்புகிற படியே ஒரு தொடர் உரையாடலுக்கான மையமாகவும் தொடக்கப்புள்ளியாகவும் மாறிவருகிறார்! அவருடைய அம்பேத்கர் முன்னெடுப்பும் தலித்துகள் தனித்தே களம் காண வேண்டும் என்று சொல்வதும் திராவிடங்களுக்குப் பிடித்தமானதாக இல்லை.


கார்த்திக் சுப்புராஜிடம் தோற்றுவிட்டாரா பா.ரஞ்சித்?

என்றதலைப்பே கொஞ்சம் உசுப்பேற்றிவிடுகிற மாதிரித் தான்! ஆனால் இதற்கு பதில் சொல்ல வேண்டியது ரஞ்சித்தே தவிர, ஆளூர் ஷாநவாஸ் அல்ல!  

என்ன அநியாயம் இது என்று கனிமொழி பொங்கிய பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி கே ரங்கராஜனும் தொடரும் விவாதங்களில் பிசி!


கடைசியில் கனிமொழி பொங்கியது  மார்க்சிஸ்டுகளுக்கு இலவச விளம்பரமாகிவிட்டதோ? 


மண்டேன்னா ஒண்ணே போதும்! சசி தரூர் பாகம் 2

 
 சுனந்தா ஒரு கிறிஸ்த்மஸ் பார்டியில்  ..!

நியாயமாக இதற்கு சுனந்தா புஷ்கர் என்று தான் தலைப்புக்  கொடுத்திருக்க வேண்டும்! ஆனால் தலைக்கே தலைப்புக் கொடுத்த விஷயம் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று ஊகிக்க முடியாததால், இது சசி தரூர் பாகம் இரண்டு!
புனிதப் பசுக்களோடு ஒற்றுமையாக..! இப்போது தான் அர்த்தம் என்னவென்று புரிகிறது!
 
ஐபிஎல் கொச்சி அணியை உருவாக்குவதற்கு சசிதரூர் ரொம்பவுமே மெனக்கெட்டார்! கொச்சி அணியின் mentor என்று அவரை சொல்கிறார்கள்! ஏன் என்று இப்போது வெளி வரும் செய்திகளைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது. 

கொச்சி ஐபிஎல் அணி பிரான்சைஸ் பெறுவதற்கு 1533 கோடி ரூபாய்கள் கொட்டப் பட்டிருக்கிறது!  என்றைக்குமில்லாத திருநாளாக ட்விட்டர் பக்கம் போய்ப் பார்த்தபோது, லலித் மோடிக்கு  கொச்சி ஐபில் அணி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது என்ற தகவலை சற்று நேரத்துக்கு முன் தான் படித்துத் தெரிந்து கொண்டேன்!

ஏனாம்?

கொச்சி ஐபிஎல் அணியின் உரிமையாளர் விவரத்தை லலித் மோடி வெளியிட்டு விட்டாராம்! கொச்சி ஐபிஎல் அணி பிரான்சைஸ் எடுத்ததில்   இருபத்தைந்து சதவீத உரிமையை வைத்திருக்கும் Rendezvous என்ற நிறுவனத்தில் சுனந்தா புஷ்கர் என்றகாஷ்மீரிப் பெண்மணிக்குப் பதினெட்டு சதவீதப் பங்குகள் இருக்கிறது.

இருந்து விட்டுப் போகட்டுமே என்கிறீர்களா?

இந்த சுனந்தா புஷ்கர் என்ற பெண்மணியைப் பற்றி எந்த விவரமும் தோண்டித் துருவி விசாரிக்க வேண்டாம் என்று ஒரு மத்திய அமைச்சரிடம் இருந்து  ஐபிஎல் நிறுவனத்தை நடத்தும் அதிகாரிக்குத் தொலைபேசியில் சொல்லப் பட்டிருக்கிறது!  அப்புறம் இந்தப் பெண்மணி மத்திய அமைச்சர் சசிதரூருக்கு "வேணுங்கப் பட்டவங்க" என்றும் சொல்லப் பட்டதாம்!





“I was told not to get into who owns Rendezvous, specially Sunanda Pushkar. Why?” wondered IPL chairman Lalit Modi on Twitter. The request has been minuted in the records of the meeting. 

சென்ற சனிக்கிழமை பெங்களூரில், பிரான்சைஸ் ஒப்பந்தம் கையெழுத்தான தருணத்தில் தான் இத்தனையும் நடந்திருப்பதாக இந்த செய்தி கொஞ்சம் விவரமாகவே சொல்கிறது. சுனந்தா புஷ்கர் என்ற இந்தப் பெண்மணி, ஏற்கெனெவே திருமணமானவர், அவரது கணவர் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தை நடத்துகிறார். அழகுக் கலையில் பட்டயப் படிப்பை முடித்திருக்கும் சுனந்தா, சொந்தமாக ஸ்பா- ஒரு அழகு நிலையம் நடத்தி வருவதாகவும் துபாயில் இருந்ததாகவும் இந்த செய்தி மேலும் சொல்கிறது. இந்தப் பெண்மணியை சசிதரூர், மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக, செய்திகள் கசிந்து கொண்டிருப்பதை நேற்றுத் தான் பார்த்தோம் இல்லையா!

Media reports have said that Tharoor proposed to marry Sunanda Pushkar, a Kashmiri girl. Trained as a beautician, she runs a spa and has lived in Dubai.

இந்தச் செய்தி  Rendezvous நிறுவனத்தின் கூட்டாளிகள் யார் யார், பிரான்சைஸ் உரிமையாளர்கள் யார்   என்பதை லலித் மோடி டிவிட்டரில் சொன்னதை இப்படிப் பட்டியல் இடுகிறது!

Sunanda Pushkar, a friend of union minister Sashi Tharoor holds 18% free equity in Rendezvous Sport Limited, Narendra Modi Tweeted “I was told not to get into who owns Rendezvous, specially Sunanda Pushkar. Why?” IPL chairman Lalit Modi had tweeted on Twitter reports DNA

Lalit modi has named the stake holders in Kerala IPL team.

The complete list of partners of IPL Kerala team as per reports are Rendezvous (25% free), Rendezvous (1% purchased), Anchor (27%), Parinee (26%), Film Waves (12%), Anand Shyam (8%) and Vivek Venugopal (1%). Rendezvous free equity is held by Kisan, Shailender and Pushpa Gaikwad, Sunanda Pushkar, Puja Gulathi, Jayant Kotalwar, Vishnu Prasad, Sundip Agarwal.


 

வாயைப் பிளந்து நல்லா வேடிக்கை பாருங்க! கட்டியிருக்கும் துணியும் கூடக்  காணாமப் போகும்!
 
கிரிக்கெட் என்பது இருபத்திரண்டு முட்டாள்கள் விளையாடுவதை இருபத்திரண்டாயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்ப்பது என்பதாகச் சொல்வார்! இங்கே கிரிக்கெட் என்பது சூதாடிகளின் சொர்கமாக இருப்பது நாளுக்கு நாள் மெருகேறி வருவதையே இந்த மாதிரிச் செய்திகள் ஊர்ஜிதம் செய்கின்றன!

கிரிக்கெட் சூதாடிகளுக்குப் பின்னால், துபாயும் இருப்பது தெரிந்தது தானே!


