சண்டேன்னா கொஞ்சம் ஸ்பெஷல்தான்! வாங்க! வாழ்த்து சொல்லலாம்!

கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கக் கூடாது என்று பிஜேபியின் ஜஸ்வந்த் சிங் சொன்னதை அந்தக்கட்சியின் இன்னொரு பிரமுகர்,யஷ்வந்த் சின்ஹாவும் (இவர் முன்னாள் நிதியமைச்சராக இருந்தவரும் கூட!) ஆமோதித்திருக்கிறார். பிஜேபியின் முரளி மனோகர் ஜோஷி இன்னொருபக்கம், 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தம் இருப்பதால்,உள்துறை அமைச்சகச் செயல்பாடுகளில் குளறுபடிகள் இருப்பதால், 2009 தேர்தலில் ஜெயித்தவிதம் கேள்விக்குரியதாக இருப்பதால், ப.சிதம்பரத்தை மத்திய அமைச்சரவையில் இருந்து மன்மோகன் சிங் நீக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
காங்கிரஸ் அளவுக்கு இல்லை என்றாலும், அதற்கடுத்த பெரிய கட்சியாக இருக்கும் பிஜேபியும் முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கிறது என்பது தெரிந்ததுதான்! அதனால் தானோ என்னவோ, காங்கிரசுக்கு மாற்றாக பிஜேபியை ஜனங்கள் நினைக்க மாட்டேன், இன்னொரு சந்தர்ப்பம் தரமாட்டேன்  என்கிறார்கள் போல!

நம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், என்றைக்குமே தங்களுடைய வேலையை ஒழுங்காக செய்ததில்லை! முதல் இரண்டு, மூன்று பொதுத்தேர்தல்களில் ஜெயித்த பிரதிநிதிகளை விட்டுவிடலாம்! அவர்களுடைய நல்லெண்ணத்தில் சந்தேகம் இல்லை என்றாலும் நேருவின் கவர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் வணங்கிப் போனார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்! 

ஆனால்,நேருவுக்குப் பின்னால் வந்த வாரிசுகள் ஒருத்தர் விடாமல் வானளாவிய அதிகாரம் தங்களுக்கு மட்டுமே இருப்பதுபோல மார் தட்டிக் கொண்டு கூத்தடிப்பதில் என்றைக்கும் சளைத்ததில்லை. 

வாரிசுகளுக்கு ஜால்ரா தட்டிக் கொண்டு, சைடில் தங்கள் சுயலன்களைக் கவனித்துக் கொண்டதில் காங்கிரஸ்காரர்கள் எவரும் சோடை போனதில்லை!

மக்கள் பிரதிநிதிகள் தான் தங்கள் கடமையை செய்வதில்லை!அரசு, நிர்வாகம் இப்படி இந்த இரண்டு அமைப்புக்களாவது தங்கள் கடமையை ஒழுங்காக செய்கின்றனவா? உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இவர்களால் உபத்திரவம் இல்லாமல் இருந்தாலே போதும் என்ற அளவுக்குத்தான் செயல்பாடுகள் இருக்கின்றன. நீதித் துறையும் அதே கதைதான்! தப்பித்தவறி ஒரு நல்லவர் பதவியில் அமரும்போது மட்டும், ஜனங்களுக்குக் கொஞ்சம் விடிவுகாலம்!

உதாரணத்துக்கு, இப்போது உச்சநீதிமன்றத்தின் தலைமைநீதிபதி பொறுப்பில் இருப்பவருடைய நாணயம் தான் இத்தனை ஊழல் விவகாரங்களையும், ஊழல் அரசியல்வாதிகளையும் இந்த அளவுக்கு அம்பலப்படுத்தியிருக்கிறது.
கே ஜி பாலக்ருஷ்ணன் மாதிரி ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதி இந்த இடத்தில் இருந்திருந்தால், ன்ன ஆகியிருக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! 
ஆ.ராசா,கனிமொழி, கல்மாடி.இப்போது தயாநிதி மாறன் என்று வரிசையாக அரசியல்வாதிகளை  திஹார் சிறைக்குள் கற்பனை செய்தாவது பார்த்திருக்க முடியுமா?

