பெயரில் வீரம் இருந்தால் போதுமா? வீரபாண்டி மறுபடியும் உள்ளே! ரிலே ரேஸ்!!
இதைப்படித்துப் பார்த்துவிட்டு, இன்று ஜூனியர் விகடனில் வெளியாகி இருக்கும் சேலத்து சிங்கத்தின் ஆதரவாளர்கள் போட்ட ஆட்டத்தைப் பற்றிய ரன்னிங் கமெண்டரியைப்  படியுங்கள்! முதலில் இப்போதைய செய்தி!

தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்தை சேல‌ம் காவ‌ல் துறை‌யின‌ர் ‌இ‌ன்று ‌திடீரென கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

நிஅபக‌ரி‌ப்பதொட‌ர்பாக ‌தி.ு.க. மு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ரவீரபாண்டி ஆறுமுகம் ‌‌மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர2 வழக்குகள் பதிவு செய்ததை‌த் தொட‌ர்‌ந்து செ‌ன்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமுன்‌பிணமனுக்கள் தாக்கல் செய்தா‌‌ர்.

இ‌ந்த மு‌ன்‌பிணை மனுவை ‌விசா‌ரி‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இர‌ண்டு நா‌ட்க‌ள் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்‌திட‌ம் ‌காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் 27ஆ‌ம் தே‌தி மு‌‌ன்‌பிணை பெ‌ற்று‌க் கொ‌ண்டு ‌தின‌மு‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் கையெழு‌த்து போட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து 3 நா‌ள் காவ‌ல்துறை‌ ‌விசாரணை‌க்கு ‌பி‌ன்ன‌ர் சேல‌ம் ம‌த்‌திய கு‌ற்ற‌ப்‌பி‌ரிவு காவ‌ல் ‌நிலைய‌த்தில் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் ‌தினமு‌ம் கையெழு‌த்து போ‌ட்டு வ‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மு‌ன்‌பிணை ‌நிப‌ந்தனைபடி கையெழு‌த்து போட வ‌ந்த ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்தை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.உதவியாளரநடேசனினமரணத்திலமர்மமஇருப்பதாக கூற‌ப்ப‌ட்ட புகா‌ரி‌ல் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌க்கலா‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

 இனி ஜூனியர் விகடன் செய்தி!

வீரபாண்டி ஆறுமுகம் உள்ளே..'ஜெயலலிதா'வுக்கு நடந்த அவமானம் வெளியே..


சேலம் ரிலே! (ரிலே ரேஸ் நல்லாத்தான் நடக்குதுங்கோ!!)'நில அபகரிப்பு வழக்குகளில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் சரண்டர் ஆக வேண்டும்!’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடைசூழ போலீஸில் சரணடைந்தார் அவர். நீதிமன்ற உத்தரவுப்படி அவரை மூன்று நாட்களில் காவலில்வைத்து விசாரித்தது போலீஸ்! 


வீரபாண்டி ஆறுமுகம் போலீஸ் கஸ்டடியில் இருந்த மூன்று நாட்களில், சேலத்தில் நடந்த அத்தனை விஷயங்களும் முகம் சுளிக்கவைப்​பதாகவே இருந்தன. முதுகெலும்பு மறந்துபோய், காக்கிச் சட்டைகள் சிலர் கை கட்டி நின்று வேடிக்​கை பார்த்ததுதான் அதைவிடக் கொடுமை!


வீரபாண்டி ஆறுமுகத்தை விசாரித்த உதவி கமிஷனர் பிச்சை, சேலத்திலேயே இன்ஸ்பெக்டராக இருந்தவர். ஆறுமுகம் பந்தாவாக உட்கார்ந்திருக்க.. அவருக்கு முன்னால் தயங்கிக்கொண்டு நின்றா​ராம் பிச்சை. 'எதுக்கு நிக்குறீங்க... உட்காருங்க!’ என வீரபாண்டியார் சொன்ன பிறகுதான் உட்கார்ந்தாராம் பிச்சை. வெள்ளரிப் பிஞ்சு, பப்பாளி ஜூஸ், ஆட்டுக்கால் சூப் என விதவி​தமான உணவுகளை சேலத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து வரவழைத்து உபசரித்தார்களாம். இரவு தூங்குவதற்கு கட்டில், வீட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட பெட்ஷீட் எனக் காவல் நிலையத்தை ஒரு ஹோட்டல் ரேஞ்சுக்கு மாற்றிக் கொடுத்ததாம் போலீஸ்.