இந்தச் செய்தியின் தற்போதைய நிலை! அப்டேட்! 13/04/2010 12.15PM

இங்கே சசி தரூருக்குக் கிளம்பியிருக்கும் புதுத் தலைவலியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்!

சசி தரூர், எல்லா அரசியல்வாதிகளையும் போல, தன் மீது சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களையும் மறுத்து இன்றைக்கு ஒரு அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.  
இங்கே பார்க்கலாம்!

இதிலும் கூட முக்கியமாக இரண்டு விஷயங்கள், அந்த அறிக்கையின் வார்த்தைகளுக்கு நடுவே தெளிவாக வெளிப்படுகிறது.


Rendezvous Sports World என்ற அமைப்பு, ஐபிஎல் கொச்சி அணியின் பிரான்சைஸ் உரிமையாளர்களில் ஒன்று! 1533 கோடி ரூபாய் முதலீடு செய்து பிரான்சைஸ் உரிமைய வாங்கியவர்களில் இருபத்தைந்து சதவீதப் பங்கை வைத்திருக்கும் ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம்! அதில் பதினெட்டு சதவீதம் பங்கு, சுனந்தாவுக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டதாம்!

ஒன்று சுனந்தா புஷ்கருடனான உறவு குறித்து. அதைத் தன் சொந்த விஷயம் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார். இரண்டு தனி நபர்களுக்கிடையேயான உறவு சொந்த விஷயம் தான்! யாரும் மறுக்கவில்லை. அதே நேரம், அந்த நபர்களில் ஒருவர் மத்திய அமைச்சராகவும், இன்னொருவர் ஒரு வணிக பேரத்தில் சம்பந்தப் பட்டவராகவும் இருக்கும்போது, அமைச்சர் அந்த பேரத்தில் காட்டிய அதீத அக்கறை! அதைத் தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு, பொது வாழ்வில் இருக்கும் ஒருவருக்குத் தார்மீகமான கடமையாகவும் இருக்கிறது.

இரண்டாவதாக, லலித் மோடியுடன் சனிக்கிழமை பேசியதை அமைச்சரால் மறுக்க முடியவில்லை. அதற்கு வேறு மாதிரியான சப்பைக் கட்டு கட்ட முயற்சித்திருக்கிறார் என்றே கருத இடம் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இங்கே இந்திய அரசின் ராணுவ ரகசியங்கள் சீன ஹாக்கர்களால் களவாடப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி வெளி நாட்டு நிறுவனங்களால் வெளியிடப்பட்டு இங்கேயும் செய்திகளாக வந்தது தான். 
கொச்சி ஐபிஎல் அணி பிரான்சைஸ் பெறுவதற்கு  1533 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டிருக்கிறது என்ற நிலையில், அதன் உரிமையாளர்கள் யார் எவர் என்று தகவலை வெளியிட்டதற்காக, லலித் மோடிக்கு வக்கீல் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிறதே, அது ஏன்?

ராணுவ ரகசியத்தை விட, ஒரு வியாபாரத்தின் உரிமையாளர்  பற்றிய தகவல் அவ்வளவு பெரிய ரகசியமா?

இந்த விவகாரத்தை டிவிட்டரில் லலித் மோடி சொன்னபோது அவருக்கு அங்கே வந்து பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ஒருத்தர், இதே மாதிரி, ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்கள் யார் எவர் என்பதையும் வெளியிடுவாரா என்று கேட்டிருக்கிறாரே, அதுவும் ஏன்?

கிரிக்கெட் சூதாடிகளின் கைகளில் சிக்கி இருக்கிறதென்பதற்கு இதை விட வேறென்ன prima facie வேண்டும்?





 

அம்மா! தம்பி என் விரலைக் கடிச்சுட்டான்......!

கொஞ்சம் மாறுதலுக்குப் படம் காட்டப் போறேன்!

பாராட்டு விழா,  சினிமாவில் வீர வசனம் மேடையில் மண்டிபோட்டுக் கிடப்பது எல்லாம் இல்லை! நிஜமாகவே சூப்பர் வீடியோக்கள்!

இந்த மாதம் பதினைந்தாம் தேதி, யூட்யூப் ஐந்தாண்டுகளை நிறைவு செய்த தருணத்தை ஒட்டி, கார்டியன் பத்திரிகை, மிக அதிகமாகப் பார்க்கப் பட்ட யூட்யூப் வீடியோக்கள் ஐந்தை , வாழ்த்துக்களோடு வெளியிட்டிருக்கிறது.

அதில் நம்பர் ஒன்!



ஒரு பொடியன், தனது தம்பி கடித்து விட்டான் என்று குதூகலமாகக் கத்துகிற இந்த வீடியோ தான் முதல் இடம்! வெளியிட்ட தருணம் வரை பதினாறு கோடியே ஒருலட்சத்து ஐமபதாயிரத்து ஐம்பத்திரண்டு தடவை பார்க்கப் பட்டதாம்! 

இப்போது 161,473,299 தரம் பார்வை இடப்பட்டதாகத்  தகவல் சொல்கிறது!

*******
குழந்தைகள் சிரிக்கும்போது இதயம் மலர்ந்து ரசிக்க முடிகிற அதே நேரம், நம்மூர் அரசியல்வாதிகள் அமைச்சுவியாதிகள் அடிக்கிற கூத்துக்களைப்  பார்த்தால் எரிச்சலும் வருகிறது! எரிச்சலோடு சிரிப்பும் வருகிறது!


ஏ கே அந்தோணி, அவ்வளவாக ஊழல் வதந்திகளுள் சிக்கிக் கொள்ளாத பாதுகாப்புத் தரை அமைச்சர்! பாகிஸ்தானில் 42 தீவீரவாதிகளுக்குப்  பயிற்சி அளிக்கிற முகாம்கள் இருப்பது அரசுக்குத் தெரியுமாம்! இன்றைக்கு செய்தி வந்திருக்கிறது!


தெரிந்து என்ன பண்ணிக் கிழிச்சீங்க அமைச்சரே! என்ன பண்ணிக் கிழிச்சீங்க?


கண்டனூர் பானா சீனா! பொருளாதார மேதையாகக் கிழிச்சுத் தொங்கவிட்டது போதும்னு உள்துறை அமைச்சர் பதவிக்கு மாற்றப்பட்டவர்! முத்தமிழ்வித்தகர் டாக்டர் கலைஞர் முன்பொரு சமயம் சிவகங்கைச் சின்னப் பையன் என்று குறிப்பிட்டதை, சொன்னவரே  கூட மறந்துபோன பிறகும் கூட நினைவு வைத்திருந்து செயல்படுகிறவர்!


பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்! எந்த முன் நிபந்தனையும் கிடையாது! அதெல்லாம் சரி! 


சும்மா டீக்  குடிக்கிற மாதிரி,  தம்மடிக்க  ஒதுங்கி வர்ற  மாதிரி, அங்கே இருந்து சுதந்திரமாத் தீவீர வாதிகள் இந்தியாவுக்குள் உலா வருவாங்களாம்! ஒத்தைப் பயல் காசாப், அவனைச் சிறையில் வைத்துப் பாதுகாப்பதற்கு முப்பத்தைந்து கோடி ரூப்பாய்க்கு மேல் செலவு செய்வாங்களாம்! அவனும் அவன் கூட்டாளிகளும் கொன்னு குவிச்ச ஜனங்களுக்கு மட்டும் அரசு அறிவிச்ச நிவாரணம் இன்னமும் போய்ச் சேராதாம்!  


