ஆமை புகுந்த வீடும்! காங்கிரஸ்கட்சி இருக்கும் நாடும்!

சமீபநாட்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடப்பதைக் கொஞ்சம் கவனித்திருந்தீர்களானால், காங்கிரஸ் எப்படி ஒரு தலை(மை)யில்லாத மு ண்டமாகச் செயல்படுவதில் தவித்துக் கொண்டிருக்கிறது, இனிமேல் எழுந்திருக்க முடியவே முடியாதென்ற நிலைக்குப் போய்விட்டது என்பதை புரிந்து கொண்டிருக்க முடியும்! ராஜ்யசபாவில் பிஜேபிக்குப் பெரும்பான்மை இல்லை என்கிற ஒரேவிஷயத்தைப் வைத்துக்கொண்டு, முந்தின 5 ஆண்டுகளில், பிஜேபி அரசு உத்தேசித்த சட்டவரைவுகளை முட்டுக் கட்டைபோட்டு போட்டுத் தடுத்து வந்தார்கள். 

அந்த மிதப்பைக் சில தினங்களுக்குமுன் RTI Amendment Bill ஐ சோனியாG  கௌரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு ராஜ்யசபாவில் தடுத்து  நிறுத்திவிடவேண்டுமென்று துடித்ததை பிஜேபி வெற்றிகரமாக முறியடித்தது. ராஜ்யசபாவில் வாக்கெடுப்பு நடந்ததில் மசோதா    நிறைவேற்றப் பட்டது. Floor Management செய்வதில் பிஜேபி காங்கிரசைவிட அதிகத்திறமைசாலிகள் என்பது சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கப்பட்ட தருணம் அது.


சரி, அதுதான் போகட்டும்! காங்கிரஸ் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டார்களா? தங்களுடைய அணியை ஒற்றுமை ஆகச் செயல்பட வைக்க முடிந்ததா? இல்லை! ஆனால் அதற்கும் பிஜேபி மேல்தான் பழிபோடுவார்கள் என்றால் இப்படி ஒரு கட்சியை இன்னமும் விட்டு வைத்திருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்விக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்! இந்த  நிமிடச் செய்தியில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்த 44 எம்பிக்களில் காங்கிரஸ் 4, திமுக 1,
மெஹபூபாவின் PDP 2 கம்யூனிஸ்ட் 1 என்று மொத்தக் கதையையும் காட்டிக் கொண்டே காங்கிரசின் ஆனந்த் ஷர்மா பிஜேபியைக் குற்றம் சொல்லித் தங்களுடைய ஏலாமைக்குச் சப்பைக்கட்டுக் கட்டுவதையும்  காண்பிக்கிறார்கள்.


MGR பாட்டைக் கேட்டெல்லாம் சோனியாG காங்கிரஸ்காரன் எவனும் மாறப்போவதில்லை! ஆனால் ஜனங்களாகிய நாம் தூங்கிவிடாமல் இந்தமாதிரி ஆசாமிகளை இனம் கண்டு வைத்துக் கொள்ளவேண்டுமில்லையா?


சேகர் குப்தா கூடக் காங்கிரசின் இன்றைய  நிலைமையைக் கண்டு காறித்துப்பியாக வேண்டிய நேரமும் வந்ததே!   வீடியோ 15 நிமிடம்தான்.

கஃபே காஃபி டே நிறுவனர் VG சித்தார்த் தற்கொலையில் புதிது புதிதாக விவரங்கள் வெளியே வந்துகொண்டே இருக்கின்றன. குமாரசாமி புலம்பியதுபோல செலெக்டிவாக வருமானவரித்துறை செய்த டார்ச்சர் அல்ல.  ஹவாலா முறையில் மணி லாண்டரிங் செய்தது, காங்கிரஸ் புள்ளிக்கு இருந்த தொடர்பு என பலவிஷயங்களை  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி சொல்கிறது. 

அடி ஆத்தி இது என்ன ?

எவனாவது செத்துட்டா போதுமே, உடனே புனிதர் பட்டத்த தூக்கிட்டு அலைவானுங்களே.
தனியார் வங்கியின் வாராக்கடன் வசூலிக்கும் துறையின் சர்க்கிள் மற்றும் சிக்மங்களூர், கூர்க் காஃபி விற்பனையாளர்கள் சங்கத்தில் இருந்து வரும் செய்திகள் சித்தார்த்தா எவ்வளவு பவர்ஃபுல் மாஃபியாவை நடத்தியிருக்கிறான் என சொல்கிறது.
ஒரு வங்கி முன்னாள் அதிகாரி சொன்னது
நான் 15 வருடத்திற்கு முன் தனியார் வங்கியின் வாராக்கடன் வசூல் செய்யும் துறையின் தலைவராக பணியில் இருந்த போது அசல் கடன் 120 கோடி, மற்றும் வட்டி 9 கோடி மற்றும் சித்தார்த்தாவின் கையெழுத்திட்டு வங்கியில் இருந்து திரும்ப வந்த (Bounced Cheques) 138 காசோலைகள் சார்பாக அளிக்கப்பட்ட சம்மன்களையும் விசாரிக்க என் கீழ் பணிபுரியும் 20 அதிகாரிகளை அவரின் அலுவலுகம் மற்றும் வீட்டிற்கு அனுப்பினேன்.
அந்த அதிகாரிகள் குண்டர்களால் சூழப்பட்டு மிகவும் அச்சுறுத்தப்பட்டனர். இதை தூக்கி சாப்பிடுவது போல சித்தார்த்தா தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியை ஒவ்வொரு அதிகாரியின் முகத்திற்கு நேராக பிடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். என் அதிகாரிகள் அனைவரும் 30 வயதுடைய இளைஞர்கள். அதில் சிலருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்திருந்தது. அவர்களை பெரும் போராட்டம் நடத்தி, பெரிய போலீஸ் அதிகாரிகள், சிஆர்பிஎஃப் உதவியோடு மீட்டோம். அந்த கொலை மிரட்டல் வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.
சிக்மங்களூர் மற்றும் கூர்க் காபி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியது
சித்தார்த்தா காபி கொட்டைகள் ஏலம் எடுக்கும் கூட்டத்திற்கு லோக்கல் ரவுடிகள், குண்டர்களோடு வந்தாலே மற்ற காபி விற்பனையாளர்கள் பயந்து நடுங்கி ஒதுங்கி கொள்வார்கள். "என்னை பார்த்தாலே உங்களுக்கு முதுகுதண்டுல வேர்க்கணுமே"?? என கேட்கும் வழக்கம் கொண்டவன் அவன். எத்தனையோ முறை பலவந்தமாக நிறைய காபி விற்பனையாளர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசிய சம்பவங்கள் உண்டு. ஒரு தனி காபி மாஃபியா நடத்தி இருக்கிறான் அவன்.
அவனை இன்று என்னமோ, மிக நேர்மையான வியாபாரி என தூக்கி வைத்து கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். தொழிலில் எதிரிகளே இல்லாமல் பாத்து கொள்வதற்காக எந்த எல்லைக்கும் போயி, அதாவது குடும்பத்தை கடத்தி மிரட்டுவது, அடித்து கையெழுத்து வாங்குவது, காஃபி தோட்ட அபகரிப்பு என எந்த லெவலுக்கும் போயிருக்கிறான் இந்த பன்னாடை.
இருபதாயிரம் பேருக்கு வேலை குடுத்தான்டா, இல்லேனு சொல்லல. ஆனா இருபதாயிரம் குடும்பத்தை, ஒரு சில குடும்பத்துல தலைமுறையைவே அழிச்சிருக்கான் இந்த ரவுடிபய..
அது தவிர தனியார் வங்கிகளிடம், தனியார் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனின் அளவை பாருங்கள்.
அவனின் உடல் கிடைத்துள்ளதாக செய்தியும் வீடியோவும் வந்துள்ளது. அஃபீஷியல் ரிப்போர்ட்டுக்காக காத்திருப்போம்.
சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன்   
  

மீண்டும் சந்திப்போம். 

