ஏற்கெனெவே இந்தக் கேள்விகளை பலமுறை இந்தப்பக்கங்களில், இந்திய அரசியல் சூழலோடும் பொருத்திப் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு சேத் கோடின் வலைப்பதிவில் ஏழே வரிகளில் படித்துக் கொண்டிருந்த போது இந்த சின்ன விஷயம் கூட நம்முடைய ஜனங்களுக்கு ஏன் புரிவதே இல்லை, இந்த தேசத்தில் நல்ல தலைவர்களே ஏன் கிடைப்பதில்லை என்ற யோசனையும் கூடவே வந்தது. சேத் கோடின்சொல்கிறார்... தலைவனுக்கு இருக்கவேண்டிய தகுதி தலைமையேற்று நடத்தத் தெரிந்திருப்பது! எழுத்தாளன் என்று சொன்னால் எழுதத் தெரிந்திருக்க வேண்டும், வாசிக்க ஆள் இருக்க வேண்டும்! நீங்கள் தலைவராக இருக்க விரும்பினால், தலைமை தாங்குங்கள்! என்று ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார்.நம்முடைய தலைவர்களாக இருப்பவர்களுடைய யோக்கியதை என்ன என்பதை பட்டும், கெட்ட பிறகும் கூட, இந்த அறுபத்து நான்கு ஆண்டுகளில் கொஞ்சமாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா?
இது ஒரு கேஸ் ஸ்டடி!
நடப்பு அரசியல் நிகழ்வுகளிலேயே, தலைமை, தலைமைப்பண்பு இருக்கவேண்டிய
இடத்தில் வெற்றிடமும்,தகுதி இல்லாதவர்களிடம் தலைமைப் பொறுப்பும் இருப்பதைக்
காண முடிகிறதா இல்லையா என்பதை சொல்லுங்கள்:
தேர்தலில் தோல்விக்கு பிறகு திமுக தலைமையை கைப்பற்ற முதல்வரின் மகன்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கட்சியிலும், குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டுள்ளது. | |
. | |
திமுக
தலைவர் கருணாநிதிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் மோதல்
ஏற்பட்டதால் திமுக தலைவர் ஆத்திரத்துடன் அறிவாலயத்திலிருந்து வெளியேறி
மகாபலிபுரத்துக்கு திடீரென சென்றார். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு புகாரில்
அடுத்தடுத்து வழக்கு, கைது போன்றவற்றால் அதனை எப்படி எதிர்கொண்டு
சமாளிப்பது என்று தெரியாமல் திமுக திணறி வருகிறது.
போதாக்குறைக்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கிடைத்த படுதோல்வி அந்த கட்சிக்கு பலத்த அடியாக விழுந்தது. இதற்கெல்லாம் காரணம் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம்தான் என்று அக்கட்சியினர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டனர். இதனிடையே, மாவட்ட செயலாளர்கள் பதவியை மாற்றக்கூடாது என்று அண்மையில் மு.க.அழகிரி தந்தையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள்தான் கட்சியின் அடித்தளம். அவர்கள் இல்லாமல் கட்சியை வழிநடத்த இயலாது என்று அவர் கூறியதாக தெரிகிறது. ஆனால் ஸ்டாலின் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாவட்ட செயலாளர்கள் சிற்றரசர்கள் போல செயல்படுவதாகவும் தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினர் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதால் தொண்டர்களுக்கும் கட்சிக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு விடுகிறது என்றும் ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, தலைமை பொறுப்பை கருணாநிதி, ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்றும் தலைமையில் மாற்றம் வேண்டும் என்றும் அக்கட்சியில் அதிருப்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன. இத்தகைய பிரச்சனைகளால் திமுகவிலும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் குழப்பமும் பதட்டமும் நிலவி வருகிறது. இந்த முக்கியமான காலக்கட்டத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரச்சனையின் உச்சக்கட்டமாக ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்கள் சிலர் ஸ்டாலினை பற்றி கருணாநிதியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி விசாரிப்பதற்காக ஸ்டாலினை கருணாநிதி கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு அழைத்துள்ளார். அப்போது கனிமொழிக்கு நெருக்கமானவர்கள் பற்றி ஸ்டாலின் கடுமையாக குறை கூறியதுடன் தனது அண்ணன் மு.க.அழகிரி பற்றியும் விமர்சித்துள்ளார். தன் மீது புகார் செய்ததன் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்று தெரியாதா என்று ஸ்டாலின் கொதித்திருக்கிறார். இவர்கள் இருவரும் குடும்ப உறுப்பினர்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது. அப்போது கருணாநிதி தனது மகள் கனிமொழிக்கு சாதகமாக பரிந்து பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதனை ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே அனல் பறக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் கடும் கோபத்துடன் கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறினார்கள். அங்கிருந்து கருணாநிதி நேராக மகாபலிபுரத்திற்கு பயணமானார். வழக்கமாக