இதெல்லாம் கிடக்கட்டும், வெளியூர்த் தீவீரவாதிகளுக்கு, பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் விதிக்காத அரசு சொல்வது, உள்ளூர் மாவோயிஸ்ட் தீவீர வாதிகள் விஷயத்தில் மட்டும், பேச்சுவார்த்தைக்குத் தயார் ஆனாக்க ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய முன்வர வேண்டுமாம்!


முன்னால் போனாக்க கடிக்கும், பின்னாடி வந்தாக்க உதைக்கும்னுட்டு எதையோ சொல்ற மாதிரி, முரண்பாடாத் தெரியலை?


கண்டனூர்க்  கண்டங்களில் இருந்து தேசத்தைக் காப்பாற்றவேண்டும், தேச முத்து மாரி! 


*******

இங்கே இந்தக் கூத்தையும் பாருங்க! துபாய்ல, ஹமாஸ் தீவீரவாத இயக்கத்தின் முக்கியப் புள்ளி ஒருத்தனைப் போட்டுத் தள்ளிட்டாங்க! போட்டுத்தள்ளினவங்க பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வச்சிருந்ததை வச்சு ஏகக் களேபரம்! இஸ்ரேல் உளவுத் துறையான மொசாத் தான் இதைச் செஞ்சிருக்கனும்னு துபாய்ப் போலீஸ் சொல்லுது! இன்டர்போல் மூலமா, மொசாத் தலைவரைக் கைது செய்ய வேணுமின்னும் வேகமா இருக்காங்க!

இதே துபாய்ல, தாவூத் இப்ராஹிமும் அவன் கூட்டாளிங்களும் ராஜாங்கமா உலவிக்கிட்டிருந்தாங்க! மும்பையில் எந்தக் குற்றம் நடந்தாலும் பின்னால இருக்கும் தாதா துபாய்ல ராஜா!
கிரிக்கெட் சூதாட்டம்னாலும் சரி, ஹிந்தித் திரைப்படங்களின் பின்னால் உலாவும் கருப்புப்பணம், பேரம் எதுவானாலும் சரி இப்படி நிழல் உலகத் தாதாக்கள் பிடியிலதான்றதும் கூட எல்லோருக்கும் தெரியும்! அரசுக்கும் கூடத் தெரியும்!

துபாய்ப் போலீஸ், இப்பத் துடிச்ச மாதிரி, குற்றங்களுக்கு எதிரா அப்ப எல்லாம் துடிச்ச மாதிரித் தெரியலையே!

நம்ம அரசாங்கம் கூட, தும்பையும் விட்டு வாலையும் விட்டு, வெறும் அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருப்பதாகத் தான் ஞாபகம்!



 
'You will see fire, and bullets, and deeds': Hamas militants in front of a photograph of al-Mabhouh during the rally denouncing his killing

வெள்ளிக் கிழமைக் கேள்விகள் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?


சண்டேன்னா மூணு! கார்டூன், துபாய், சசி தரூர்!



மெயில்  டுடே  என்ற பத்திரிகையில் வெளிவந்த மேலே நீங்கள் பார்க்கும் கார்டூனைப் பார்த்துவிட்டுக் கோபமாக, ஆஸ்திரேலிய அரசு ரொம்பவும் தான் கொந்தளித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கப் போவது, அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்று, இந்திய அரசு சும்மா உள உளாக்காட்டிக்குத் தான் என்று வெளியிட்ட அறிக்கையைக் கூட, இது சாதாரணமானது தான் என்று எடுத்துக் கொண்டவர்கள், இந்தப் படத்தைக் கண்டு பொங்கி எழுதியிருக்கிறார்கள். இந்திய அரசின் யோக்கியதை அறிக்கை வெளியிடுவதற்கு மேல் போகாது என்பதும், அது சும்மாப் பம்மாத்து வேலை மட்டுமே என்பதைத் தெரிந்து வைத்திருப்பதால், அதைப் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, அது சாதாரணமானது தான் என்று எடுத்துக் கொண்டவர்கள், ஒரு செய்தி ஊடகத்தில் நச்சென்று மனதில் தைக்கிற மாதிரி, அமெரிக்காவில் க்ளூ க்ளக்ஸ் கிளான் என்று அழைக்கப் படும் இனவேறிக் கும்பலின் படத்தைப் போட்டு, அதற்கு ஆஸ்திரேலியப் போலீஸ் பாட்ஜை மாட்டி இருப்பது உசுப்பி விட்டிருக்கிறது!

அதுவும் போலீஸ் பாட்ஜுக்காக இல்லை! தொடர்ந்து இந்த செய்தி வெளி வந்து கொண்டே இருப்பது, வெளிநாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களை யோசிக்க வைத்து எங்கே கல்வி வியாபாரம் படுத்து விடுமோ என்ற கவலை வந்துவிட்டதால்தான்!

இந்த செய்தியைப் பாருங்கள்! ஆஸ்திரேலியாவில் படிக்கும் தன்னுடைய மனைவியைப் பார்க்கப் போன ஒருவர் மீது தீயை வைத்துக் கொளுத்த முயற்சித்திருக்கிறார்கள். இந்திய அரசோ, செய்தியை வெளியிடுவதில் நிதானமாக இருங்கள்! நிலைமையைச் சிக்கலாகி விடக் கூடும் என்று இங்குள்ள பத்திரிகையாளர்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய தொழில் கல்வி! வெளிநாட்டில் இருந்து படிக்க வரும் மாணவர்கள், ஆஸ்திரேலியாவுக்கு, சுமார் ஆயிரத்தைநூறு கோடி அமெரிக்க டாலர்களுக்கு சம்பாதித்துத் தரும் தொழிலாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் ஒருலட்சத்து இருபதாயிரம் பேர் அங்கே படிப்பதற்காக வந்து தங்கியிருக்கிறார்கள்.

நாலந்தா, அதற்கப்புறம் காஞ்சி என்று உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தேடிவந்து படிக்க வந்த கடிகை, கல்விக்கூடங்கள் இருந்த நாடு இது!

கல்வித்துறையைப் பற்றி, தீவீரமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது!


நமது கல்வி முறையில் இருக்கும் கோளாறுகளை, மெக்காலே கல்வித்திட்டத்தை இன்னமும் வைத்துக் கொண்டிருப்பதை உறுதியாக உதறி எறிந்து விட்டு, சீர்திருத்தங்களுக்குத் தயாராக வேண்டிய தருணம்இது.



oooOooo 



துபாய் மறுபடி பரபரப்புச் செய்தியாகி இருக்கிறது! இந்த செய்தியைப் படித்துப் பாருங்கள்!