எட்கர் ஆலன் போ! Stonehearst Asylum! அதிரன்!

குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் விசு பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டருக்கே.............. என்று ஆரம்பித்து கேட்கிற கேள்வி அந்தநாட்களில் ரொம்பவுமே பிரபலம்!  நினைவு இருக்கிறதா? விசு பேசுகிற  அதே மாதிரி ஒரு சிச்சுவேஷனில் எட்கார் ஆலன் போ என்கிற  ஒரு அமெரிக்கக் கதாசிரியர் "The System of Dr. Tarr and Prof. Fether" என்றொரு கதை எழுதியிருப்பது Stonehearst Asylum என்கிற திரைப் படத்தைப் பார்க்கிற வரை தெரியாது. 1890 களில் இங்கிலாந்தில் விக்டோரியா ராணி காலத்துப் பின்னணியில் ஒரு மனநலக் காப்பகத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மனநலம் பிறழ்ந்தவர்களுக்கு அந்த நாட்களில் அளிக்கப்பட்ட கொடூரமான சிகிச்சைமுறைகள் கொஞ்சம் கோடிட்டுக் காட்டப் பட்டாலும் பயமுறுத்துகிற படமாக எல்லாம் இல்லை.



Netlix இல் இந்தப் படம் ஸ்ட்ரீமிங் ஆகக் கிடைக்கிறது . எதற்கு அது வேண்டாமே என்றால்  இணையத்திலேயே பார்க்கவும் இங்கே கிடைக்கிறது. 

1890 களில் இங்கிலாந்தில் விக்டோரியா ராணி காலத்துப் பின்னணியில் ஒரு மனநலக் காப்பகத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மனநலம் பிறழ்ந்தவர்களுக்கு அந்த நாட்களில் அளிக்கப்பட்ட கொடூரமான சிகிச்சைமுறைகள் கொஞ்சம் கோடிட்டுக் காட்டப் பட்டாலும்  பயமுறுத்துகிற படமாக எல்லாம் இல்லை. No one is what they seem!என்ற catchphrase உடன் தொடங்குகிற படம் 112 நிமிடங்கள், கொஞ்சம் கூட விறுவிறுப்புக் குறையாமல் போகிறது.  

ஒரு வகுப்பறையில் மனநலம் பிறழ்ந்தவர்கள் பற்றியான லெக்சருடன் திரைப்படம் தொடங்குகிறது. எலைசா கிரேவ் என்கிற புத்திசுவாதீனமற்ற இளம் பெண்ணை வகுப்பறைக்கு அழைத்து வந்து அவளுடைய கேஸ் விவரிக்கப் படுகிற நேரத்திலேயே அவள் தனக்கு ஒன்றுமில்லை, காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறாள். ஒருவிதமான வலிப்புடன் அவள் மயக்கமுற பிரெண்டன் க்ளீசன் (நடிகர்)  அந்த நோயாளியைப் பற்றிக் கொஞ்சம் சொல்வதுடன் காட்சி முடிகிறது.

கிறிஸ்துமசை ஒட்டி பனிப்பொழிவில் ஸ்டோன்ஹெர்ஸ்ட்  அசைலம் அடுத்த காட்சியாக விரிகிறது. எட்வர்ட் நியூகேட் என்கிற மருத்துவர்  வசதி படைத்தவர்களுக்கான இந்த மனநலக்காப்பகத்தை நடத்தி வரும் டாக்டரிடம் அவருடைய சிகிச்சை முறைகளைத் தெரிந்து கொள்வதற்காக வந்து சேர்கிறார். முதல் காட்சியில் அறிமுகமான எலைசா கிரேவ் அங்கே இருக்கிறார். டாக்டர் சிலாஸ் லாம்ப் கொஞ்சம் புரட்சிகரமான சிகிச்சை முறைகளைக் கையாள்கிறார். தன்னை ஒரு குதிரையாகக் கற்பனை செய்து கொள்ளும் ஒரு வசதி படைத்தவர், உறவினர்களுக்கோ சங்கடம் ஆனால் இந்தக்காப்பகத்தில் அப்படியே இருக்கும் சுதந்திரம். கதாநாயகியின் கதையும் அதே போலத்தான். எலைசா கிரேவுக்கு பியானோ வாசிப்பதில் ஈடுபாடு, எவ்வளவு நேரம்ஆனாலும் வாசித்துக் கொண்டிருக்க அனுமதிக்கப் படுகிறார். இப்படியே ஒவ்வொரு நோயாளிக்கும் அவரவர் இஷ்டப்படியே நடந்து கொள்ள சுதந்திரம்! மருத்துவர் எட்வர்ட் நியூகேட் நோயாளி எலைசா கிரேவ் மீது மையல் கொள்கிறார்.

அடுத்து முதல் திருப்பமாக முதலில் டாக்டர் சால்ட் வசமிருந்த அந்தக் காப்பகம் டாக்டர் சிலாஸ் லாம்ப் வசமாகிவிட்டதும் டாக்டர் சால்ட் உட்பட அவருடைய உதவியாளர்கள் எல்லோருமே கீழே பாதாள கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் எட்வர்டுக்குத் தெரிய வருகிறது. டாக்டர் சிலாஸ் லாம்ப் அங்கே சிகிச்சை பெற்று வந்த மனநோயாளி என்பதும் தெரிய வருகிறது.கீழே அடைபட்டிருப்பவர்களை விடுவிக்க எட்வர்ட் உதவுவதாக முடிவு செய்து எலைசாவிடம் அவளுடைய ஒத்துழைப்பையும் கேட்கிறார்.  முதலில் அவரை நம்ப மறுக்கும் எலைசாவிடம்  எட்வர்ட் அவளிடம் காதலில் விழுந்தே தேடி வந்ததாகச் சொல்கிற கட்டம் நன்றாக இருக்கிறது.

இதற்கிடையே கீழே அடைப்பட்டிருந்தவர்களில் இருவர் வெளியே தப்பித்துச் செல்கையில் டாக்டர் சிலாஸ் லாம்பின் ஆட்கள் ஒருவரை சாகவிட்டு, இன்னொருவரைத் திரும்பக் கொண்டுவருகிறார்கள். கதாநாயகன் எட்வர்டும் வில்லன்களிடம் சிக்கிக் கொண்டு எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்டுக்குத் தயார் செய்யப்படுகையில் கதாநாயகியின் உதவியோடு தப்புகிறார் டாக்டர் சால்ட் ஆக இதுவரை  இருந்த சிலாஸ் லாம்ப்  பழையபடியே மனநோயாளியாக!