அவர் மகாபலிபுரம் சென்றால் அவருடன் செல்லும் முன்னாள் அமைச்சர்கள் யாரும் உடன் செல்லவில்லை. அவருடைய நிழல் சண்முகநாதன் மட்டும் அவருடன் சென்றார். ஆயினும் கருணாநிதி மாலையில் சென்னை திரும்பினார். இந்த சம்பவத்துக்கு பிறகு கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் அவரது மூத்த மகள் செல்வியும், குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்த முயல்வதாக அழகிரியை குற்றம் சாட்டியதாக தெரிகிறது. "முன்பெல்லாம் ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதிக்கு எதிராக குரலை உயர்த்தி பேசியதில்லை. ஆனால் இப்போது அவர் உறுதியாக தனது கருத்துக்களை எடுத்துச் சொல்கிறார். தன்னுடைய தந்தை கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்பதை இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்பதில் ஸ்டாலின் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளார்' என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கட்சி தலைமை பொறுப்பை கருணாநிதி, ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அழகிரியோ அதை முறியடிப்பதற்காகவே, தனது தந்தைதான் தொடர்ந்து கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. கட்சியைக் கைப்பற்றுவதில் இப்போது சகோதரர்கள் மட்டும் இன்றி கனிமொழி தரப்பும் களத்தில் காய் நகர்த்தி வருவது ஊர் அறிந்த ரகசியம்தான் என்றாலும், குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்கிற மாதிரி இவர்களுக்குள் நடக்கிற இந்த யுத்தம் கட்சியை முழுக்க முழுக்க பலவீனப்படுத்திவிடும் என்ற கவலை அடி மட்டத் தொண்டர்களுக்கு மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது. கட்சியை வைத்து கல்லா கட்டிச் சம்பாதித்தவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே கவலைப் பட்டு யோசனை சொன்னாலும் கேட்கிற நிலையில் தலைமை இல்லை. இந்த பிரச்சினை நடைபெற உள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய பொதுக்குழு உறுப்பினர்களை பொதுக்குழு கூட்டத்தில் இதுபற்றி பேச வைப்பதற்கு ஸ்டாலின் தரப்பினர் வியூகம் வகுத்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனை முறியடிப்பதில் அழகிரி தரப்பும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.திமுக பொதுக்குழு கூட்டத்தில் மோதல் வெளிப்படையாகவே வெடிக்கும் என்று எதிர் பார்க்கப் பட்டாலும், அத்தனையையும் பூசி மெழுகி உடன்பிறப்புக்களை உளுத்தம் பருப்பாக நனைத்து ஊறப் போட்டு மாவரைப்பதில் கருணாநிதியின் சாமர்த்தியம் தனிதான்! இந்த மாதிரி ஏய்ப்பதில் கலைஞனாக இருப்பதில் காட்டுகிற சாமர்த்தியத்தில் ஒரு சிறு பகுதியையாவது நல்லபடியாகப் பயன்படுத்தத் தெரிந்திருந்தால், இந்த அளவுக்குக் கேவலப்பட வேண்டி இருக்காது.
உச்சநீதி
மன்றம் ஒவ்வொரு கொட்டாக மத்திய அரசின் தலையில் கொட்டிக் கொண்டிருக்கிறது.
தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தொடை நடுங்கிகளாக இருக்கிறார்கள்
என்றால், கோளாறு அவர்களிடம் மட்டுமே அல்ல! அவர்களை அந்த இடத்தில் இன்னமும்
விட்டு வைத்திருக்கிற நம்மிடமும் தான்!
புரிகிறதா? |
தேவை! நம்மை வழிநடத்தும் நல்ல தலைவர்கள்! இப்போதுள்ள கழிசடைகள் அல்ல!
19 comments:
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!
Subscribe to:
Post Comments (Atom)
திரும்பத் திரும்ப சுப்ரீம் கோர்ட் இந்த அளவுக்கு எந்த அரசையும் - இன்னும் சொல்லப் போனால் எந்த நாட்டிலும் (அந்தந்த கோர்ட்)- விமர்சித்திருக்கவே முடியாது.இதை விட ஒரு கேவலம் இந்த நாட்டிற்கு இருக்கவே முடியாது. இந்த தி.ம.ராணி இந்தியாவை விட்டே ஓ(ட்)டுவதுதான் இந்த தேசத்துக்கு நல்லது. தேசத்தின் பாதுகாப்பு, தேசத்தின் வளர்ச்சி என்ற எந்த விஷயத்திலும் செயல் படாத ஒரு மத்திய அரசு.. வெளி நாடுகளில் பதுக்கப் பட்டுள்ள கறுப்புப் பணம் பற்றி ஒரு துளி கவலை கிடையாது(பெரும்பாலும் தனது என்பதால்), நாட்டில் சர்வ சாதாரணமாக தலை விரித்தாடும் ஊழல் பற்றி கவலை கிடையாது. அடுத்த தலைமுறை கொள்ளைக்குத் தலைமை தாங்கத் தயாராகிக் தயாராகிக் கொண்டிருக்கும் "கஞ்சி காந்தி"..எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்??? இன்னொரு பக்கம் கொஞ்சமாவது தேச பக்தி கொண்ட பா ஜ க இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன் படுத்திக்கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது!! மன்னர் ஆட்சியே எவ்வளவோ நன்றாக இருந்திருக்கக் கூடும்... சமீபத்திய உதாரணம் : பத்மநாப சாமி கோவிலில் இவ்வளவு செல்வம் இருப்பது தெரிந்திருந்தும், தங்கள் கட்டுப் பாட்டில் இருந்தும் - துளியும் தொடாமல் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியத்தின் வழி வாழும் கேரள மன்னர் குடும்பம்.
