வாலு போயிக் கத்தி வந்தது! டும் டும் டும்! இது வேற!

து கர்நாடக அரசியல் பற்றிய பதிவில்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுவது நல்லது! காரணம்,1001 இரவுகள் அரேபியக் கதையில் வருகிற மாதிரி கர்நாடக அரசியல் குழப்பங்களை நாற்காலிமீது ஆசை அதிகம் கொண்ட காங்கிரசும் அதன் கூட்டாளி தேவே கவுடாவின் ஜனதாதளமும் கதைக்குமேல் கதையாகப் பேசியே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவிடாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வருவதில் இங்கே நண்பர்கள் பலருக்கும் ஆர்வம் அதிகமில்லை போலத் தெரிகிறது என்பதால் அல்ல. எனக்கே அதில் கொஞ்சம் அலுப்பும் தலைசுற்றலும் வந்துவிட்டது வந்துவிட்டது என்பது உண்மை. னால், பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்! போகட்டும் விட்டுவிடு! என்று போகாமல் டொனால்ட் ட்ரம்ப்  பேசியதற்கெல்லாம் மோடி வந்து தான் நேரில் விளக்கம் சொல்ல வேண்டும் என்று  லோக்சபாவில் கூச்சல் வெளிநடப்பு ராஜ்யசபாவில் ரகளை என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எல்லாம் கச்சைகட்டிக் கொண்டு சபை நடவடிக்கைகளை கேவலப்படுத்த முயற்சிப்பது என்னவகையான  ஜனநாயகம்,அரசியல்? சொல்லுங்களேன்! 


மேலே வீடியோவைக் கொஞ்சம் பார்த்தாலேயே, இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவை இழுத்துவிட வேண்டுமென்கிற முனைப்பில் பேசுவதைக் கவனிக்க முடியும்.  இங்கே ட்ரம்ப் உளறியதற்கு அமெரிக்க தரப்பிலேயே ஆதரவில்லை என்பதோடு, கடுமையான விமரிசனங்களும் வந்திருக்கின்றன. இங்கே நம்மூர் அரசியல்வாதிகளும் கூட தினத்தந்தி பாணியில் அந்தந்த நேரத்துப் பரபரப்பு, சதக் சதக் ரகத்திலேயே அரசியல் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. 

வர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர். நம்மூர் லோக்சபா  மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! இந்த twit செய்திக்குப் பின் தொடரும் கீச்சுக்கள் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக டொனால்ட் ட்ரம்ப்பின் அரசியல் அறிவை விமரிசனம் செய்கின்றன. நம்மூர் காங்கிரஸ் கழகக் குஞ்சுகள், அதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். மோடி பெயரை சொல்லிவிட்டார்களா? எத்தையாவது சொல்லி டேமேஜ் செய்ய முடியுமா என்று அவதூறான  செய்திகளை சதக் சதக்கென்று சொருகு! இந்த விஷயத்தை பெங்களூரு தெற்குத் தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா அம்பலப் படுத்தினால் என்ன? மொதல்ல சொன்னது கொஞ்சமாச்சும் நிக்கும் இல்ல!

 • Unfortunate that a sitting Minister of a state government does not even give benefit of doubt to his own country's Prime Minister. Gone are the days of spineless leadership of the Congress era, Sir. If you haven't realized yet, it's PM Sri who is leading us today
  Quote Tweet
  ·
  Either US President is lying or the @narendramodi is. Difficult call. twitter.com/devirupam/stat…
  12:37 AM · Jul 23, 2019 · Twitter for Androi  
      

  ரு பழைய  வேடிக்கைப் பாட்டு ஒன்றுண்டு! வாலுபோயிக்  கத்தி வந்தது டும் டும் டும்! கத்தி போயி  என்று ஒவ்வொன்றாகப் போய்க்கொண்டே இருக்கும். முந்தைய நாட்களில் நண்பர் வால்பையன் (எ) அருணுக்காக இதே தலைப்பில் பதிவொன்றை எழுதியது நினைவிருக்கிறது. இப்போது அதே தலைப்பை எடுத்துக் கொண்டது வேறொரு கேள்விக்காக.   