இப்போது, க்ளைமாக்சில் எதிர்பாராத அடுத்த திருப்பம்!. இந்தக் காப்பகத்தை பரிசோதிக்க டாக்டர் எட்வர்ட் நியூகேட் என்று சொல்லிக்கொண்டு ஒரு உதவியாளருடன் இன்னொருத்தர் வந்து சேர்கிறார் அப்படியானால்,முதலில் வந்த எட்வர்ட் நியூகேட் யார்,கதாநாயகியை முதன்முதலில்  எங்கே எப்படிப் பார்த்தார் எப்படிக் கண்டவுடன் காதல் வந்து தேடிக்கொண்டு வந்தார் என்பது ரொம்பவும் சுவாரசியமாகச சொல்லப் பட்டிருக்கிறது இந்த ஒரு சுவாரசியமான திருப்பத்துக்காகவே இந்தத் திரைப் படம் எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது என்று நினைக்கிறேன் படத்தைப்  பார்த்துவிட்டு அது சரிதானா என்பதை நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்!  என்று சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதியது 2010 ஏப்ரலில்!

இப்போது எதற்கு அந்தப் பழைய கதை, பதிவு பற்றி எல்லாம்?

  
அதிரன் என்ற பெயரில் ஃபகத் ஃபாசில், சாயி பல்லவி, சீனிவாசன் நடித்து  Stonehearst Asylum படத்தைக் காப்பியடித்து  ஒரு மலையாளக் காவியத்தை நேற்றுத்தான் பார்த்தேன். யூட்யூபிலேயே முழுப்படமும் காணக்  கிடைக்கிறது. கதையை localise செய்வதற்காக சாயி பல்லவியை ஆட்டிசம் பாதித்த  பெண்ணாக, தந்தையால் களரிப் பயிற்சி அளிக்கப்பட்டவளாக, எலைசா கிரேவ் பாத்திரத்தில்! டாக்டர் சிலாஸ் லாம்ப் பாத்திரத்தில் அதுல் குல்கர்னி, (ஒரிஜினல் படத்தில் இருந்த மாதிரி நோயாளியே டாக்டரைச் சிறையில் வைத்து தான்  டாக்டராக மாறிவிடுகிற மாதிரி எல்லாம் இல்லை) என்று கொஞ்சம் கொஞ்சம் மாற்றி எடுத்திருந்தாலும் மலையாளிகள் இப்படியெல்லாம் சுயமாக சிந்தித்துத் திரைக்கதை எழுதுகிறவர்கள் இல்லையே என்று சொல்வதற்காகவா இந்தப்பதிவு? இல்லை!

2018 நவம்பரில் போட்டோஷூட் ஆரம்பித்து 55 நாட்களில் படத்தை எடுத்துவிட்டார்கள்! அதுவும் நமக்குத் தெரியுமே, பார்த்திருக்கிறோமே என்றெல்லாம் குறை சொல்ல விடாமல் ஊட்டியிலேயே ஒரு thriller படத்துக்குண்டான கெத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத படப்பிடிப்பு.. ஜனவரி 2019 இல் படப்பிடிப்பு முடிந்தாலும்    , ரிலீசானதென்னவோ ஏப்ரலில்தானாம்!

சாயி பல்லவி! இந்த இளம் நடிகை, படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டிக் கொண்டே வருகிறார் என்பது இதிலும் மிக அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. உடலை வில்லாக வளைக்கிறார்! மாரி 2 இல் பாடல் ஆட்சிக்காக என்றால் இந்தப் படத்தில் களரிப் பயிற்சி பெறுபவராக! ஆட்டிச பாதிப்பைக் கொஞ்சமும் மறக்காத உடல்மொழி என்பதையும் சேர்த்துப்பார்த்தால், இந்தப்படத்தில் நம்பர் 1  
ஆக சாயி பல்லவி! 

ஃபகத் ஃபாசில், சீனிவாசன் நடிப்பைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. ரேணுகா என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் லீனா  scope  இல்லை என்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். கடாரம் கொண்டானில் வெறுமனே வந்துவந்துபோகிற பாத்திரம் மாதிரி இதில் கேவலப் படவில்லை. இருந்தாலும் ஒரு கேள்வி இன்னமும் மனதை நெருடத்தான் செய்கிறது. ஒரு படம் அல்லது கதையைப் பார்த்து அது கொடுக்கும் உந்துதலில் (inspiration) படம் எடுப்பது ஒருவிதம்! கதையைத் தழுவி உள்ளூர்க் களத்தில் எடுப்பது இன்னொருவிதம்! இந்த இரண்டு விதமாகவும் இல்லாமல் அப்படியே காட்சிக்கு காட்சி காப்பியடித்து, உள்ளூருக்காகத் தயார் செய்வதாக கொஞ்சம் ஏமாற்றுவேலைகளும் செய்வது என்ன மாதிரியான போக்கு?  

கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.
          

   .         

பார்த்ததும் கேட்டதும்! படித்ததில் பிடித்தது!

இந்தப்பக்கங்களில் முந்தைய நாட்களில் தலைமைப் பண்பு, நிறுவனப்பண்புகள், நிர்வாகம் என்று பல விஷயங்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். இப்போதும் கூடக்  காங்கிரசைப் பற்றியும் ராகுல் காண்டியைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பது என்னமோ எனக்கும் அவர்களுக்கும் வாய்க்கால், வரப்பு தகராறு இருப்பதால்தான் என்று எவரும் நம்பமாட்டீர்கள் என்ற நம்பிக்கை தவிர முதலில் சொன்ன தலைமைப் பண்பு, நிறுவனப்பண்பு, நிர்வாகம் இவைகளை  இந்த நபர்களோடு பொருத்திப் பார்த்து இவர்களிடம் இவை அறவே இல்லை என்று எடுத்துச் கொள்வதற்காகத்தான்! இன்று முகநூலில் படித்த ஒரு பழைய சம்பவம் தலைவன், தலைமைப் பண்பு என்றால் என்ன என்பதை அழகாக எடுத்துச் சொல்வதாக இருந்ததைப் பார்த்தேன்.   

Leadership is all about taking decisions. Leaders take decisions which they believe are in the best interests of the country and the organisation they represent. Here, I would like to recall an incident that took place in Amritsar, way back in 1959. At that time, 5 Jat was located in Amritsar and was commanded by an officer of great repute — Colonel Jyoti Mohan Sen (JM to his friends and comrades). It so happened that the unit officers and ladies had gone to the railway station to see off a unit officer and his wife who were proceeding on posting/long course. The son of the then Punjab Chief Minister, Pratap Singh Kairon, passed lewd remarks against some of the ladies and even attempted to molest one of them. It must be remembered that Kairon was very close to Nehru and was one of his confidants. When chased by the unit officers, junior Kairon and his goons took refuge in the Prakash cinema hall near the station. By this time, Colonel Sen had been contacted by one of the officers, and he promptly sent some JCOs and soldiers from the battalion, as reinforcements, to the cinema hall.The entry and exit points of the cinema were sealed. The culprits were soon identified, taken out and given a good thrashing. They were then taken to the unit Quarter Guard and locked up. 