ReplyDeleteஇவனுங்க ரெண்டு பேரும் ஒருத்தனை ஒருத்தன் அடிசிகிட்டு செத்தானுங்கன்னா, மதுரை தினகரன் அலுவலகத்தில் எரிந்து செத்த ஊழியர்கள் ஆத்மா சாந்தியடையும், தமிழகம் சுத்தமாகும்.
ReplyDeleteரோமிங் ராமன்!
ReplyDeleteகருத்துக்கு நன்றி. இது ஒரு கேஸ் ஸ்டடி! நடப்பு அரசியல் நிகழ்வுகளிலேயே, தலைமை, தலைமைப்பண்பு இருக்கவேண்டிய இடத்தில் வெற்றிடமும்,தகுதி இல்லாதவர்களிடம் தலைமைப் பொறுப்பும் இருப்பதைக் காண முடிகிறதா இல்லையா என்பதை சொல்லுங்கள் என்று சொல்லியிருந்ததை கவனிக்கவில்லை போல இருக்கிறதே!
அறுபத்து நான்கு ஆண்டு ஓட்டுச் சீட்டு ஜனநாயகம், இன்னும் ஜனங்களுக்குத்தங்களுடைய பொறுப்பு, கடமை என்னவென்று சொல்லித் தரவில்லையா?அரசியல் இந்த அளவுக்குச் சீரழிந்திருப்பதில் ஜனங்களுக்குப் பொறுப்பே இல்லையா? சுதந்திரம், அதைப் பாதுகாத்துக் கொள்ளத்தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்பதை முந்தைய பதிவுகளில் நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது.
தலைவர்கள் சரியில்லாதபோது, அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஜனங்களுக்குத்தான். செய்யத்தவறும் போது நீங்கள் சொல்கிற மாதிரி தி.ம ராணி, ஏய்ப்பதில் கலைஞர்கள் மட்டும் தான் கிடைப்பார்கள்.
ஜெயதேவ் தாஸ்!
ஆசைகள் எல்லாம் குதிரைகளானால் ஆண்டி கூட அரசன் தான்! இப்படியொரு சொலவடை உண்டு. வீண் கனவு காண்பதை விட்டு விட்டு, நாம் செய்யக் கூடியது என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!
\\நாம் செய்யக் கூடியது என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!\\
ReplyDeleteநான் என்னத்த சொல்வது, அதான் நீங்களே \\சுதந்திரம், அதைப் பாதுகாத்துக் கொள்ளத்தெரிந்தவர்களுக்கு மட்டுமே\\ சொல்லிட்டீங்களே!!
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் இங்கெல்லாம் கூட ஜனநாயகம் தான் நடக்குது, ஆனா அங்க நம் நாட்டில் உள்ளது போல ஊழல் மலிந்துவிட வில்லையே! காரணம் என்ன? மக்கள் விவரமானவங்க, இலவச பிஸ்கட்டுகளுக்கு காத்திருக்கும் நாய்கள் அல்ல அவர்கள். Rs.1.76 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டு, தாழ்ந்த சாதிக்காரன் என்பதால் தான் குற்றம் சாட்டுகிறார்கள் என்று இல்லாத காரணத்தைக் காட்டி அவங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. அவர்களிடத்தில் ஒற்றுமை அதிகம். நம் நாட்டில் மக்கள் ஏமாளிகள், அப்பாவிகள், இளிச்சவாயர்கள். இங்கே ஆட்சி செய்வதற்கு காமராஜர் மாதிரி ஒரு தலைவர் இருந்தால் பிழைத்தார்கள். கருணாநிதி மாதிரி ஒருத்தன் வந்தால்......... அம்புட்டுதேன், மொத்தமும் ஸ்வாஹா....
ஜெயதேவ் தாஸ்!
ReplyDeleteதேர்ந்தெடுக்க நல்லவர்களே இல்லையா? எதனால் ஏய்ப்பதில் கலைஞர்களாகப் பார்த்துத்தேர்ந்தெடுத்தீர்கள்? சரி, ஒருமுறைதான் சூடு பட்டுத்தெரிந்துகொண்டாயிற்று!மறுமுறையும் எதற்காக வாய்ப்புக் கொடுத்தீர்கள்?ஐந்து முறை வாய்ப்புக் கொடுத்ததனால் தானே, இந்த அளவுக்குத் திமிருடன் கொள்ளை அடிக்க முடிந்தது?