பாகிஸ்தான்  பூர்வீகம் ஆனால் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இருபத்துமூன்று வயதான ஒரு இஸ்லாமியப் பெண்! தனது காதலனுடன் திருமணம் உறுதியானதைக் கொண்டாடுவதற்காக ஒரு ஹோட்டலுக்குப் போயிருக்கிறார். துபாய்க் கடற்கரையில் உள்ள அட்ரெஸ் ஹோட்டல்!போன  இடத்தில், சிரியாவைச் சேர்ந்த ஒரு வெயிட்டர், மானபங்கப் படுத்தியதாக துபாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். பெண்கள் கழிப்பிடத்திற்குப் போனவரை அந்த வெயிட்டர் பின் தொடர்ந்து வந்து பலாத்காரம் செய்ததாக நண்பர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார்.அடையாள அணிவகுப்பில் சிரியாவை சேர்ந்த அந்த நபரை அடையாளம் காட்டியதாகவும் செய்திகள் சொல்கின்றன.

அதற்குப் பிறகு நடந்தது தான் கொஞ்சம் விபரீதமாக இருக்கிறது!

மறுநாளே புகார் கொடுத்த அந்தப் பெண்ணைக் கைது செய்தது  துபாய்ப் போலீஸ்! லைசன்ஸ் இல்லாத இடத்தில் குடிபோதையுடன் இருந்ததாகவும், திருமணமாகாமலேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாகவும் வழக்குப் பதிவு செய்தது.


பாலியல் பலாத்காரப் புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டு விட்டு,  குடிபோதையில் இருந்ததாக ஒப்புக் கொண்டு, காதலனை உடனடியாகத் திருமணமும் செய்து கொண்டால், துபாயை விட்டு வெளியே போகலாம். மறுத்தாலோ, இஸ்லாமியச் சட்டங்களின் படிக் கடுமையாகத் தண்டனையை  அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை வேறு! பிரிட்டிஷ் துணை தூதரகம், உடனடியாக அவர்களுக்குத் திருமணத்தை அவசரகால ஏற்பாடாக நடத்தி வைத்து, பிரிட்டிஷ் பிரஜை ஆயிற்றே, வெளியே கொண்டு வந்து விடலாம் என்று  முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களாம்! சமீப காலமாகவே, உல்லாச விடுமுறையாக துபாய்க்கு  வரும் பிரிட்டிஷ்காரர்கள், இப்[படி சிக்கிக் கொள்வது நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் செய்திகள்சொல்கின்றன.


தி சன் பத்திரிகைச் செய்தி இது. கார்டியன் பத்திரிகைச் செய்தியின் கடைசி இரண்டு வரிகள்!

In July 2008 businessman Vince Acors and publishing executive Michelle Palmer received three-month jail terms after being convicted of having sex on a beach in July 2008. 


On his return to the UK, Acors said: "Dubai is a massive contradiction – everything is available yet everything is illegal."

முரண்பாடுகள்!  துபாய்ப் பொருளாதாரமுமே முரண்பாடுகளின் மொத்த உருவம் தான்! 

பேராசையும் கூட  இரண்டு பக்கமும் பற்றவைக்கப் பட்ட மெழுகுபோலத்தான்! படத்திற்கு நன்றி நவாஸுதீன்!

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அது முறையாக வளர்வதற்குக் காலம் ஒரு முக்கியமான காரணம்! குறைப் பிரசவங்கள், fast food, instant growth, அஜினோ மோட்டோ எல்லாமே ஆபத்தானவை தான்!

"அடப்போய்யா! நம்ம ஊர்ல அஞ்சு வயசுப் பையனையே கஞ்சா வித்ததாக் கைது செஞ்சு, அசிங்கமானப்புறம் தான் விட்டிருக்காங்க! இதை துபாய் வரை போய்த் தான் பாக்கணுமாக்கும்!" என்று நொடித்துக் கொண்டீர்களானால், அதிலும் நியாயம் இருக்கிறது!

 


oooOooo 

டிவிட்டினாலும் தப்பு! டிவிட்டாவிட்டாலும் தப்பா?


அட போங்கப்பா!......... இப்படி   சிரித்து சிரித்து ஏதாவது சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்வதே பிழைப்பாய்ப் போய் விட்டது!

சசி தரூர் மீண்டும் காங்கிரஸ் கலாசாரக் காவலர்களின் கவனத்திற்கும், கோபத்திற்கும் ஆளாகியிருக்கிறார்! பதவிக்காக மட்டுமே காங்கிரசில் ஒட்டிக் கொண்டு, நேரு-இந்திரா-ராஜீவ் புகழை உயர்த்திப் பிடிப்பது, விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட பிரகிருதிகளாக துதி பாடிக் கொண்டிருப்பது மட்டுமே காங்கிரஸ் கலாசாரம், காங்கிரசில் இருக்கும் எவராக இருந்தாலும் செய்ய வேண்டிய வேலை என்றிருக்கும்போது, இந்த அதிமேதாவி, நேருவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஓட்டை இருந்தது என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னதை ஆமோதித்துப் பெரிய பாவத்தை செய்து விட்டார் என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள்!


நேரு வாரிசுகளைத் தவிர வேறு யாருக்கோ தலையாட்டலாமோ?

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நான் தான் பாஸ், இங்கே நான் சொல்வது மட்டுமே செல்லும் என்று சொன்ன, சசிதரூரின் மூத்த அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, இப்போது இந்தப் பூனைக்கு எப்படி மணி கட்டப் போகிறார் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்!

அது தானே! காங்கிரஸ் என்றால் திண்டுகளில் சாய்ந்து கொண்டே, பேசிக் கொண்டே இருப்பவர்கள் கட்சி என்று தானே அர்த்தம்! இவர்களுக்காக வேறு யாராவது தானே  வந்து செய்து கொடுத்தாக வேண்டும்!

அப்படி என்னதான் சொல்லி விட்டார் சசிதரூர்? எனக்கு எல்லா தர்மங்களும் தெரியும், எல்லா நியாயங்களும் தெரியும் என்று சொல்கிற மாதிரி இருந்ததாம் காந்தி நேரு இருவருடைய வெளியுறவுக் கொள்கை! காரணம்,ஆதாரம் இல்லாமல் இதில் காந்தியை ஏன் வம்புக்கிழுத்தார்கள் என்பது தான் தெரியவில்லை!


“I agree with Parekh’s opinion on Nehru and Gandhi’s foreign policies. It was more like a moralistic running commentary,”

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகில் அஹமது, ஒரு காங்கிரஸ்காரனாக இருந்துகொண்டு பண்டிட் நேருவின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டுமே தவிர, அதை  விமரிசிக்கக் கூடாது என்ற மாதிரி சொல்லியிருக்கிறார்.


நேருவின் எந்தப் பாரம்பரியத்தை எப்படிக் காப்பாற்ற வேண்டுமாம்?! 


காங்கிரஸ்காரர்களுக்குத் தான் தெரியவில்லை! படம் பார்த்துவிட்டு உங்களுக்காவது தெரிகிறதா என்று சொல்லுங்கள்!




கோழிமுட்டைப் பொருளாதாரம்! ஒரு நர்சரிப் பாடம் (ல்)



 லூயிஸ் கரால் என்றொரு எழுத்தாளர்!  அற்புத உலகில் ஆலிஸ், கண்ணாடி வழியே என்ற இரு கதைகளை எழுதினார். மேலோட்டமாக, சிறுவர்களுக்கான கதை மாதிரி இருந்தாலும், கொஞ்சம் அங்கங்கே, அன்றைய அறிவியல் ஆராய்ச்சியை, அரசியலை நக்கலடிக்கிற மாதிரி, கதை போகும்.