  காங்கிரஸ் கட்சி இன்னபிற உதிரிகளை முற்றொட்டாக கழித்துக் கட்டாமல் விட்டோமேயானால் இந்த தேசமே அப்படி ஒரு வேடிக்கைப் பாட்டாகிவிடும் என்பது ஏன் இன்னமும் நமக்கு உறைக்கவே மாட்டேன் என்கிறது? என்னுடைய கேள்வி, ஆச்சரியம் எல்லாம் இது ஒன்றுதான்!

  மீண்டும் சந்திப்போம்.
      

  8 comments:

  1. நான் சந்திக்கும் சந்தித்த எந்த கல்லூரி மாணவர்களும் ட்விட்டர் குறித்து இதுவரையிலும் அறியாமல் தான் இருக்கின்றனர். பட்டபடிப்பு முடித்த பின்பு எந்த நுழைவுத் தேர்வு சென்றாலும் கட்டாயம் இப்போதைய நிலையில் சர்வதேச அரசியல் குறித்த அறிவு அவசியம் தேவை. கட்டாயம் ட்விட்டர் மூலம் அன்றாட செய்திகளை கற்றுக் கொள்ளுங்கள் என்பதுண்டு. நீங்கள் சரியாக தொடுப்பு எடுத்து கொடுக்கிறீங்க.

   ReplyDelete
   Replies
   1. வாருங்கள் ஜோதிஜி! உலகநடப்புக்களை என்றல்ல இங்கே உள்ளூர் நடப்பே தெரியாத கிணற்றுத்தவளைகளாய் இருப்பதில் இருந்து விடுபட இணையமும் சமூகவலைத்தளங்களும் மிகவுமே உதவுகின்றன என்பது உண்மை. அதே சமயம் சோதித்துப் பார்க்காமல் எந்தவொரு செய்தியையும் அப்படியே நம்பிவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர் சொன்னார் என்று சொல்வதை அப்படியே எடுத்துக் போடுவதை விட, அவர்தான் சொன்னாரா என்பதைச் சோதித்துப் பார்க்க இணையத்தில் உடனடியாகவே நம்மால் முடியும் என்பதால் தான் ஒரிஜினல் லிங்கிலேயே ட்வீட்டர் செய்திகளைத் தருகிறேன்.

    செய்திகளின் வேரைப் பிடித்துப் பார்க்கப் பழகினோமானால் பிரச்சினைகளைக் குறைக்கவும், தீர்வு காணவும் நம்மால் முடியும்! அடுத்து எழும் கேள்வி, ஏன் நாம் முயற்சிக்கவே மாட்டோம் என்றே இருக்கிறோம்?

    Delete
  2. கலைஞரை விட காசு, பதவி, அதிகாரம் இந்த மூன்றிலும் மகா மகா கில்லாடிங்க தேவகௌடா குடும்பம். ஒரு பத்திரிக்கையாளர் மூலம் இவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது. பணப் பேய் என்றால் அப்படியொரு பணப்பேய்கள். தான் தனக்கு தன்னுடைய தன்னால், தனக்கு மட்டும் போன்ற அனைத்து வார்த்தைகளையும் மொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் இந்தக்குடும்பத்திற்குத் தெரியும். கரிகட்டா அந்தந்த சமயத்தில் வந்து கும்பிட்டு விட்டு செல்வார்கள். அப்பா மகன் என்று ஒவ்வொருத்தன் மூஞ்சியும் பாருங்க. கரண்ட் கம்பி ஷாக் அடித்த மாதிரியே இருப்பானுங்க. அகத்தின் அழகு முகத்தில். நாதாரிப் பயலுக.

   ReplyDelete
   Replies
   1. ஊழல்செய்வதற்காகவே அரசியலுக்கு வரும் எவரையும், இவரை விட அவர் கூட அல்லது குறைவு என்று ஒப்பிட்டுப் பார்ப்பதில் என்ன பயன் சொல்லுங்கள்?