The next day, the CM, Pratap Singh Kairon, came to the battalion’s location and was made to walk from the main gate to the CO’s office, where he was given a mouthful by Colonel Sen. Predictably, this created an uproar in Parliament and an explanation was sought from the Army Chief. The great General Thimayya, replied as only he could, with the words: “If we cannot defend the honour of our women, how can you expect us to defend the honour of our country?” He later complimented Col Sen. Leadership implies acting in perceived best interests of your organisation and the nation and taking responsibility for those actions. That is a lesson we, who are chosen to protect the Flag, need to imbibe in these troubled times. இது நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த பகுதியாய் இருந்ததில், நேருவின் நண்பர்கள், வாரிசுகள் எல்லாம்  நேருமாதிரியே வழிசல்களாய் இருப்பார்கள் என்று சொல்வதற்காக இல்லை! நேரு முதலான ஆசாமிகள் அரசியல் வியாதிகளாய் இருந்தபோதிலும் கூட இங்கே இந்தியராணுவம தனது legacy என்னவாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது, தலைமை, தலைமைப்பண்பு, நிறுவனப் பண்பு, நிர்வாகம் என்ற வார்த்தைகளுக்கு எப்படிப் பொருத்தமாக இருந்தது என்பதைச் சொல்வதற்காக மட்டுமே! மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  சியாச்சென் பகுதியை பாகிஸ்தானுக்குத் தாரை வார்த்துவிடத் தயாராக இருந்தபோதும் கூட இந்தியராணுவம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியை விட்டுக் கொடுக்க விரும்பாமல் போராடி மீட்டது என்ற கதை இங்கே பலரும் அறியாத செய்தியாகக் கூட இருக்கலாம்! 1948 இல் ஜவஹர்லால் நேரு எப்படி தன்னை சமாதானப் புறாவாகக் காட்டிக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டு, காஷ்மீரின் 40% பகுதியை பாகிஸ்தானியர்கள் ஆக்கிரமித்ததை, இன்னும் ஒரு நாள் அவகாசம் கொடுத்திருந்தால் நமது ராணுவம் அவர்களை விரட்டியடித்திருக்கும் என்ற நிலையில், ராணுவத்துக்கு முட்டுக் கட்டை போட்டார் என்கிற தகவல் பொதுவெளியில் இன்றும்கூட சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிறது. 
            
 
போய்த் தொலையட்டும்! இப்போதிருப்பது நேரு, இந்திரா, ராஜீவ் காலத்துக் காங்கிரஸ் இல்லை! வஞ்சகமும் பணத்தாசையும் பிடித்து, பானாசீனா, ஆ!ராசா முதலானவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிற சோனியாG என்கிற பெண்மணி தன் வாரிசுகளுக்காக நடத்திக் கொண்டிருக்கும் கொள்ளைக் கும்பல் மட்டுமே என்பது இன்னமும் புரியாமல், இப்போதிருக்கிற காங்கிரஸ் என்னவோ ஒரு பொறுப்பான, ஜனநாயக நடைமுறைகளில்           நம்பிக்கையுள்ள அரசியல் கட்சி என்று நம்புவதும், அய்யய்யோ பிஜேபி இவர்களைக் குறிவைத்துக் காலி செய்கிறதே! கேள்வி கேட்பாரில்லையா என்று அரற்றுவதும் என்ன மாதிரியான கேலிக்கூத்து?!  
  

இந்த வீடியோ மிகவும் சின்னதுதான்! மேலே சொன்ன விஷயங்களுக்கும்  கார்டூனுக்கும் ஆன  விவரங்கள் இதிலே இருக்கின்றன. சுப்ரமணியன் சுவாமியைப் பற்றிய உங்களது அபிப்பிராயம் என்னவாக இருந்தாலும்,இந்திராவின் மருமகள் மற்றும் வாரிசுகளின் ஆட்டத்தை அம்பலப்படுத்தி, நீதிமன்ற வாசற்படியேற வைத்ததில் அவரைத்தவிர   வேறெவருக்கும் பங்கில்லை. BJP கட்சியுமே கூட அவரைத் தன்  ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டைக் கொடுத்துப் புறந்தள்ளி விட்டது என்பதை மறுக்க முடியாது.


இங்கே H ராஜா பேசுவதையும், கீழே உள்ளதையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்! சுபவீ செட்டியார் ஒருவர் மட்டும் தான் கீழே உள்ள செய்திக்கு விளக்கம் சொல்லக் கடமைப் பட்டவர். அதுவும் ஒரு மகனாக அன்புராஜ்  செய்த விஷயத்துக்காக அல்ல, ஈவெரா பெயரில் இயங்கும் பல  ட்ரஸ்ட்கள், லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேலான மதிப்புள்ள சொத்துக்களுக்கு, கல்வி வியாபாரத்துக்கு நிர்வாகியாகத் தொடரத் தகுதி இருக்கிறதா என்ற ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும்!      


இந்தச் செய்தியைப் பகிர்வதில் எனக்கு எந்தவிதத்திலும் சந்தோஷமோ அல்லது அற்பத்தனமான திருப்தியோ இல்லை. அதிலும் கடைசி இரண்டு பாராக்களில் சொல்லப்பட்டிருப்பதில் எந்தவிதமான   உடன்பாடும் இல்லை. ஈவெரா ரக நாத்திகத்தில் சாரம் எதுவுமில்லை, நீண்டகாலம் செல்லுபடி ஆகாது என்பது என்னுடைய கருத்தாக இருந்தாலும் ஒரு தகப்பனுக்காக மகன் செய்கிற காரியங்களை விமரிசிக்க எவருக்கும் தகுதியில்லை என்றே நினைக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
  

மண்டேன்னா ஒண்ணு! வேறென்ன, அரசியல்தான்!

எதிர்பார்த்தபடியே இன்றைக்கு கர்நாடக சபாநாயகர் நீண்டதொரு தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு, தன்னுடைய ராஜினாமாவைக் கொடுத்து விட்டு பதவி விலகிவிட்டார். எடியூரப்பா நம்பிக்கை வாக்கைக் கோருவதே சட்ட விரோதமானது, நியாயமற்றது என்றெல்லாம் சித்தராமையா, குமாரசாமி இருவரும் பேசினார்கள் என்பதை விட தங்களை நியாயப்படுத்தி கொள்ள, பரப்புரை செய்தார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றிபெற்ற பிறகே இந்த மாதிரிப் பெயரளவிலான பரப்புரை, அதைத் தொடர்ந்து சபாநாயகர் உணர்ச்சிகரமான ராஜினாமா உரை என்று தொடர்ந்ததில் கர்நாடக சட்டசபை மாலைவரை ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.


ஆனால் சபாநாயகர் 17 MLA க்களைத் தகுதி நீக்கம் செய்தது சரிதானா? இல்லை, ஒருதலைப்பட்சமானது, சபாநாயகர் தெரிந்தே உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவைப் புறந்தள்ளி, நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளார் என்கிறார் மூத்த வழக்கறிஞர் BV ஆசார்யா! இவரை நினைவிருக்கிறதா? 