தேர்ந்தெடுத்தீர்கள் சரி!அவர்களைக் கட்டுக்குள் வைக்கிற வசதி வாக்காளர்களுக்கு இருக்கிறதா?தவறு செய்கிறவனைத் திரும்ப அழைக்கும் உரிமை வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
தேர்தல் முறையே ஏய்ப்பதில் கலைஞர்களை மட்டுமே ஊக்குவிப்பது போல இருக்கிறதே, அதைக் குறித்து இந்தப்பக்கங்களில் நிறையப் பேசியிருக்கிறோம், அதைப்பற்றி ஏதாவது யோசித்திருக்கிறீர்களா?
இந்தக் கேள்விகள் உங்களுக்கானது மட்டுமில்லை! நம் அனைவருக்குமானது தான்! என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் விடை இருக்கிறது.
\\எதனால் ஏய்ப்பதில் கலைஞர்களாகப் பார்த்துத்தேர்ந்தெடுத்தீர்கள்?\\ அண்ணாதுரை, கருணாநிதி இவங்க ரெண்டு பெரும் பெரியார் கட்சியில் இருந்தவர்கள், பெரியார் கொள்கை பதவிக்குச் செல்லக் கூடாது என்பது. ஆனால் இந்த ரெண்டு பேருக்கும் பதவி ஆசை. பெரியாருடன் இருந்தால் அது நடக்காது என்று சொல்லி அவரிடம் அரசியல் அல்லாத ஏதோ குறைகளைச் சொல்லி, வெளியே போகிறோம் என்று வந்து பதவிக்கு குறி வைத்தார்கள். அப்போது காமராஜர், நல்ல தலைவர் அவர் வழி நடத்துதலில் நல்லாட்சி நடந்து கொண்டிருந்தது. இவர்கள் இருவரின் வாயில் இருந்து வந்ததெல்லாம் பொய், புளுகு மூட்டை, பித்தலாட்டம், வடிகட்டிய அயோக்கியத் தனம் மட்டுமே. இருந்தாலும் தேனொழுகப் பேசத் தெரிந்தவர்கள். எல்லோரும் வாயைப் பிளந்து கொண்டு பார்த்தார்கள், கேட்டார்கள். இவர்கள் அவிழ்த்து விட்டப் பித்தலாட்டத்தைஎல்லாம் உண்மை என்றே நம்பினார்கள். ஓட்டும் போட்டார்கள். அதுக்கப்புறம் தமிழகம் கெட்டு குட்டிச் சுவரானது வரலாறு. இதில் தி.மு.க. என்ற அயோக்கியப் பயல்கள் கட்சியின் கட்டமைப்பைப் பார்க்க வேண்டும். மாநில அளவில் கருணாநிதி குடும்பம் சுரண்டித் தின்னுவது போல மாவட்டம் வட்டம் பேரூராட்சி, ஊர் என்று இவர்களின் ஏஜெண்டுகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் [சேலம் என்றால் வீரபாண்டி ஆறுமுகம் மாதிரி] சுரண்டித் தின்ன வழிவகை செய்துள்ளார்கள், அவர்கள் கருணாநிதி ஒரு அயோக்கியன் என்பதை மக்கள் கண்ணில் இருந்து மறைத்து விடுகிறார்கள். அப்படியே இருந்தாலும் தி.மு.க. மாதிரி ஒரு கட்சி, தலைவன், கொள்கையை ஏன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.
ReplyDeleteஅண்ணாதுரை, கருணாதி இரண்டு பேரின் பேச்சை உண்மை என்று நம்பிய ஏமாளி மக்கள் அடுத்து வந்த எம்ஜிஆர், படத்தில் பேசியது, செய்தது எல்லாம் நிஜம் என்றும் நம்ப ஆரம்பித்தார்கள். படத்தில் ஒருத்தனே நூறு பேரை அடித்தால் அது பொய் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், எம்ஜிஆர் படத்தில், "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்... இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்" என்று பாடியது வெறும் சினிமா, நிஜத்தில் அது சாத்தியமாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை எனபது ஏனோ நம் மக்களுக்குப் புரியவில்லை. அந்த மனிதருக்கு ஓட்டுப் போட்டார்கள். அவரும் ஒன்றும் கிழித்துவிட வில்லை. அதற்க்கப்புறம் ஜெயலலிதா சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. இவை எல்லாமே சினிமாவின் அடிப்படையில் நடந்த விஷயங்கள். இவர்களுக்கு மாற்றாக நல்ல மனிதர்கள் நாட்டில் இருக்கலாம், ஆனால் ஒரு கட்சியை ஆரம்பித்து வளர்ந்து இவர்களுக்கு சவால் விட்டு, மக்களின் மனதில் இடம் பிடித்து வெற்றி பெரும் அளவுக்கு சாமர்த்தியமான தலைமைப் பண்புள்ள தலைவர்கள் யாரும் இல்லை. ஆக, மக்களும் வேறு வழியில்லாமல் இருக்கும் இரண்டு பிராடுகளுக்கே மாற்றி மாற்றி ஓட்டுப் போட வேண்டிய பரிதாபகரமான நிலை. ஒவ்வொரு முறையும், கொடுமை தாங்க முடியவில்லையே, முந்தைய ஆட்சியே கேவலமானாலும் இவ்வளவு கேவலமில்லையே என்று நினைக்கும் அளவுக்கு அட்டூழியம் செய்து வருகின்றனர். கேவலத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் அல்ல என்று ஒவ்வொரு முறையும் இருவரும் நிரூபித்து வருகிறார்கள். மக்கள் ஒரு போதும் கருணாநிதியை முழு மனதாக தேர்ந்தெடுக்க வில்லை. அம்மாதிரி சந்தேகத்திற்க்கிடமில்லாமல் மக்கள் ஆதரவு பெற்றவர் எம்ஜிஆர் ஒருத்தர் மட்டுமே. கருணாநிதி வெற்றி பெற்றதெல்லாம், அவருடைய எதிரிகள் ஒருத்தரை ஒருத்தர் காலைவாரிவிட்டுக் கொண்ட சமயத்தில் இவரது குள்ளநரித் தனத்தால் வழுவான கூட்டணியோடு ஆட்சியைப் பிடித்ததாகவே இருக்கும், அதுவும் [அப்படியும் மைனாரிட்டி அரசு.. வெட்கக் கேடு]