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி திரு ஒ பி சைனி கனிமொழி ஜாமீனை மறுத்துச் சொன்ன ஒரு விஷயம் இந்த இடத்தில் மிகப் பொருத்தமானது:

“Considering the magnitude of the crime, nature and enormity of the allegations, character of evidence on record and the apprehension that the witnesses may be influenced in case the accused are released on bail, I have no hesitation in holding that both applicants/ accused have failed to make out a prima facie case for bail.

“Bail applications are without merit and the same are dismissed,” the court said in its 144-page order brushing aside her (kanimozhi's) lawyer Ram Jethamalani’s arguments that urged for chivalry for her being a woman.

ஜாமீன் கொடுப்பது, காரணங்களின் நியாயத்தின் அடிப்படையில் மட்டுமே என்று வரும்போது, "ஊழல் என்பது சமுதாயத்துக்கு எதிராக இழைக்கப்படும் மிகப்பெரிய குற்றம்" என்று நீதிபதி சொன்னது பிஜேபி அரசியல்வாதிகளுக்கு சரியாகப் புரியவில்லை போல இருக்கிறது! கேவலம், அவர்களும் ஊழல் அரசியல் வியாபாரம் செய்பவர்கள் தானே!

மக்கள் பிரதிநிதிகள்,அரசு இயந்திரம், நீதிமன்றங்கள் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருவிதமாக செயல் பட்டுக் கொண்டிருந்தாலும், எவர் என்ன சொன்னாலும் சரி, ஏற்றுக் கொண்டாலும், தூக்கிக் குப்பைத் தொட்டியில் வீசினாலும் சரி, தங்களுடைய கடமையை சரியாக செய்து கொண்டிருக்கும் ஒரே அமைப்பு என்று தேடிப்பார்த்தால், இன்றைக்கு தணிக்கைத் துறை ஒன்று மட்டும் தான் கண்ணுக்குத் தெரிகிறது. அப்படி என்ன சாதித்துவிட்டார்கள் என்று கேட்கிறீர்களா?


CAG Catch 1

2G Spectrum, 2010

The CAG audit over a six-year period from 2003 finds loopholes in the implementation of norms, leading to DoT allocating spectrum at 2001 prices. Estimated loss to exchequer: the now-household figure of Rs 1.76 lakh crore.

Outcome Former telecom minister A. Raja, MP Kanimozhi, telecom and real estate executives are in jail. Has raised questions on whether CAG should dwell on policy matters.

Catch 2

Gorshkov deal, 2009

CAG raises a stink about cost escalation in the procurement of Russian aircraft carrier Admiral Gorshkov, and the indigenous construction of six French Scorpene subs. Navy had agreed to pay Rs 5,000 crore more for Gorshkov.

Outcome The government was forced to respond to the public outcry and reopen both deals, along with taking a fresh look at all future acquisitions.

Catch 3

Defence deals, 2009

On the heels of a CBI probe into procurement, CAG finds irregularities in the award of contract, flouting of norms of agreement with overseas suppliers, lack of internal audit mechanism among others. Estimated loss: Rs 9,000 crore.

Outcome Many CAG recommendations have been accepted, leading to better safeguards. However, defence deals remain an area of concern, with kickbacks galore.

Catch 4

CWG, 2009

The CAG is not an auditor on call, but was asked by then sports secretary for a concurrent audit of the Commonwealth Games. Its report to the PM, a year ahead of the event, highlights several irregularities in the run-up to the Games.

Outcome The probe and trial of CWG organising committee bosses, including Suresh Kalmadi, are in progress. The CAG’s audit report of the Games is to be tabled soon.