இன்றைக்கு அதிருப்தி MLA க்கள் சபாநாயகருடைய முடிவு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவிருக்கிறார்கள். நான் தொடர்ந்து சொல்லிவருகிற மாதிரி ரமேஷ்குமார் என்கிற காங்கிரஸ் ஆசாமியின் முடிவாக மட்டுமே, அதிருப்தி MLAக்களுடைய ராஜினாமாவை முதலில் முடிவு செய்யாதது மட்டுமே அல்ல, இப்போது தகுதிநீக்க உத்தரவையும் கூட அதன்மீது சம்பந்தப் பட்டவர்கள் என்னசொல்கிறார்கள் என்பதைக் கேட்க வாய்ப்புத் தராமல் நிருபர்கள் கூட்டத்தைக் கூட்டி அறிவித்தது, natural justice மறுக்கப்பட்டு ஒரு முறையான விசாரணையை சபாநாயகராக அவர் நடத்தவில்லை. இதை உச்சநீதிமன்றம் என்ன மாதிரி எடுத்துக் கொள்ளும், தீர்ப்பளிக்கும் என்பதை ஊகிப்பதொன்றும் கடினமானதில்லை. பத்தாவது ஷெட்யூல் பற்றி வாய்கிழிய பேசிவிட்டு, அடிப்படைவிஷயங்களைக் கூட மறந்து அவசர அவசரமாக முடிவை அறிவித்தது சபாநாயகரைப் பின்னால் இருந்து இயக்கிய சித்தராமையா மற்றும் காங்கிரசுக்கு வாடிக்கையாகிப்போன இன்னொரு கேலிக்கூத்து. 

இப்படி ஒரு பகிர்வை முகநூலில் பார்த்தேன்! இதுமாதிரிக்  குத்தூசி, குத்தீட்டி  என்ற பெயர்களில் குத்தாட்டம் போட்டு எழுதுகிற கழகச் சவடால் எவரையும் சட்டை செய்து படித்தது இல்லை. தங்கா   தமிழ்ச்செல்வன் இவருடைய வெள்ளந்தியான மருதைத்தமிழ் பிடிக்கும் என்பதால் இவர் பேசுவதைக் கொஞ்சம் கேட்டிருக்கிறேன்! ஆனால் பெயர் முன்னால்  இருப்பது தங்கமில்லை, துருப்பிடித்த தகரம்தான் என்றாகிப் போனபிறகு, இவரைப்பற்றி படித்த முதல் செய்தி இதுதான் என்பதால் இங்கேயும்!
      
      
GoodReads தளத்தில் இந்தப் புத்தகத்தின் மீதான விமரிசனங்கள், அப்புறம் இணையத்தில் தேடல்கள் என்று நேற்றைக்கு மார்கரெட் ஆல்வா என்கிற காங்கிரஸ் கட்சிக்காரருடைய சுயசரிதை பற்றிய விவரங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். சோனியாவின் வஞ்சகக் குணம், பணப்பேராசை, கூட இருந்தவர்களைக் கைகழுவி விடுவது முதலான உன்னதமான தலைமைப் பண்புகளை 391 ரூபாய் கொடுத்து வாங்கிப் படித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்கிற சலிப்பு நிறைய இருக்கிறது. 

நரேந்திர மோடி ஊடகங்களை சந்தித்ததே இல்லை என்று நிறையப் பேசுகிறவர்களுக்கு சோனியா காண்டியிடம் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் இருந்த குளறுபடிகள் பற்றியோ, bofors ஊழலில் அவரும் அவரது உறவினர்களும் சம்பந்தப் பட்டிருந்தது பற்றியோ, சீதாராம் கேசரியைத் தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்தது, அதில் 10 ஆண்டுகள் ஆட்சியில் மன்மோகன்சிங்கை வெறும் டம்மிப்பிரதமராக மட்டுமே வைத்திருந்தது, 2G ஸ்பெக்ட்ரம் உட்பட வெடித்துக் கிளம்பிய ஊழல்களைப்  பற்றியோ எந்த ஊடகமாவது அவரிடம் ஒரு கேள்வியையாவது கேட்டிருக்குமா? ஊடகங்களுக்கு எந்தப் பிரச்சினை மீதாவது ஒரு முழுமையான பேட்டியை அளித்திருக்கிறாரா? கொஞ்சம் தேடிப்பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.


                   

சண்டேன்னா மூணு! #அரசியல் நாடகம் பலவிதம்!

அதிசயம் அதிகமா?  ஆச்சரியம் அதிகமா?    தந்தி டிவி கர்நாடக சபாநாயகரை  நேற்றைய கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் நேர்காணல் நடத்தியிருக்கிறது. தந்தி டிவிக்கு திடீரென தேசியப்பார்வை வந்துவிட்டதோ என்றெல்லாம் அனாவசியமாக சந்தேகப்பட வேண்டாம்! அவர்களுக்கு வேண்டியது சதக்! சதக்! ரகப்பரபரப்பே அன்றி நடுநிலையான செய்திகளோ தர்மநியாயங்களோ அல்ல! அவர்கள் ஆசைப்பட்ட பரபரப்பை ரமேஷ்குமார் கொடுத்துவிட்டார். இந்த வீடியோ 40 நிமிடம்! தான் செய்தது சரியா தவறா என்று நீதிமன்றம் முடிவுசெய்யட்டுமே என்கிறார்.   
   

கர்நாடக சபாநாயகர்  KR ரமேஷ்குமார்  இன்று ஞாயிறு காலை 14 அதிருப்தி MLAக்களைத் தகுதிநீக்கம் செய்திருக்கிறார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்! ஆச்சரியமோ அதிர்ச்சியோ இதில் எதுவுமில்லை. நாளை திங்கட்கிழமை எடியூரப்பா கோர இருக்கும் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு இது எந்த விதத்திலும் தடையாக இருக்கப் போவதில்லை என்றாலும் இதே சபாநாயகரை வைத்துக் கொண்டு சட்டசபையை இனிவரும் நாட்களிலும் நடத்தப்போகிறார்களா என்ற கேள்வி இப்போது முன்னுக்கு வந்து நிற்பதைக் கவனிக்கிறீர்களா?  ஹரிஹரன் கொஞ்சம் நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறார், ஆனால் ரமேஷ்குமார் நேர்மையான பதிலைத்தான் சொல்லியிருக்கிறாரா?  


தன்மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவந்தால் அதைப் பற்றிக் கவலையில்லை. ஜூலை 23 அன்றே ராஜினாமா செய்யத் தயாராகத்தான் இருந்தேன் என்கிறார் ரமேஷ்குமார்.தானாக ராஜினாமா செய்யப்போவதில்லை என்கிற மாதிரித் தெரிகிறதோ? தேவே கவுடா கட்சி MLAக்கள் பலரும் எடியூரப்பா அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரலாம் என்று தெரிவித்த யோசனைக்கு குமாரசாமி அதைப்பற்றி யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டுமென்று சொல்லி இருக்கிறார் என்பதில் அந்த MLAக்கள்  அரசைக் கவிழ்ப்பதை விட பதவியில் நீடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள், தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை என்பது தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. 


அதென்னவோ ஜூனியர் விகடனுக்கு அடிக்கடி திமுக பாசம் பொத்துக் கொண்டு வருகிற மாதிரியே அவ்வப்போது எதிர்ப்பு ஊடல்களும் வந்துவிடும். ஏற்கெனெவே இசுடாலின் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோடீஸ் அனுப்பி அது அமுங்கிப் போன நிலையில்.........


