Showing posts with label question the question. Show all posts
Showing posts with label question the question. Show all posts

கேள்விகளில் புது வருடத் தீர்மானங்கள்!

படமே விடை சொல்லும்!கேள்விகளும் எழுப்பும்!


"கேள்விகளைக் கேளுங்கள், கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்ததே!" என்று கேட்டபடியே அண்ணாச்சி  உள்ளே நுழைந்தார் அண்ணாச்சி யாரென்று கேட்கிறீர்களாஅவரும்  புள்ளி ராசா வங்கியில் வேலை பார்த்தவர் தான்! புள்ளிராசா வங்கி என்று தேடிப் பார்த்தீர்களானால் அண்ணாச்சி எவ்வளவு புள்ளி விவரம் தெரிந்தவர் என்பதுதெரிய வரும்! புள்ளி, புள்ளி வைத்துக் கோலம் போடுவது, புள்ளி விவரம்   இதெல்லாம்  எனக்கு நிறையவே அலெர்ஜி என்பதையும் பழைய பகிர்வுகளில் பார்க்கலாம் . 

"
அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணாச்சி! இரண்டு பதிவர்கள் ஒரே விஷயத்தை இருவேறு கோணங்களில் இருந்து அலசியிருந்ததைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே என்று எழுதிக் கொண்டிருந்தேன்! அவ்வளவுதான்." என்றேன் அண்ணாச்சி நான் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்ட மாதிரித் தோன்றவில்லை. லேப்டாப்பில் எதையோ கொஞ்சம் சீரியசாகத் தேடிக் கொண்டிருந்தார். புது வருடத் தீர்மானங்கள் பற்றி ஒரு சங்கிலிப் பதிவாக மூன்று வருடங்களுக்கு முன்னால் எழுதியதை யாரோ ஒரு புண்ணியவான் வந்து படித்து விட்டுப் போனதைக் கொஞ்சம் பார்த்தார்.




"
புதுவருடத் தீர்மானங்கள் நிஜமாகவே இல்லையா?" அண்ணாச்சி கேட்டதில் நிறையவே ஆச்சரியம் இருந்தது

"
ஆமாம் அண்ணாச்சி" என்றேன்  "தீர்மானங்கள் நிறைய எடுத்துக் கொள்கிறோம், அவைகளை இன்னொருதரம் திரும்பிப் பார்ப்பதற்கு முன்னாலேயே மறந்தும் போய்விடுகிறோம்! அப்படியான தீர்மானங்கள் எதற்கு என்று தான் இப்போதெல்லாம் தீர்மானங்களே வேண்டாம் என்கிற ஒரே தீர்மானம்!"

"
தீர்மானமே வேண்டாங்கிறதுல இருக்குற தீர்மானம், ஏதோ தீர்மானம் எடுத்து அதை நடைமுறைப்படுத்துகிறதுல இல்ல! அப்படித்தானே!" அண்ணாச்சி கொஞ்சம் நக்கலாகக் கேட்ட மாதிரியும் இருந்தது, கொஞ்சம் அனுசரணையாக, ஒருவித அனுதாபத்தோடு கேட்ட மாதிரியும் இருந்தது. கொஞ்சம் யோசிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டேன். வாயைத் திறந்து பதில் சொன்னால் தானே வம்பு?!

"
அப்படியானால் இந்த வருஷம் செய்யறதுக்கு வேலை, திட்டம் எதுவுமே இல்லையாக்கும்?"  என்று ஆரம்பித்த அண்ணாச்சி, என்னைப் பதில் பேசாதே என்று பார்வையாலேயே அடக்கிவிட்டுத் தொடர்ந்தார் "வெளிப்படையாகச் சொன்னாலும் சொல்லா விட்டாலும் ஒரு தெளிவான தீர்மானம், இலக்கு இல்லாமல் யாருமே இருப்பதில்லை. ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் இந்த வருடத்தில் குறைந்த பட்சம் இன்னின்னதை செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.சில சமயங்களில் வெளிப் படையாக எழுதியும் வைத்துக் கொள்கிறோம்.எங்கே சறுக்குகிறோம்,தோற்கிறோம் என்றால் நாம் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களில் நாமே உறுதியாக இருப்பதில்லை. நாம் எடுக்கும் முடிவுகள், தீர்மானங்களுக்கு நம்மைப் பொறுப்பாளியாக்கிக் கொள்வதில்லை என்றால் புறம் அது ஊமை கண்ட கனவு மாதிரித்தானே முடியும்?" .

அண்ணாச்சி சொன்னதைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டுக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தேன்.