    கலீஞர் பூச்சி மருந்து ஊழலில் பிச்சாத்து 4% கமிஷன் என்பதிலிருந்து ஆரம்பித்ததையும், அப்புறம் ஆக்டோபஸ் மாதிரிக் குடும்பம் வளர்ந்தபிறகு ,மாநிலத்தையே வாய்க்குள் சுருட்டி விழுங்கப் பார்த்ததையும் கொஞ்சம் நினைவு படுத்திப் பார்த்தால்,, தேவே கவுடா குடும்பம் கலீஞரை விட, ஏன் DK சிவகுமாரை விடக் கம்மியாகத்தான் இருக்கும்

    வெறும் பத்தே ஆண்டுகளில் கலீஞரையும் மிஞ்சுகிற மாதிரி சம்பாதித்தது, ஆனால் அவரைப்போல வெளியே அதிகம் தெரியாமல் இன்னமும் சாமர்த்தியமாக இருப்பது என்று பார்த்தால் அது பானாசீனா மட்டும் தான்! தேவே கவுடாவின் பச்சோந்தி அரசியல் மீதுள்ள வெறுப்பில் உள்ளூர்ப் பிரமுகரை மறந்து விட்டீர்களோ?

    Delete
   2. ஊழல், பிறரை ஏமாற்றி சொத்து சேர்ப்பது, வாய்ஜாலம் பேசி மக்களை அறியாமையிலும் உணர்ச்சியிலுமே வைத்து ஏமாற்றுவது இதில் கருணாநிதியை மிஞ்ச உலகத்தில் வேறு யாரும் இல்லை. இந்திய இடிஅமீன், போல்பாட் என்றும்கூடச் சொல்லலாம், ஆனால் அவங்க சொத்து சேர்த்தமாதிரித் தெரியலை.

    Delete
   3. //அவங்க சொத்து சேர்த்தமாதிரித் தெரியலை?//
    அந்த "அவங்க" யாருங்க நெல்லைத்தமிழன் சார்? .

    Delete
  3. கர்நாடக சபாநாயகர் ஜாக்கிரதையாக அரசியல் செய்கிறார். சும்மா பேசிப் பேசி நடக்க இருப்பதைத் தள்ளிப்போட முயற்சிக்கிறார்.

   தேவேகெளடாவும் சொத்து சேர்த்திருக்கிறார். ஆனால் கர்நாடகாவில், தமிழக அரசியல்வாதிகள் மாதிரி கொள்ளையர்களை நான் பார்க்கவில்லை. திமுக மாதிரி ஊழல் கட்சியையும் நான் பார்க்கவில்லை. அதுக்கு அடுத்ததாக ப.சிதம்பரம்.

   நம்ம எதிர்கட்சித் தலைவர்களுக்கு போதுமான அறிவு இல்லை. கைநாட்டாக இருப்பதால்தான் டிரம்பின் உளறல்களுக்கு இவங்க வெளிநடப்பு செய்யறாங்க. இவங்கள்ல அனேகமா எல்லோருக்கும் டிரம்ப் யாருன்னும் தெரியாது, காஷ்மீர் எங்க இருக்குன்னும் தெரியாது. அதிலும் ஊழல் பெருச்சாளி கனிமொழி & கோவிற்கு.

   ReplyDelete
   Replies
   1. ரமேஷ்குமாரும் ஒரு காங்கிரஸ் ஆசாமிதானே! காப்பாற்ற முனைவது இயல்புதான்! ஆனால் தன்னை ஒரு நடுநிலையாளராகக் காட்டிக் கொள்வது எனக்குச் சிரிப்பையே வரவழைக்கிறது. கன்னடம் மட்டும் தெரிந்திருந்தால் இப்படி ஒரு சாமர்த்தியசாலி தான் ராகுல் காண்டிக்கு மாற்றாக காங்கிரஸ் தலைவராக வேண்டுமென்று ஒரு campaign கூட நடத்தியிருக்கலாம்!

    கேள்விப்பட்டவரை முத்தமிழ் வித்தவரை விட அதிகாசம்பாத்தியம் பானாசீனா தம்பதிகள்தான்!

    ஒரேயடியாகக் காங்கிரஸ் காரனைக் கைநாட்டு, அறிவிலி என்று புறங்கையால் இப்படி ஒதுக்கிவிடலாமா? நம்மூரில் தெரிந்தே தப்பும்தவறும் செய்கிறவன் தான் அரசியல்வாதி! எதிர்க்கட்சி!

    Delete

  ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!