துர்கா இசுடாலினும் இந்த அட்டைப்படம், செய்திக்காக சும்மா 10 கோடி ரூபாய் மானநஷ்டமாக இழப்பீடு கேட்டு   வக்கீல் நோட்டீஸ்  அனுப்பியிருக்கிறாராம்! அடுத்து உதயநிதி, அடுத்த வாரிசு இன்பநிதி பெயரிலும் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்புவது தொடருமோ?😆😍😏  

 மீண்டும் சந்திப்போம். 

இட்லி வடை பொங்கல்! #36 அரசியல் நிலவரம்!

சிறிதுநாட்களாக அடுத்தவீடு ஆந்திரா, கர்நாடகா என்று எட்டிப் பார்த்து அரசியலைக் கவனித்துக் கொண்டிருந்ததில் தமிழக அரசியல் களத்தை அடியோடு மறந்துவிட்டேனா என்று நண்பர்கள் சிலருக்கு சந்தேகம் வந்திருக்கக் கூடும். மறந்து போகவில்லை, தமிழக அரசியல் ஏனிப்படி திராவிடங்களால் செக்குமாடுகள் மாதிரி ஒரேமாதிரியான ஊடகப் பொய்களிலேயே சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருக்கிறது என்ற வெறுப்பில் கொஞ்சம் கவனத்தை அடுத்த வீட்டுப் பக்கம்  திருப்பியிருந்தேன். அவ்வளவுதான்!



இங்கே நடக்கும் செக்குமாட்டுத்தனங்களைப் பற்றி என்ன எழுதுவது என்றிருந்தவனை, காவேரி நியூஸ் சேனலில் இந்த விவாத வீடியோ கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்ததென்றால் பொய்யில்லை. இந்த நேர்காணலை எடுத்த மதன் ஏற்கெனெவே சுபவீ செட்டியாரை தடுமாற வைத்ததை இந்தப்பக்கங்களிலேயே பகிர்ந்திருக்கிறேன். இன்று  H ராஜாவை கேள்விகள் கேட்கிறார். எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச்  சொல்லுங்களேன்!  வீடியோ 39 நிமிடம்.


அரசியல்வாதிகள் எல்லோரையும் பொய்யர்கள் ரகத்தில் சேர்த்துவிடலாம் தான்!  ஆனால் டொனால்ட் ட்ரம்ப் பொய்யர்களின் உச்சத்திலும் உச்சம் என்பதை இந்த 17 நிமிட செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். இம்ரான் கானுடன் பேசும் போது, நரேந்திர மோடி தன்னிடம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் படி கேட்டார் என்று சொன்னதை வைத்து இங்கே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வாலாக்கள் செய்த  ரகளை இருக்கிறதே, முட்டாள்தனத்தின் உச்சமென்பதா, ட்ரம்ப்புக்கு போட்டியாகப் பொய்யர்களின் உச்சம் என்பதா? டொனால்ட் ட்ரம்ப் சொன்னது பொய்தான்! ஆனால் அவரது பொய்களுக்குப் பின்னால் ஒரு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை முற்றிலுமாக விலக்கிக்கொள்வேன் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதி அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. தாலிபான் தீரவாதிகளைக் கட்டுப் படுத்த பாகிஸ்தானிய ராணுவம் ஒன்றால்தான் முடியும் (?) என்கிற நிலையில் இம்ரான் கானுடன் பாகிஸ்தான் ராணுவத்தளபதியும் சேர்ந்தே அமெரிக்கா போனார்கள். IMF இடமிருந்து 6 பில்லியன் டாலர் குறுகியகாலக்கடன் என்ற carrot காட்டியது ஒருபுறம், F 16  விமானங்கள் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடுகளில்  பாகிஸ்தானிய ராணுவத்துக்கு relief என்று பலவிஷயங்கள் இருக்கின்றன. ஆக ட்ரம்ப் கிறுக்கன்தான், ஆனால் காரியக் கிறுக்கன்! ஆனால், நீண்டகாலம் ஆட்சியில் இருந்த நம்மூர் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களுக்கு என்ன வந்தது? ஏற்கெனெவே ட்ரம்ப் தனது உள்ளூர் அரசியலுக்காக ஒவ்வொரு நாட்டுடனும் உறவுகளைச் சிக்கலாக்கிக் கொண்டு வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் பிரச்சினையை உள்ளூர் அரசியலுக்குப் பயன்படுத்த முயன்றதே தவிர, தேசம் பெரிது என்ற நினைப்பு இருந்த மாதிரி வெளிப்படவில்லை.

இந்த விவகாரத்தையும் பாகிஸ்தானிய பொருளாதாரம்  அதல பாதாளத்தில் விழுந்துகிடப்பதில் IMF அளிக்கவிருக்கிற 6 பில்லியன் டாலர் குறுக்கியகாலக் கடனுடைய பக்கவிளைவுகள் பற்றியும்  அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்தில் விரிவாக எழுத நினைத்திருந்தேன்.பொதுவெளியில் ஒரு கருத்துப் பரிமாற்றத்துக்காகத்தான் பதிவுகள் எழுதுகிறோம். ஆனால் சரியான கவனிப்பையோ பார்வைகளையோ பெறுவதில் திரட்டிகளையே இன்னமும் நம்பியிருக்க வேண்டிய அவலம் தான் தமிழ் இணையச் சூழலில் தொடர்கிறது. தமிழ்மணம் திரட்டியில் அந்த வலைப்பூவை பதிவுசெய்து  ஆறு மாதங்களாகியும் திரட்டக்  கொடுக்க முடியவில்லை  என்று பார்த்தால்  இரண்டு நாட்களாக இந்தப்பக்கமும், சுவாசிக்கப்போறேங்க தளப் பதிவுகளையும் இணைப்பதற்கு முயன்றால் fatal error என்ற செய்தியோடு, பதிவை  இணைக்க முடியவில்லை.

நானே எழுதி நானே படிப்பதற்காகவா வலைப்பூ? இணையம்? வேறு திரட்டிகள், மாற்றுவழிகள் இருக்கிறதா?

மீண்டும் சந்திப்போம்.
         

ராமசந்திர குகா மாதிரி இபின் கால்தூனைத் தேட வேண்டாமே!

நேரு, மற்றும் வாரிசுகளுடைய திமிரையும்  முட்டாள்தனமான முடிவுகளையும் நினைவுபடுத்திக் கொள்கிற மாதிரி  வீடியோ ஒன்றை இன்று காலை பார்க்க நேர்ந்தது. பார்த்த விஷயம் IAS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகளை மாற்றுவதைப் பற்றி என்றாலும் தேவையே இல்லாமல் 32 வருடங்களுக்கு முன்னால் ராஜீவ் காண்டி காலத்தில் நடந்த ஒரு விஷயத்தோடு எந்த ஒரு சம்பந்தமுமில்லாமல் முடிச்சுப் போட்டுப் பேசியதால் கொஞ்சம் பழைய நிகழ்வுகளைத் தேடிப் படித்து நினைவு படுத்திக் கொள்ள வேண்டி வந்தது.


