சண்டேன்னா மூணு! சொரணை உள்ள மனிதர்! சொரணை கெட்ட அரசியல்! சோனியா காண்டி!

சொலிசிடர் ஜெனெரல் திரு கோபால் சுப்பிரமணியம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருக்கிறார். மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இதை ஏற்றுக் கொள்ள மறுத்த பிறகும் கூட, தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கும் திரு கோபால் சுப்பிரமணியம் இன்றைக்கு. தன்னுடைய பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்காகவே ராஜினாமா முடிவை எடுத்ததாக சொல்லி இருக்கிறார். நேற்றைக்கு ராஜினாமா, இன்றைக்கு ஜனாதிபதியுடன் சந்திப்பு! தன்னுடைய பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றுகிற அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டதாம்?

காங்கிரசின் உளறுவாயர்களில்(அதாங்க! கட்சியின் சார்பில் பேசுகிற பேச்சாளர்கள்!) முக்கியமானவரான கபில் சிபல், தன் மீது உச்சநீதி மன்றத்தில் நேற்றுமுன்தினம் தொடரப்பட்ட போதுனலவழக்கில், அரசின் சார்பில் ஆஜராகி வரும் கோபால் சுப்ரமணியத்தை நம்பி இருந்தால், ஆ ராஜா முதலானவர்கள் வரிசையில் தானும் போய்ச் சேர்ந்து கொள்ள வேண்டி வரும் என்று நினைத்தாரோ என்னவோ, ரோஹிங்க்டன் நாரிமன் என்று ஒரு தனி வழக்கறிஞரைத் தன் சார்பில் நியமித்துக் கொண்டார். அது தன் மீது நம்பிக்கைக் குறைவைக் காட்டுவதாக நினைத்த கோபால் சுப்பிரமணியம் தன்னுடைய பதவியை ராஜினாமாசெய்ய முன் வந்திருக்கிறார். கொஞ்சம் ரோஷம், சொரணை உள்ள மனிதர் தான் போலிருக்கிறது! இன்றைய நிலவரப்படி அது எந்த மட்டத்தில் இருந்தாலும் சரி,சொரணை இருப்பது கொஞ்சம் அபூர்வமான விஷயம் தான்!
2009 இல் சொலிசிடர் ஜெனரலாகப் பதவியேற்ற நாளில் இருந்தே 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் இவரை முதலில் வாட்ட ஆரம்பித்துவிட்டது. உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நீதிமன்றத்தின் உக்கிரத்தை அனுபவித்தவர் இந்த கோபால் சுப்பிரமணியம் தான்! 2010 இல், உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை ஒருங்கிணைந்து கையாளுவது எப்படி என்பதைப் பேச சிபிஐ அதிகாரிகள் விவேக் பிரியதர்ஷி,சுரேஷ்குமார் பல்சானியா இருவரையும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து, அவர்களுக்குத் தெரியாமலேயே ஆ.ராசாவின் வழக்கறிஞரையும் அழைத்த அளவுக்கு விசுவாசமாகத் தன்னுடைய கடமையை நிறைவேற்றியவர்.

சிபிஐ அதிகாரிகள் இருவரும் தங்களுடைய மேலதிகாரிகளைத் தவிர வேறு எவரிடமும் இந்த வழக்கு விவகாரத்தைப் பேச மாட்டோம் என்று அந்தக் கூட்டத்தில் இருந்து  வெளிநடப்பு செய்ததும் அதிகம் வெளியே வராத செய்திகள்.

Late last year, according to an official in the law ministry, Palsania and Priyadarshi walked out of a meeting with Solicitor General Gopal Subramaniam, who had called them to his residence to discuss a "unified strategy" on the 2G case.What Priyadarshi and Palsania didn't know was that Subramaniam had also called the lawyer of A Raja, an accused. Priyadarshi and Palsania reportedly told Subramaniam in no uncertain terms that they would discuss the case with no one except their boss.