Catch 5

Nuclear fuel, 2009

CAG blames DAE for being lax about not using available resources for nuclear energy production. Says capacity utilisation at N-plants was brought down by 50 per cent during 2003-08, resulting in an estimated loss of Rs 6,000 crore.

Outcome India continues to look overseas for nuclear fuel supply and for partnering its nuclear power programme, especially in the wake of the Indo-US civilian nuclear deal.

Catch 6

NRHM, 2009

CAG blows holes in government claims of improvement in health services through the National Rural Health Mission. Report reveals that 71 per cent districts in the country are not covered by the scheme due to paucity of funds.

Outcome The government engaged more ASHAs or community health workers. More focus on rural health infrastructure development and incentivising better healthcare.

Catch 7

NREGS, 2008

CAG report reveals shortcomings in the implementation of the flagship National Rural Employment Guarantee Scheme, leading to loss of resources without benefits accruing to target beneficiaries.

Outcome Union rural development ministry working with states to improve implementation. CAG is using pocketbook-sized reports to spread awareness.


The Big Fish In The Net...


(Photographs by Sanjay rawat)
Former telecom minister A. Raja and MP Kanimozhi are in jail for irregularities in 2G spectrum allocation, while Suresh Kalmadi is being investigated for CWG fraud.

...And Coming Soon

Performance audit of oil majors
 • The CAG draft report hinting at gold-plating by exploration biggies, including RIL, Cairn and British Gas is already making waves
Revenue-sharing norms in PPPs
 • The audit report of the civil aviation ministry has pointed to Delhi International Airport Limited not following agreed norms in the public-private partnership, leading to huge losses
Special audit on Air India
 • CAG is looking at the loss-making national carrier’s PPP forays and outsourcing deals
Commonwealth Games
 • The final audit on the Games which has seen several controversies and arrests. And a parallel investigation.
And finally...
 • This year, CAG will also do a performance audit of the government’s flagship social development schemes, including NREGA, and look at the commercial deals of several PSUs.

எது எப்படி இருந்தாலும் தங்களுடைய கடமையை சரியாகச் செய்து கொண்டிருக்கும் தணிக்கைத் துறைக்குத் தலைவணங்கி, வாழ்த்துவோம்! 
இவர்களுடைய அயராத பணி இல்லையென்றால் இந்த தேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே எவருக்கும் தெரியாது!

அவுட்லுக் வார இதழுக்கு, தகவல்கள், மற்றும் படங்களுக்காக நன்றியுடன்!

இந்த சண்டே நல்ல சண்டேயாக இருக்க வாழ்த்துக்களுடன்! 


பதிவு பிடிச்சிருக்கா? பக்கத்தில் இருக்கும் ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்! 


3 comments:

 1. அன்னா ஹசாரே,ராம் தேவ் போன்றோரின் உண்ணாவிரதப் போராட்டங்களை எதிர்க்கட்சியாக பி.ஜே.பி சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று அறிக்கை விட்டு ஆளுக்கு ஒரு நிலைக் கருத்து என்றே செயல்படுகிறார்கள்.

  மத பிரிவினை வாதம்,சரியான தலைமையின்மை போன்றவை பி.ஜே.பியின் வளர்ச்சிக்கு தடை.லோக்பால் மசோதாவில் கூட திடமான முடிவுகள் இவர்களுக்கு இல்லை.

  ஒரு வேளை நாளை பதவிக்கு வந்தால் நமக்கு நாமே ஆப்பு வைத்துக்கொண்டு விடுவோமோ என்ற அச்சம் கூட தயக்கங்களுக்கு காரணமாக இருக்கலாம்.எப்படியோ தயங்கி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

  ஜஸ்வந்த் சிங்க் எப்பொழுது கட்சி சார்ந்த கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்:)

  ReplyDelete
 2. உள்ள போயிருக்கறது. சின்ன மீன்கள் தான்.. பெரிய திமிங்கலங்கள் வெளியே உலவிக் கொண்டுதான் இருகின்றன..

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!