இந்த வீடியோவில் சேகர் குப்தா, சுபாஷ் கார்க் என்கிற IAS அதிகாரி நிதித்துறை செயலாளராக இருந்து, வேறொரு துறைக்கு மாற்றப்பட்ட அதிருப்தியில் வாலண்டரி ரிடையர்மண்ட்  கோரியிருக்கிற விஷயத்தோடு ,  1987 ஜனவரியில் ராஜீவ் காண்டி தன்னுடைய வெளியுறவுத்துறை செயலாளரைப் பொதுவெளியில் அவமானப் படுத்தியதில்  அவர் உடனடியாக ராஜினாமா செய்ததை முடிச்சுப் போட்டுப் பேசியதன் உள்நோக்கம் என்னவென்பது உங்களுக்காவது புரிகிறதா பாருங்கள்!


ஆயிலம் பஞ்சாபகேசன் வெங்கடேஸ்வரன்! 36 வருடங்கள் வெளியுறவுத்துறையில் அயல்நாடுகளில் தூதராகவும் பல்வேறு பொறுப்புக்களிலும் பதவிவகித்து வெளியுறவுத்துறை செயலாளராக ராஜீவ் காண்டி காலத்தில் பணியாற்றியவர். தன்னுடைய திறமை, நேர்மையால்  சக அதிகாரிகளாலும் ஊடகங்களாலும் மிகவும் மதிக்கப் பட்டவர். ND திவாரி மாதிரி கிழடுதட்டிப் போன, வெளியுறவு விவகாரங்கள் என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ்காரர் தான் அன்றைக்கு வெளியுறவு அமைச்சர்!   என்ன நடந்தது என்று கொஞ்சம் பார்க்கலாமா?

In December 1986, Venkateswaran had gone to Islamabad, and stated that as Chairman of SAARC, Prime Minister Rajiv Gandhi would visit different SAARC capitals including Islamabad. However, on January 21, 1987, Gandhi told a Pakistani journalist that he had no plans to visit Islamabad in near future. When the journalist referred to Venkateswaran’s earlier statement, Rajiv Gandhi said:

“You will be talking to a new foreign secretary soon.”

சர்வதேச நிருபர்கள் உள்ளிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த நிகழ்வில் AP வெங்கடேஸ்வரனும் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். ராஜீவ் காண்டி இப்படிப் பேசியதைக் கேட்டவுடன், உடனடியாகத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினார். உடனடியாக IFS அதிகாரிகள் சங்கம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது ஒரு அதிசயம் என்றால் ஒரு திறமையான அதிகாரியை அவமானப்படுத்தியதை ஊடகங்கள் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்தது மிக அபூர்வமான விஷயமாக இருந்தது. முந்தின டிசம்பரில் வெங்கட் என்று நண்பர்களால் மரியாதையோடு அழைக்கப்பட்ட AP வெங்கடேஸ்வரன் இஸ்லாமாபாதில், சார்க் அமைப்பின் சேர்மன் என்ற முறையில் ராஜீவ் காண்டி இஸ்லாமாபாத் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைநகர்களுக்கு வருகைதருவார் என்று சொன்னது பிரதமருடன் கலந்துபேசாமல் இருந்திருக்க முடியாது. 

பாகிஸ்தான் போகப்போவதில்லை என்கிற தனது மனமாற்றத்தை வெளியுறவுத்துறைக்குத் தெரிவிக்காமல்  இருந்துவிட்டு நிருபர்கள் கூட்டத்தில் நீங்கள் புதிய வெளியுறவுச் செயலாளருடன் பேசுவீர்கள் என்று சொன்னது ராஜீவ் காண்டியின் அரைவேக்காட்டுத்தனம், திமிர் என்று மட்டுமே பார்க்க முடியுமா? பின்னணியில் ராஜீவ் காண்டியைச் சுற்றி இருந்த அதிகாரத்தரகர்கள், வெங்கடேஸ்வரனை மாற்றிவிட்டு அந்த இடத்துக்கு வரவிரும்பியவர்கள், தேவையில்லாமல் வெளியுறவுத்துறைக்குள் மூக்கை நுழைத்துக் கொண்டிருந்தவர்கள் என்றொரு பெரிய கும்பலே இருந்தது, என்பது இந்திரா, வாரிசுகள் ஆட்சி செய்த காலத்தைய  அவலங்கள்!.The truth behind the ouster is that Venkateswaran eventually became a tragic victim of the power-brokers around the prime minister. They took advantage of the fact that the foreign secretary would not sit back and accept the increasing sidelining of the foreign office (and the Policy Planning Committee headed by G. Parthasarathy) on foreign policy issues and tolerate interference by outsiders like Bhandari, Natwar Singh (then in the Ministry of Fertilisers) and officials in the Prime Minister's Secretariat என்று முடித்துவிடக் கூடிய விஷயமா? 

வேறொருவரைத்தான் ராஜீவ் காண்டி முதலில், வெங்கட்டை ஒதுக்கிவிட்டு வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்க முடிவெடுத்திருந்தார். வெங்கடேஸ்வரன் ராஜீவை நேரில் சந்தித்து, தான் கெஞ்சுவதற்காகவோ அந்தப் பதவிக்காகவோ ஏங்கி வரவில்லை, ஆனால் நடைமுறை என்னவென்பதை எடுத்துச் சொல்லவே வந்தேன் என்று தெரிவித்தபிறகு அடுத்த இரண்டு நாட்களில் வேண்டாவெறுப்பாக வெளியுறவுத்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டார் என்பது காங்கிரஸ் ஆட்சி இஷ்டைல் தெரிகிறதா? ஆனால் ராஜீவ் காண்டி ஆட்சிக் காலத்தில் வெளியுறவுகளில் ஏற்பட்ட சில முன்னேற்றங்களின் பின்னணியில் வெங்கடேஸ்வரனுடைய உழைப்பு இருந்தது என்பது எத்தனைபேருக்கு நினைவு இருக்குமென்று நினைக்கிறீர்கள்? 

இஸ்லாமாபாத்துக்குப் போவதா இல்லையா என்ற தடுமாற்றம் மட்டுமே ராஜீவ் காண்டியை இந்த முட்டாள்தனத்தைச் செய்ய வைக்கவில்லை. என்னென்ன காரணிகள் இருந்தன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இங்கே க்ளிக் செய்து படித்துப் பார்க்கலாம்  

நேரு, மற்றும் வாரிசுகளுக்குத் தாங்கள் ஆளப்பிறந்தவர்கள் என்ற மமதை இருந்ததே தவிர, சரியான நபர்களைத் துணைக் கொள்வதென்பது இருந்ததே கிடையாது. காங்கிரஸ் இன்றைக்கு இவ்வளவு கேவலமாகத் தோற்றுக்கொண்டே வருவதற்கான காரணங்கள், அவர்களுடைய மரபணுவிலேயே இருக்கின்றன. ராமச்சந்திர குகா மாதிரி  யாரோ ஒரு அரேபிய இபின் கால்தூனைத் தேடிப் பிடித்துக் காரணங்கள் தேடவே வேண்டாம்!

மீண்டும் சந்திப்போம்.
   