வர்தான் என்ன செய்வார் பாவம்? அரசியல்வாதிகளுக்கு என்னதான் விசுவாசமாக நடந்துகொண்டாலும் காரியங்கள் அவர்களையும் மீறி நடக்கும்போது அதன் விளைவுகளை சுமக்கிற பலியாடுகளாகத்தான் ஆக வேண்டியிருக்கும் என்ற விவரம் தெரியாது போல! இருந்தாலும், தன்னுடைய பதவிக்குக் கொஞ்சம் கண்ணியம் இருக்கிறது, அதைக் காப்பாற்றவேண்டும் என்றாவது தோன்றியதே! அதற்காகவே கோபால் சுப்ரமணியத்துக்கு ஒரு பூச்செண்டு கொடுக்கலாம்!


டிஸ்கி : சொலிசிடர் ஜெனெரல் கோபால் சுப்ப்ரமணித்துக்குப் பூச்செண்டெல்லாம் வேண்டாமாம்! 

அரசியல்வாதிகளோடு சேர்ந்த ஒருவர் என்ன செய்வாரோ அதையே இந்த ஐம்பத்துமூன்று வயது வழக்கறிஞரும் செய்திருக்கிறார்! அந்தர் பல்டி! ராஜினாமா உறுதிதானா அல்லவா என்பதில் ஐயா இரண்டுக்கும் நடுப்பட்ட நிலையில், மதில்மேல் பூனையாக இருப்பதாக தற்போது வரும் செய்திகள் சொல்கின்றன. பூச்செண்டு, சொரணை உள்ள மனிதர் என்ற அடைமொழிஎல்லாம் வாபஸ்!!!

*******

சொரணையோடு செய்த ராஜினாமாவைப் பாராட்ட நினைக்கும்  அதே நேரம், சொரணை கெட்ட அரசியலைப் பற்றியும் பேசாமல் இருக்க முடியவில்லையே!


உண்ணாவிரதமெல்லாம் நமக்கு உதவாது! ஊழல் செய்வது என்றால் சரி!
 

********
தெலங்கானா விவகாரம் பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருக்கும் சூழ் நிலையில்,அந்த பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும் அறிந்த ஒரே நபர் காங்கிரஸ் கட்சியில் பிரணாப் கமார் முகர்ஜிதான் என்று இன்றைக்கு ஒரு செய்தியைப் படித்தபோது முதலில் சிரிப்பு வந்தாலும், நாட்டு நிலவரம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது கவலைப் படாமல் இருக்க முடியவில்லை.

பிரணாப் குமார் முகர்ஜி, பெயரளவுக்குத்தான் நிதியமைச்சர்!

அமைச்சரவையில் சீனியாரிட்டி அடிப்படையில் பெயரளவுக்கு நம்பர் டூ! ஆனால்,முப்பத்தேழே வயதில் தாத்தா சப்போர்டோடு எம்பியாகி, அப்படி ஆன சூட்டோடு காபினட் அமைச்சராகவும் ஆகிப்போன தயாநிதி, பிரதமரையே ஓரம் கட்டி, அமைச்சர்கள் குழு என்ன முடிவெடுப்பது நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கடிதமும் எழுதி, டம்மிப் பீஸ் பிரதமர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைத்தவிர வேறொன்றும் செய்ய முடியாத ஒரு அமைச்சரவை என்ற குழப்பமான கூத்தில் அமைச்சர் பதவி நம்பர் ஒன், நம்பர் டூ என்று சொல்லிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கும்

நேற்றைக்கு, திமுக தலைமையிடம் பேச வந்தது என்ன, பேசியது என்ன என்பதைக் கூட வெளியே சொல்ல முடியாமல் மென்று விழுங்க வேண்டிய சூழ்நிலை. சுரணை உள்ளவராக இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சி அமைச்சராக இருப்பதை விட எருமை மாடு மேய்க்கப் போய் இருக்கலாம்!அதிலாவது  கொஞ்சம் மானம் மரியாதை மிஞ்சி இருக்கும்!!

என்னுடைய தமிழ்த் தட்டச்சு செயலி கொஞ்சம் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது! சண்டேன்னா மூணு பத்தியில் மூன்றாவதாக காங்கிரஸ் கட்சின் மொத்த வரலாறே கூழைக் கும்பிடு, துரோகம், சதி, நம்பியவர்களை நட்டாற்றில் விடுவது என்று இருப்பது தான்! 

இங்கே இன்றைக்கு வெளியிடப்பட்ட  ஒருபுத்தகத்தின் பகுதியைப் படிக்க







   பதிவு பிடித்திருக்கிறதா? அருகில் இருக்கும் ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்திப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!