ஆலிஸ் என்ற ஒரு சிறுமி, ஒரு பூனை ரொம்ப கம்பீரமாக உடையணிந்து தன்னுடைய கோட்டுப் பையில் இருந்து கடிகாரத்தை எடுத்து, மணி பார்ப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு,  அந்தப் பூனையைப் பின் தொடர்கிறாள். ஒரு விசித்திரமான உலகில், விசித்திரமான அனுபவங்களைச் சந்திக்கிறாள்.

அதிலே கோழிமுட்டை மாதிரி ஒரு ஆசாமி! ஹம்ப்டி டம்ப்டி என்று பெயர்! ஒரு சுவற்றின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள்! ஐயோ, கீழே விழுந்துவிடப் போகிறீர்கள் என்று ஆலிஸ் சொல்லும் போது, அந்த ஆசாமி அப்படியெல்லாம் ஆகாது, அப்படியே ஆனாலும் ராஜா தன்னுடைய குதிரைகள், ஆட்கள் எல்லோரையும் அனுப்பி உதவுவதாக வாக்களித்திருப்பதாகச் சொல்லுகிறார். பேசிக் கொண்டிருக்கும்போதே ஹப்டிடம்ப்டி தலைகுப்புற விழுகிறார்! அரசனுடைய குதிரைகளும், படைவீரர்களும் ஓடிவந்து ஹம்ப்டி தம்பதியைக் காப்பாற்ற முனைகிறார்கள்! என்ன ஆகிறது என்பதைச் சிறு குழந்தைகளிடம் கேட்டால் கூட, ஒரு பாட்டாகப் பாடிப் பதில் சொல்லி விடுவார்கள்!

என்னவென்று தெரியவில்லையா? இந்த வீடியோவைப் பாருங்கள்!



இந்த மாதிரித் தான், வங்கி, நிதித்துறைகளும்! மிகவும் வலிமையோடு இருப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள்! அப்புறம் குப்புற விழுந்து எழ முடியாமல் தவிக்கும்போது தான்,. அவர்களுடைய வலிமை,வாய்ச் சவடால் எல்லாம் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதே புரியும்.

சில நாட்களுக்கு முன்னால் துபாய் உலகம் சந்தித்த சரிவைத் தொட்டு  எழுதியிருந்தேன். உலகத்திலேயே அதி உயரமான கட்டடம் திறக்கப் பட்டது மாதிரி செய்திகள் துபாய் பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டதாகத் தோற்றம் அளித்தாலும், உண்மையில் நிலவரம் இன்னும் மோசமாக இருக்கிறது என்று தான் பொருளாதார, நிதித் துறையை ஆராய்ந்துவரும் செய்திகள் சொல்கின்றன.


818 மீட்டர் உயரமான கட்டடத்தைக் கடந்த நான்காம் தேதி திறந்து வைத்து, துபாய் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதைக் காட்டிக் கொண்டதாக இருந்தாலும், துபாய் அரசின் நிதி நிர்வாகத் திறமையைப் பற்றி மட்டுமல்ல,  தாக்குப் பிடித்து மீண்டு வருவதைப் பற்றிக் கூட, மிக மோசமான மதிப்பீடுகள் தான் இருக்கின்றன. துபாய் உலகத்தின் கடனுக்கு, அது அரசு நிறுவனமாக இருந்த போதிலுமே கூட, அரசு பொறுப்பேற்றுக் கொள்ளாது என்று அறிவித்தவுடனேயே, துபாய் அரசின் கடன் பத்திரங்களோடு, அதன் பொருளாதாரத்தைப்  பற்றிய மதிப்புமே குப்பையாகிப் போனது தான் மிச்சம். எதிர்பார்த்தபடியே, அபுதாபி, பத்து பில்லியன் டாலர்களைக் கடனுதவியாக அறிவித்திருக்கிறது. அப்படி அறிவிக்கப் பட்ட பிறக்குமே கூட, துபாய் உலகத்தின் கடன்கள் முதலில் அறுபத்தொன்பது அப்புறம்  எண்பது பில்லியன் டாலர்கள் என்று சொல்லப் பட்டது, இப்போது நூறு பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இன்னமும் உண்மையான விவரங்கள், வெளிப்படையான கணக்கிடும் முறையில் வெளிவரவில்லை.

துபாயில் மட்டுமல்ல, சவுதியிலுமே கூட  சாத் குழுமம் மற்றும் அஹமத் ஹமாத் அல்கோசைபி   சகோதரர்கள்  என்ற இரண்டு மிகப் பெரிய குடும்ப  நிறுவனங்கள், போன ஆகஸ்ட் மாதம் பல பில்லியன் டாலர்கள் கடனைத் திருப்புவதில் தவறிய செய்தியோடு சேர்த்துப் பார்க்கும்போது, முக்கியமாக  நிறைய நிழலான விஷயங்கள் இருப்பது, கணக்கிடும் முறையோ, வங்கி அல்லது பொருளாதாரத்தைப் பற்றிக் கொஞ்சம் கூடத் தெரியாதவர்களும் புரிந்துகொள்ளக் கூடியது தான்!

அமெரிக்க வங்கிகளைப் பற்றி பேசும்போது, பேராசையால், ஆதாயத்தை மட்டுமே குறியாக வைத்துக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் காற்றில் பறக்க விடும்  அடிப்படைத் தவறே மீண்டும் மீண்டும் செய்யப் படுவதும், அதன் விளைவுகளை, அமெரிக்கா மட்டுமல்லாமல், உலக நாடுகளும் சேர்ந்து  அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.

வரிகளில் இருந்து தப்புவிக்கும் சுவர்க்கங்கள்! கொள்ளையடிக்கப் பட்ட, சுரண்டப்பட்ட, அடிமை உழைப்பில் உருவான செல்வங்களைப் பதுக்க, பாதுகாக்க, இந்த மாதிரி வங்கி, நிதித்துறைப் பிணம் தின்னிக் கழுகுகளால் உருவாக்கப் படுபவை!

ஒரு தனி எமிரேட்டாக, எண்ணெய் ஏற்றுமதி வருமானம் மிகக் குறைவுதான், அப்படியிருந்தும் முப்பத்தெட்டே ஆண்டுகளில் துபாய் எப்படி இத்தனை பெரிய வர்த்தக மையமாக, இவ்வளவு உயரமாக வளர முடிந்தது?

ஐந்துலட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் ஆசிய நாடுகளில் இருந்து அடிமைச் சேவகம் செய்யத் தொழிலாளர்கள், உல்லாசம் தருவதற்கு உஸ்பெஸ்கிஸ்தான் அழகிகள், வரியில்லாத சந்தை, கேளிக்கை மையங்கள் என்று, மூலதனம் துபாய் என்ற சின்னஞ்சிறிய இடத்தில் குவிந்ததற்கு, வரி ஏய்ப்புச் செய்பவர்களின் சொர்க்க பூமியாக மட்டுமல்ல, தாவூத் இப்ராஹீம் மாதிரிக் குற்றங்களில் கோடிகள் ஈட்டும் புள்ளிகளுக்கும் ரத்தினக் கம்பளம் விரிக்கப் பட்டது தான்.