புதுவருடத் தீர்மானங்களாக அல்லது இந்த வருடம் எட்டப்பட வேண்டிய இலக்குகளாக எதை எதை நினைக்கிறோம்? இதை முடிவு செய்வதற்கு முன்னால், சென்ற வருடம் இதே மாதிரி தீர்மானித்ததில் எவையெவை அரைகுறையாக அல்லது இந்த வருடமும் முக்கியமாக இருக்கின்றன என்பதைக் கவனிக்கிறோமா?

தீர்மானங்கள், இலக்குகளை முடிவு செய்யும்போது நம்மிடம் இருக்கும் பலம்-பலவீனங்களை மதிப்பிட்டு இலக்குகளை எட்டுவதற்கான செயல் திட்டத்தையும்  யோசித்துத் தெளிவான முடிவெடுத்திருக்கிறோமா? இந்த முடிவுகளைத் தொடர்ந்து கண்காணித்து, குறைநிறைகளைப்பார்த்து செயல் படுகிறோமா?

என் மனதில் ஓடிய கேள்விகளை அண்ணாச்சி படித்து விட்டார் என்றே தோன்றியது. "நீ யோசிப்பதும் கேள்விகளை வரிசைப் படுத்தியதும் சரியானது தான்! கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று சொல்வது சுலபம்! கேள்விகளை சரியான வரிசைப் படுத்துவதில், கிடைக்கும் விடைகளில் இருக்கும் விஷயங்களை சரி செய்வதில் தான் அடுத்தகட்டம்,கேள்விக்கான வித்து இருக்கிறது என்பது புரிகிறதா?"

"
கொஞ்சம் புரியவில்லை என்கிற மாதிரித்தான் இருக்கிறது அண்ணாச்சி!" என்றேன்

இதற்கு முந்தைய இரு பதிவுகளையும் ஒருதரம் பார்த்து விட்டு எனக்கு என்ன புரியவில்லை என்பதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்  என்று கொஞ்சம் சொல்லுங்களேன்! அண்ணாச்சி, கொஞ்சம் நன்றாகவே போட்டுத் தீட்டிவிட்டார்!அவர் சொன்னதோடு நீங்கள்புரிந்து கொண்டதும் ஒத்துப் போகிறதா என்பதைக்


கொஞ்சம் பார்த்து விடலாம்!

ஜெயிப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை! ஜெயிக்கலாம் வாங்க!

கேள்விகளைக் கேள்வி கேட்பது!ஏன்?எப்படி?






ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் தொடர்ந்து கேள்விகள் கேட்கிற மாதிரி ஒரு காட்சி அதற்கு  நடிகவேள் எம் ஆர் ராதா, தன்னுடைய கரகரத்த குரலில் கேள்வி கேக்குறான்...கேள்விப்பய மவனே என்று பதில் சொல்கிற வசனம் அந்த நாட்களில் கொஞ்சம் பிரபலம். ஆனால்  வெறும் காமெடியாக மட்டுமே பார்க்கப்பட்டது. இங்கே  எத்தனை பேருக்கு நினைவிருக்கப் போகிறது என்பது தெரியவில்லை ஆனால் நம்மில் பெரும் பாலோனோருக்குக் கேள்விகளே சுத்தமாகப் பிடிக்காது என்பது தான் உண்மை! 

ஒரு நிலையில் கேள்வி கேட்பவரையே பிடிக்காது என்று கூட ஆகி விடுவதுண்டு!

அப்புறம் எப்படிக் கேள்விகளைக் கேள்வி கேட்பது?

பொதுத்துறையில் ஒரு புள்ளி ராசா வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் ஸ்டாஃப் மீட்டிங் என்ற ஒரு சாங்கியம் மாதம் ஒருமுறையாவது நடத்தப்படவேண்டும் என்பது ஒரு விதி  

மாதம் ஒரு முறை நடந்ததாக ஏதோ ஒரு தேதியில் நடந்ததாக ஒரு ஸ்டேட் மெண்டில் வட்டார அலுவலகத்துக்கு அனுப்புவதில் ஒரு குறைச்சலுமில்லை! தப்பித்தவறி சிலசமயங்களில் ஸ்டாஃப் மீட்டிங் நடந்துவிடுவதுமுண்டு. கிளை மேலாளர் ஏதோ   கேட்க வேண்டுமே என்பதற்காக ஒரு டாபிக்-உதாரணமாக பிசினஸ் போதவில்லை அது இது என்று வட்டார அலுவலகத்தில் கேட்ட கேள்வியை பணியாற்றுகிறவர்களுடைய  கருத்துக்களுக்காக முன்வைப்பார் முன்வைக்கும் விதமே கருத்துக்களைக் கேட்பதற்காக அல்ல, இது ஒரு சாங்கியம் தான் என்ற ர்தியில் இருக்கும் அங்கே நடக்கும் கலந்துரையாடல் எப்படிப் போகும் என்ன ஆகும் என்பதை ஒரு சிறுகுழந்தை கூட ஊகித்துவிடும் என்பதால் அதிக விவரணைகள் தேவையில்லை.