ReplyDelete\\தவறு செய்கிறவனைத் திரும்ப அழைக்கும் உரிமை வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?\\ நம்ம சனம் எல்லாம் லண்டனுக்குப் போய் Barrister of Law படிச்சிட்டு வந்து ஓட்டு போட்டுக்கிட்டு இருக்காங்கன்னு நினைச்சிட்டீங்களா? தமாஷ் பண்ணாதீங்க சார். தினசரி விற்கப் படும் பொருட்கள் அத்தனையும் கலப்படம், பழங்கள் காய்கறிகள் அத்தனையும் விஷம் - இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்க எத்தனையோ நடைமுறைச் சட்டங்கள் உள்ளன [நன்றாகப் படித்தவனுக்கும் கூட இது தெரியாது], இவற்றையே பயன் படுத்தத் தெரியாத சனத்துகிட்ட Hi-Fi விஷயத்தைப் பற்றியெல்லாம் கேட்டால் அதேங்கே சாத்தியமாகப் போகிறது? ஒரு பக்கம் விவரமில்லாத மக்கள், இன்னொரு பக்கம் படித்த நல்ல சம்பளத்தில் உள்ள ஒரு பிரிவு, இவனுங்க ஓட்டே போடப் போவதில்லை, தன் வயிறு நிறைந்தது நாடு எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்ற அக்கறையில்லாத நிலை, யார் போராடுவது?
ReplyDelete\\இந்தக் கேள்விகள் உங்களுக்கானது மட்டுமில்லை! நம் அனைவருக்குமானது தான்! என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் விடை இருக்கிறது.\\ சில சமயம் இயற்கைத் தொலைக் காட்சிகளில் காடு மிருகங்களைக் காட்டுகிறார்கள். அதில் சிங்கம் வேட்டையாடுவதைப் பாருங்கள். பத்து சிங்கம் இருக்கும். வரிக்குதிரை, Wilder beast இவையெல்லாம் ஆயிரக் கணக்கில் இருக்கும். ஆனாலும் சிங்கம் விராட்டும் போது எதிர்க்காது, ஓட்டம்தான் பிடிக்கும். அவற்றில் ஏதாவது ஒரு மிருகத்தை சிங்கம் தாக்கி இரையாக்கிக் கொள்ளும், மற்ற மிருகங்கள், ஆகா நாம் தப்பிச்சோமே அது போதும், மாட்டிய மிருகத்தைப் பற்றி எனக்கென்ன கவலை என்று அதுபாட்டுக்கு புல் தின்னப் போய் விடும். அவற்றுக்கும் ஒருபோதும் விளங்காது, நாம் ஒன்று சேர்ந்தால் இந்த பத்து சிங்கத்தை தவிடுபொடியாக்கி விடலாம் என்ற விஷயம். நம்மிடமும் அதே என்ன ஓட்டம்தான் உள்ளது. ஆறு கோடி மக்கள் வாழ்க்கையை காலா காலத்துக்கும் இருட்டாக்கிவிட்டு என்னுடைய சுவிஸ் வங்கி அக்கவுன்ட் செழிப்பாக இருந்தால் போதும் என்று இருக்கிறான் பாடையில் போகும் வயதில் உள்ள ஒருத்தன். இவனுடைய எண்ணமெல்லாம் இவனும், இவனுடைய குடும்பமும் மட்டுமே. இவன் பெத்து போட்டுள்ள குட்டிகள் இவனை விட மகா அயோக்கியர்கள், நாதாரிகள். ஏமாளி மக்கள் இவனுங்க கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறாங்க. இவனுங்க பதவியில் இல்லையென்றாலும், இவனுங்க அடிச்ச கொள்ளையில் இருந்து மக்கள் மீள முடியுமா என்பதே சந்தேகம். நாட்டை காட்டிக் கொடுத்த தே... பசங்க. கோடிக்கணக்கான மக்கள் வருங்காலத்தில் பட்டினியாலும் பஞ்சத்தாலும் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டி கொண்டு, கடனில் இருந்து மீளவே முடியாமல், காரணமே புரியாமல் சாவார்கள், ஆனால் அவர்களுக்கு ஒரு போதும் புரியாது அவர்கள் உண்மையில் ஏழைகள் இல்லை, அவர்கள் பணம் இந்த திருட்டு தே.... பசங்களால் கொள்ளையடிக்கப் பட்டு வெளிநாட்டில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது. இந்த தே. ... பசங்களால் பணத்துக்காக நாட்டில் வளங்கள் சுரண்டப் பட்டு பன்னாட்டு கம்பனிகளுக்கு விற்கப் பட்டது, என்று புரியாமலேயே பிறந்தது முதல் சாகும் வரை கஷ்டத்திலேயே நெருப்பில் விழுந்த புழுவாக துடித்தே சாவார்கள். எல்லாத்துக்கும் காரணம் இந்த தே... பசங்க என்பது அவர்களுக்கு புரியவே புரியாது.