வரலாற்றில் ரோம சாம்ராஜ்யத்தை அடிமைகள் சாம்ராஜ்யம் என்று சொல்வதுண்டு. அதே மாதிரி, தாங்கள் சுகவாசிகளாக இருந்து கொண்டு இன்னுமொரு  அடிமை சாம்ராஜ்யத்தை உருவாக்க, சமீப கால வரலாற்றில், அவ்வப்போது முயற்சிகள் நடப்பதும், தங்களுடைய சுகவாசத்தாலேயே சரிந்து விழுவதும், துபாயை வைத்து, வளைகுடா நாடுகளில் ஆரம்பித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பெட்ரோல் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு, அகலக்கால் விரிக்கிற பொருளாதாரம் எத்தனை நாள் நிற்கும்? டாலர் மதிப்பு ஏறி இறங்குவதில், வாரமொன்றுக்கு சராசரியாக இருநூற்றைம்பது மில்லியன் டாலர்களை அமெரிக்கப் பொருளாதாரம் ஆதாயமாக, (அதாவது கடன் குறைவதில்) பெறுவதாக, ஒரு புள்ளி விவரம்  சொல்கிறது.

துபாய்ப் பொருளாதாரம், நீர்க்குமிழி மாதிரிப் பெரிதாக இப்போது தோன்றுவது, இருப்பது உண்மையே ஆனாலும், வெடித்து ஒன்றுமே இல்லாமல் போவதற்கான நேரம் எப்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிகழலாம் எண்பது தான் கசப்பானஉண்மை.

பேராசை கொண்டவனும் கெட்டான்! கெட்டவனைத் தொட்டவனும் கேட்டான் என்ற கதையாக, இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, பெட்ரோ-டாலர்கள் என்று சொல்லப் படும், கச்சா எண்ணெய்  விற்பது, விற்றதை முதலீடு செய்வது எல்லாமே அமெரிக்க டாலர்களில் தான் என்ற நிலையை உண்டாக்கிக் கொண்டது. புலிவாலைப் பிடித்த நாயர் கதையாக, வாலை விடமுடியாமல் நாயரும், நாயரைக் காலி செய்ய முடியாமல் புலியும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவதாக, இன்னொருத்தரும் ஆட்டத்தில் குதிக்கிறார்!

சீனா! அடுத்த பொருளாதாரச் சண்டியராகக் களத்தில், கோதாவில் குதித்தாயிற்று!

சீனா,பொருளாதார வளர்ச்சியில் இந்த ஆண்டு,  மூன்றாவது இடத்திற்கு ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாமிடத்தில் ஜோராக வந்து அமரும் என்று கணக்கிட்டுச் சொல்கிறார்கள். அமெரிக்கா, இப்போதிருக்கும் முதலிடத்தை எட்டிப் பிடிப்பது, முதலில் இன்னும் முப்பத்தொரு ஆண்டுகள் ஆகலாம் என்று சொன்னவர்கள், இப்போது இன்னும் பதினேழே ஆண்டுகளில் தாண்டி வந்துவிடுமென்றும் சொல்கிறார்கள்..

தொடர்ந்து பேசுவோம்!


தொடர்ந்து பேசுவதற்கு முன்னால், இது தொடர்பான இந்தப் பழைய பதிவுகளைப் படித்து விடுவது, குறைந்தபட்சம் அங்கே இருக்கும் வீடியோக்களைப் பார்த்துவிடுவது, பொருளாதார நெருக்கடி,  அமெரிக்க வங்கி நிதித்துறைகள் சந்தித்த சரிவு, துபாய்ப் பொருளாதாரம், அதனுடைய தொடர் விளைவுகள் இவற்றைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் உதவியாக இருக்கும்!

துபாய்! டுபாக்கூர்! பொருளாதாரம்!வட கொரியா!

உலகம் போகும் போக்கை முடிவு செய்யும் காரணங்கள்!

வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!


அறிவை வளர்த்துக் கொள்ளுவதும், அறிந்ததைப் பகிர்ந்து கொள்வதும் தான் நான் ஓதுகின்ற ஒரே வேதம்! இது ஒரு கலக்கமான மனநிலையில், துபாய்க் காசுக்காக அங்கே என்ன சூழ்நிலையில் இருக்கிறாரோ தெரியாது, மிரட்டிப் பின்னூட்டமிட்ட வருக்கு நான் சொல்லும் ஆறுதலானவார்த்தை! 





காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே......காகிதப் பணமும்!




இந்த ஆறு ஆண்டுகளில், தமிழில் பதிவுகள் எழுதுவது அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் நல்ல விஷயம்!


என்ன எழுதுகிறோம், எத்தனை பேருக்குப் பயன்படும் வகையில் எழுதுகிறோம், குறைந்தபட்சமாக, எழுதுகிற நமக்கே ஒரு தெளிவைத் தருவதாக எத்தனை பதிவுகளைச் சொல்ல முடியும் என்பதை அளவிட்டுப்  பார்த்தால், முதல் வரியில் கண்ட உற்சாகம் வைகையில் வெள்ளம் வந்த கதையாக உடனேயே வடிந்தும் போய்  விடும்
 
"மலை மேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயும் முன்னே வந்த வெள்ளம் போனது ராஜா!"

என்று எங்கள் சிறுகூடற்பட்டியில் பிறந்த கவிஞன் கண்ணதாசன்  அழகாகச் சொன்னாரே அப்படி!

பதிவர் கோவி கண்ணன்! ஆயிரம் பதிவுகளைத்  தாண்டினவர்! ஒவ்வொரு பதிவிலும், ஏதோ ஒரு சர்ச்சையைக் கிளப்பி, விவாதத்திற்கு வலுக்கட்டாயமாகக் கூட்டத்தைச் சேர்க்கும் கலை தெரிந்தவர். உடன்பட முடிகிறதோ இல்லையோ, புறக்கணிக்க முடியாத வலைப்பதிவர்களில் ஒருவராக இருக்கிறார்! எனக்குப் பிடித்த பதிவர்கள் வரிசையில், இவருடைய பதிவுகளை நான் பார்த்த விதத்தில்  தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று இருந்தவனை, வால்பையனுடைய சீரியஸ் தனம் இல்லாத சீரியஸ் பதிவு ஒன்றும், அதே தலைப்பில் கோவிகண்ணன் எழுதிய இன்னொரு பதிவும் எழுத நினைத்த விஷயங்களின் வரிசையைக் கொஞ்சம் மாற்றி விட்டன!

வால்பையனுடைய சீரியஸ் தனம் இல்லாத சீரியஸ் பதிவு!

அப்படீன்னா என்னங்கண்ணா? தலையிருக்காது, அதாவது முழுசா இருக்காது! ஆனால் வால்தனம்  மட்டும்  இருக்கும்!