விசாரணையில் என்ன நடந்தது? போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ''பிரீமியர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியது, அங்கம்மாள் காலனி விவகாரம் ஆகிய இரண்டும்தான் ஆறுமுகம் மீதுள்ள குற்றச்சாட்டுகள். மொத்தமாக 120 கேள்விகளை போலீஸ் தயார் செஞ்சு இருந்தாங்க. ஒவ்வொரு கேள்வியாக உதவி கமிஷனர் பிச்சை கேட்டார். அதுக்கு இவர் நிதானமாக பதில் சொன்னார். பெரும்பாலான கேள்விகளுக்கு, 'ம்... ம்... இல்லை!’ இப்படித்தான் பதில் வந்தது. 

சில கேள்விகளுக்கு கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார். 'என் பேரைச் சொல்லி எவனோ ஏதோ பண்ணிட்டுப் போவான். அதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியுமா?’ என்றாராம். எல்லாவற்றையும் வீடியோவிலும் பதிவு செஞ்சாங்க.

சில நேரங்களில், 'கேமராவை ஆஃப் பண்ணுய்யா...’னு சொல்லிட்டு, ரொம்பவும் ரிலாக்ஸ்டாகப் பேசினார். 'எனக்கே தெரியாம எவ்வளவோ விஷயங்கள் நடந்துடுச்சு. இப்போ நான் பலிகடா ஆகிட்டேன்...’னு வருத்தப் பட்டார்!'' என்கிறார்கள்.
வீரபாண்டி ஆறுமுகம் காவல் நிலையத்துக்குள் இருக்க... வெளியில் தி.மு.க-வினர் செய்த காரியங்கள் எல்லை மீறிப் போய்க்கொண்டு இருந்தன. சேலம் பழைய பேருந்து நிலையம் ஏரியாவில் மூன்று நாட்களுமே கடைகள் அனைத்துமே மூடப்பட்டே இருந்தன. திறந்த கடைகளையும் மிரட்டி மூட​வைத்தார்கள்.


விசாரணையின் கடைசி நாளான 27-ம் தேதி, காவல் நிலையத்துக்கு எதிரே தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவருக்கு ஜெயலலிதாபோல சேலை அணிவித்து, மாலை சூட்டி நிற்கவைத்தனர். பிறகு, தி.மு.க-வைச் சேர்ந்த ஒவ்வொருவராகப் போய் அவரைக் கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமாக அசிங்கப் படுத்தினார்கள். உச்சகட்டமாக அந்த நபரை ரோட்டிலேயே கிடத்தினார்கள். அதன் பிறகு நடந்தவற்றை, அச்சில் ஏற்ற முடியாது. பாதுகாப்புக்காக நின்று இருந்த நூற்றுக்கணக்கான போலீஸ் முன்னிலையிலேயே இவை எல்லாம் நடந்தும், யாரும் தடுக்கவோ, கேள்வி கேட்கவோ இல்லை. 

சேலம் காவல் துறையினருக்கு அவ்வளவு வீரபாண்டியார் பாசமோ? அராஜகம்!


கோரிமேடு செல்வம் தலைமையில் வந்த இன்னொரு கும்பலோ, அந்த வழியில் வந்த ஆட்டோக்களை நிறுத்தி, ''ஏன்டா... சேலத்து சிங்கமே உள்ளே இருக்குது. உனக்கு ஆட்டோ கேட்குதா?'' என ஆட்டோ டிரைவர்கள் முகத்தில் குத்துவிட, சில டிரைவர்களுக்கு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. அதையும் போலீஸ் கண்டு கொள்ளவில்லை. 

கண் முன் சம்பவங்கள் நடந்துகொண்டு இருந்தும், 'அடி வாங்கியவன் வந்து புகார் கொடுக்கட்டும். நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று நக்கலாகச் சொன்னார் ஒரு போலீஸ் அதிகாரி. 

மறு உத்தரவு வரும் வரை, தினமும் சேலம் மத்தியக் குற்றப் பிரிவுக் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்’ என உத்தரவிட்டு இருக்கிறது  நீதிமன்றம். இதற்கிடையில், 28-ம் தேதி காலை பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு வந்த அழகிரி அவரை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். இருவரும் நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசினர். 

'இத்தனை வருஷம் கட்சிக்காக உழைச்சேன். என்னை போலீஸ் விசாரித்த போது, யாரும் வாயே திறக்கலை. வந்தும் பார்க்கலை. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு!’ எனக் கலங்கினாராம் ஆறுமுகம். 'கவலைப்படாதீங்க. அவங்களைப்பத்தி உங்களுக்குத் தெரியாதது இல்லை... உங்ககூட எப்போதும் நான் இருக்கேன். எது வந்தாலும் பார்த்துக்கலாம்!’ என்று தைரியம் சொல்லி விட்டு வந்தாராம் அழகிரி!

- கே.ராஜாதிருவேங்கடம், வீ.கே.ரமேஷ்--நன்றி : ஜூனியர் விகடன்

சொந்தக் கதையே எங்கே எப்போது என்னவாகுமோ என்று கோழிக் குஞ்சுக்குப் படபடவென்று இதயம் அடித்துக் கொண்டிருக்கிற கதையாக  இருக்கும் போது இவர்  போய் தைரியம் சொல்லிவிட்டு வந்தாராம்! தமாஷாக இல்லை?! 