ReplyDeleteஜெயதேவ் தாஸ்!
ReplyDeleteநிறையவே பொங்கி இருக்கிறீர்கள்! அப்படிப் பொங்கியதில், நிறைய இடங்களில் தப்பாகவே புரிந்து கொண்டு உங்கள் வாதங்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
முதலாவதாக, ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாது முழுக்க முழுக்க சரியில்லை! தமிழ்நாடு மாதிரி, வேறு எந்த மாநிலத்திலும் டீக்கடைகள், சலூன்கள் உட்பட எல்லா இடங்களுமே அரசியல் பேசப்படுகிற தளம் இருந்ததில்லை! அரசியலை, அரசியலாகப் பார்க்காமல், வெறும் வெட்டி அரட்டையாக, ஊர்வம்பு பேசுகிற இடமாக மாற்றிக் கொண்டார்கள். கூத்தாடிகளை நடுவீட்டுக்குள் கூட்டி வைத்துத்தங்கள் தலைமேலேயே ஏறி ஆட அனுமதித்தார்கள் என்பதெல்லாம் அறியாமையினால் நடந்தது என்றா சொல்ல வருகிறீர்கள்?
இலவசங்களில் மயங்கிக் கிடக்கத் தெரிந்தவர்களுக்கு, ஒன்றுமே தெரியாது என்றா சொல்கிறீர்கள்?எங்கே என்ன நடந்தால் என்ன என்ற அலட்சியம், நம்மை பாதிக்கவில்லையே நாம் ஏன் வீணாகக் கொந்தளிக்க வேண்டும் என்ற சோம்பேறித்தனம், ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் இல்லாமல் ஊமைச் சனங்களாக, ஜடங்களாகக் குறுகி நின்றது தெரியவில்லையா? படித்த, நல்ல சம்பளத்தில் உள்ள ஒரு பிரிவை மட்டும் குறை சொல்லத் தெரிந்தவருக்கு,அதே கோளாறு எல்லாத் தரப்பிலும் இருந்தது என்று புரியவில்லையா?
இன்னும் கொஞ்சம் நுணுக்கிப் பார்ப்போம்! இன்றைக்குக் குடும்ப ஆதிக்கத்தால் தான் தோற்றோம் என்று புலம்பும் திமுகவினர், தங்கள் கட்சிக்குள் அதைத்தடுக்க என்ன செய்தார்கள்? கேவலமாகத் தோற்ற பிறகு வருகிற ஞானோதயம் ஏன் முன்பே வரவில்லை? தங்களுக்கு ஆதாயம் கிடைக்கிற வரை சும்மா இருந்துவிட்டு, இப்போது அடுத்த ஆட்சி வந்து தங்களை ஓட ஓட விரட்டும்போது வருகிற ஞானம் ஏன் முன்பே வரவில்லை?
அடுத்து தான் பிழைத்தால் போதும் என்று ஓடுகிற மிருகங்களை உதாரணம் காட்டி இருக்கிறீர்கள். அது முழு உண்மையானால், நம்முடைய "பகுத்தறிவு" பற்றிப் பேசுவதில் அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறதே!
இந்தப்பிரச்சினைகளை, வெறும் திமுக, காங்கிரஸ் என்ற மட்டிலேயே பேசுவதைக் கொஞ்சம் மாற்றி ,தலைவர்கள் தானாக சுயம்புவாக உருவாவதில்லை, நாம் தான் அவர்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் யோசித்துப்பாருங்களேன்!
\\முதலாவதாக, ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாது முழுக்க முழுக்க சரியில்லை!\\ ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்ல முடியாது. சூட்சுமமான விஷயங்கள், அவை மீடியாக்களால் வெட்ட வெளிச்சமாக அலசி ஆராயப் பட்டு தெரியப் படுத்தினாலும், மக்களுக்கு அது விளங்காது. உதாரணம்: இலவசங்கள். இதை வேண்டாம் என்று சொல்லாத ஆட்களே இல்லை. அதே சமயத்தில் அது ஒன்றும் கருணாநிதியின் பக்கெட்டில் இருந்து கொடுக்கப் படுவன அல்ல, இன்னொரு வடிவத்தில் [சாராய வியாபாரம், வளர்ச்சித் திட்டங்களின் பாதிப்பு என்று] இடியாக நம் தலை மேல் தான் விழும் என்பது மெஜாரிட்டி மக்களுக்குத் தெரியாது. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் கிளைகளை ஆரம்பித்து Factory-ஐத் திறந்தால், நமது விவசாய நிலங்கள், தண்ணீர், மின்சாரம் எல்லாவற்றையும் உறிஞ்சப் படும், நாய் பிஸ்கட் போல சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் அவ்வளவுதான் என்பது பலருக்குத் தெரியாது. கருணாநிதியும், அவர் மகன்களும் நாட்டை கூறு போட்டு விற்கத் தயங்காதவர்கள் என்று தெரிந்தும் 40% மக்கள் அவர்களுக்கு ஓட்டுப் போடத் தயாராக இருப்பது அறியாமை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். விஷயம் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களது தீர்ப்பு எடுபடுவதில்லை.