"அமெரிக்காவுக்கு முன்னாலேயே காகிதப் பணத்தை ஓவர்டைம் வேலை செய்து அச்சடித்தது இந்தியா தான்னும் , கொஞ்சம் ஒய்வு கொடுக்கற மாதிரி, பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ அப்புறம் உள்ளூர் வெளியூர் வாழ் மக்கள், அரசுக்கு அச்சடித்துக் கை வலிக்கும் என்று ஆதூரத்துடன் என்று தாங்களும் இரு கை கொடுத்துக் கொண்டிருப்பது வால்பையனுக்குத் தான் தெரியாது, வங்கியாளரான உங்களுக்குமா?

Keynesian economics
பற்றி வால் பையனுக்குக் கத்துக் கொடுப்பீங்கன்னு பாத்தா, நீங்க வாலை இன்னமும் முறுக்கி விடறீங்களே! நியாயமா?"

அந்தப் பதிவில் இப்படிப் பின்னூட்டம் எழுதியபோதே, வங்கித்துறையைப் பற்றிக் கொஞ்சம், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிக் கொஞ்சம் எழுதலாம் என்று முடிவு செய்தாகி விட்டது!

துபாய்! டுபாக்கூர்! பொருளாதாரம்!வட கொரியா!

உலகம் போகும் போக்கை முடிவு செய்யும் காரணங்கள்!

வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!

இந்தப்பதிவுகள் ஒவ்வொன்றிலுமே, ஒன்றோடொன்று தொடர்புடைய, அரசியல், பொருளாதாரம், வங்கி, நிதித்துறை மூன்றுமே தனித்தனியாகத் தெரிந்தாலுமே எப்படி ஒன்றையொன்று ஆளுமை செய்துகொண்டிருக்கின்றன என்பதைக் கோடி காட்டத் தான் முடிந்தது!

"
சேத்த பணத்தை சிக்கனமா,செலவு செய்ய பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு செல்லக்கண்ணு
அவங்க..ஆறை..நூறு..ஆக்குவாங்க ..சின்னக்கண்ணு"

மருதகாசியின் இந்தப்பாடலை எடுத்துச் சொன்னது கூட, வால்பையன் நினைக்கிற மாதிரி இடைச்செருகல் இல்லை, பொருளாதாரத்தின் ஒரு அடிப்படை அம்சத்தைச் சொல்வதற்காகத் தான்!

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, உற்பத்தியும், சேமிப்புமே தீர்மானிப்பவைகளாக இருந்த ஆரம்பகாலப் பொருளாதாரம், எப்படிக் கடன், கடனை அடைக்க இன்னொரு  கடன், அதற்கு வட்டி கட்ட இன்னொரு கடன், இப்படியே போய்க் கடைசியில் தவணை கேட்பது, நாணயம் தவறுவது, திவாலாகி விட்டது என்பதைக் கூட ஒப்புக் கொள்ள முடியாமல், "துபாய் உலகத்தின் கடனுக்கு அரசு எந்தவிதத்திலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது, அது கடன் கொடுத்தவர்கள் பொறுப்பு!" என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற அளவுக்கு மட்டுமே துபாய் கடன் நெருக்கடி இருக்கிறது!

இதைச் சொல்லும் போதே, இதைவிட விபரீதமான பயங்கரம் அமெரிக்கப் பொருளாதாரத்தில்  இருக்கிறது, எப்படி இதில் நாமும் விரும்பியோ விரும்பாமலோ சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவுகளில் சொல்லலாம் என்று இந்த முயற்சியை ஆரம்பித்தாயிற்று! புலி வாலைப் பிடித்த நாயர் கதைதான்! வால்பையன் என்னதான் வந்து, பின்னூட்டங்களில் தாளித்தாலும், புலி விடாது!

சற்றேறக் குறைய நூறே ஆண்டுகள்! நூறே ஆண்டுகளில், பொருளாதாரம் என்பது வெறும் கருவியாக இருந்தது, கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் பேரழிவைத்தரும் ஆயுதமாகவும் மாறிப்போனது! வரலாறு முக்கியம்! கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு வரலாறு மாதிரி, சிறந்த ஆசிரியன்எவருமில்லை!

பிரிட்டன், சிறிய தீவு! உள்ளூரில் வாய்ப்புக்கள் குறைவு! இயற்கையாகவே கடலோடுவதும், வணிகம் செய்வதும், வணிகம் செய்யப்போன இடத்தில் மோசம் செய்து, ஒட்டகத்தைக் கூடாரத்துக்குள் முதலில் தலை, அப்புறம் கழுத்து, அப்புறம்.......இப்படியே வரிசையாக ஒட்டகம் மொத்தக் கூடாரத்தையுமே ஆக்கிரமித்துக் கொண்டு, கூடாரத்தில் இருந்தவனை வெளியே நிர்க்கதியாய் நிற்க வைத்த கதை நடந்து முடிந்து, அடிமை நாடுகள், புதிய சந்தைகள், இயற்கை வளங்களை ஏகபோகமாகக் கொள்ளையடிக்கக் கிடைத்த வாய்ப்பு, தொழிற்புரட்சியோடு சேர்ந்து பிறந்தது.  


உள்ளூர் மக்களை முதலில் ஒட்டாண்டிகளாகவும், கூலிகளாகவும், கிராமங்களை அழித்து நகர்ப்புறத்துக்கு அகதிகளாகவும் மாற்றின கொடுமையை, சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய "ஆலிவர் ட்விஸ்ட் " கதையின் முதல் அத்தியாயமே, சொற்சித்திரமாகக் கொண்டு வந்து கண் முன்னே நிறுத்துகிறது. தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்களுக்காக மட்டுமே இந்தக் கூடுதல் குறிப்புக்கள்!


தொழிற்புரட்சி, புதிய கண்டுபிடிப்புக்கள் என்பது பிரிட்டனின் ஏகபோகமாக இருக்கவில்லை. குறுகிய காலத்திலேயே ஜெர்மனி முதலான நாடுகள் உற்பத்தி செய்து குவிக்கத் தொடங்கிவிட்டன! எங்கே குவிப்பது? யார் தலையில் கட்டுவது? ஒரு உலகப்போர் மூள்வதற்கான மூலக்கூறுகள் 1870 ஆம் ஆண்டுகளிலேயே ஆரம்பித்து 1914 வரை, அதிகாரப்போட்டி, ஆதிக்கப் போட்டியாக  ஒரு முனை ஜெர்மனியை மையமாக வைத்தும், மறுமுனை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை வைத்தும் வளர்ந்துகொண்டே போயின.  


இதில் சுவாரசியமான தகவல்அமெரிக்கா, முதல் உலகப் போர் முடியப்போகிற தருணம் வரை போரில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. சுருக்கமாக, முதல் உலகப் போர் சந்தைகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பதில் தான் கருக்கொண்டிருந்தது. சந்தைகள், அரசியல் அதிகாரம், ஆதிக்கத்தை அடித்தளமாகக் கொண்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால், இந்த காபிடலிசம், கம்யூனிசம்...........அப்படியே கடைசியாக நம்மூர் அண்ணாயிசம் வரை எல்லா இசங்களைப் பற்றிய ஆராய்ச்சி இன்னமும் சுலபமாகிவிடும்!