முந்தின பதிவில் சேத் கோடின், கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று தலைப்பிட்டு சொல்லியிருந்த ஒரு இரண்டு வரிப்பதிவைப் பார்த்திருந்தோம் இல்லைனா?

The best creative solutions don't come from finding good answers to the questions that are presented.

They come from inventing new questions.

முதலில் கேள்விகள் எப்படி, எந்த மாதிரியான சூழலில் எழுகின்றன?



ஆர்வம் பயம்,பிரச்சினை என்று கேள்விகள் பெரிதாக எழுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உயிரினங்களின் மிக அடிப் படையான இயல்பே கேள்விகளைக் கேட்டு விடைகளைத் தேடுவதாகத்தான் இருக்கிறது.ஆனால் இந்தமாதிரிக் கேள்வி எழுப்பி விடைகளைத் தேடி அலைகிற நிகழ்வு ஒரே மாதிரி, ஒரே நேரத்தில் எல்லோரிடத்திலும் நிகழ்வதில்லை.

இதில் ஒரு தெளிவிருந்தாலேயே, கேள்விகளுக்கான விடையைக் கண்டு கொள்வது மிக எளிது. A problem (question) well stated, is a problem half-solved தெளிவாக வரையறுக்கப்படுகிற கேள்விக்கான பாதிப் பதில் அப்படிக் கேட்கப் படும் கேள்வியிலேயே இருக்கிறது என்று சொல்வது இதனால் தான்! சேத் கோடின் சொல்வதில் இர்ண்டாவது வரியைப் பார்ப்போம் (தீர்வுகள், கேள்விக்ளுக்கான சரியான பதிலைக் கண்டு சொல்வதில் இல்லை) அவை புதிதாகக் கேள்விகளை எழுப்புவதில்(கண்டுபிடிப்பதில்) இருந்து வருகின்றன என்று சொல்கிறாரே அது முழுக்க முழுக்க சரிதானா?

மேம்போக்காகப் பார்க்கையில் சரிதான் என்று உடன்பட்டாலும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கையில், கேள்விகளைப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல், ஒரு கேள்வியே அதைத் தொட்டு இன்னும் பல கேள்விகளுக்கு வித்தாக இருக்கிறது, மேலும் கேள்விகளுக்கு  இடம் கொடுக்கிறது என்று தான் படுகிறது ஒரு குளத்தில் கல்லை விட்டெரிகையில் அது தொடர்ந்து அதிர்வு அலைகளை உருவாக்குகிற மாதிரியே!  

சேத் கோடின் இந்தப் பதிவை வெளியிட்டிருந்தது டிசம்பர் 22. இதற்கும் மூன்று வாரங்களுக்கு முன்னமேயே வேறொருcontext இல் டாம் ஃபாஸ்டர் எழுதிய பதிவையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்
“So, to clarify, I don’t bring value by telling you what to do, but I bring value by asking questions?”

“You’re telling me,” Jeanine started slowly, “that I don’t bring value to my team by telling them what to do, but that, as a manager, I bring value by asking questions.”

கேள்விகள் கேட்பது தெளிவுபடுத்திக்கொள்வதற்காக மட்டுமே இல்லை! கேள்விக்குப் பதில் என்பது அத்துடன் திருப்தியடைந்து விடுகிற நிலை.. அப்படி ஆகுமேயானால், அதற்குப் பிறகு எதுவுமே வளர்ச்சி தேய்மானம் என்று ஒன்றுமே இருக்காது. 



கேள்விகளைக் கேள்வி கேட்பது என்பது, இன்னும் விரிந்து விரிந்து,புதிய வளர்ச்சி,புதிய இலக்குகளைத் தேடுவது, எட்டிப் பிடிப்பது! தொட்டுத்தொடர்ந்து வளர்ந்து உயர்கிற நிலை!

சரிதானா?கொஞ்சம் யோசித்து உங்களுக்கு எப்படிப் படுகிறது என்பதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்! தெரிந்து கொள்ள, தொடர்ந்து பேசக் காத்திருக்கிறேன்!