ReplyDelete\\கூத்தாடிகளை நடுவீட்டுக்குள் கூட்டி வைத்துத்தங்கள் தலைமேலேயே ஏறி ஆட அனுமதித்தார்கள் என்பதெல்லாம் அறியாமையினால் நடந்தது என்றா சொல்ல வருகிறீர்கள்?\\ அமாம், இல்லை என்று நீங்கள் சொன்னால் வேறென்ன காரணம் என்பதையும் சொல்லுங்கள்.
ReplyDelete\\இலவசங்களில் மயங்கிக் கிடக்கத் தெரிந்தவர்களுக்கு, ஒன்றுமே தெரியாது என்றா சொல்கிறீர்கள்?\\ எல்லோருக்குமே ஒரு சில வீக்னெஸ் இருக்கும். ஒரு நல்ல தலைவனாக இருந்தால் தனது செயல் பாடுகள் மூலம், மக்கள் அதில் விழாமல் மேம்பாடு அடையச் செய்வான். மஞ்சள் துண்டு மாதிரி ஒருத்தன் அதை தனது சுயநலத்துக்காக பயன் படுத்திக் கொள்வான். சாராயம் கள்ளத் தனமாக குடிக்கத் தான் செய்வார்கள். அவர்கள் திருந்த செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், சாராயத்தை விற்று மேலும் குடிகாரர்களை ஒருத்தன் உருவாக்குகிறான், இவன் பெரியாரின் தொண்டனாம்!! [கள்ளு, சாராயக் கடைகளை ஒழிக்க வேண்டும் அவை குடியைக் கெடுக்கும் என்று அரும்பாடு பட்டவர் பெரியார்]. இலவசம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம், ஓட்டு போட காசு கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்று தான் சாமான்யன் நினைப்பான், ஆனால் அதைத் தடுக்க எதுவும் செய்யாமல், தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டான் பாடையிலே போகும் வயதைத் தாண்டி பூமிக்கு பாரமாக வாழும் ஒரு தே.. மகன்.
ReplyDelete\\எங்கே என்ன நடந்தால் என்ன என்ற அலட்சியம், நம்மை பாதிக்கவில்லையே நாம் ஏன் வீணாகக் கொந்தளிக்க வேண்டும் என்ற சோம்பேறித்தனம், ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் இல்லாமல் ஊமைச் சனங்களாக, ஜடங்களாகக் குறுகி நின்றது தெரியவில்லையா? படித்த, நல்ல சம்பளத்தில் உள்ள ஒரு பிரிவை மட்டும் குறை சொல்லத் தெரிந்தவருக்கு,அதே கோளாறு எல்லாத் தரப்பிலும் இருந்தது என்று புரியவில்லையா?\\ இதெல்லாம் நான் சொன்னதே தானே, இவற்றை நான் எங்கே மறுத்தேன்!!
ReplyDelete\\\இன்னும் கொஞ்சம் நுணுக்கிப் பார்ப்போம்! இன்றைக்குக் குடும்ப ஆதிக்கத்தால் தான் தோற்றோம் என்று புலம்பும் திமுகவினர், தங்கள் கட்சிக்குள் அதைத்தடுக்க என்ன செய்தார்கள்? கேவலமாகத் தோற்ற பிறகு வருகிற ஞானோதயம் ஏன் முன்பே வரவில்லை? தங்களுக்கு ஆதாயம் கிடைக்கிற வரை சும்மா இருந்துவிட்டு, இப்போது அடுத்த ஆட்சி வந்து தங்களை ஓட ஓட விரட்டும்போது வருகிற ஞானம் ஏன் முன்பே வரவில்லை?\\ இவனுங்க ஒழியனும், ஞானோதயம் எல்லாம் வந்து அரசியலில் இவனுங்க இருக்கணும் என்றெல்லாம் எனக்கு விருப்பம் இல்லை. இவனுங்க ஒழிஞ்சா தமிழகம் கொஞ்சமாவது உருப்படும், வேறு எவனும் இவனுங்க அளவுக்கு அயோக்கியத் தனம் செய்யமாட்டார்கள் என்று மட்டும் உறுதியாகக் கூற முடியும்.