1914 ஜூன் 28 ஆம் தேதி, ஆஸ்திரிய ஹங்கேரிய அரசுக்கு இளவரசரான ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்டை  செர்பியர்கள்  படுகொலை செய்ததில் இருந்து உலகம் தயாராக இரண்டு அணிகளாகப் பிரிந்து உலக யுத்தம் ஆரம்பித்தது என்று சொல்வார்கள்!முதல் உலக யுத்தம் முடிந்த பின் ஜெயித்தவர்களாக, பிரிட்டிஷ் பேரரசு, ரஷ்யா (1917 வரை) இத்தாலி, பிரான்ஸ், அப்புறம் அமெரிக்கா ( 1917 இற்குப் பிறகு)!

கவனியுங்கள்! போர் என்றால் பிணங்கள் குவியும்! அமெரிக்கக் கழுகும் உள்ளே வந்தாயிற்று!

தோற்ற தரப்பாக, ஜெர்மானியப் பேரரசு, ஆஸ்திரிய-ஹங்கேரி, பல்கேரியா, அப்புறம் ஆட்டோமான் அரசு இருந்தன. பலவீனப்பட்டு உருக ஆரம்பித்தன. சமாளித்து எழுந்தது ஜெர்மனி ஒன்று தான்


தோற்றவர்கள் மட்டுமல்ல, ஜெயித்த தரப்புமே கூட பொருளாதாரத்தில் பலவீனப்பட  ஆரம்பித்த தருணமாக முதல் உலகப் போர் முடிந்தது. அடுத்த போருக்கான தளமாகவும் காரணமாகவுமே ஆகிப்போனது.


இதன் பின்னணியோடு சேர்த்துப் பார்த்தால்தான், காகிதக் கரன்சிகளாக இன்று நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் பணம் மதிப்பிழந்து போய்க் கொண்டிருந்ததும், ஒரு புதிய பிசாசாக உருவெடுத்துக் கொண்டிருந்ததும் புரிய வரும்.அதற்கு முந்தைய காலங்களில் பணத்தின் மதிப்பு, தங்கம் அல்லது வெள்ளியின் மதிப்பினால் மட்டுமே அளவிடப்பட்டது. வங்கி  நோட்டுக்கள்  அல்லது கரன்சி எப்போது வேண்டுமானாலும், அதற்குச் சமமான தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றுக் கொள்கிற வசதியோடு இருந்தது. இப்போதும் கூட சில நாடுகளில் இந்த வசதி இருக்கிறது.

1929 களில் அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. Great Depression என்று அழைக்கப் படும் இந்த சரிவில் இருந்து மீண்டு வரப் பத்தாண்டுகளுக்கும் மேலானது. மீண்டு வரப் பெரும் உதவியாக இருந்தவை இரண்டு விஷயங்கள்!

ஒன்று
, Keynesian Theory அடிப்படையில் கடனை அஸ்திவாரமாக வைத்து, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிவைத்து எழுப்பப்படும் சீட்டுக் கட்டுக் கோபுரம்! இதை அமெரிக்க வங்கிகள், நிதித்துறை மிகவும் திறம்படவே சாதித்தன! வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!   இந்தப் பதிவில் மூன்றாவது வீடியோ, சுருக்கமாக, எளிமையாகச் சொல்கிறது.

இரண்டாவதாக
, அமெரிக்கத் தொழில்துறை நவீன ஆயுதங்களை  உற்பத்தி செய்து விற்பனை செய்கிற மரண வியாபாரிகளாக மிகப் பெரிய அளவில் உருவாகிக் கொண்டிருந்தது. அடுத்ததாக மருந்துகள் தயாரிப்பு! கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக, நோய்களைப் பரப்பும் சதிகாரர்களாகவுமே மருந்துத் தயாரிப்புத்துறை இருப்பதாக வலுவான சந்தேகங்கள், செய்திகள் அவ்வப்போது வரும்

இரண்டாம் உலகப்போர் முடிவில், எந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று பெருமையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார்களோ, அந்தப்பெருமை எல்லாம் போய், பெயரளவுக்குத் தான் சிங்கம் , பல், நகம் எலும்பு எல்லாமே  இழந்து, அமெரிக்காவை அண்டியே வாழ வேண்டிய நிலை உருவாயிற்று.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, உலகம் மூன்று கூறாகப் பிரிந்து நின்றன. போரில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள், அடிமை நாடுகளாக இருந்தவர்கள் என்று ஒரு புறம்! அமெரிக்கா ஒரு புறமும், ரஷ்யா ஒரு புறமும், தோற்றவர்களைக் கூறு போட்டுப் பங்கீடு செய்துகொண்டதில் உண்டான மூன்று என்று இன்னொரு
விதமாகவும் கூட!

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால், இரண்டு தரப்பிலுமே வலிமையானவர்களாக, வங்கி நிதித்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்தார்கள். பணம், வெறும் காகிதமாக மட்டுமே மாறிப்போனது!

காகித கரன்சி போதாதென்று, பிளாஸ்டிக் கடன் அட்டைகள் ஆரம்பித்து வைத்திருக்கும் சீரழிவு வேறு! மறுபடி நினைவு படுத்துகிறேன்!

The Money Changers!

ஆர்தர் ஹைலி எழுதிய நாவல்! இரண்டு நேர் எதிரான குணாதிசயங்கள் கொண்ட வங்கி நிர்வாகிகளை வைத்து, வங்கித் துறை எப்படி பேராசையால் இயங்குகிறது, தான் சேதப்படுவதுமல்லாமல், சுற்றி இருப்பவர்களையுமே நாசம் செய்கிறது என்பதை அழகாகச் சொன்ன புதினம்!கிடைத்தால் படித்துப் பாருங்கள்!

அப்படி மாற்றிப்போட்ட தகிடுதத்தத்தில் தானே சிக்கிக் கொண்ட கதையாக, இன்றைக்கு அமெரிக்கா மாட்டிக் கொண்டு முழிக்கிறது!காகித டாலர்களை லட்சக்கணக்கான கோடிஎண்ணிக்கையில்  அடித்து வெளியிட்டுமே கூட, கரை சேர முடியவில்லை! G-7 என்று வளர்ந்த நாடுகளாகச் சொல்லப்படும் நாடுகளில் அமெரிக்காவும், பிரிட்டனும் ஏற்கெனவே மீள முடியாத அளவுக்குத் திவாலாகிப்போய் விட்டன.

அதற்குப் பின்னாலும் எத்தனை மர்மங்கள்........?

இப்போது, கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான செய்தியாக, அடுத்து வரும் பல பத்தாண்டுகளின் போக்கைத் தீர்மானிக்கும் பொருளாதார, ராணுவ சூப்பர் வல்லரசாக சீனா உருவெடுத்திருக்கும் செய்தியின் முக்கியத்துவம் கொஞ்சமாவது புரிய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன்!
 
முந்தைய பதிவுகளை, குறைந்தபட்சம் அந்த மூன்று வீடியோக்களை மட்டுமாவது பார்த்து விடுங்கள். உங்கள் இணைய இணைப்பின் வேகத்தைப் பொறுத்து, வீடியோ லோடாகும் நேரம் இருக்கும். டவுன் லோட் செய்து கூடப் பார்க்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்! என்ன சந்தேகம் என்பதைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள், தொடர்ந்து பேசுவோம்