        

இன்று ஒரு சேதி! #அரசியல்

நேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் முந்தைய பதிவில் பின்னூட்டமாகச் சொல்லியிருந்தார்.முந்தைய நாட்களைப் போல எடியூரப்பா அவசரப்பட்டு மானம்கெட விடாமல் பிஜேபியின் தலைமை கட்டுப்படுத்தி வைத்து இருப்பது ஒரு நல்ல விஷயம்! தவிர கர்நாடக சபாநாயகர் தந்திடிவிக்கு நேற்று அளித்த  பேட்டியில், இரண்டுநாட்கள் பொறுங்கள்! பத்தாவது ஷெட்யூல் எத்தனை வலிமையானது என்பது தெரியவரும் என்று சொல்லியிருப்பதும்,பிஜேபி அவசரப்படாமல் இருப்பதற்கான வலுவான காரணமாக இருக்கலாம்!



இந்தப் பத்தாவது ஷெட்யூல் என்பதென்ன?

The 10th Schedule to the Indian Constitution, that is popularly referred to as the ‘Anti-Defection Law’ was inserted by the 1985 Amendment to the Constitution. ‘Defection’ has been defined as, “To abandon a position or association, often to join an opposing group” The Advanced Law Lexicon defines defection as, “crossing the floor by a member of a Legislature is called defection.” In short, defection is an act by a member of a particular party of disowning his loyalty towards that particular party and pledging allegiance to another party. This is what the Law Lexicon describes as ‘crossing the floor’. கர்நாடக சபாநாயகர் சொன்னமாதிரி இந்தப் பத்தாவது ஷெட்யூல் உச்சநீதிமன்றத்தால் ஏற்கெனெவே பரிசீலனை செய்யப்பட்டு கெட்டியானது தானா? நீதிமன்றத் தீர்ப்புக்களும், வரையறைகளும் மாற்றப்படக் கூடியவை தான் என்பதால் சபாநாயகர் முடிவை, அது என்னவாக இருந்தாலும், உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தினால் தான் உண்டு. மேற்கொண்டு சட்ட நுணுக்கங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இங்கே பார்த்துக் கொள்ளட்டும் என்பதோடு, இந்த விஷயத்தை இப்போதைக்கு விட்டுவிடலாம்!    சதீஷ் ஆசார்யா வரைந்த கார்டூன் என்ன?


"இப்போது பாஜக நிச்சயம் இந்த அசிங்கத்தை மேற்கொண்டு செய்து ஆட்சியில் அமரக்கூடாது. காங்கு விடாது துரத்தும் கருப்பு போலவே செயல்படுவார்கள். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். மக்களை கவனிக்க முடியாது. அவர்கள் அயோக்கியர்கள் என்று சுட்டிக்காட்டுவது எந்த அளவுக்கு சரியோ நாம் யோக்கியன் என்று நிரூபிப்பது மிக முக்கியமானது. புதிய தேர்தல் மூலம் பாஜக ஆட்சிக்கு வருவது தான் சரி. அது அவர்களுக்கு வாய்ப்புள்ளது என்று நம்புகிறேன்"  இது நண்பர் ஜோதிஜி முந்தைய பதிவில் சொன்னது!

ஆனால் எடியூரப்பாவோ நாமோ அதைத் தீர்மானிக்கிற இடத்தில் இல்லை என்பதாலும்  சபாநாயகர் அதிருப்தி MLAக்கள் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதிலிருந்தே அடுத்த கட்ட நகர்வுகள், மேல்முறையீடுகள் இருக்கும் என்பதாலும்!  இதுவே இன்றைக்குச் சொல்ல வந்த செய்தி!

தினமணி நாளிதழ் வேறுவிதமான ஊகத்தை சொல்கிறது.  

மீண்டும் சந்திப்போம்.    
    

ஒரு புதன்கிழமை! காங்கிரஸ் காமெடி தொடர்கிறது!

பந்தியில் உட்காராதே எழுந்து வெளியே போ என்று ஒருவனை விரட்டினார்களாம்! அவனோ நிதானமாக இலை கிழிசலாக இருக்கிறது, நீ விருந்தே படைத்தாலும் சாப்பிடமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனானாம்! அந்தக் கதையாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா வானமே இடிந்து தலைமீது விழுந்தாலும் அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று அதிருப்தி MLAக்களை பார்த்துச் சொன்ன விஷயம் சிரிப்பாய்ச் சிரிக்கிறதே! அந்த நேரு குல்லா மாதிரியே!  
    

கர்நாடக அரசு கவிழ்ந்துவிடும் என்பது எல்லோருக்குமே தெரிந்த ரகசியமாக இருந்ததாலோ என்னவோ இங்கே வரும் நண்பர்கள் அதில் இருந்த, இன்னும் தொடர்கிற சூப்பர் காமெடிகளைத் தவற விட்டுவிட்டார்களோ என்கிற சந்தேகம் எனக்கு நிறையவே இருக்கிறது. அதுவும் குமாரசாமிக்கு எதிராக தன்னுடைய ஆதரவு MLA க்களைத் தூண்டிவிட்டு ராஜினாமா நாடகம் நடத்தக் காரணமாக இருந்தவரென்று சொல்லப் படும் சித்தராமையா, ஆரம்பித்து வைத்த ஓட்டை பெரிதாகி, நிலைமை  கையை மீறிப்போன பிறகு பேசிய வசனங்கள் இருக்கிறதே! கொஞ்சம் பார்க்கலாமா?




You said Modi will never become PM again & BSY will never become CM again, any comments now ?

இந்த ஒரு ட்வீட்டுக்கு வந்திருக்கிற எதிர்க்கீச்சுக்கள் வஜனம்  காங்கிரஸ் மாதிரியே கிழித்துத் தொங்கவிடப் பட்டிருப்பதை, ஒரு சின்ன சாம்பிளாக!  அதைவிவிட, தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிற திராணி இல்லாமல், ஜனநாயகம் தோற்றது நாணயம்  தோற்றது கர்நாடக ஜனங்கள் தோற்றார்கள்  என்று அலங்காரமாக சப்பைக்கட்டுக் கட்டிய ராகுல் காண்டிக்கு ஒருத்தர் பதில் சொல்லியிருப்பதையும் பார்க்கலாமா?



From its first day, the Cong-JDS alliance in Karnataka was a target for vested interests, both within & outside, who saw the alliance as a threat & an obstacle in their path to power. Their greed won today. Democracy, honesty & the people of Karnataka lost.
5.3K
6.1K
28K

  • Replying to
    You joined hands with Akhilesh Yadav.. he lost BADLY Chandrababu Naidu came closer to you..he is now finished. Siddhu was your PIDI..he's gone HD Kumaraswamy was your sychophant...he's doomed Under your leadership, your party is decimated.. Did you notice this coincidence..
    😂
    🤣
    11:03 AM · Jul 24, 2019 from Bengaluru South, India ·   

    ராகுல் காண்டியின் ஜனநாயக அறிவு, அயலுறவு பற்றிய அறிவு எவ்வளவு என்பதைப்பற்றிய சிறு அறிமுகத்தோடு அர்னாப் கோஸ்வாமி, கர்நாடக அரசு கவிழ்ந்தது பற்றி ஒரு விவாதத்தை முன்னெடுக்கிறார்.



    விவாதம் 52 நிமிடங்கள் தான்! காங்கிரசை இன்னமும் ஒரிஜினல் காந்தி  காலத்துக் காங்கிரசாக இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் எவரும் பார்க்க வேண்டாம்!

    மீண்டும் சந்திப்போம்.