ReplyDelete\\அடுத்து தான் பிழைத்தால் போதும் என்று ஓடுகிற மிருகங்களை உதாரணம் காட்டி இருக்கிறீர்கள். அது முழு உண்மையானால், நம்முடைய "பகுத்தறிவு" பற்றிப் பேசுவதில் அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறதே!\\ கடந்த ஆட்சியைப் பற்றி உங்களுக்கே நன்றாகத் தெரியும், மாநிலத்தில் எங்காவது அதற்க்கு எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்தினார்களா? வீரபாண்டி ஆறுமுகமும், அவரது கைத்தடிகளும் சேலத்தில் பல முதியவர்கள், ஆதரவற்றவர்களின் நிலங்களை மிரட்டி தங்கள் பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்டார்களே? மக்கள் பொங்கி எழுந்தார்களா? எழவில்லை என்றால் காரணம் என்ன? நமக்கெதுக்கு அதெல்லாம் என்ற எண்ணம் தானே? அந்த உதாரணம் தவறு என்றால், மக்கள் வேறெப்படி இருக்கிறார்கள் என்று நீங்களே சொல்லுங்களேன்? தனக்குப் பின்னை கட்சி சொத்துகள் தன்னுடைய மகனுக்கே போக வேண்டும் என்று வீரமணி கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார், கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டு கொண்டுள்ளார், எங்கே இருக்கிறது பகுத்தறிவு?
ReplyDelete\\தலைவர்கள் தானாக சுயம்புவாக உருவாவதில்லை, நாம் தான் அவர்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் யோசித்துப்பாருங்களேன்! \\ இங்கதான் நீங்க தப்பு பண்றீங்க. தலைவர்கள் உருவாக்கப் படுவதில்லை, பிறக்கிறார்கள். காந்தியை யாரும் உருவாக்க வில்லை, ஹிட்லரை யாரும் உருவாக்க வில்லை, காமராஜர், வல்லபாய் படேல் யாரும் உருவாக்கப் படவில்லை. அவர்களுக்கு தலைமைப் பண்புகள் இருந்தன, இன்றைக்கும் சரி, அதே திறனுள்ள தலைவர் இருந்தால் தானாகவே மேலே வருவார், இப்போதைக்கு தமிழகத்தில் அப்படி யாரும் இருபதாகத் தெரியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDeletehttp://consenttobenothing.blogspot.com/2009/12/blog-post_25.html
ReplyDeleteஇந்தப்பதிவு, தலைமை, தலைமைப்பண்பு, தலைவர்கள் உருவாகும் விதம் அல்லது சுயம்புவாக பிறப்பது குறித்து ஏற்கெனெவே எழுதியதில் ஒரு பகுதி, உங்களுடைய கேள்விகளுக்குப் பதிலாக இருக்கக் கூடும்.
தலைமைப்பண்பு என்பது எல்லோருக்கும் வேண்டியதே, எல்லோரும் கொஞ்சம் பயிற்சியில் பெறக்கூடியதே.
நீங்கள் சொன்ன பதிவைப் படித்தேன்!! நீங்கள் கொடுத்துள்ள உதாரணம், தன்னைத் தானே தலைவனாக வளர்த்துக் கொள்ளாமல், தன் மேல் திணிக்கப் பட்ட தலைவன் பதவியை கையாளத் தெரியாதவர்களைப் பற்றியதாகும். இன்னொரு ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்: \\தலைமைப்பண்பு என்பது எல்லோருக்கும் வேண்டியதே, எல்லோரும் கொஞ்சம் பயிற்சியில் பெறக்கூடியதே.\\ இது முற்றிலும் தவறு. பயிற்சியளிக்கப் பட்டால் எல்லோரும் இளையராஜாவாகவோ, ரஹ்மானாகவோ ஆகிவிட முடியுமா? பயிற்சியளிக்கப் பட்டால், பெங்களூரு நகரப் பேருந்து கண்டக்டர்கள் எல்லோரும் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார்களா? நடக்காது. ஒவ்வொருவருக்கும் ஒரு inner nature இருக்கும். அதன் படிதான் அவன் வளருவான். எல்லோருக்கும் நீங்கள் ஓவியம் கற்றுக் கொடுக்கலாம். அவர்களும் பேப்பரில் எதையாவது கிறுக்கலாம், ஆனால் எல்லாம் ஓவியம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. தலைமைப் பண்பு என்பதும் ஒரு கலை. மற்ற கலைகளைப் போலவே அதிலும் சிலர் தான் சிறந்து விளங்குவார்கள். காமராஜர், சர்தார் படேல் போன்றோர் எந்த IIM லும் போய்ப் படிக்கவில்லை. அவர்களைப் போன்ற சிறந்த தலைவர்கள் யார்? பில் கேட்ஸ் பள்ளி drop out. அவர் உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தை நிர்வகிக்க வில்லையா? தலைவர்கள் பிறக்கிறார்கள், நீங்கள் தலைவனாவது எப்படி என்று எல்லோரையும் அழைத்து வைத்து வகுப் பெடுக்கலாம், ஆனால் தலைமைப் பண்பு அவனுக்குள் இல்லையென்றால் நீங்கள் என்னதான் படம் நடத்தினாலும் அது வீண் தான்.
ReplyDelete