ஆட்டம் போட்ட உளுத்தம்பருப்புக்களைக் காவல்துறை, வீடியோவில் படம் எடுத்து அள்ளிக் கொண்டு வந்துவிட்டார்கள் என்பது கொசுறு செய்தி!


சமச்சீர் கல்வி விவகாரத்தில் பள்ளிகளை  மூடச் சொல்லி, மாணவர்களைத் தூண்டி விட்டுத் திமுகவினர் நேற்று நடத்திய போராட்டம் பிசுபிசுத்தது. மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மேயர், துணைமேயர் உள்ளிட்டு  நேற்று வரை ஒட்டிக் கொண்டு ஆதாயம் பார்த்தவர்கள் பலரையும் காணோம்!


 
பதிவின் உள்ளடக்கம் பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால், அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!

6 comments:

 1. இவனுங்களுக்கு எத்தனையோ சொத்துக்கள் இருக்கிறது, ஆனாலும், குடியிருக்க ஒரே ஒரு வீடு என்று இருக்கும் எளியவர்கள் மடியில் கை வைக்கிறார்களே? தங்களது வீடுகளை பறிகொடுத்தவர்கள் நெஞ்சம் எவ்வளவு புழுங்கிகொண்டிருக்கும்? இந்தாளை கைது செய்த பின்னர், இவன் தின்றுவிட்டு போட்ட எழும்புத் துண்டுகளை பொறுக்கித் தின்ற இவனுடைய கூலிப் படை நாய்கள் கலாட்டா செய்கிறார்கள். இவனுங்க ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி பாதிப்பு போது மக்களுக்குத்தான். அராஜகப் பேர்வழிகள். இரும்புக் கரம் கொண்டு இவனுங்களை அம்மா ஒடுக்க வேண்டும்.

  ReplyDelete
 2. இன்னுமா அடங்கவில்லை உங்கள் அராஜகம். காவல் பணியை செய்ய வேண்டிய காவலரே இதற்க்கு என்ன பதில் சொல்ல போகின்றனரோ!!!!!

  ReplyDelete
 3. ஜெயதேவ் தாஸ்! ஸ்பார்க் கார்த்தி!

  ஜனங்களுடைய வெறுப்பை எப்படி சம்பாதித்துக் கொண்டோம், தனிமைப்பட்டுப் போனோம் என்பதைப் பற்றித்திமுக தலைமை கற்றுக் கொள்வதாக இல்லை! கவலைப்படவுமில்லை! ஊடகங்களில் வெட்டி வீராப்பு, செய்திகளைத் திரும்பத்திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால்,ஜனங்களுடைய ஞாபக மறதியில், பொய்யையே உண்மையென்று ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டு கலைஞர் தொலைக்காட்சியில் செய்திகள்! இப்படியே போனால், எப்படித் தோற்றோம் என்று மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!

  கைது செய்யப்பட்ட திமுக புள்ளி எவர் மீதும் ஜனங்களுக்கு அனுதாபம் இல்லை!ஆட்டம் முடிவுக்கு வருகிற நேரம் நெருங்கிவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே ஆடிக் கொண்டிருக்கிறார்கள்! கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாகக் கழன்று போய்க் கொண்டே இருக்கையில், இதே மாதிரி தொடர்ந்தார்களானால், வைகோ மாதிரி அரசியல் அனாதைகளாகி விட வேண்டியது தான்!

  ReplyDelete
 4. க‌ருணாநிதி முன்பு சொன்ன‌து போல் 'நுறையீர‌ல் கெட்டுப்போன‌'
  காவ‌ல் அதிகாரிக‌ளை க‌ளையெடுத்தால், ச‌ட்ட‌ம் ஒழுங்கு ஒழுங்காகிவிடும்.
  ம‌ன்னார்குடியை அட‌க்கிவைத்தால், திருவாரூர் இனி கோட்டையை க‌ன‌வு கூட‌ காணமுடியாது.
  அது திருவ‌ர‌ங்க‌ம் கைக‌ளில் இருக்கிற‌து. ஆக‌ட்டும் பார்க்க‌லாம்.

  ReplyDelete
 5. வாருங்கள் சுதாகர்! நலமா?

  அன்பின் வாசன்!

  இந்தக் கழகமோ அந்தக் கழகமோ எதுவாக இருந்தாலும், காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரம் நுரையீரல் முழுக்கவே கெட்டுப் போனது கெட்டதுதான்!மொத்தமாகப் பிரித்து மேய்ந்தால் ஒழிய திருந்தாது.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!